Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

23 Oct 2015

எப்போது கல்கி ?

வராகத்தின் மூர்க்கம் பலகோடி மக்களின் அன்றாட உணவுப் பொருளான பருப்பைப் பதுக்கி பகாசுர லாபத்திற்காகவும் , இன்பத்திற்காகவும் மக்களின் வாழ்வைப் பதறவைக்கும் பதர்கள் அவர்கள் [ ஒரு களை எடுப்பு வேண்டும் ].
வராகத்தின் மூர்க்கம் உச்சமானதால் ஏழைகளின் குடிசைகளுக்கு தீ வைத்தலும் அதற்கு ‘ ஆகுதி ‘ யாக பச்சிளம் குழந்தைகளைப் போடுகிறது அது . 
 கடவுள் இல்லையென்றால் அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படுகிறது - தாஸ்தாயேவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்களில்.
நடப்பது அதுதானே ! 
அப்புறம் ஏன் மாட்டுக்கறி கொலை , மதக் காவல், பிரதமரையே மண்டியிடச் சொல்லும் மதர்ப்பு  ( சிவசேனை சுவரொட்டி )
கடவுள் இல்லாவிட்டாலும் எது வேண்டுமானாலும் செய்ய அனுமதி இல்லை  . இது லக்கான். 
நெறிகளை ( ethics ) மதிக்க வேண்டாமா ? காலியான கடவுளின் இடத்தில் நெறிகளை  ( ethics ) முன்னிறுத்துகிறார் லக்கான் என அதை வாசிக்கலாம். மனிதத்தின் லட்சுமண் கோடு நெறிகளே  .
 
எந்த புற உலக அதிகாரமும் மனிதத்துடனுன் உடன்பிறப்பாக இருக்காது. ஆனால் நெறிகளை தன்னகத்தே இருத்தினால் இனியாகும் செய்கைகளுக்கு , கொந்தளிப்பு வசப்பட்ட மனங்களுக்கு , அதிகார , அதீத தாக்குதலுக்கான மூர்க்கத் திற்கெல்லாம் தன்னிலைகளுக்குள்ளிருந்தே வாய்க்கூடும், கடிவாளமும் பிறக்கும். 
[ நெறி எந்தத் தன்னிலையையும் ஒடுக்காது. வழிகாட்டும் அவ்வளவே . அங்கு குற்ற உணர்வு ( guilty ) , ஒடுக்குதலுக்கு ( suppression ] இடமில்லை.
      நாம் எப்படி மதத்தின் பேரால் நடக்கும் நியாயமற்ற பலாத்காரத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறோம் எனக் கேட்கிறார் சிசாக்  என்ற மனஅலசல்காரர்.
      அவரே இப்படிப் பதிலளிக்கிறார் :
       நாம் அறம் / கருத்தியலைக் கடந்த சமூகத்தில் வாழ்கிறோம் ( post ideological)என்கிறார்.
      மக்கள் சேவகர்கள் , மக்களின் அன்றாட வாழ்வின் அடிவயிற்றில் அடிப்பவர்களுக்கு எதிராக , மக்கள் பலாத்காரத்திற்கு தயார்ப்படுத்தவில்லையே ஏன்?
      எழுத்தாளர்கள், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், கலைஞர்கள் ( artists )                         ( M.F. ஹுசைன் தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்டவர்) போன்றவர்களை தாக்குதலுக்கான இலக்காக ஆக்குவது ஏன்?
      தன் படம் திரையிடத் தடை என்ற உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று மிரட்டும் தயாரிப்பாளரும், நடிகரும் குடிசை எரிப்பை , குழந்தை எரிப்பை , திரைக்கதைக்கான கருவாக்கும் காலம் வருமா? .
புராணகாலம் திரும்பி விட்டதோ?. தேவர்கள் ( ஆட்சியாளர் , நுகர்வு முதலாளியம் ) மக்களை அரக்கர்களாக்கி, சுரண்டி , பின் கொள்ளி வைக்கவும் , கூச்சமில்லாமல் / தயங்காமல், இந்திரலோக வாழ்வு லயிப்பில் உள்ளனர்.
மதமும், சாதிமேலாண்மையும், கொலைவெறிக்கு தூபம் போடுகிறது /தூண்டுகிறது.   மக்களைக் காப்பாற்ற பரந்தாமன் கல்கி அவதாரம் எடுக்க முடியாது.(ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்). 
சாதி , மதம் கடந்து ( நோயிலிருந்து விடுபட்டு ) மக்களாகி, இன்றைக்கான காண்டீபத்தையும் , பரசுராம கோடாலியையும் தாங்கி , தங்களின் இருத்தலை நிறுவிக்கொள்ள வேண்டிய கட்டாயக் காலமிது.
( அதுதான் மக்களுக்கான, மக்களின் கரசேவையாகும் ) .
க.செ.
22-10-2015

