24 Dec 2014

இவர்களா... உங்கள்... பலிகடாக்கள் ?

"பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதம் ஒழிக்கப்படும்"
                          -பிரதமர் நவாஸ் ஷெரீப்- BBC  தமிழ்-17-12-2014 
           அதாவது, அவரின் நனவிலி தீவிரவாதத்திற்கு இதுவரை ஆதரவளித்து வந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது.

           இந்த ஒப்புதலை வெளிக் கொணர்ந்தவர்கள் நீங்களும், உங்களால் (பாகிஸ்தான் தாலிபன்கள்) கொல்லப்பட்ட சிறார்களும்தான். ……………ஒப்புக் கொள்கிறோம்.
       நீங்கள் நிகழ்கால வரலாற்றை ( symbolic order ) எழுதியுள்ளீர்கள்.
       நீங்கள் எழுதியதை இப்படி வாசிக்கலாமா ?
       (1) மெஷின்கன் சப்தத்தை மந்திரஒலியாய் மாற்றி உங்கள் மனத்துயரைப் போக்கிக் கொண்டீர்கள். ……………………………………………ஒப்புக்கொள்கிறோம்.
       (2) பள்ளி மாணவர்கள் 132 பேரையும், பணிசெய்பவர்கள் 9 ஊழியர்களையும் கொன்று ஒழித்தீர்கள். ………………………………………………………… ஒப்புக்கொள்கிறோம்
       (3) சில மணிநேரம் பீதியில் (terror) உலகை உறையச் செய்தீர்கள்.......................................................................................     ஒப்புக் கொள்கிறோம்.
       (4) ஊடகங்களுக்கு ( media) நேர்அலைக்கு காட்சிப் பொருள் கொடுத்தீர்கள். ............................................................................ஒப்புக் கொள்கிறோம்.
       இப்படிச் சிறார்களைக் கொன்றதற்குக் காரணம் ,
       ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக இம்மாதிரி ஒரு தாக்குதலை நடத்தும் நிலைக்குத் தாங்கள் (ஆப்கன் தாலிபன்கள்) தள்ளப்பட்டதாக வரலாற்றில் பதிவு செய்கிறீர்கள் ”.-BBC  தமிழ்
       அதாவது, சிறார் கொலைக்கான காரணங்களைப் பதிவு செய்கிறீர்கள்அப்படித்தானே!
       இதை எப்படி ஒப்புக் கொள்வது ? பழிக்குப்பழி . அங்கு பயங்கரவாதத்தைப் பதிவு செய்தவர்கள் பாகிஸ்தானின் இராணுவம், அத்துடன் பாகிஸ்தான் அரசும், உண்மைதான். அது பெரிய அளவில் செய்தி ஆக்கப்படவில்லை  என்பதும் உண்மைதான்.  அரசு பயங்கரவாதத்தை ஊடகங்கள் எப்போதும் மலையத்தனை இருந்தால் கடுகத்தனை ஆக்குவதும் வழமைதான்.
       ஆனால், தொந்தளிப்பு வசப்பட்ட உங்கள் அறிவு இராணுவத்துக்குப் பதில், சிறார்களை அழித்தொழிப்புச் செய்து குறியீடாக்கியிருக்கிறீர்கள் (symbolic order) ..................…………………………………………………ஒப்புக்கொள்கிறீர்களா? இல்லையா?
       உங்களின் சமகால குறியீட்டு பதிவானது (symbolic order) உங்கள் மக்களுக்கு ஏதாவது சௌகரியத்தைக் கொடுக்குமா ? அல்லது அசௌகரியத்திற்கு வித்தை விதைத்திருக்கிறீர்களா ?
       இதற்கான பதிலை அரசு பயங்கரவாதம் இப்படிக் கூறியிருக்கிறது.
இன்று இக்குழந்தைகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி வாங்குவோம் .      
 -  நவாஸ் ஷெரீப் -BBC  தமிழ்.
       இது அரசின் குறியீட்டு ஒழுங்கு. எந்த ஒளிவுமறைவும் இன்றி பழிக்குப் பழி
 ’ இரத்தத்திற்கு இரத்தம்’. எந்த நூற்றாண்டுச் சொல்லாடல் இது. இன்று இது நவீனச் சொல்லாடலாகிறது.  இதற்கு நீங்களும் ஒரு காரணம் தானே..................................................................................ஒப்புக் கொள்கிறீர்களா ? இல்லையா ?
       பயங்கரவாதத்திற்கு எதிராக  பயங்கரவாதம் தான் பதிலா? இது எந்தவகை ஜனநாயகமோ ?
இனியும்.....
       அரசு பயங்கரவாதத்திற்கும், குழுக்களின் பயங்கரவாதத்திற்கும்; மக்கள் அளிக்கும் ஒப்புதல், சம்மதம், பணஉதவி, அறிவு உதவி போன்றவைகள் ஒருபோதும் சொர்க்கவாசலுக்கான பாதையாக இருக்கப் போவதில்லை . மாறாக, தீவிரவாதத்திற்கு எரிசக்தி வழங்குவதாகும்.
       ஒருக்கால் , குழுக்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டிக்கு ( phallic power ) சிறார் அழித்தொழிப்புஉதவியிருக்கலாம் ; அல்லது உங்களது சுயநலநோய்க்கான மனச்சாந்திக்கு  ஒத்தடம் கொடுத்துக் கொண்டதாய் இருக்கலாம்.
       இந்தச் சிறார் அழித்தொழிப்பு உங்களை, பிற குழுக்களும் , அனுதாபிகளும் உங்களை எப்படிப் பார்க்க வேண்டும், பார்க்கப்படவேண்டும் என்ற லட்சிய வேட்கை ( ideal ego ) உந்தலால், உங்கள் பிம்பத்தை மீட்டுருவாக்கும் செயலாகக் கூட இது இருந்திருப்பதற்கான வாய்ப்பாகவும் உள்ளது. ..............................................................................ஒப்புக் கொள்கிறீர்களா ? இல்லையா ?
       நிச்சயம் உங்கள்  மக்களுக்கான நல்வாழ்வுக்கு இந்த அழித்தொழிப்பு ( பயங்கரவாதச் செயல்) உதவி செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்....................................................................................................ஒப்புக் கொள்கிறீர்களா ? இல்லையா ?.

