23 Dec 2016

பெரியாரின் தன் மதிப்பும் - அதிமுகவில் காயடிப்பு அச்சமும்

 ”மகிழ்வுக் கோட்பாட்டை மையமாகக் கொண்டே நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் –லெக்கான்.
தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை குறைப்பிரவசத்திற்கான முயற்சி நடக்கிறது  என முனகல் சப்தம் கேட்கிறது.
........." ஆட்சி , அதிகாரம் , வரம்பில்லா வருமானம் போய்விடுமோ என்ற அச்சம் ஆட்டிப்படைக்கிறது . ஓடும்வரை வண்டி ஓடட்டும் என்று , சசிகலாவை பொதுச்செயலாளர் என்னும்  ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்க்கத் துடிக்கின்றனர் ;  பதவிக்காக பல்லாக்கு தூக்குகின்றனர்“ -தினமலர் 18-12-2016

 இதே பார்ப்பன பத்திரிக்கைகளும் , ஊடகங்களும் நுணுக்கமாக J.வை ஆதரித்து வந்ததும் , தூக்கிப் பிடித்ததும் ‘ போதுமான அளவிற்கு ‘ அம்பலப்படுத்தப்படவில்லை . J.-  வின் மறைவுக்குப் பிறகு , ‘ சசிகலா ’ வை எதிர்க்கும் மனோபாவத்தில் , முதல் மந்திரி , அதிமுகவில் பிராமணச் செல்வாக்கு இழந்து விடாமல் இருக்க எடுக்கும் காத்திரமான எழுச்சியை பார்ப்பன பத்திரிக்கைகள் அரசியல் முனைப்புடன் செயல்படுத்துகிறது . எம்ஜிஆர் , ஜெயலலிதா பிம்பத்தை கட்டிக் காக்க பார்ப்பனிய ஊடகங்கள் செய்யும் பரப்புரை கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
 “  பல்லாக்கு தூக்கிகள் இழப்பதென்ன? பெறுவது என்ன ?
பெறுவது :அதிகாரம் ; வரம்பில்லா வருமானம் .
இழப்பதென்ன :   ஜனநாயக உரிமை இழத்தல்.
அத்துடன் சுயநிர்ணய சிந்தனைப் போக்கிற்கு இடமில்லாமல் செய்தல் .
ஊத்தைக் கலாச்சாரத்திற்கும் , வக்கிரத்துக்கும் வக்காலத்து வாங்கல்.
சாதிய அடையாளத்தையே அரசியல் மூலதனமாகக் கொண்டுள்ள பொதுவெளிக்கு , அதன் மணத்தை ஆசைதீர முகரும் வக்கிர மனத்திற்கு சுய நிர்ணய உரிமையின் அங்கலட்சணம் எப்படித் தெரியும் ? மேலும் , நடப்பது BC  politics . அதற்கான அடிக் கட்டுமானத்தில் சாதிய பீடிப்பு மனநோய் . இங்கு ஜனநாயகத்திற்கோ , சுயநிர்ணய உரிமைக்கோ லட்சியமாக இராதுதானே ?
இது ஈ. வே. ராவின் கொள்கைகளுக்கு புறம்பாகத் தெரிகிறதே .
“ நமது நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும் ; ......தனித்தியங்கும் பெருமையை அடைய வேண்டும் ....”  . சொன்னது பெரியார் 1925ல். 
    பெரியாரியல் –தொகுதி 1 . வே . ஆனைமுத்து.
அன்று தன் மதிப்பு என்பதுதான் சுயமரியாதைக் கொள்கை என்ற பெயரால் தொடர்ந்து அவரால் முன்வைக்கப்பட்டது “ –அதே நூல்.
தன் மதிப்பு (self respect ) என்பதுதான் சுயமரியாதை என்பதை உணராமல் , தலைவர் வழிபாடு , கட்சி வழிபாடு , சாதி வழிபாடு ,  சினிமா வழிபாடு , மத வழிபாடு என்ற கும்பல் கலாச்சாரம் தமிழகத்தில் தழைத்தோங்கி நிற்கையில் , பெரியார் இன்று இருந்தால் அவரின் உராய் வீச்சு எந்தத் திசையில் இருக்கும் ?
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை மீறி , பல்கிப் பெருகி இருப்பது பார்ப்பனரின் புரோகிதமும் , மதச் சடங்குகளும்தானே ! இனி சுய நிர்ணய உரிமை பார்ப்பனரல்லாத மக்களிடம் எப்படி ஜீவித்திருக்கும் ?
அதிமுக மந்திரிகள் , எம்.எல் ஏ , முக்கியஸ்தர்களின் பார்வையில் தமிழக முதல்வர் , கட்சிப் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதிகளாக சித்தரிக்கப்பட்டவைகளிருந்து சில :
சி. பொன்னையன் , செய்தித் தொடர்பாளர் :
......எம்ஜிஆரின் மனச் சாட்சியாக ஜெயலலிதா விளங்கியதுபோல , ஜெயலலிதாவின் மனச் சாட்சியாக வாழ்ந்து வருபவர் சசிகலா....
... அதிமுகவுக்கு தலைமை ஏற்கவும் , பொதுச் செயலாளராக வருவதற்கும் முழுமையான தகுதி படைத்தவர் அவர்தான்....
