24 Dec 2018

மதவெறி அல்லது இறையாண்மை


வக்கிரமனமானது , தன் லட்சிய அகனை சாந்தப் படுத்துவதற்கு,   பகுத்தறிவுக்குட்படாத வகையில் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் முரட்டுத்தனமாகவும் , , மதவாதிகளுக்கு , ,எளிமையானவர்களுக்கு                  சுயஅழிப்புக்கு வழிகாட்டுகிறது.

      இது ஒன்றும் புதிதல்ல.வடக்கில், மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான   இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்சாதி மாணவர்கள் கலகம் செய்யும்போது ஒருவர் தீயிட்டு தன்னை அழித்துக்கொண்டது வரலாறு.

 தென்னகத்தில் காலூண்ட அய்யப்பன் உதவிக்கொண்டிருக்கிறார். 
 அயோத்தியில் இராமர் உதவிக்காக காத்திருக்கிறார்.

      ஆளும்கட்சியின் மிகச்சமீபத்திய தேர்தல் ( சட்டசபை ) தோல்விகள் சுயமோகவெறியை தூண்டிவிட்டிருக்கிறது. இது அவமானத்தின் விளைவு.. சுயமதிப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் கட்டுக்கடங்காத சுயமோகவெறி பலவடிவங்களில் வெளிப்படுகிறது..

தன்மோகவெறி , அனைத்து சுற்றுச்சூழல்களையும் கட்டுப்படுத்துவதற்கான  தன்மோகவிருப்பம், காத்திரமாக வெளிப்படுகிறது..
மன அலசல் இதை ( சுயமோக வெறியை ) “ செயலற்ற பழியெடுப்பு  உணர்விலிருந்து மற்றவர்களுக்கு வலியை / துன்பத்தை கொடுக்கக் கூடிய செயலுக்கான பாத்திரமாக மாறுவதற்கான சுயமோகியின் ஒரு முயற்சி இது ; ”
“ அதேநேரத்தில் தன் சொந்த ( உண்மையில்  பொய்யான ) சுயமதிப்பு குறித்த உணர்வை மறுகட்டமைப்பதற்கான முயற்சி இது “ என்கிறது.- ஹோகட்

மதத்தில் உள்ள ஆன்மீகத்தை தவிர்த்துவிட்டு மத அரசியலை முன்னிறுத்தும் வழமையான போக்கு நவீனமாக உடையுடுத்தி உலா வருகிறது.. பக்தர்கள் பாவம்.

இந்தியாவில் பிறந்த மற்றொரு மதக்கருத்தைப் பார்க்கலாம். மத அரசியலின் புரட்டு / பகட்டைப் புரிய இந்த வாசிப்பு உதவக்கூடும்.

ஆன்மீகமற்ற மத அரசியலுக்கும், ஆன்மீகத்தை  ( தன்னகங்காரத்தை  ஒழிப்பதை ) முன்னிறுத்தும் வழிபாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இதன்மூலம் அறியலாம்.
……….” புலால் மறுத்தலாலும், உடை அணியாது நிர்வாணமாக இருப்பதாலும், தலையை மழிப்பதாலும், அல்லது முடியை வளர்ப்பதாலும், முரட்டுத் துணிகளால் உடை உடுத்துவதாலும், புழுதியை உடல் முழுவதும் பூசிக் கொள்வதாலும், அக்னிக்கு   ஆகுதி செய்வதாலும், தன்னை பொய்மையால் ஏமாற்றிக் கொள்வதாலும் ஒருவர் புனிதமடையப்போவதில்லை.

வேதங்களைப் படிப்பதாலும், பூசாரிகளுக்கு காணிக்கையைத் தருவதாலும் ,கடவுளருக்கு ஆகுதிகளை வழங்குதாலும் , வெயில் மூலமோ குளிர் மூலமோ தன்னை வருத்திக் கொள்வதாலும், அதேபோன்று மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்குப் பல தவங்களைச் செய்வதாலும் ஒருவன் மாசற்றவனாக ஆகமுடியாது.