8 Oct 2015

பசு,பன்றி & கருந்துளை (Black Hole)


செப்டம்பர் 28-ல் உத்திரபிரதேசம் தாத்ரி கிராமத்தில் ஒருவர் வீட்டில் சமைப்பதற்காக மாட்டுக்கறி (beef beef ) வைத்திருந்தார் என்ற வதந்தி பரவி அந்த மனிதனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுவிட்டது. இது பற்றி ஊடகங்களில் வாத , பிரதிவாதங்கள் ஏனோ தானோ வென்று நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சாக்ஷி மகராஜ் என்ற பா.ஜ.க எம் . பி இன்று ( 6.10.2015) கொல்லப் -பட்டதை , கொல்லப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகையாக உ.பி. அரசாங்கம் கொடுத்த 45 லட்சத்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார் மகராஜ்.
சாக்ஷி மகராஜ் ,
      ......நமது தாயை எவராவது கேவலப்படுத்தினால் நாம் அதைப் பொறுத்துக் கொள்வதை விட செத்துமடிவோம்....நமக்கு அது பாரதமாதா , நமது உயிரியல் தாய் , கோமாதா. .முகம்மது ஆசாம் கான்-யும் ( உ . பி மந்திரி , சமஜ்வாதி கட்சித் தலைவர் ) மாட்டுக்கறி சாப்பிடுவதை ஆதரிப்பவர்களையும் பார்த்து கேட்க விரும்புவது இதுதான்., நீங்கள் தெய்வமாக வணங்கும் தாயை ஒருவர் வெட்டிக் கொன்றால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? ....
      ஒரு பயங்கரவாதி பாரத மாதாவை தாக்கினால்  (  அவனைக் ) கொல்வதற்கும், கொல்லப்படுவதற்கும் தயார்தான் ” .
      உயிரியல் தாயையும், கோமாதாவைப் பொறுத்தும் இதுதான்....
-  The New Indian Express. 6-10-2015
      முஸ்லீம் இறந்தால் 20 லட்சம் ரூபாய், ஆனால் இந்துக்கள் 20000 ரூபாய் கூட பெறுவதில்லை .                                                                                                                -   India today. 6-10-2015

பசு தெய்வமாக வணங்கப்படுகிறது; பசுவதையை ஏற்க முடியாது., அதைச் செய்பவன் குற்றவாளி என்று கோபம் கொந்தளிக்க உராய்வீச்சு நடத்தி இருக்கிறார்.