.....சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கு ஏதுவாக கட்சியின் விதிகள் தளர்த்தப்படும் . இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக் குழுவில் அறிவிக்கப்படும் “ .... – தி இந்து .16-12-2016
.......முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ரூ .7 லட்சம் முதலீடு செய்தார். இந்த தொகைக்கு வாரிசுதாரர் பெயராக என். சசிகலா என்றே குறிப்பிட்டுள்ளார் .இதில் ஜெயலலிதா கையொப்பமிட்டுள்ளார்...”                                                         -தி இந்து 17-12-2016
கே. ஏ . செங்கோட்டையன் , எம்எல்ஏ. :
.....இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்வதற்கான முழு தகுதியும் உங்களிடம்தான் இருக்கிறது . பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து இயக்கத்தை எப்படி வழிநடத்திச் செல்வது என்பதை கூர்ந்து கவனித்துள்ளீர்கள் . உங்களால் மட்டும்தான் அதை நிறைவேற்றிட முடியும்.....
அதிமுக-வின் முழுப்பொறுப்பை தாங்கள்தான் ஏற்கவேண்டும் என சசிகலாவிடம் வலியுறுத்தியுள்ளோம்....” – தி இந்து 11-12-2016
தம்பிதுரை எம்பி , பாராளுமன்ற உதவி சபாநாயகர் :
......கடந்த 35 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு நெருங்கிப் பழகி , அவருடனேயே வாழ்ந்து , அவருக்காக எல்லாவகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சசிகலா.....
அண்ணா , எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சாதி , மத வேறுபாடுகளைக் கடந்து , தொண்டர்களை அரவணைத்து , பாதுகாத்து , வழிநடத்தும் ஆற்றல் நிறைந்தவர் சசிகலா மட்டுமே . இவரே ஜெயலலிதாவின் வாரிசு.....”    – தி இந்து 12-12-2016
வி.வி. ராஜன் செல்லப்பா , எம்எல்ஏ. :
......  ஜெயலலிதா தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தார் ; ஜெயலலிதாவுக்காக சசிகலா தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் . காமராஜர் , அண்ணா , எம்ஜிஆர் , ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு வாரிசு இல்லை . அதுபோல், சசிகலாவுக்கும் வாரிசு இல்லை . இயற்கையாகவே இந்த ஒற்றுமை அமைந்துவிட்டது.....”
– தி இந்து 13-12-2016.

இதுபோக , போயஸ் கார்டனில் திரளாக அதிமுக-வினர் கும்பிட்ட கையோடு சசிகலாவிடம் கெஞ்சும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
ஏன் இப்படி ஒருவரிடம் கெஞ்சல் நடக்கிறது . மன அலசலுக்கு இம்மனப்போக்கை உட்படுத்தினால்....
ஆட்சியில் தலைமை மாறவேண்டிய கட்டாயம் . இந்தக் கட்டாயச் சூழலில் பொறுப்பில் உள்ளவர்கள் , முக்கியஸ்தர்கள் , மந்திரிகள் , செல்வாக்குப் பொருந்தியவர்கள் அனைவருக்கும்  காயடிப்புப் பயம் ( castration fear ) வந்து விட்டது . அதிகாரம் ,  பெற்றிருந்த செல்வாக்கு அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது .
பழைய உறவு முறையே நீடிப்பதே தமக்கு நலம் பயக்கும் என்ற முடிவால் , இப்போதும் தம் ஆசைக்கான ஆசைப்படுபொருளாக ( object ) , சின்னம்மா ( சசிகலா) தென்படுகிறார்கள் ; மேலும் , தலைமை மாற்றமடைந்தால் தங்களின் அடையாளங்கள் என்னவாகும் என்ற காயடிப்பு பயமும் தொத்திக் கொள்கிறது .
இப்போது அடையாளத்தைப் பெறுவது என்பதில்  முதலில் தலைமை நீங்கள்தான் என்று இவர்கள் சின்னம்மாவை அங்கீகரிக்கிறார்கள் ; பதிலுக்கு சின்னம்மா இவர்களின் அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு .
அங்கீகாரமே ஒருவரின் அடையாளத்தையும் உறவினுடைய இயல்பையும் தீர்மானிக்கிறது (லெக்கான்) . இருவரிடமும் பரஸ்பரமாக அங்கீகரித்தல் நடைபெறுகிறது .
இந்த அங்கீகாரத்தின் மூலமாகவே ஒரு மனிதர் சமூக உறவில் , தளத்தில் தன்னுடைய இடத்தையும் பெறமுடியும் ( லெக்கான் ) .
இப்போக்கில் முதலில் ஜனநாயகம் செத்துவிடுகிறது.
சுய நிர்ணய உரிமை / சுதந்திரம் அடிமையாக்கப்பட்டு விடுகிறது.
இந்த அடையாள அரசியல், சுயமோக அதிகாரத்தின் மேல் உள்ள பித்து / ஆசையாகும் (desire ).
சுயமோகப் பித்து தான் அதிகாரத்தைப்போல் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும் ; அதாவது , தான் அதிகாரமாகவே (  phallus ) இருக்கவேண்டும் ;
மற்றொன்று , அதிகாரத்தின் ( phallic power ) ஆசைக்குரிய , நம்பிக்கைக்குரிய , நம்பகத்திற்குரிய நபர் / ஆசைப்படுபொருளாக  ( object ) தான் இருக்கவேண்டும் .
இந்த இரண்டு போக்குகளுமே காயடிப்பு அச்சத்தை  ( castration fear ) போக்கிக் கொள்ளும் முயற்சியே ஆகும் என்கிறார் லெக்கான்.
