15 Dec 2015

ஒளிந்திருக்கும் '17' சுயமோகக் கூறுகள்

2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் தமிழகத்தை ஒரு கை பார்த்துவிட்டது. இதைச் செய்ய மேலதிக மழையைப் பயன்படுத்திக்கொண்டது.[ முன்பு சுனாமிக்கு கடல் ]. நாளைக்கு....?
 
       கடலூர் , தென்மாவட்டங்களில் சில, வட மாவட்டங்கள் ; ஏறக்குறைய சில தென் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்கள் அனைத்தும் ;  அழிவையும் ,  பேரழிவையும் சந்தித்துள்ளன.
       இதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின. காட்சிப் பொருளாக்கியும் விட்டனர். மேலும் ஊடகங்கள் தங்களின் மனச்சார்புக்குகந்து உதவி , சீரமைப்புப் பணியில் பணியாற்றிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன ; சில ஊடகங்கள் கட்சியின் அங்கமாகவே செயல்பட்டன. இதுபோக , தன்னார்வக் குழுக்களும் , தன்னார்வலர்களும் ; தன்னெழுச்சியாக மாணவர்கள் , இளைஞர்கள் பங்கேற்பும் அங்கங்கே நடந்தது வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஊடகங்கள் இவர்கள்பால் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் அவர்களின் மிதவாதிகள் கூட மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்திருப்பர். கட்சிகள் இதைத் தேர்தல் களமாகவே கவனித்துக்கொண்டனர் [ ஆனால் வாய்மொழியோ இதை அரசியலாக்க வேண்டாம் என்பது ].

சென்னை தலைநகர் அந்தஸ்து பெற்றதால் மேலோங்கிய குரலும் ; மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கடலூரின் குரல் ஈனஸ்வரத்திலும் ஒலித்தது.
       சென்னையைக் காப்போம் ! சென்னையை மீட்போம் !!.
அடேங்கப்பா ! இதைப் பொருத்திருந்து பார்ப்போம் . குடிசைவாழ் , கூவம் வாழ் மக்களின் வீடுகள் , குடிசைகள் எப்படி என்று தெரியவில்லை ; தெரிந்தபின்தான் மற்றவை.
       இவர்களில் பலரும் , நடுத்தர மக்களில் சிலரும் , பிழைப்பு அரசியல் தரகர்களுக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சமூக விரோதச் செயலாகக்கூடத் தோன்றாமல்,நெஞ்சுயர்த்தி கட்டிடங்களும், குடிசைகளும் நிரவிக்கிடக்கின்றன.
       இந்த ஆக்கிரமிப்புகள் இருக்கும்வரை அபாயம் தொடரத்தானே செய்யும்.
       சென்னை தினசரி , வார இதழ்களின் தலைப்புகளின் கருத்துக்கள் கவனத்திற்குரியது.
      
      ஆனந்த விகடன் :  நிலம்...நீர்...நதி !
                Front Line :    AFTER THE DELUGE.
                தினமலர் :     ஆவேசம் . எம்.பி ; எம் . எல். ஏ ; கவுன்சிலர் மீது 4 மாவட்டங்களில்
       ஜூவி  :       சென்னை மூழ்க    மழையின் தவறு அல்ல மனிதனின் தவறு !
ஜூவி கழுகார் :“அதிகாரம் இல்லாத அமைச்சர்கள் அடக்கிவாசிக்கும் அதிகாரிகள்
                இடையில் சிக்கித் தவிக்கிறது  தமிழ்நாடு “.

இன்னும் பல இதழ்களில் பலவாறாக வெளிப்பாடு உள்ளது . விமர்சனங்களாகவும் , ஆலோசனைகளாகவும் வந்துள்ளன.
மற்றமையின் கேள்வி ,
எழுந்த விமர்சனங்கள், ஆலோசனைகள் மட்டும் பரிசீலனைக்குப் போதாது.
மனிதர்களின் கருத்து  பேசுபவர்களின் ஆசை , மனஎழுச்சிகளும் சேர்ந்து மொழியாகி , பேசப்படுகிறது.
கைநிறைய தரவுகள் ( Data ) உண்டு. காரணங்களும் கூறப்படுகிறது , கேட்கப்படுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களின் மனம் , உட்கிடக்கை என்னவாக இருந்தது, இருக்கிறது? இது தெரியவேண்டும்.