16 Dec 2014

FAITH AND BELIEF -- அக்னியின் வேடம்

ன்றை வாசித்தவுடன் நம்பிக்கொள்கிறோம். ஏனென்றால் அது பத்திரிக்கையில் வந்தது என்பதற்காக.
ஒன்றைக்கேட்டவுடன் நம்பிக்கொள்கிறோம்(அடுத்தவர் பற்றி). ஏனென்றால் நம் தாய் தந்தை கூறியதால்.
பேய் கூறியதாக இருந்தால் என்ன செய்வது? நம்பலாம்....நம்பிக்கையின்றி (Faith  இன்றி). இப்போது நம்பிக்கை என்பது விசயம் சார்ந்தது அல்ல.மாறாக,உறவு சார்ந்ததாக உள்ளது.
சூர்ப்பனகை கூறியதை,தங்கை கூறியதால், லங்கேஸ்வரன் அப்படியே நம்பினான்.விளைவு?
உண்மை வேறு.அது வெளியே.
இது பற்றி,இதில் உள்ளுறைந்திருக்கும் வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள ஒரு தொன்மத்திற்குச் செல்லலாம்.
தெரிந்த பாரதம் ,   தெரியாத பாத்திரம்-2                                                 
 -இந்திராசெளந்தர்ராஜன்.-தொடரில் இருந்து,
      