மேற்கூறிய போக்கு சமூகத்தில் மேலாண்மை பெற்ற கருத்தாக இருக்கும்வரை  சுயநிர்ணயம் “ என்பதும் , தன்மதிப்பு என்பதும் கேலிக்குரியதாக இருக்கும் . ஆண்டான், அடிமை என்ற உறவு ; தலைவர் , தொண்டர் என்ற வார்த்தை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி , சாராம்சத்தில் ஆண்டான் , அடிமை உறவே நீடிக்கிறது.
சுயநிர்ணய உரிமை காலூன்றாமல் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.
மக்களிடம் மற்றமையாக ( Other ) மேற்படி உறவே செல்வாக்குச் செலுத்துகிறது .
க.செ
22-12-2016

20 Dec 2016

படைப்பாளிகளும் பகற்கனவு காணலும்


-          சிக்மண்ட் பிராய்டு(1908)
- தமிழாக்கம் : முனைவர் கனக விநாயகம்

சென்ற வாரத்தின் தொடர்ச்சி........

       
       நான் விவரித்தவற்றைத் தெளிவாக விளக்குவதற்கு ஒரு மிக எளிய எடுத்துக் காட்டானது பயன்படலாம் நீங்கள் ஒரு அநாதை ஏழைச் சிறுவனுக்கு ஒருவருடைய முகவரியைக் கொடுத்து , அம் முகவரியுடையோரை அணுகினால் அவனுக்கு ஒரு வேலை கிடைக்கும் என்று அனுப்பியதாக வைத்துக் கொள்வோம் அச்சிறுவன் அம்முகவரியைத் தேடிச்செல்லும் வழியில் , அந்தச் சூழலுக்கு ஏற்றவாறும் ; அதேவேளையில் ,அச்சூழலிருந்தே உருவாகும் வகையிலமைந்த ஒரு பகற்கனவில் ஈடுபடலாம் அப்பகற்கனவின் பொருண்மையானது அநேகமான கீழ்க்காணும் விதத்தில் ஏதேனுமொரு வடிவில் அமையலாம் :
       நீங்கள் அனுப்பிய அநாதைச் சிறுவனுக்கு வேலை கிடைக்கப்பெறுவதோடு , அந்த வேலையைத் தனக்குக் கொடுத்த தலைவரின் நல்லெண்ணத்தைப் பெறுவதாகவும் அதன் மூலமாக அவன் அத்தலைவருடைய வியாபாரத்தில் தவிர்க்கமுடியாததொரு அங்கமாக உருவாவதாகவும் அமையலாம்.மேலும் , அந்த நல்லெண்ண உறவின் மூலமாக அத்தலைவர் , அவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று , அவ்வீட்டிலுள்ள அழகான இளம் வயதுடைய தனது மகளை அவனுக்கு மணமுடித்துக் கொடுப்பதோடு மட்டுமின்றி அவனை அவருடைய வியாபார நிறுவனத்திற்கு பொறுப்பாளராக நியமிப்பதாகவும் ; பின்னர் , அவரோடு வியாபாரத்தில் இணையாக செயற்பட்டு , கடைசியில் அவ்வியாபாரத்தில் அவருக்குப்பின் அவருடைய சந்ததியாக அவன் பரிணமிப்பதாகவும் அமையலாம் இவ்விதமான கற்பிதப்படுத்துதலில் கனவுகாண்பவர் தன்னுடைய மகிழ்சியான இளமைக் காலத்தை , அதாவது பாதுகாப்பான வீடு , அன்பு நிறைந்த பெற்றோர் மற்றும் தொடக்ககாலத்தில் தனது ஈர்ப்புக்கு உகந்ததாக இருந்த பொருட்கள் யாவற்றையும் மீட்டெடுத்துக்கொள்கிறார்இந்த எடுத்துக்காட்டின் வழியாக விருப்பமானது எவ்வாறு கடந்த காலத்திற்கு உரியனவற்றை நிகழ்காலச் சூழலைப் பயன்படுத்திக் கட்டமைத்துக்கொள்கிறது என்பதோடு , அதனை எதிர்காலத்திற்கும் உரியதொன்றாக தோன்றச் செய்கிறது என்பதனை விங்கிக்கொள்ள முடியும் .
       கற்பிதப்படுத்திக்கொள்ளும் செயற்பாடுகளைப் பற்றி மேலும் அதிக அளவில் விளக்கமுடியுமெனினும் , அவைகளில் சிலவற்றை மட்டும் நான் எவ்வளவு சுருக்கமாகக் கூற இயலுமோ அவ்வளவு சுருக்கமாகக் கூறுகிறேன்கற்பிதங்களானவை மிகுந்த ஆடம்பரத்துடனும் மிக அதிக வலிமையுடனும் தோன்றுமாயின் அது நரம்புநோய்க்கோ அல்லது மன நோய்க்கோ இட்டுச் செல்லும் தொடக்கப்புள்ளியாகும்மேலும் கற்பிதங்களானவை , நமது நோயாளர்களால் உடனடியாக வெளிப்படுத்தப்படும் வேதனைமிக்க அறிகுறிகளின் மனதளவிலான முன்னோடி நிலையின் வெளிப்பாடாகும்இது நோயியலுக்குள் நுழைவதற்கானதொரு அகன்ற கிளைவழியாகும் .