 புலால் உண்பதாலேயே ஒருவன் அசுத்தப்பட்டுப்      போவதில்லை. மாறாக கோபம், குடிப்பழக்கம்,பிடிவாதம், வெறி,ஏமாற்றம், பொறாமை, தற்புகழ்ச்சி, புறங்கூறுதல்,   
பிறரிடம் அலட்சியம், தீய நினைப்புகள் ஆகியவையே    அசுத்தத்தை உருவாக்குகின்றன.”.புத்தரின் புனிதவாக்கு

தன்னகங்காரத்தைத் துறத்தலே ஆன்மீகத்தின் மையம் என்பது புரிகிறதல்லவா? அய்யப்பனின் ஆரோக்கியம் என்ற பெயரில்    மத வெறிதான், தீண்டாமைதான் வெளிப்பட்டுள்ளது.

மாசற்றவராக இருப்பதற்கு, தன்மன விடுதலைக்கு,                  தான்  யார் என்ற சுய ஆய்வுக்கான கேள்வியை உள்நோக்கிக்         கேட்பதே தன்னகங்கார விடுதலைக்கு வித்தாகும் என்கிறது           ஆன்மீகம்”. 
அய்யப்பன் விசயத்தில், ஊடங்களில் உண்மையான மறுதலிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.விவாதங்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டும்; திட்டம், கொள்கைகள், தொடர்பற்றவைகளாகம் உள்ளன. உண்மைகளுக்கு இரண்டாம்தர முக்கியத்துவமே தரப்படுகிறது; உண்மைகள் பொய்யாக்கப்படுகின்றன.

செய்திகளைக் கொடுப்பதில் ஏற்றதாழ்வுகள் உள்ளன. சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகியுள்ள நிலைமைகள் மூலம் இது சாத்தியமாகிறது. அதிகாரமும், சமூக ஊடகங்களும் சாதாரன மனிதனுக்கு இருண்ட கண்டத்திற்கு வழிகாட்டு கின்றன..தங்கள் நம்பிக்கைகளை / மனச்சார்புகளை உண்மை அரசியலாக முன்னிறுத்துகின்றன. தன்னிலைகள் / பார்வையாளர்கள் சந்தையில் வித்த ஆடுகள் போக சொச்ச ஆடுகள் விழிப்பது போல பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்.
-க.செ

16 Dec 2018

இறை ஞானத்தை காசுக்காக விற்பவர்கள்


இப்போது ஒரு ஜூஃபியின் கதை….

 ‘’ ஜுனைத் பாக்தாதி எனும் ஒரு சூஃபி மகான்.அவரிடம் ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர் வந்து ஐநூறு பொற்காசுகள் கொண்ட ஒரு பணமுடிச்சை கொடுத்து ” இதை தங்கள் தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள் “ என்றார்.
பணமுடிச்சையும் அந்த செல்வந்தரையும் பார்வையிட்ட ஜுனைத் அவர்கள் “ தங்களிடம் இன்னும் பொற்காசுகள் நிறைய இருக்கின்றதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த செல்வந்தர் மிகவும் பெருமையாக நிறைய இருக்கின்றது” என்று பதிலளித்தார்.
 “ தங்களுக்கு மேலும் மேலும் பணம் பெருக வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் இருக்குமே? ” என்று மீண்டும் மகான் கேட்டார்.
     “ ஏனில்லை? நிறைய பணம் சேரவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்குமா? “ என்றார் அந்த செல்வந்தர்.
அவர் கொண்டுவந்து கொடுத்த பொற்காசுகள் அடங்கிய பணமுடிச்சை அவரிடமே திருப்பிக் கொடுத்தவாறு ஜுனைத் அவர்கள் கூறலானார்கள் : ”அப்படி என்றால் இந்தப் பொற்காசுகள் உங்களுக்குத்தான் மிக அதிகமாகத் தேவையாக உள்ளது . பணத்தின் ஆர்வம் என்னிடம் இல்லை. அந்த ஆசை உங்களிடம் நிறைய இருக்கின்றது.ஆகவே இது உங்களிடம்தான் இருக்கவேண்டும் “.

