நடிகரும் , அரசியல்வாதியுமாகிய விஜயகாந்த் 2015
டிசம்பர் கடைசி வாரத்தில் ஊடகவியலாளர்களைப் பார்த்து “ துப்பினார் ”
.
அந்தத் “ துப்பல் “
ஒரு குறியீடாகத்தான் செய்தார் எனலாம்.
ஆனால் ,
அச்செயல் எந்தவித உறவின் அடிப்படையில் நடந்தது.
இது கேள்வி.
நடந்த இடம் “ Social space “ ,
சமூகத்தளம்.
இதில்
பத்திரிகையாளர்களின் குறிப்பிட்ட கேள்வியால் / பாதிப்பால் விஜயகாந்த் என்ற நடிகர் / அரசியல்வாதியின் தன்னிலை ஒரு நிலைப்பாடு எடுக்கிறது. [ நனவிலியாக
( unconscious ) ]
அது தன்னை ( விஜயகாந்த் ) Master
ஆக ,
எல்லாம்வல்ல சுயமோகம் ( Omni potent ) ஆகவும் ; பத்திரிகையாளர்களை அடிமைகளாகவும் ( slave ) உறவைக் கட்டி அவர் அந்த நொடியில்
பாவிக்கிறார். அதன் குறியீடு சமூக வெளியை
தன் சொந்த ஆட்சி எலையாக்கிவிட்டார் துப்பியதன் மூலம்.
இதன் மற்றொரு
பக்கம் உண்டு. பத்திரிக்கைக்காரர்களை,
இவ்வளவுதூரம் அவர் நினைப்பதற்கான காரணம் என்ன?
பத்திரிக்கைக்காரர்களின்
எதிர் வினைக்குப்பின் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
க.செ.
4-1-2016
நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் ரத்த பாசம் இருக்கிறது. அதற்காக இளைத்த இரையை மட்டுமே குறிவைத்து அலையும் கழுதைப் புலி கூட்டத்தை உறவாக நினைக்க வேண்டாம்.
ReplyDeleteமு.இராமமூர்த்தி, அனுப்பானடி
Deleteதாங்கள் மற்றமை மீது கொண்ட அக்கறைக்கு நன்றி.