கற்பிதங்களுடைய உறவு நிலைகளை உதறித்தள்ளிவிட்டு கனவுகளுக்கு என்னால் நகர்ந்து செல்ல இயலாதுஇரவு நேரங்களில் தோன்றுகின்ற நமது கனவுகள் என்பவை இவ்வகையிலான கற்பிதங்களே தவிர வேறொன்றும் இல்லை என்பதனை நாம் கனவுகளைப் பற்றிய விளக்கங்களிருந்து அறிந்துகொள்ள இயலும் . மொழியானது அதன் இணையற்ற அறிவின் மூலமாக , வெகு காலத்திற்கு முன்னரே காற்றில் கோட்டை கட்டும் கற்பிதங்களுக்கு பகற்கனவுகள் என்று பெயர் சூட்டியதன் வாயிலாக கனவுகளின் அடிப்படைத்தன்மை பற்றிய வினாவினைத் தீர்மானித்துள்ளதுஇவ்வாறான விளக்கத்திற்கு மத்தியிலும் நமது கனவினுடைய பொருளானது பொதுவாக நமக்குத் தெளிவற்று காணப்படுமாயின் , அதற்கு இரவில் நாமே வெட்கப்படும்படியாக நமக்குள் எழுந்த விருப்பங்கள் தான் காரணமாகும் இவ்விருப்பங்கள் நாம் நம்மிடமிருந்தே கட்டாயமாக மறைக்க முயன்றவைகளாகும் அதன் விளைவாக அவ்விருப்பங்கள் அடக்கி , ஒடுக்கப்பட்டு நனவிலி மனதிற்குள்ளாக ஓரங்கட்டப்பட்டனஇவ்வாறாக அடக்கப்பட்ட விருப்பங்களும் அவைகள் சார்ந்த செயற்பாடுகளும் மிகவும் சிதைந்த வடிவத்தில் மட்டுமே வெளிப்படுமாறு அனுமதிக்கப்படுகின்றன அறிவியற் செயற்பாடுகள் இவ்வகையான கனவின் சிதைந்த தன்மையினை விளக்கிக் காட்டுவதில் வெற்றியடையும் பொழுது , இரவு நேரத்தில் தோன்றும் கனவுகள் யாவும் நாம் தெளிவாக அறிந்த கற்பிதங்களான பகற்கனவுகளை ஒத்ததாக அமைந்த விருப்ப நிறைவேற்றங்கள்தான் என்பதனை எவ்வித சிரமமும் இன்றி விளங்கிக் கொள்ள முடியும் .
       இவ்வகையில் நாம் கற்பிதங்களைப் பற்றி மிக அதிகமாகவே விளக்கிவிட்டோம் தற்போது படைப்பாளர்களைப் பற்றிப் காண்போம் உண்மையில் நாம் கற்பனையாய் எழுதும் எழுத்தாளரைத் தெளிவான பகலொளியில் கனவு காண்பவனோடும் , அவருடைய படைப்புகளை பகற்கனவோடும் ஒப்பிடுவதற்கான முயற்சியினை மேற்கொண்டோமா?.  இங்கு நாம் அதனை ஒரு வேறுபாட்டினை உருவாக்குவதன் மூலமாகத் தொடங்குவோம் முன்னதாகவே காலங்காலமாக இருந்துவரும் கருப்பொருளைப் பயன்படுத்தி காப்பியங்கள் மற்றும் துன்பியல் நாடகங்களை இயற்றிய முற்கால எழுத்தாளர்களை , தங்களுடைய படைப்புகளுக்கான கருப்பொருளைத் தாங்களாகவே உருவாக்கும் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்வோம் இவ்வேறுபாட்டினை மையமிட்டு , இரண்டாவதாகக் குறிப்பிட்ட, தங்களுக்கான கருப்பொருளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் எழுத்தாளர்களைப் பற்றி இனி விளக்குவோம் மேலும் , நம்முடைய ஒப்பீட்டு வசதிக்காக , திறனாய்வாளர்களால் மெச்சப் புகழப்பட்ட படைப்பாளர்களை விடுத்து , குறைவாகவே அறியப்பட்ட நாவல்கள் , காதற்புனைவுகள் (Romances) மற்றும் சிறுகதைகளைப் படைத்த படைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் காரணம் என்னவெனில் , இவ்வகையான அதிகம் அறியப்படாத படைப்பாளர்கள்தான் பரந்த அளவிலான ,அதே வேளையில் , ஆர்வம் மிகுந்த இருபாலர்களையும் உள்ளடக்கிய வாசகர் வட்டத்தைக் கொண்டுள்ளனர் எல்லாவற்றிற்கும் மேலாக , இவ்வகையான புனைவுகளைப் படைக்கும் படைப்பாளர்களின் ஒரு குறிப்பிட்ட பண்பானது நம்முடைய கவனத்தைக் கவர மறந்ததில்லை