” நான் ” எனும் தன்னகங்காரம் தம்மிடமிருந்து அகற்றப்பட்டிருந்தால் பணத்தாசையோ / அதிகார ஆசையோ / புகழாசையோ அந்தத் தன்னிலையை அண்டாது.

இதனால்தான் ஜுனைத் பாக்தாத் என்ற அந்த ஜூஃபிக்கு ( ஞானி ) இதரர் வழங்கும் பொற்காசுகளை கொடுப்பவருக்கே திருப்பிவிடுகிறார்..     ( பொற்காசுகளின் ஒலி,ஒளி அவரை மயக்கமுடியவில்லை )
அப்துல்லாஹ் பின் முபாரக் எனும் ஜூஃபியின் ஆன்மீகம் இப்படிச் சொல்கிறது:
. “ உலகத்தை அனுபவிப்பதற்காக தம்முடைய இறை ஞானத்தை சொற்பக் காசுக்காக விற்பவன் இழிவானவன்

இந்தியத் துணைக்கண்ட வெளியில் எத்துனை ஆன்மீக மடங்கள் ! , எத்தனைவிதமான ஆன்மீக வியாபாரங்கள் !. ஆனால் ஜூஃபி ஞானத்திற்கு சுய ஒழுங்கு, கண்ணியம் , சுயமோகத்தை கட்டறுத்தல் ஆகியவை   ஞான வெற்றிக்கு பாதையாக உள்ளது.
ஜூஃபிகளின் தன்னிலை சுயமோகத்தின் பல அடுக்குகளை அறிந்துள்ளது. ஞானத்தின் லட்சணங்களில் ஒன்றாக சுயமோகப் பற்றறுத்தல் உள்ளது. அது ஜூஃபிகளின் சமூகச் சொல்லாடலாகவும் உள்ளது.
-    முள்ளிப்பள்ளம் பிட்சு

12 Dec 2018

ஆன்மீகத்தன்னகங்காரம் ( RELIGIOUS NARCISSISM )


இந்தியாவின் ’ஆன்மீகவாதிகள்,’ நம்பிக்கைவாதிகளின்- பக்தர்களின் – தன்னகங்காரம் ( NARCISSISM ) நீதிபரிபாலனத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஐயப்பனை வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு    என்கிற உட்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பும், அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தை எதிர்த்தும், ஐயப்பன் வாசஸ்தலத்தில் 144 தடை உத்தரவு போட வேண்டிய அளவிற்கு பெண்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து கலகம் செய்வதும், சட்டத்திற்கு அடங்க மறுப்பதும் இன்றுவரை தொடர்கிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆன்மீகச் சொற்பொழிவு நடத்த சென்னை உயர்நீமன்றம் தடைவிதித்துவிட்டது.
இதற்கு ஆன்மீகத்தின் ( ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ) எதிர்வினை: 
“ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினால் பெரியகோவில் இடிந்துவிடுமா?”
 ( இந்து தமிழ் டிச.4 2018)
ஒருவரின் தன்னகங்காரத்தை எதிர்க்க / ஒழிக்க அதை முற்றிலுமாக அழிக்கச் சொல்கிறது இந்திய ஆன்மீகம்.
முற்றும் துறந்த ஆன்மீகவாதிகளோ, தன்னின் ஆசை சட்டத்தால் மறுக்கப்பட்டவுடன், மனம் கொந்தளித்து, தன்னகங்காரம் வெடித்து,                   “ தஞ்சைப் பெரிய கோவில் இடிந்துவிடுமா? ” என்ற தீச்சொல்லை               உமிழ்கிறார்கள்..
      உயர்நீதிமன்றத் தடை என்று தெரிந்தும் எத்தி விளையாடுகிறார்கள்.
அரசியல் ஆன்மீகம் :  ராமர் கோவிலுக்காக அவசரச் சட்டம் இயற்றச்சொல்லும் இந்து இயக்கத்தினர்.
இவர்களின் போக்கு இந்தியாவில் விரைவில் மதக்கலவரத்தை தூண்டிவிடுவார்கள் போல் தெரிகிறது. பயங்கரவாதம் காவி வண்ணத்தில் சூலாயுதத்தை தூக்கும் காலமாகிவிட்டது.
தன்னகங்காரத்தை ( NARCISSISM ) வெல்லாமல் ஆன்மீகச் சொற்பொழிவு என்ன செய்யும்?
            லட்சங்கள் செலவுசெய்து உடையலங்காரம் அம்பானியிசமாகாதா?
[ அம்பானி தன் மகள் மணவிழாவுக்காக விருந்தினரை அழைக்க 100 விமானங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறார் ]
இந்த மனப்போக்கின் வீச்சு எதுவரை? எதிர்காலத்தில்.
                                                              க.செ.