மன அலசல் சுயமோகம் (Narcissism) பிரதானமான நோயாகவும், அது சமூகமயமாக மாறி வருவதாகவும் எச்சரிக்கிறது. ஒவ்வொருவருக்கும் சுய கௌரவம் ( Self Esteem) இருக்கும் ; இருக்கவும் வேண்டும் ஆனால் , இதுவே சுயமோகமானால் ( Narcissism ) , பிறருடனான உறவில் , அது தன்னைத்தானே எப்படி வழி நடத்தும் ? பிறரை எப்படி வழி நடத்தும் , மதிக்கும் , பயன்படுத்தும்? என்று நமக்குத் தெரிவது உதவிகரமாக இருக்கும் . நடந்தது கருத்துப் பிழையா? அல்லது ஆளுமைக் கோளாறா ? என்று தெரிந்துவிடும்.
இங்கு ஏற்கனவே வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சுயமோகக் குறிகள் கொடுக்கப்படுகின்றன. நடந்த பேரிடர் தெரியும் . விமர்சனம் , ஆலோசனை உண்டு. இனி , ஆட்சியாளர், அரசியல்வாதிகளின் உள்ளார்ந்த நடத்தைகளில் எத்தகைய சுயமோகக் கூறுகள் அவர்களை ஆட்சி செலுத்தியது என்று நீங்களே அடையாளம் காணமுடியும். 
Frequency of Narcissistic personality disorder:
1.        “அனைத்து முடிவெடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கே.
2.        பிறரது கருத்துக்களுக்கு காது கொடுப்பதற்கு பொறுமையின்மை அல்லது திறனின்மை.
3.        முறையான அதிகாரம் எதுவுமின்றி வேலைகளைப் பகிர்வது / பிரதிநிதிகளை அனுப்புவது.
4.        எப்போதும் முன்னுரிமை பெற்றவர்களாக தங்களை உணர்வது.
5.        பிற திறமையான ஊழியர்கள், கீழ்மட்ட ஊழியர்களால் அச்சமுறுவது அல்லது பீதியடைவது.     R . Glenn Ball and  Darrel Puls.
6.         ஹோஹட்  (Kohut) :  நகைச்சுவையின்மை , பரிவின்மை அல்லது இணக்கமின்மை.
7.        காரணங்கூறமுடியாத பொய்யுரைத்தல் குணாம்சமாகவே உள்ளது.
8.        மற்றவர்களைச் சிறுமைப்படுத்துதல், ஆரோக்கியமான நகைச்சுவைக்குப் பதிலாக சுடுசொற்களைப் பயன்படுத்துவது.
Diagnostic And Statistical Manual Amendment V
9.        அடையாளம் (Identity ) , சுய வரையறுப்பிற்கும் ; சுய கௌரவ ஒழுங்குபடுத்தலுக்கும் தேவைக்கதிகமாகப் பிறரைச் சார்ந்திருப்பது ; மிகைப்படுத்தப்பட்ட சுய மதிப்பீடுகள் .
10.     பரிவு ( Empathy ) : இதரர்களின் உணர்வுகளை / தேவைகளை அங்கீகரிக்கக்கூடிய அல்லது அடையாளம் காணக்கூடிய திறனின்மை.
11.     நெருக்கம் ( Intimacy ) : உறவுகள் பெரும்பாலும் மேலோட்டமானவையாகவே இருக்கும் ; கறாரான சுயகௌரவ வரையறுப்பிற்கு எற்பவே நிலவும். இதரர்களின் ( others ) உணர்வுகள் மீது உண்மையான அக்கறை இல்லாததாலும் , தன் நலனுக்கான தேவை மேலோங்கியிருப்பதாலும் பரஸ்பர உறவானது இயல்பானதாக இருக்காது.
12.     பெருமித உணர்வால் ( grandiosity ) குணாம்சப்படுத்தப்படும் பகை முரண்பாடு : சீரான அல்லது மறைமுகமான முன்னுரிமை பெற்றுள்ள உணர்வு ; தன்னலப்போக்கு (self-centeredness ) ; ஒருவர் ( தான் ) மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர் என்ற நம்பிக்கையை விடாப்பிடியாகக் கொண்டிருப்பது ; பிறரிடம் கர்வமாக நடப்பது .
13.     ( சிலர் ) பிறர் கவனம் ஈர்ப்பது (Attention seeking ) : மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதற்கும் , மற்றவர்களின் கவனத்திற்குரியவராக இருப்பதற்கும் கடுமையாக முயற்சிப்பது ; தனக்கான மதிப்பைத் தொடர்ந்து தேடுபவராக இருப்பது.
Anne  Manne