அப்பண்பு யாதெனில் , எல்லாப் படைப்புகளும் ஒரு தலைவனைக் கொண்டிருக்கும் . அத்தலைவன்தான் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் புள்ளி . அவனை மையப்படுத்தியே அப்படைப்பாளர் எல்லா சாத்தியமான வழிகளிலும் நம்முடைய பரிவினை அவனை நோக்கி திருப்புவதோடு , அவனுக்கான பாதுகாப்பினையும்  ஒரு சிறப்பான தளத்தில் அவன் பெறுகின்ற வகையில் படைத்திருப்பார் படைப்பாளர் ஒரு அத்தியாயத்தின் முடிவில் கதைத் தலைவனை மனநலம் பிறழ்ந்த நிலையில் இரத்தம் சிந்தும் காயங்களோடு விட்டுவிடுகிறார் என்றால் , எந்தவித சந்தேகமும் இல்லாமல் அடுத்துவரும் அத்தியாத்தின் தொடக்கத்தில் அத்தலைவன் பாதுகாப்பான முறையில் மருத்துவப் பராமரிப்பு அளிக்கப்பெற்று மீண்டுவரும் தருவாயில் உள்ளவாறு காணப்படுவான் இதைப் போலவே , முதல் தொகுதியின் முடிவானது கதைத்தலைவன் கப்பல் பயணத்தில் கடும்புயலில் சிக்குண்டு மூழ்கிவிடும் நிலையில் நிறைவு பெறுமாயின் , நான் உறுதியாகச்சொல்கிறேன் ;  இரண்டாவது தொகுதியின் தொடக்கமானது அவனுடைய ஆச்சரியமான தப்பித்தலினை விவரிப்பதாகவே காணப்படும் தப்பித்தல் என்பது இல்லையெனில் கதையில் அடுத்த கட்டத்திற்கு நகர்நது செல்வது என்பது சாத்தியமற்றது எந்தப் பாதுகாப்பு உணர்வினால் நான் கதைத் தலைவனை , அவனுடைய ஆபத்துக்கள் நிறைந்த பயணத்தினூடாக தொடர்நது செல்கிறேனோ , அதே பாதுகாப்பான உணர்வினால்தான் உண்மையான வாழ்விலும் ஒரு தலைவன் நீருக்குள் குதித்து மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் காப்பாற்றுகிறான் அல்லது எதிரிகளால் மூட்டப்பட்ட நெருப்பிற்குள் விரைந்து பாய்ந்து அதனைத் தணிக்கிறான் இத்தன்மையாது இதனைக் காட்டிலும் சிறப்பாக விளக்க முடியாதவாறு , ‘ எனக்கு எதுவும் ஆகாது 3 என்ற நம்முடைய முக்கிய படைப்பாளரொருவரின் கருத்தினை ஒத்த வீர உணர்ச்சியாகும் அதே வேளையில் , இவ்வாறு வெளிப்படுகின்ற பண்பு நலன்கள் மூலமாகவோ அல்லது தீரம் மிக்க தன்மையின் மூலமாகவோ , எல்லாக் கதைகளிலும் தலைவனுடன் இணைந்தே வரும் அவனுடைய மேன்மை தங்கிய அகனையும்(The Ego) நாம் கண்டுகொள்ள முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது .
இவ்வகையிலமைந்த அகன் மையக் கதைகளின் மற்றொரு குறிப்பிடும்படியான பண்பானது அதன் கதைமாந்தர்களுக்கு இடையேயான உறவில் மையம் கொண்டுள்ளன அதாவது , ஒரு புதினத்தில் காணப்படும் எல்லாப் பெண்களும் தலைவன் மீதே காதல் கொள்வதென்பது நடப்பு நிலையில் சாத்தியமில்லை   எனினும் , அதனைப் பகற் கனவினுடைய தவிர்க்க இயலாததொரு அங்கம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதே வேளையில் இதற்கு மாற்றாக , புதினத்தில் வரும் பிற பாத்திரங்கள் யாவரும் நடைமுறை வாழ்வில் காணப்பெறும் பல்வேறு மனித குண நலன்களைக் கொண்டு காணப்படுவதோடு மட்டுமின்றி அவர்கள் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்றும் துல்லியமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் . கதையினுடைய தலைவனான அகனுக்கு (Ego)  ‘ நல்லவர்கள் உதவி செய்பவர்களாகவும்  கெட்டவர்கள் வேண்டாத எதிரிகளாகவும் காணப்படுவார்கள் .