11 Dec 2018

வெறுப்பு மனப்பான்மை ( Cynicism )


ஒருவரின் தன்னகங்காரம்  ( Narcissism ) பிறரால் அங்கீகரிக்கப்படாவிட்டால், புறக்கணிப்பு, நட்பை பகையாக்குதல்,அவதூறு, இதரரின் நடத்தையை பழித்தல் / அவதூறு செய்தல் ( Assassinate ) போன்றவைகள் தனிமனித உறவில் நடக்கிறது.
 ஒருதலைக் காதலில் தன்னகங்காரம் தன்னின்  காதல் இணையை உடல் ரீதியாக அழித்தொழிக்கிறது.
மறுபுறம் ME TOO என்கிறது,.
சரி. அரசியலில் இதன் பங்கென்ன?
இயற்கைச் சீற்றத்தால் தண்டிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டு, தங்கள் இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கும் மக்களை அணுகி,தேவைகளை அறிந்து , அவற்றை நிறைவேற்றவேண்டிய கடமையும்,அந்த மக்களிடம் அன்பும் அனுதாபமும் காட்டவேண்டிய கட்டாயமும் சக்கரவர்த்திக்கு (Prime Minister ) இருந்தும்கூட, அதைவிடுத்து, மௌனமாக இருந்தே காலம் கடத்தி,,மக்களின் மறதிக்கு விட்டுவிடும் சாமர்த்தியம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு?
மாநிலங்களுக்கிடையில் தண்ணீர் பிரச்சினை இருக்கும்பொழுது, ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அணைகட்டும் பேராசைக்கு கொடி அசைத்தல் போன்றவைகள் பயங்கர வாதமாக ஆகாதா?
ஒரு மாநில மக்கள் மீது இவ்வளவு பகைமை / வெறுப்பின் வெளிப்பாட்டை பின் எதில் சேர்ப்பது?
உதவிக்காக, உடுத்த, படுக்க , கதறியழும் குழந்தைக்கு பாலுக்காக, ஆறுதலளிக்க, காலாகாலத்தில் யாரும் ( அரசுரீதியாக) அவர்களை அணுகாததற்கு என்ன பொருள்?
ஆயிரக்கான தென்னைகளை, குடியிருப்புகளை கஜா புயல் அழித்ததை எதிர்க்கமுடியாது நம்மால். உண்மைதான்.ஆனால் இனியாகும் வாழ்வுக்கான இனிய பாதைகளை வெட்டி உருவாக்கிட , மக்களிடமிருந்து அரசு வசூலித்த கோடிகளைக் கொண்டு காலாகாலத்தில் உதவி செய்யலாமே!
தன்னகங்காரம் , மக்களின் துன்பத்தையும் அவஸ்தையையும் SLAPSTICK  COMEDY  மாதிரி மகிழ்ந்து, மனதுக்குள் ரசித்து, ” பன்னாட்டு உறவுக்கு” எனும் பெயரில் ஊர்வலம் தொடருகிறது.
தன்னகங்காரமும் ,வெறுப்பு மனப்பான்மையும் மக்கள் ஜனநாயக மனப்போக்கல்ல: இது பயங்கவாதப்போக்கே ஆகும்.இதை ஹிட்லர் ஏற்கனவே நிரூபித்துவிட்டார்.
இப்போதைய அபாயம் பயங்கரவாதமல்ல:
தன்னகங்காரமும்,வெறுப்பு மனப்பான்மையுமே இன்றைய அபாயமாகும்..
                                                                க.செ.