…."அக்னிக்கு தன் சொரூபம் மங்கிவிட்ட கவலை.ஏனெனில் 12 வருடம் அதன்மேல் விழுந்த நெய்யும் அவிசையும் அவன் குணத்தை இழந்துவிட வைத்துவிட்டது (அந்தச் சிவப்பு).அதைபோக்க பிரம்மனிடம் யோசனை கேட்டான்.
       ..."கிருஷ்ணார்ஜுனர்களும் காண்டவ வனத்துக்குஅருகில் ஒன்றாக இருந்த தருணத்தில்தான் அக்னியும் பிரம்மாவின் ஆலோசனைப்படி அவர்களின் உதவியை நாடி வந்தான்.
       ஒரு க்ஷத்திரியனிடம் பிராமணன் ஒருவன் வந்து யாசகம் கேட்கும்போது அவன் கேட்கும் யாசகத்தை எப்பாடுபட்டாவது கொடுக்கவே பார்ப்பான். அல்லாத பட்சத்தில் பிராமணனுக்கு இல்லை என்று சொன்ன தோஷத்தோடு, உதவி செய்தால் கிடைக்கும் புண்ணியுமும் கிடைக்கமால் போகும்.
       இதனாலேயே யாசகம் பெற்றுவிடத் துடிப்பவர்கள், பிராமண வேடத்தில் செல்வதை ஒரு தந்திரமாகக் கருதினர். இங்கே, அக்னியும் அப்படியே வந்து தான் காண்டவ வனத்தை எரிக்கும்போது நீராலும், காற்றாலும் தான் பரவுவது தடைபடக்கூடாது என்று வேண்டிக் கொண்டான் .                                               
       இப்போது அக்னி காண்டவ வனத்தையே எரித்து சாம்பலாக்கினான். அதற்கு உதவியாக கிருஷ்ணனும் அர்ச்சுனனும் இருந்தார்கள்."
                                           -தினமலர், ஆன்மீக மலர் டிச.9.2014.
                கதையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு நமது விசயத்திற்கு வருவோம்.           
     காண்டவ வனத்தை எரிக்க கிருஷ்ணனும், அர்ச்சுனனும் ஏன் ஒத்துழைத்தார்கள்? அவர்கள் பிராமணன் தங்களிடம் யாசகம் கேட்டதால் ஒத்துழைத்தார்கள்’(   கேட்டது பிராமண வேடத்தில் வந்த அக்னி ).
       இது பற்றி நாவலாசிரியரின் வரலாற்றின் கூற்று,  
      "ஒரு க்ஷத்திரியனிடம் பிராமணன் ஒருவன் வந்து யாசகம் கேட்கும்போது அவன் கேட்கும் யாசகத்தை எப்பாடுபட்டாவது கொடுக்கவே பார்ப்பான். அல்லாத பட்சத்தில் பிராணனுக்கு இல்லை என்று சொன்ன தோஷத்தோடு, உதவி செய்தால் கிடைக்கும் புண்ணியமும் கிடைக்காமல் போகும் ".
       இப்போது க்ஷத்திரியனுக்கு, அர்ச்சுனனுக்கு மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்பதுபோல் (1) கொடுக்காவிட்டால் தோஷம்; (2)கிடைக்க வேண்டிய புண்ணியம் கிடைக்காமல் போகும். கேட்பவனுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. கேட்பவனிடம் இருக்கிறதா இல்லையா என்கிற அக்கறையும் இல்லை.
       மனஅலசல் கேட்பதை, வாசிப்பதை Interpellate செய் ( அதாவது, கேள்வி கேட்டு, விளக்கம் கோரி, தெளிவுபடுத்திக் கொண்டு ஏற்பதும் ஏற்காததற்கும் வந்து சேர் ) என்கிறது.