       அதே வேளையில் , பல்வேறு கற்பனைப் படைப்பாக்கங்களானவை இந்த பகற்கனவு என்கின்ற எளிமையான மாதிரியமைப்பிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கின்றன என்பதையும் நாம் தெளிவாக உணரமுடிகிறது  எவ்வாறாயினும் , இந்த மாதிரியமைப்பிலிருந்து அதிக அளவில் விலகியுள்ளதாக அறியப்படும் கற்பனைப் படைப்புகள் யாவும் , அவைகளினுடைய மாற்றமடைகின்ற வகைளின் மூலமாக , அம்மாதிரியமைப்போடு ஒரு தடைபடாத  தொடர்ச்சியினைக் கொண்டுள்ளதோ என்கின்ற சந்தேகத்தை என்னால் தவிர்க்க முடியவில்லை .  ‘ உளவியல் சார்ந்த நாவல்கள் என அறியப்படும் பெரும்பான்மையான படைப்புகளிலும்கூட ஒரே ஒருவர்தான் , அதுவும் குறிப்பாக கதைத் தலைவனின் பாத்திரம்தான் உள்முகமாக விவரிக்கப்படுவது என் கவனத்தை ஈர்க்கிறது இவ்வாறு படைப்பாளர் அக்கதைத் தலைவனுடைய மனதுக்குள்ளாக அமர்ந்துகொண்டு விளக்குவதாகவும் , புதினத்தின் மற்ற பாத்திரங்கள் யாவும் வெளிப்புறத்திலிருந்தே பார்க்கப்படுவதாகவும் அமைகின்றன பொதுவாக உளவியல்  நாவல்கள் என்ற வகைப்பாட்டிற்கு உட்பட்டவைகள் சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு சிறப்பான தன்மையினைப் பெறுவதற்குக் கடன்பட்டுள்ளன ஏனெனில், அவ்வகைப்பாட்டிற்குட்பட்ட எழுத்துக்களோடு தொடர்புடைய நவீன எழுத்தாளர்கள் தங்களையே சுய மதிப்பீட்டிற்கு உட்படுத்திக்கொள்வதன் மூலம் தங்களுடைய அகனை உடைத்து , அதனைப் பல்வேறு பகுதி  அகன்களாக (Part-ego) மாற்றுகிறார்கள் மேலும் இதன் விளைவாக முரண்படுகின்ற நீரோட்டங்களைக் கொண்ட அவர்களுடைய மன உலகமானது பல்வேறு கதாபாத்திரங்களாக உருவகிக்கப்படுகிறது . விசித்திரமான புதினங்கள் என்று அறியப்படுகின்ற சில புதினங்கள் பகற்கனவு என்ற மாதிரியமைப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் முரண்படுவதாகத் தோன்றுகிறது இந்நாவல்களில் கதாநாயகனாக படைக்கப்பட்ட பாத்திரங்கள் மிகக் குறைந்த அளவில்தான் செயலூக்கமான பங்கினை வகிக்கின்றன ;  இப்பாத்திரங்களானவை தங்களைச் சுற்றியுள்ள பிற பாத்திரங்களின் செயற்பாடுகளையும் துயரங்களையும் ஒரு பார்வையாளனைப் போல கண்ணுறுகின்றன ஸோலா (Zola)வின் பிற்காலத்திய படைப்புகள் யாவும் பெரும்பாலும் இந்த வகைப்பாட்டிற்கு உட்பட்டவைதான் ஆனால் , படைப்பாளர்களாக அல்லாத தனிமனிதர்களைப் பற்றிய உளவியற் பகுப்பாய்வு மற்றும் யாரெல்லாம் விதிமுறை ஒழுங்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலகியிருக்கிறார்களோ , அவர்கள் யாவரும் பகற்கனவு மாதிரியிலிருந்து ஒப்பீட்டு அளவிலான மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் , அம்மாறுபாட்டில் அகன் அதனளவிலேயே ஒரு பார்வையாளர் என்னும் பாத்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதை நான் கட்டாயம் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும் .
       நாம் கற்பனையாக எழுதும் எழுத்தாளரை பகற்கனவு காண்பவனோடும் , கவிதைப் படைப்பினை பகற்கனவோடும் ஒப்பிடுகின்ற இந்த முறையினால் ஏதேனும் பயனுண்டாகிறதா எனில் , நிச்சயமாக உண்டாகிறது என்பதோடு மட்டுமின்றி , இந்த ஒப்பீட்டு முறையே கூட அதன் பயனை ஏதோவொரு வகையில் வெளிக்காட்டும்படியாக அமைகின்றது .
       சான்றாக , நாம் முன்னரே விளக்கியபடி , கற்பிதம் , மூன்று வகைப்பட்ட காலம் மற்றும் அவற்றினோடிணைந்து அவற்றினூடாக இழையோடுகின்ற விருப்பம் ஆகிய மூன்றிற்கும் இடையேயான உறவு நிலைப்பாட்டை , படைப்பாளர்களின் படைப்புகளுக்குப் பொருந்திப்பார்ப்பதோடு , அதனைக் கொண்டு , நாம் எழுத்தாளரின் வாழக்கைக்கும் அவருடைய படைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகளை ஆராய முயலலாம் விதிப்படிப் பார்த்தால் , இந்தப் பிரச்சனையை அணுகுவதற்கான சட்டகத்தை என்னவகையான எதிர்பார்ப்புகள் உருவாக்கின என்று யாராலும் அறியக்கூடவில்லை ; அதே வேளையில் , பெரும்பாலும் இவ்வாறான தொடர்பானது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு சாதாரணமான தொன்றாக கருதப்படுகின்றது கற்பிதங்களில் இருந்து நாம் பெற்ற உட்தெளிவின் (insight) வாயிலாக நோக்கும் பொழுது , பின்வரும் நிலைகளை நாம் எதிர்பார்க்கலாம் : ஒரு கடுமையான அனுபவமானது படைப்பாளனுடைய கடந்தகாலத்தின் (பொதுவாக அவருடைய குழந்தைப்பருவம் சார்ந்தது) நினைவினை விழிப்படையச் செய்கிறது மேலும் அவ்வாறு விழிப்படைந்த அந்த கடந்தகால அனுபவத்திலிருந்து வெளிப்படும் விருப்பமானது , படைப்பு செயற்பாட்டின் மூலமாக விருப்ப நிறைவேற்றமடைகிறது இவ்வகையில் படைப்பாக்கத்தின் பொழுது , படைப்பாளரை அப்படைப்பினை இயற்றத்தூண்டிய நிகழ்காலக் கூறுகளையும் , அதனோடு தொடர்புடைய பழைய நினைவு அனுபவ கூறுகளையும் வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளன .
