14 Jan 2016

இன்று போய் நாளை வா !!




செம்பரம்பாக்கம் ஏரியும் அதீத மழையும் சேர்ந்து சுனாமி செய்ய முடியாதவற்றைக்கூட இது செய்துவிட்டது. சென்னையைக் கலைத்துப்போட்டுவிட்டது . அது அதன் வழியில் போகிப் பண்டிகையை கொண்டாடிவிட்டது போலும் .
       இதன் விளைவாக ஏற்பட்ட அழிவுக்கு அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்தும் , நன்கொடை வசூலித்ததில் இருந்தும் இழப்பீடாக ரூ 5000, ரூ10000 என்றும் வழங்கப்பட்டிருக்கிறது . வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது ; வாங்கிக்கொள்ளலாம் . இது அரசு அறிவிப்பு .
       சென்னையில் 11-1-2016 -ல் நூற்றுக்கணக்கான மக்கள் வங்கிக்கு சென்றனர் பணம் எடுக்க ; தங்களின் பணம் எடுக்க . அங்கு சென்றால் இன்று போய் நாளை வா என்கின்றனர் வங்கி ராமர்கள். அதிலாவது உத்தரவாதம் உண்டா? இல்லை.
        இலவசம் வாங்குபவர்கள் என்ற எண்ணத்தால் தானே இந்த அலட்சியம், அவமானப்படுத்தல்கள்.
       இத்தனைக்கும் அது அ.தி.மு.க. பணமும் அல்ல., வங்கிக் கடனும் அல்ல. இழப்பிற்கு ஈடாக வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டதை இலவசம் என்று மக்களை அலையவிடுவது அவமதிப்பு இல்லையா?
       இலவசத்திற்கு நெறியுண்டா?
க.செ

14-1-2016

1 comment:

  1. இலவசத்திற்கு நெறியுண்டா?
    உண்டு! நியூட்டனின் மூனறாம் விதி

    ReplyDelete