29 Nov 2018

ஐயப்பனும் தீட்டும்



            ஐயப்பனும் / தீட்டும் அதாவது (10 வயது முதல் 50 வயதுவரை) பெண்களும்.
                ஒரு நிகழ்வு ஒருவருக்கு எவ்விதத்தில் அர்த்தமாகிறது. அதனோடு இவருக்குள்ள ஈடுபாடு என்ன?,  அது அவரை எப்படி பாதிக்கிறது என்பதை பொருத்தே ஒரு நிகழ்வு ஒருவருக்கு யதார்த்தமாகிறது
            
    பாஜக + ஐயப்ப பக்தர்கள் +  ஐயப்ப பக்தர்களின் குருசாமிகள் இவர்கள் அனைவருக்கும் அந்த தீர்ப்பு ஒரு காயடிப்பு ( castration fear ) அச்சத்தை கொடுத்திருக்கிறது.
                பெண்களை ஐயப்பனின் 18ம் படியை கூடப் பார்க்கவிடாமல் கலகம் செய்வதும், நடையை சாத்துவோம் என்று (கோவிலை மூடிவிடுவோம்) என்று மிரட்டுவதும், இன்றைய நனவிலி அரசியலாக ஆகியிருக்கிறது.  இவர்கள் மனப்பீடிப்பு  (obsession ) நோயில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
                இவர்கள் ஐயப்பனை கடவுளாக மட்டுமல்லாமல் தங்களின் லட்சிய அகனாகவும் ( ideal ego ) கொண்டுள்ளதால் இது நடக்கிறது.
வக்கிரம் ,காயடிப்பு பயத்தோடவே நனவிலி உந்தலாக ஐயப்பனின் திருப்தியின் ( jouissance ) காவலனாக தன்னை கற்பனையில் இருத்திக் கொள்கிறது.மற்றமை மகிழ்வுக்காக(ஐயப்பன்) (Other )செயல்படுவதாக எண்ணிக்கொள்கிறது.
ஆகவே, போலீஸ் படையை எதிர்க்கும் ஐயப்பன் படையாக சித்தரிப்பும் உள்ளது.உட்ச நீதிமன்றம்,மாநிலஅரசு அதிகாரம் ஆகிய அனைத்தையும் புறக்கணிக்கிறது. அதாவது, வக்கிரம் காயடிப்பை (சட்டத்தை,ஒழுங்கை) மறுக்கிறது;உத்திரவாதத்தை மறுக்கிறது
 ( the pervert disavows castration).
                நம்பிக்கையானது மறைமுகமாக செயல்படுகிறது, அதாவது  கருத்தியல் அடையாளத்திலிருந்து (ideological identity) சிந்தித்தலை நீக்கிவிடுகிறது .கருத்தியல் நம்மீது பிடிமானத்தைசெலுத்துவதற்கு இது வழிவகுக்கிறது”-சிசெக்  .
                நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்பது கருத்தியல் ரீதியானதொரு இயங்கு நுட்பம் அல்லது பிரதிநிதித்துவ அமைப்பாகும்.
       இது சமூக, அரசியல் ரீதியான சடங்குகள் மூலம் செயல்படுத்தப் படுகிறது.  இந்த சடங்குகள் ஒரு கருத்தியல் செயல்பாட்டினை
(ideological  functions) கருத்தியல் ரீதியான அரசு சாதனங்கள் மூலமாக அங்கீகாரம் பெற வழி வகுக்கிறது.  அரசு சாதனங்கள் என்பதில் குடும்பம், ஊடகங்கள், தொழில் நுட்பம், மதம், உற்பத்தி முறை முதலானவற்றின் செயல்பாடுகளும் அடங்கும்.  இச்சாதனங்கள் ஒரு தன்னிலையைக் கட்டமைத்து, இயக்குகின்ற சமூகச் சூழல்கள் மற்றும் செயல்பாடுகளின் தொகுதியாகும்”, அல்தூசர்.