       இங்கு யாசகம் கேட்பது என்பது, சாதாரணமாக உதவிசெய் என்பதுதான்.அது புனிதமாக்கப்பட்டு [ கருத்தியலாக Ideologically )  ] தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாதது என்ற அந்தஸ்தைப் பெற்று விடுகிறது, அந்தஸ்தைப் பெற வைத்து விட்டார்கள். அதை எப்பாடுபட்டாவது கொடுத்தாக வேண்டும். அதனால் என்ன விளைவு வந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் ( வாமன அவதாரம், மாபலி; பார்க்க, கேட்க, வாசிக்க ).
       இனி தோஷம் என்பதைப் பார்ப்போம். கொடுக்காவிட்டால் தோஷம். அதாவது, உன்னை தோஷம் பற்றிக் கொண்டு ( சனி என்று வைத்துக் கொள்ளலாம் ) எல்லாவிதத் துன்பத்தையும், மனக் கஷ்டத்தையும் கொடுப்பான் என்ற அச்சுறுத்தல். இதுவும் கருத்தியலாகக் கட்டப்பட்ட ஒன்றே ideologically constituted  ). [ சிறுவயதில் தாய் தந்தையர் சொல்லும் நீதிக் கதைகளை ஒருவன்/ஒருவள் அப்படியே அதை அகவயப்படுத்தும்போது அது பேரகனாக super ego ) ஆகிவிடுகிறது. பின்னர் அது காலம் முழுவதும், சமயம் கிடைக்கும்பொழுது ஆட்சி புரியத்தான் செய்யும் ].
அதேமாதிரிமனிதன் என்பவன் க்ஷத்திரியன் பிராமணன் என்ற கருத்தியலால் (ideology), கட்டப்பட்ட தன்னிலைகளாக (subject ) இயங்கும்போது உதவி என்பது யாசகமாகவும், கொடுக்காதது தோஷமாகவும்; வரவேண்டிய புண்ணியம் வராமல் போய்விடும் என்று மனம் அச்சுறும், அவதியுறும். இது முரணியக்கம்.
   வெறும் நம்பிக்கை சார்ந்த வாசிப்பும், ஏற்பும் இன்றைய சமூகத்தில், குடும்பத்தில் ( தாய் தந்தை,மகன்,மகள் ) , தன்னிலைகளுக்கிடையில் ( inter subject ); கட்சி, தொண்டன்; பத்திரிக்கை, வாசகன் எல்லாவற்றிலும் மொட்டையான, மொன்னையான நம்பிக்கையை ஏற்படுத்தி மோசமான உறவுகளுக்கு, முடிவுகளுக்கு வித்திடுகிறது.
       சுருக்கமாக, BELIEF, FAITH  என்பது பற்றி மனஅலசல் கூறுவதைச் சொல்லி கட்டுரையை முடிக்கலாம்.
       கட்டுரை ஆரம்பத்திலேயே சற்று எளிமையாக அன்றாட வாழ்வாகக் கூறப்பட்டுள்ளது.
       நம்பிக்கை ( Belief ) என்பது ஒன்றை எளிமையாக நம்புவதாகும்.
ஆனால், திட நம்பிக்கை ( Faith ) என்பது ஒன்றை உறுதியாக நம்புவது. திட நம்பிக் கையில் ஒன்றை நம்புபவருக்கும், நம்பப்படுவதற்கும் இடையில் ஒரு குறியீட்டு உடன்பாடும்(  Symbolic pact ) நம்பப்படுவதுடன் பிணைத்துக் கொள்ளும் உறவும் (  Binding engagement ) இருக்கும்.
நம்பிக்கையில் இந்த இரண்டு பரிமாணங்களும் இருக்காது.   
                                                       -Zizek. -On Belief  
பி.கு                                                                         
       [ ரத்த உறவு ( சாதி ) சார்ந்த நம்பிக்கையும் மா தலைவர் சார்ந்த உறவும், சாஸ்திரம் சார்ந்த உறவும் அப்பாவிகள்innocent  ) அல்ல  ].                                        

