13 Jan 2016

அந்தக் கொலைகாரர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு கூட இல்லையே ! !






12 .1 . 2016 அன்று கிழக்குக் கடற்கரையின் தென்கோடியில் ஒரு புது சுடுகாடு உதயமாயிற்று.
                100 குட்டிகள் , திமிங்கிலக் குட்டிகள் ஒரே நேரத்தில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறது. கேள்வி கேட்பாரில்லை.
                பரிதாபப்பட்டு குற்றுயிர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப முயற்சித்த சில ஜீவன்கள் ; காட்சியாக்கிய ஊடங்கள் ; செம்பரம்பாக்கத்திற்கு ( ஏரி ) மட்டும் குற்றவாளிகளைத் தேடி , யூகித்து , கணக்குப் போட்டு , அடையாளமிட முயற்சித்த தமிழர்கள் ; 100 குட்டிகள் இறப்பிற்கு அவைகளின் உறவினருக்கு இலவசம் கொடுக்க வேண்டாம் ; குறைந்தபட்ச ஆறுதல் கூற வேண்டும் என்கிற நெறிகூட ( Ethics  ) இல்லையே   !
                குறைந்தபட்சம் ஒரு நாகரீகமான சமாதியும் , வருங்காலத்திற்கு நினைவு கூறலுக்கான சாட்சியாக அதை மாற்றுங்களேன் !
                ஒங்கி ஒரு குரலாவது கொடுங்களேன் !
                தமிழ்கூறும், தமிழ்அறிஞர்கள் வாழும் நல்லுலகம் இது என்கிறார்களே.
                 (  இந்த படுபாதகத்திற்கு ஆகம விதிகளும், பகுத்தறிவு வாதமும், ஒரே கட்டுமரத்தில் பயணிக்கின்றன.   அப்படித்தானே! )
க.செ

13-1-2016

No comments:

Post a Comment