14.     சுயமோக ஆளுமைக் கோளாறு ( narcissistic personality disorder) பரந்தளவிலான பெருமித உணர்வைக் கொண்டதாக உள்ளது. தான் பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்கிற தீவிர ஆசை கொண்டதாக , முன்னுரிமை பெற்ற எண்ணம் கொண்டதாக, பிறரைப் பயன்படுத்திக்கொள்ள ( exploit ) அல்லது பிறரைத் தவறாக நடத்துவதற்கு விருப்ப முடையவராக இருப்பது , பிறரால் மதிக்கப்படவேண்டும் என்கிற அதீத விருப்பமும் , பிறரிடம் பரிவு இல்லாமலும் உள்ளார்கள் . ஆனாலும் கூட , சுயமோகிகள் எளிதில் மனம் உடைந்து போகக்கூடியவர்களாகவும் , அவமானத்திற்குள்ளான வெறிக்கு உள்ளாகக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
15.     இந்த சுயமோகிகளின் பெருமித சுய நம்பிக்கைகள் ( grandiose self-belief ) புதைமணல் மேல் கட்டப்பட்டவைகளாக உள்ளன.
16.     உச்சபட்ச தனிமனித போக்கு ( individualism ), இன்றைய உலகில் பிறரின் ( தலைவர் / தலைவி ) கவனஈர்ப்புக்கான போட்டி வெற்றி பெற்றவர்களையும் தோல்வி யுற்றவர்களையும் உருவாக்குகிறது . இவர்களில் மனச்சோர்வு உடையவர்களாக உணர்பவர்கள் புறக்கணிக்கப்பட்டு விலக்கப்படுகிறார்கள் – விலக்கப்படுதல், ஓரங் கட்டப்படுதல் ஆகியவற்றால் வரக்கூடிய அவமானத்திற்கான எதிர்வினைகளின் ஒன்றாக பழியெடுப்பை மேற்கொள்கிறது அவர்கள் மனம் . அதேவேளையில் அநாமதேயமானவர் என்ற உணர்விலிருந்து அவர்களை விடுவிக்கவும் செய்கிறது.
17.  Otto Kernberg சொல்லும்போது ,   புற்று ( நோய் ) சுயமோகமானது ( malignant narcissism ) இவ்வுலகில் நிலவும் பெரும் தீங்கிற்கான தோற்றுவாயாக உள்ளது   என்கிறார் .யதார்த்தத்தில்,   சுயமோகமானது , சுயமோகத்தின் அன்பு உள்நோக்கி திரும்புகிறது ; உன்னதப்படுத்தப்படுகிறது ; போற்றப்படுகிறது ; வியக்கப்படுகிறது ; நியாயப்படுத்தப்படுகிறது ; அது அழிப்பு உந்தல்களுடன் ஒன்றிணையும்போது சுயமோகம் அபாயகரமான ஒன்றாக ஆகிவிடுகிறது ; அதாவது, பொய்யுரைத்தல் , பிறரை சூழ்ச்சியாக பின்னிருந்து கையாளுதல் , பயங்கரவாதம் கூட உன்னதமானவையாகவும் , நேர்மையான நடவடிக்கையாகவும் எண்ணப்படுகிறது. புற்றுநோய் சுயமோகிகள் பிறரின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதற்கான தன் தாகத்தை தீர்ப்பதற்காக பிறரை கொலை செய்யவும் கூடும். சுயமோகத்தில் ஊதிப்பெருக்கப்பட்ட பெருமிதமானது ( inflated grandiosity ) சமரசத்திற்கு இடமளிக்காத யதார்த்தத்தால் மீண்டும் மீண்டும் பாதிப்பிற்குள்ளாகிறது. இப்போது மனச் சோர்வும் தற்கொலையும் கூட  இதற்கான எதிர்வினையாக இருக்க முடியும் .
(தமிழாக்கம் : பிட்சு , பாரு.) 
மன்னிக்கவும் . மிக நீண்ட மருத்துவமனை கோட்பாடுகள் கொடுக்கப்பட்டுவிட்டது.
   மேலே கூறிய சுயமோகக் கோட்பாடுகள்  Tip of the Iceberg ‘ தான். இதன்மூலம் தனிமனிதர்களுக்கிடையிலான உறவிலிருந்து ( குடும்பம் உட்பட ) நட்பு , பள்ளி , கல்லூரி , கட்சி , ஆட்சி நிர்வாகம் வரையும் ; பயங்கரவாதத்தையும் கூட அடையாளம் காண முடியும். சுயமோகக் காரணங்களால் இயக்கப்படும்போது கருத்து  / வாதம் எல்லாம் ஒரு கானல்தான் . ஆசை மறைந்து கொள்ளும் .
தனிமனிதர்களுக்கிடையிலான உறவில் அன்பும் நெறிகளுமே ( Ethics ) நல்லுறவிற்கும், நல்லாட்சிக்கும் அடிப்படையாகும்.
  


© க.செ. 

13-12-2015

No comments:

Post a Comment