முதலில் இந்தியா ஒரு பன்முக சமூகம் ( plural society ) . ஆகவே, தவிர்க்க  இயலாதவாறு தெய்வங்களும் பலதரப்பட்டதாகத் தானே இருக்கும் ; வழிபாடுகளும் அப்படித்தானே !
                இப்படிப்பட்ட சமூக அமைப்பிற்குத்தான் இந்தியப் பாராளுமன்றம். இந்து ஏகத்து- வத்திற்கு பசுமாடு தெய்வம் என்றால், மற்றொரு வகை ஏகத்துவத்திற்கு பன்றி தீயது ( evil ) .
      இப்படி ஒவ்வொரு மதக்குழுவும் வணங்குவதற்கான மிருகங்களும் , தீயவை என்று சொல்வதற்கான மிருகங்களும் பலதரப்பட்டதாக உள்ளது . இதை , இந்த பன்முக சமூகத்தை , பன்முகkக் கலாச்சாரத்தை கணக்கில் கொள்ளாமல், பா.ஜ.க அரசு மத்தியில் ஆளுகிறது என்பதாலேயே ஒரு எம் . பி- யே , ஆளும்கட்சி எம்.பி -யே பேசுவதும் , அது பற்றி அக்கட்சி மௌனம் சாதிப்பது என்பதில் பா.ஜ.க-வின் அடிமன ஆசை எந்தத் திசை நோக்கி இருக்கிறது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
      பன்முக சமூகத்தை ஏகத்துவமாக , ஏகத்துவ அதிகாரத்திற்கு உட்படுத்துவதற்காகத் தானே இந்தக் கொந்தளிப்பு அரசியல்.
      இந்து ஏகத்துவம் , இந்தியர்களின் ஒரு பகுதி . அதையே முழுமை போல் பாவிப்பது என்பது சமச்சீராக்கமாகும் ( symmetricization )  மனஅலசல்படி . கொந்தளிப்பு வசப்பட்ட மனம் இப்படித்தான் பகுதியை முழுமையாக எடுத்துக் கொள்கிறது.
      இந்த மனக்கிளர்ச்சிச் சொல்லாடல், எப்போதுமே தர்க்கத்தை மீறுகிறது.
       மனக்கிளர்ச்சி நனவிலியின் குழந்தை என்கிறது மனஅலசல்.
      இந்த மாதிரி இன்று பசுவதைக்கு இவ்வளவு கொந்தளிக்கும் மனம், பசுமைப்புரட்சியால் ( green revolution) கால்நடைகள் பெருத்துவிட்டதா ? சுருங்கி விட்டதா ? இதுபற்றி இவர்களின் மனச்சாட்சியை பேசச் சொல்லுங்களேன்.
      சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழகத்தின் உழவர் தினம் என்பது ( தைப்பொங்கல் ) கிராமங்களின் பன்முக சமூகத்திற்கான விழாக்காலக் கொண்டாட்டம் ( carnival ). இப்போது அது ஜல்லிக்கட்டு மாடு அரசியலுக்கு போய்விட்டது. அதை வைத்தும் ஒரு I P L. தொடர் நடத்தக்கூட செய்வார்கள் ஆதாயம் இருக்குமானால்.
      ஒன்றை வழிபடுவதும் , தெய்வம் என்பதும் தனிமனித நம்பிக்கை / விசுவாசம் சார்ந்தது (  personal belief / faith system ) ; தனிமனித அனுபவத்தைச் சார்ந்தது. விசுவாசமாக இருப்பது (faith faith ) என்பது அதன் மீது கொண்ட விசுவாசத்தைக் காட்டுகிறது. அதை எல்லோருக்குமான எதார்த்தம் என்று திணிக்க முயற்சிப்பது அந்தக் குழுவைச் சார்ந்தவர்களின் சுய மனப்போக்கு , சுயமோகம் ஆகும் .
      “ சுயமோகம் என்பது நடத்தைகள் , மனப்பாங்குகள், தான் எனும் அகங்காரம். என்னுடையது என்ற மமகாரம் போன்றவற்றால் விசுவாசப் பொருள் [ பசு / பன்றி ( evilevil ) ] , உடைமைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு , தற்செயலாக அவைகள் பாதிக்கப்பட்டாலும் கூட பித்து தலைக்கேRiறி விடுகிறது. கொலைவெறி தெருவிற்கு வந்து விடுகிறது. இதுவும் மனஅலசல் தான் Bella Grunberger
      இந்தியா பலத்தரப்பட்ட சமூகக் குழுக்களால் ஆனது என்பதைப் பார்த்தோம். அதாவது சமச்சீரற்ற சமூகம் ( asymmetric society ) . இந்த பன்முகப்பட்ட சமூகத்தில் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருவதை சுயநல அரசியலுக்காக பலியிடப் போகிறார்களா ?
      இந்தப் பன்முகப்பட்ட சமூகம் , கலாச்சாரம் பகை முரண்பாட்டை நட்பு முரண்பாடாக்கி ஒரு தேசமாக காட்சி அளிக்கிறது . இதை அழிக்க , ஏகத்துவத்தின் பெயரால் அழிக்க முற்பட்டால் விளைவு விபரீதம்தான். இதை மனஅலசலனின் கூற்றுபடி சொன்னால்,
  இறுதியாக , நனவிலியில் , நாம் அர்த்தத்தின் ஒருவகை கருந்துளைக்குள் ( black hole)  சிக்கிக்கொண்டு விடுகிறோம் ..ஏனெனில்,சமச்சீர் தர்க்கம் ( symmetric logic ) ஆட்சி செய்தால் /  மேலோங்கினால் ஒவ்வொரு விசயமும் அதன் எதிர்மறையால்  சமன் செய்யப்படும்( balanced ). மேலும் , எந்தவொரு விசயமும் மற்றவைகளிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிடும். [ உதாரணமாக , எந்த வகையிலும்  Aஆனது B–யைவிடப் பெரியது என்றால், அதேவிதத்தில் அது சிறியதும் கூட .]
                [ ”Finally , In the deep unconscious we enter a sort of  black hole of meaning . If symmetric logic rules , everything is balanced by its opposites and no one thing is distinguishable from any other ( for whatever way a is , for example , greater than b , in the same way it is also less ) ]
 –Matte Blango 

இறுதியாக , மகராஜ் ,
          புலன்நோக்கப் பொருட்களை எண்ணுவதால் ஒருவன் பற்றை வளர்த்துக் கொள்கிறான். இந்தப் பற்றினின்றும் காமமும் , காமத்தினின்றும் சினமும் வளர்கின்றன .” .
-பதம் 62, 2-ம் அத்தியாயம்.; கீதை .
       இது கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு சொல்லியது.
      [ ( மக்கள் ) ஜனநாயகம் காக்க , தற்காப்புக்கான ஐக்கிய முன்னணி , கிளர்ச்சிகள் ஆகியவைகள் நடக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லையோ என்று தோணுகிறது ].
      உதவிய நூல்கள் : Religious truth in the light of bi-logic Matte Blango

© க.செ.
7-10-2015