      இப்பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து, தினசரி / ஊடகங்களின் அரசியல் வெளிப்படையாய், காத்திரமாகவே செயல்படுகின்றது.  ஐயப்ப பக்தர்கள், பல ஊர்களில் இருக்கும் குருசாமிகளை உசுப்பிவிட்டு, ஒரு நெட் ஒர்க் வேலையைக் கூட செய்கின்றன.
      ஐயப்பன் கோவில் அருகே உள்ள பாஜக பக்தர்களின் கிளர்ச்சியை கண்டு போலீஸ் அச்சப்படுவதாகவும், சவால் என்றும் காட்டப்படுகிறது.
      அவர்கள் ஐயப்ப போராளிகள் என்ற நாமகரணம் சூட்டாதது ஒன்றுதான் பாக்கி.
      ஐயப்ப அரசியலில் முதன்மையாக உள்ளது ஐயப்பன் ஒரு பிரம்மசாரி, மற்றும் பெண்களின் தீட்டு.
      இதில் பிரம்மசாரியம் கேள்விக்குட்பட்டுவிடும் என்ற அச்சம் (காயடிப்பு) முதன்மையானது.
      அதாவது அது பால் உறவு, பால் கவர்ச்சி சம்பந்தப்பட்டது.  ஐயப்பன் இதெல்லாம் கடந்த நித்ய புருஷர்தானே! பின் ஏன் கவலை. மேலும் ஆண்டவன் படைப்பில், பெண் சுயாட்சிச் தன்மை, திறன் ஆகியவை இரண்டாம்பட்சமாகவா இருக்கும்!.
      பெண் மறுப்பாளர்களின் நனவிலி மனம் மனுதரும சாஸ்திரம் என்பதிலிருந்து புறப்படுகிறது.
      மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தை உண்டுபண்ணும். -  மனு 2:213.
       மாதர்கள் கற்புநிலை இன்மையும் நிலையா மனமும் நன்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்- மனு 9:15 (1919 பதிப்பில் உள்ளபடி).
      இந்த மனுதர்ம சாஸ்திரம் இன்றும் உயிரோடுதான் உலாவுகிறது.  ஒவ்வொரு மனுசங்க தோளிலும் வேதாளமாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. 
பெண்களின் மாதவிடாய் பெண்களின் இயற்கை.                  இது இவர்களுக்கு புனிதம் கெட்டுவிடும்,  தீட்டு.
      பெண்களின் சுயாட்சித்திறனை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்.  வீடுகளில் அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, மகள் இவர்களோடு வாழ்பவர்கள்தானே பெண்கள்.  சரி எது, தவறு எது, என்று தெரியாதா இவர்களுக்கு. அவர்களுக்கு ஆரோக்கியம் என்றால் என்னவென்று தெரியும், எப்போது என்ன செய்வது என்றும் தெரிந்தவர்கள் தான் அவர்கள். 
அவர்களின் சுயாட்சித் திறனை மதித்து ஆணாதிக்கத்தையும் வக்கிரத்தையும் விட்டுவிட்டு அவர்களின் வழியை மறைக்காமல் இருப்பதே ஆண் பெண் உறவின் ஆரோக்கியத்தை, உறவை வளர்க்கும்.
  