       இந்த வகையில் அமைந்த அமைப்பாக்கத்தில் (formula) உள்ள கடினத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை ஏனெனில் , இது ஒரு முழுமையற்றதொரு , குறையுடைய மாதிரியமைப்பு என்று முடிவுகட்டப்படுமோ என்கின்ற சந்தேகம் எனக்குள்ளாக உண்டு மேலும் நான் வெவ்வேறு சோதனை முறைகளைக் கையாண்டு பார்த்ததன் மூலமாக , இந்த முறையானது நிகழ்வுகளின் உண்மையான நிலையறிதலுக்கான தொடக்க அனுகுமுறையெனவும் , அந்த வகையில் இப்படைப்பாக்கங்களைப் பார்ப்பதென்பது பயனற்ற ஒன்றாகாது என்பதும் என் கருத்து . எவ்வாறாயினும் , ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளும் இந்த முறையானது படைப்பாளரின் குழந்தைப்பருவ நினைவுகள் மீது அழுத்தம் செலுத்துவதை நாம் மறந்துவிடக்கூடாது அதாவது , குழுந்தைப்பருவ நினைவுகள் மீதான அழுத்தம் என்பது நம்மைக் குழப்புவதாக தோன்றினாலும் , கடைசியில் அது எந்தவொரு படைப்பாக்கமும் பகற்கனவொன்றினைப் போலவே குழந்தைப்பருவ விளையாட்டினுடைய நீட்சியாகவோ , மேலும் அதற்கு பதிலியானதொன்றாகவோ அமைகின்றது என்கின்ற அனுமானத்திலிருந்து பெறப்படுகின்றது .
       படைப்பாளருடைய சொந்த படைப்புகள் என்று வகைப்படுத்த முடியாத , அதே வேளையில் முன்னரே புழக்கத்தில் உள்ள கருப்பொருளினை மீள்வடிவமைப்பதன் மூலமாக படைக்கப்படும் கற்பனைப்படைப்புகளைப் பற்றியும் இங்கு விளக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும் இவ்வகையான படைப்பாக்கங்களிலும் கூட எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திரம் உள்ளதை மறுக்க முடியாது .   அச்சுதந்திரமானது கருப்பொருளினைத் தேர்வு செய்தல் , தேர்வு செய்த கருப்பொருளினை விரிவான வகையில் மாற்றியமைத்தல் என்கின்ற வகையில் வெளிப்படலாம். எவ்வாறாயினும், இவ்வகைப்பாட்டில் , படைப்பாக்கத்திற்கான கருப்பொருளானது முன்னரே கையில் தயாரான நிலையில் உள்ளதெனலாம் மேலும் அக்கருப்பொருளானது பழங்கதைகள் , செவிவழிக் கதைகள் மற்றும் தேவதைக் கதைகள் போன்ற பொதுமக்களின் கருவூலகங்களிலிருந்தே பெறப்பட்டவைகளாகும் அதே வேளையில் , இவ்வாறான நாட்டுப்புற வழக்காறுகளின் உளவியல் கட்டமைப்பினை பற்றிய ஆய்வானது இன்னும் முழுமையடையாத நிலையில் தான் உள்ளதெனினும் , பழங்கதைகள் யாவும் முழுமையான ஒரு நாட்டிற்கே உரியதான விருப்பங்களாக கட்டப்பட்ட கற்பிதங்களுடைய சிதைந்த துண்டுகள் ; அவைகள் இளமையான மானுடத்தின் உலகியல் கனவுகள் என்றவகையில் புரிந்து கொள்ளப்படும் பொழுது நாட்டுப்புற வழக்காற்று உளவியல் பற்றிய ஆய்வு என்பது சாத்தியமான ஒன்றுதான் .
       நான் இந்த ஆய்வுக் கட்டுரையை படைப்பாளர் என்ற வார்த்தையுடன் தொடங்கியிருந்தாலும் , இதனுள் படைப்பாளரைக் காட்டிலும் கற்பிதப்படுத்துகின்ற செயல்பாட்டினைப் பற்றியே அதிகம் விளக்கியிருப்பதாக நீங்கள் சுட்டிக்காட்டலாம் இதனை நானும் அறிவேன் , மேலும் இச்செயலுக்காக நான் உங்களிடம் நமது தற்போதைய அறிவு எல்லையின் நிலையினை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோருகிறேன் .  அதிக பட்சமாக நான் இக்கட்டுரையில் செய்தது என்னவெனில் , கற்பிதங்களைப்பற்றிய ஆய்வில் தொடங்கி , அதன் வழியாக படைப்பாளரின் கருப்பொருள் தேர்வுசெய்வதில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கான சில ஊகங்களையும் , கருத்துகளையும் வழங்கியுள்ளதுதான் ஒரு படைப்பாளர் எவ்வாறு தனது படைப்பின் மூலமாக வாசகருக்குள் உணர்ச்சிகரமான விளைவுகளை உண்டாக்குகிறார் என்ற வினாவிற்கு ,  அதனைப் பற்றி நாம் இன்னும் விவாதிக்க தொடங்கவே இல்லை என்பது தான் பதிலாக அமைய முடியும் . எவ்வாறாயினும் , கற்பிதங்களைப் பற்றிய விவாதங்களிலிருந்து கவித்துவமான விளைவுகளை ஏற்படுத்துவதில் தோன்றும் சிக்கல்களையாவது இங்கு நான் விளக்கியுள்ளேன் என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன் .