10 Dec 2014

BJP-யின் விஸ்வரூபம்

பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்கவேண்டும்”.சொன்னது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.-டிச.9.2014. தினமலர்.
மேலும் அவர் கூறுகையில் இந்துக்களின் புனிதநூலான பகவத்கீதையை தேசிய புத்தகமாக பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்க வேண்டும் என்றார்.
சென்ற மாதத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாசாலை பள்ளிகளில் மூன்றாம் பாடாமாக இருந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை அமுல்படுத்தவேண்டும் என்றனர். [...ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் என்ற உத்தரவு நீடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தேர்வில் சமஸ்கிருதம் இருக்காது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது…இது பற்றிய விவாதம் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 16-ல் நடக்கவுள்ளது” -NDTV.com.Dec,09.2014
ஒரு ஆண்டுக்கு முன்னால், "நான் மட்டும் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்தே பகவத் கீதை, மகாபாரதம் ஆகியவற்றை கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்திருப்பேன்' -நீதிபதி ஏ.ஆர்.தவே

கீதை, சமஸ்கிருதம் போன்றவைகள் primordial. ஆதித் தந்தையின் அடையாளமாக, ஆதித் தந்தையின் அங்கலட்சணமாக கருத்தியல்(ideology) மேலாண்மை (hegemony)  கூறிவந்தது; கூறிவருகிறது. அதாவது,பிராமணியத்தின் தனிச்சொத்துரிமை என்ற புனைவை யதார்த்தமாக்க நடக்கும் முயற்சி இது.(ஒரு மொழி எந்த சாதிக்கும் சொந்தமாக இருக்க முடியாது). அப்படி உரிமை கொண்டாடுவது பிற்போக்குத்தனமானது, போக்கிரித்தனமானது என்று கூறுவதை விட்டுவிட்டு ஒரு மொழியையே மறுக்க வேண்டிய அவசியமில்லை. (இதுவேறு விசயம்)
ஆக, இப்போது மேற்கூறியவைகளில் இருந்து சமஸ்கிருதம், பகவத்கீதை என்று அதற்கு புனித அந்தஸ்தைக் கோருவது என்பது தற்செயல் அல்ல.
அகண்ட பாரதம், இந்து ராஜ்ஜியம் போன்ற Fantasy   (புனைவு)-கள் அவர்களுடைய     Desire -, இச்சையை நீடிக்கச் செய்வதற்கானது. உண்மையில் இது நடக்க முடியாதது; மொழியால் சொல்லப்பட முடியாதது. மனஅலசல்படி இதை real   எனலாம்.
இவைகள் அவர்களுடைய பகுதி, ஒடுக்கப்பட்டது; அதில் மூழ்குவதை இதுவரை அரசியலால் தடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த ஆசை எப்போதும் Fantasy - யாகவே வெளிப்பட்டு வந்திருக்கிறது. இதை ŽIŽEK-ன்  மொழியில் சொன்னால் real:
it is part of ourselves, repressed, that resists immersion, that needs to go through fantasy and accept it.    -The real-ŽIŽEK.
 இப்போது BJP-யைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா போன்றவர்கள் உண்மையில் கீதையைப் புனிதப்படுத்துவதற்காக மட்டும் அதைச் சொல்வதில்லை;அதைக் கோருவதில்லை.
   