புனிதம் காப்போரே

இந்தியாவின் நம்பர் 1 பண முதலையான முகேஸ் அம்பானிக்காக இராமேஸ்வரம் இராமர் ஆலயத்தின் ஆகமவிதி மீறப்பட்டுள்ளது.
கோவிலில் உச்சி காலம் முடிந்ததும் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மதியம் 3.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.  
முகேஸ் அம்பானி மதியம் 12.55க்கு கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் முடித்து திரும்பும் போது மணி 1.50.  அதாவது நடை அடைக்க வேண்டிய நேரத்தில் பணம், அதிகாரம் (மோடி நண்பர் இவர்) ஆகம மீறலை நடத்துகிறது. புனிதம் பணிந்துவிட்டதா?
- தகவல் தினமலர் 28.11.2018. 
இவர்களிடமிருந்து ஆண்டவனை காப்பாற்றுங்கள், பெண்களிடமிருந்து அல்ல.
               

                                                                        க.செ

21 Oct 2018

“ நெறியின் அடித்தளம் மனித உரிமைகளாகும் ” -ALAIN BADIOU.


கேரளாவில், ஐய்யப்ப பக்தர் சங்கம் மனித குலத்துக்கு எது சிறந்ததுஎன்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலும் சுப்ரீம் கோர்ட்டுக்கு குட்டும் (தலையில்) வைத்துள்ளது.
      “ நூற்றாண்டு பாரம்பரியமான நடைமுறைக்கு முரண்பாடாகவும், லட்சக் கணக்கான பக்தர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாகவும், உள்ளது. எனவே இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ” என கூறப்பட்டுள்ளது
-          இந்து தமிழ். அக்டோபர் 9, 2018.
மேலும் ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு பெண் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. பகுத்தறிவு என்ற பெயரில் அத்தியாவசிய மத நடைமுறைகளில் தலையிட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.  -அதே தேதி இந்து
      ஐயப்ப பக்தர்களின் பிரதிநிதிகள்  (Spokes man) ஒன்றை , அன்றாட நடக்கும் ஒன்றை மறந்துவிட்டனர். “ கொத்தடிமைகளை, பல்வேறு வேலைப் பிரிவினையில் உள்ளவர்களை மீட்டெடுத்து அவர்களின் சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்டுவது இன்றும் கூட நடைபெறுகிறது.
      ஆகவே, மதச்சடங்குகளால் மட்டுமல்லாமல், ஆண் ஒடுக்கு முறையை வழமையாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறுகிற பரம்பரைச் சொல்லாடல் மொழியில் உள்ளவரை அவர்களுக்கு (பெண்கள்)  விடுதலைக் குரல் ஒலிக்காது
அதுவும்தீட்டுஎன்பது தீங்கானது, அசூசையானது என்ற வசியக்கட்டுக்கு உள்ளானவர்கள் அவர்கள்; நம்பூதிரிகளின் மாய மந்திரத்துக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த தன்னிலைகள் தானே அவர்கள்.
      அவர்கள் ஐயப்பன் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்த விரும்புவார்களா?என்ன?
      ஐயப்பன் இருப்பிடம், வரலாறு, அவரைப் பார்க்க, அனுஷ்டிக்க வேண்டிய அனுஷ்டானங்கள், கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை என்று சொல்ல வேண்டிய அவசியம், இதெல்லாம் போக மலையாளிகளின் super star  ஆகவும் ஐயப்பன் இருக்கிறார்
மலையாளிகளின் /தமிழர்களின் ego ideal மற்றும் super ego- ஆகவும் உள்ளார்
கேரளாவின் எல்லைக்குள் முனுமுனுப்பு கூட ஓசையற்று எதிர்ப்பாகத்தான் இருக்கும்.
      பெண்கள் ஐயப்பனை சந்திக்க வருவார்களானால் கோவிலை (நடை) சாத்துவோம் என்ற அதிகாரக் குரலின் மிரட்டல் வெகு தொலைவுக்கு கேட்கிறது.
      சூப்ரீம் கோட்டின் தீர்ப்பு, ஐயப்ப பக்தர்களுக்கு காயடிப்பு அச்சத்தை ( castration fear ) கொடுத்துவிட்டது போல் தெரிகிறது.
      பதட்டம் குருத்தெலும்பிலிருந்து வருகிறது போல் இருக்கிறது.