       பகற்கனவு காண்பவர் தன்னுடைய பகற்கனவினை வெட்கமானதொரு செய்கை என்று கருதிக்கொண்டு அதனை மற்றவர்களிடமிருந்து கவனமாக மறைத்துவிடுகிறார் என்று நான் முன்னரே விளக்கியது நினைவிருக்கலாம் மேலும் அவர் தன்னுடைய கற்பிதங்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்தினாலும் , அக்கற்பிதங்களானது அம்மற்றவர்களை மகிழ்ச்சியுற செய்வதில்லை என்பதனை இப்போது விளக்குகிறேன்அதாவது , இவ்வகையான கற்பிதங்கள் மற்றவர்களை அடையும் பொழுது , அவர்களிடமிருந்து ஒருவிதமான அருவருப்புணர்வையோ அல்லது ஒரு மந்தமான நிலையினையோ உண்டாக்குகின்றன அதே வேளையில் , ஒரு படைப்பாளர் அவருடைய படைப்பினை நம் முன்பாக நிகழ்த்திக்காட்டும் பொழுதோ அல்லது அப்படைப்பானது அவருடைய சொந்த பகற்கனவினை சார்ந்து அமைந்தது என விளக்கும்பொழுதோ , அப்படைப்புகள் நமக்குள்ளாக ஒரு பெரும் மனமகிழ்ச்சியினை தருவதாக அமைகின்றன இப்பெரும் மகிழ்ச்சியானது ஒருவேளை பல்வேறு பகற்கனவு / கற்பித மூலகங்களின் ஒருங்கிணைவின் மூலமாகக்கூட சாத்தியமாகியிருக்கலாம் எவ்வாறாயினும் , ஒரு படைப்பாளர் கற்பிதங்களை எவ்வாறு பெருமகிழ்ச்சி தரும் படைப்பாக்கங்களாக மாற்றுகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த , அவருடைய உள்ளார்ந்த ரகசியமாகும் கவிதைக் கலையின் அடிநாதமானது நம்முள்ளாக இருந்து கொண்டு எதிர்மறையான விளைவினை உண்டாக்கும் உணர்வுகளைத் புறம்தள்ளுகின்ற நுணுக்கங்களில் நிலைகொண்டுள்ளது மேலும் இது சந்தேகத்திற்கு இடமின்றி தனிமனித அகனுக்கும் , மற்றவர்களுக்கும் இடையே எழுகின்ற தடைகளோடு தொடர்புகொண்டுள்ளது இந்தவகையிலமைந்த நுணுக்கங்களில் , இரண்டுவிதமான முறைகள் பயன்படுத்தப் பட்டிருப் பதைக் காண முடியும் ஒரு படைப்பினுள் படைப்பாளர் தனது பகற்கனவில் வரும் அகன் நிறைந்த பாத்திரத்தினை சற்று மாற்றியமைத்தோ அல்லது மறைத்தோ மென்மைபடுத்திக் காட்டுகிறார் அவ்வகையில் மென்மைபடுத்துவதின் மூலமாக படைப்பாளர் தனது கற்பிதங்களைப் படைப்பாக்கங்களாக வெளிப்படுத்துவதன் வாயிலாக கிடைப்பது முற்றிலும் அழகியல் சார்ந்த மகிழ்ச்சி மட்டும்தான் என்று நமக்கு கையூட்டு (லஞ்சம்) தந்து அது இயல்பானதொன்றுதான் என்று நம்மை நம்ப வைக்கிறார் இவ்வாறு விளக்கப்படும் மகிழ்ச்சியினை நாம் ஊக்கத்தினை தூண்டும் தொகை அல்லது முன்மகிழ்வு நிலை என்றவாறு பெயரிடலாம் ஏனெனில் , இவ்வாறு மென்மைபடுத்தப்படுவதனால் நம்முன் படைப்பாளர் உண்டாக்கும் மகிழ்வானது , நமக்கு இதனைக்காட்டிலும் ஆழ்மனதின் சேகரத்திலிருந்து கிடைக்கப்பெறும் மட்டற்ற மகிழ்வினைப் பெறுதலுக்கான முன் முயற்சிதான் எனலாம் என்னுடைய கருத்துப்படி , படைப்பாளர்கள் நமக்களிக்கும் எல்லா அழகியல் மகிழ்வும் மேற்சுட்டிய வகையிலமைந்ததொரு முன்மகிழ்வு நிலைதான் , ஒரு கற்பனைப்படைப்பினால் உண்டாகும் உண்மையான களிப்பானது நமது மன இறுக்கங்களின் விடுபடுலிலிருந்துதான் தொடங்குகிறது மேலும் , இவைகளில் எதுவும் ஒரு சிறிய அளவில்கூட , படைப்பாளரின் உதவியினால்தான் நாம் நம்முடைய பகற்கனவினை எவ்விதமான வெட்கமோ அல்லது தன்னளவிலான கடிந்து கொள்ளுதலோ இன்றி ஏற்றுக்கொள்கிறோம் என்று விளக்குவதாக இல்லை இது கவர்ச்சியான , அதேவேளையில் கடினமான பல்வேறு ஆய்வுச் சிக்கல்களுக்கானதொரு புதிய வாசலை நமக்குத் திறந்து விடுகிறது. இருந்தபோதிலும் , நாம் நம்முடைய இந்த விவாதத்தினை தற்போதைக்காகவேனும் நிறைவு செய்துகொள்வோம்.  
      


3Es kann mir nix g’schehen “ பிராய்டுக்கு மிகவும் பிடித்த இச்சொற்றொடரானது , அன்ஸென்கர்பர் ((Anzengrbur ) என்னும் வியன்னாவைச் சார்ந்த நாடக எழுத்தாளரிடமிருந்து பெறப்பட்டது