    மாறாக, அவர்களின் ஒடுக்கப்பட்ட, வெளிப்படுத்த முடியாத, சொல்ல முடியாததான ஆசையை, ‘Hindu Raj’-ஐ கீதையாக உருவகப்படுத்துகிறது (metaphor). அதாவது, கீதை இவர்களின் மேலாண்மைக் கருத்தியல் மட்டுமல்ல; இவர்களின் பேராசையின் உருவகமும் கூட.
இந்த இடத்தில் real ( இது எதார்த்தத்தைக் குறிக்காது) என்ற கருத்தமைவைப் பற்றி கொஞ்சம் விரிவாக, ஆழமாகத் தெரிந்து கொள்ள ŽIŽEK -ன் எழுத்தை அப்படியே கொடுக்கப் படுகிறது:
“The Real appears fantastic and incredible, impossible even, because it is impossible in our everyday realities(it is not meant to happen, it is not supposed to be an option at all)and when it intrudes in them, even briefly, it seems like a nightmare. The only way to process the Real is through a sort of ‘translation’ into some thinkable. In other words, the Real might only be looked at indirectly”.
இனி புனித அரசியல்
'அரசியல் சட்டமே ஜனநாயகத்தின் புனிதப் புத்தகம்' என்று கூறுவதாக பத்திரிகா தர்மம் சொல்லுகிறது.
இப்படிக் கூறுவது ஒருநம்பிக்கை(belief ) மட்டுமே. அது ஒருகருத்தியல்(ideology ) மட்டுமே. மொழியில் உள்ள கூற்றில் கருத்து மட்டும் இல்லை; மனமும் அந்தக் கருத்துக்கடியில் உறைந்திருக்கும். இது மனஅலசல் உண்மை. ஆகவே புனிதம்என்ற கருத்தாக்கத்தில் உறைந்திருப்பதை மனஅலசல் இப்படிக் கூறுகிறது:
....”purity can therefore be defined as a narcissistic ideal of omnipotence and absolute sovereignty (well being)that is completely free from the instinctual dimension”.     - On Narcissism- Bela Grunberger.
இதை எளிமையாக விளக்கினால், புனிதம் சுயமோகத்தின் உச்சமும்(தனி)ஆட்சி உரிமை கோருவதுமாகும்.
இது ஒரு வகையில் பேரகனின் (super ego) கோரிக்கையாகும். அதாவது ஆதித்தந்தையின் கோரிக்கையை, லட்சியக் கனவை நனவாக்கும் முயற்சி எனலாம்.
"சுயமோகம் என்பதே புனிதம்தான் (pure)" என்கிறது மனஅலசல்.
இதை விளக்க Bela Grunberger என்ற ஹங்கேரி உளவியலாளர் Monad  என்ற கலைச்- சொல்லை உபயோகப்படுத்துகிறார். சுயமோகம் தான் புனிதம் என்று தன் பிம்பத்துடன் இணையும் முயற்சி இது.[ இந்த பிம்பம் உடைபடும்போது வலுத்தாக்கு எண்ணம் (aggressivity )  காத்திரமாக வெளிப்படும். இது ஒரு சாதாரண மனிதனுக்கும் பொருந்தும் ].
(Monad) மோனாட் என்பது கரு(Fetus)வானது ஏதோ ஒன்றினால் சூழப்பட்டுள்ளது.(ஒரு நிலை)(பருப்பொருள் அல்ல அந்த நிலை). அது அந்தக் கருவின் பார்வை(view). ஆகையால் புனிதம் என்பது ஒரு புனைவு. ஆனால், அதால் தீவிரமாக கட்டுண்டு கிடந்தால்... "purity is a force and value in its own right".     
 
புனிதத்தின் உச்சவெறிக்கு மனஅலசல் கொடுக்கும் உதாரணம்,
உனது கண் உன்னைப் பங்கப்படுத்தினால் அதனைப் பிடுங்கியெறிந்துவிடு-Gospel   (திருமறை).
புனிதம் என்ற புனைவு வாழ்வனுபவத்தின் வலிமை பெற்றதாகும். இதை எந்தவிலை கொடுத்தாவது பாதுகாக்கப்படவேண்டும். இதில் குறுக்கிடும் எதனையும் அழித்தாவது இது நிறைவேற்றப்படும்.
இதற்கான வரலாற்று உதாரணம் ஹிட்லர். ஹிட்லரின் பாசிசமும், ஆரிய ரத்தத்தை சுத்தப்படுத்த லட்சங்களில் யூதர்களைக் கொன்றழித்த பாசிசப் புனிதம் நினைவுக்கு வருகிறது.நினைவு கூற வேண்டும்.
இறுதியாக புனிதத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற நீங்கள் எத்தனிக்கும் தருணம் பாப்ரி மஸ்ஜித் மனக்காயம் இன்னும் ஆறவில்லை. அதுபோக இதரரின் (others) (நீங்கள் நினைக்கும்) மதஅரசியலும் அரசியல்தளத்தில் கொலுவாக உள்ளது. சாதியால்/மதத்தால்/பிளவுண்ட மக்களிடம் பகை உணர்வுக்கு நெய்யிடாதீர்கள்.
        வெளிப்பட்டது...
நனவிலி அரசியலாக -லெக்கான்.
ஒடுக்கப்பட்டது மீண்டும் தலைதூக்குகிறது.


ஆதாரம்: Bela Grunberger- On Narcissism