      மலையாளத்தின் ஜனத் தொகையில் சரிபாதியினருக்கு உரிமை வழங்காமல் இருப்பதை நூற்றாண்டு காலமாய் மற்றொரு பாதியினர் அங்கீகரித்து வருகின்றனர், தங்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த உரிமையின் சுகம் போய்விடக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாய் உள்ளனர். இதில் எல்லா சாதி ஆண்களும் ஒரே  சாதியாய் ஆகியுள்ளனர்.
ஐயப்பன் கோவில் சாமி கும்பிடும் உரிமையை மறுக்கும் இந்த அகந்தை மனம் இந்தியாவின் தலித் விடுதலைக்கு குரல் கொடுக்குமா?அதற்கு,சாதியத்தை ஒழித்து கட்டவேண்டும் என்ற எண்ணம், ஆசை வருமா என்ன?
      ஐயப்பன் தளத்தின் பால் தன்மை, நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கிறது
பெண் உரிமை என்பது தீட்டு என்ற கருத்தமைவையும் சேர்த்துதான், அவர்களை ஒதுக்குகின்றனர்.அப்போது ஐயப்பன் என்பது நம்பிக்கை , பாரம்பரியம் என்று முன் வைக்கிறார்கள். ஆகையால் தீட்டு ஒவ்வாமையாகிறது.
      ஒழுக்க முறைமை என்பது எவ்வித விதிவிலக்கும் இன்றி ஒவ்வொரு தன்னிலையையும் நோக்கி விடுக்கப்பட்ட உள்ளார்ந்த நேரடி கோரிக்கையாகும்.
      இவர்கள் பார்க்கும் ஒழுக்கவிதி சரிபாதி ஜனத்தொகையை, (இந்தியா முழுக்க கோடிகளில் . . . ) கட்டுப்படுத்துகிறது, ஒழுக்க விதி கட்டளையாகிறது. 
ஒழுக்க விதியை மீறுவதற்கான நம் மனப்பாங்கை அங்கீகரிக்க வேண்டியுள்ளது.
      இந்தப்போராட்டத்தில் ஊழல் அரசியல் புகுந்து விளையாடுகிறது. மாறி மாறி துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
      சுப்ரீம் கோர்ட்டு இதை உரிமைப் பிரச்சினையாய் பார்த்து உரிமை வழங்கிவிட்டது.
      ஆனால், ஒழுக்க முறைமை என்று வாதிட்டால் அது மௌனமாகிவிடும்.  
      “ சட்டம் என்பதும் ஆசையை ஒடுக்குதல் என்பதைத் தவிர வேறல்ல ”,
      இந்த இடத்தில் லெக்கானின் மன அலசல் ஒரு தீர்வை முன் வைக்கிறது.
      லெக்கான் நெறியை (Ethics) முன் வைக்கிறார். இங்கு நெறி என்பது வழக்கமாக குறிப்பிடப்படும் ஒழுக்க விதிகளை அல்ல(விழுமியம் அல்ல). வேறு வேறு தளத்திலிருந்தும், குறிப்பாக தத்துவத்தளத்திலிருந்து இங்கு கொண்டு வருகிறார்.(இதுபற்றி விரிவாக இங்கு பேசமுடியாது).
      லெக்கான், நானுணர்விலிருந்தும் (ego) , மகிழ்வு அல்லது பரிவு கோட்பாட்டிலிருந்தும் தன்னிலையை (subject) வேறுபடுத்துகிறார்.
      இந்த நிலைப்பாடே நெறியாக (ethics) இருக்கிறது.மனித இயல்பு (human nature) அல்லது சிறந்தவை குறித்த முற்கோள்கள் நெறிகளின் அடிப்படையாய் தொடர்கிறது.
      தனியன்களின் சுயநலனை அல்லது நானுணர்வை மையப்படுத்தும் போக்கை (egoism) அனைவருக்குமான நல்லதுடன் எப்படி இணக்கப்படுத்துவது என்ற பெரும் கேள்வி எழுகிறது.
      இறுதியாக, நெறியை இப்படி வரையறுக்கலாம்.நெறி என்பது மனிதர்களாகிய நாம் சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதாகும் என்கிறார் லெக்கான்.
      நல்லது குறித்த பிரச்சினையை எழுப்புகின்ற அந்தத் தருணத்தில் நெறி துவங்குகிறது- லெக்கான்
      ஆகவே பெண்களுக்கான கோரிக்கையாக இது பார்க்கப்பட வேண்டும்.
      எது நல்லது? எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் எது நல்லது என்ற தேடலை ஆரம்பிக்கட்டும்(பெண்கள்),அனைவருக்குமான நெறி வெளிப்படட்டும்.
      விரும்புபவர்கள் பங்கேற்கலாம்.
                                                                        .செ.
           

       இந்த நிகழ்வு(event)
ஒரு புதிய சாத்தியத்தின் (creation)
துவக்கமாக உள்ளது.
 இது அதே மாதிரியானதல்ல.-Alain Badiou