26 Jul 2016

இதழ் – 8 அவள் மனுஷி.....அங்காடிப்பொருள் அல்ல

            
            ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒரு காலைப் பொழுதில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் , ஒரு பெண்ணை B.E படித்த வாலிபன் , கசாப்புக்கடைக்காரனாகி வெட்டி, சிதைத்து , கூறுபோட்டு விட்டான்.

      முதலில் இதை கொலை வழக்காக ஊடகங்கள்  பரைப்பு செய்தன.
      பின்பு சாதி அரசியலை , அவர் சொன்னார் , இவர் சொன்னார் என பரப்புரை செய்தன.
      பின்பு குற்றவாளி பிடிபட்டார், தற்கொலைக்கு முயன்றார் என்று பரப்பியது.
      பின்பு ஒரு வக்கீலின் வக்காலத்து நான் அவனில்லை என்று.
                அடுத்த நாள் அந்த வக்கீல் வாபஸ். வேறொரு வக்கீல் வந்து போலீஸ் மேல் புகார்.  பின் இத்யாதி, பெங்களூர், வேறு தொடர்பு , என்று வதந்தி பரப்புதலும் நடந்தது  (எந்த நிரூபணமும் காட்டவில்லை).
                [  EVENTS எல்லாமே எழுச்சிப்படுத்தத்தான் ; எல்லாமே காட்சிப்பொருளே ; விற்பனைக்கானதுதான் ]
      கொலை நடந்த பின் ஒரு தலைக் காதல் என்றது T.V கலாச்சாரம்.
      ஒருவன் தனக்கு பிடித்த பிம்பத்தை ( நபரை ) தானே காதலித்துக் கொண்டு ,அந்த நபர் ( பிம்பம் ) காதலிக்கவில்லை என்றால் அது ஒரு தலைக்காதலா ? தன் விருப்பத்தை தானே காதலிப்பது – விருப்பப்பட்ட நபர் மறுத்தால் காதல் தோல்வி என்று கொலை செய்வது.
      கொலைகாரனைப் போலவே ,அந்தப் பெண்ணிற்கும் உணர்ச்சி உண்டுதானே ! சுயமரியாதை உண்டு, சுய கனவுகள் , வாழ்வின் மீது லட்சியம் உண்டு என்பதை சாதிய கலாச்சாரம்தான் உணரவில்லை என்றால், முதலாளிய ,ஜனநாயக, பிந்தய கலாச்சாரமும் உணரவில்லை.
      சுயமோக வெறிக்கு மறுப்பு ( negation ) வந்தவுடன், மிருகஉணர்ச்சிக்கு அடிமையாகி, வலுத்தாக்குதலுக்கு வீச்சறுவாலைத் தூக்குகிறது. இது காதல் நோயினால் மட்டுமல்ல; இது தன் சுயமோகம் அங்கிகரிக்கப்படாததால் ஏற்பட்ட  
( affect ) / மனக்காயம் ( trauma ).

      இந்த மனக்காயமானது சுய மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.  இம் மனக்காயத்தை (affect) எப்படியாவது சரி செய்வதற்கான மார்க்கங்களில் ஒன்றாக  Evil ஆக (கொடியதாக) மாறி , காரியமாற்றி தன் சுயமோகத்தை திருப்தி செய்வதாகும்.
இந்த மாதிரி நபர்களுக்கு அவர்களின விருப்பப் பொருள் ( object love  ) தன் நிபந்தனைக்குட்பட்டதாகவே எப்பவும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடித்தளமாக கொண்டே காதலை , உறவைப் பார்ப்பது.
                தன் காதலுக்குரிய அந்த ஆசைப்படு பொருள் (object love) ஒரு தன்னிலை (subject ) ; உன் காதலை ஏற்கவோ / மறுக்கவோ அதற்கு முழுச் சுதந்திரமுண்டு. அந்த சுதந்திரத்தின் மீது நீ உரிமை கோர முடியாது , அடிமைப்படுத்த முடியாது.  உனக்காக , உன் வீச்சறுவாலுக்காக உன்னை ஏற்றால் அவள் சுயமரியாதை கேள்விக்குள்ளாகும்.  அந்தத் தன்னிலை தன்னை இழந்து விடும்.

      ஆக , காதலை இனியும் தனிமனிதப் பிரச்சினையாகப் பார்காமல் உயர்நிலைப் பள்ளியிலிருந்தே மனம் , வசியம் , சுயவசியம் , காதல் போன்றவற்றிற்கு கலந்தாய்வும் (counselling ) வேண்டும்.  அதில் sexuality   பற்றிய அறிவும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் .
      இறுதியாக , மற்றொன்று . கொலை செய்யப்பட்ட  நேரமும், கொலைக்களமும் இரவல்ல.  கொலை ரகசியமாகவும் நடக்கவில்லை.  மாறாக , நூற்றுக்கணக்கில் ஆணும்  பெண்ணும் குழுமியிருந்த இடத்தில், நேரத்தில் கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

      உறை பனியில் (தங்கள் உயிர் பயத்தில் ) உறைந்து கொடூரத்திற்கு மவுன சாட்சியாக மட்டுமே இருந்திருக்கிறனர்!

      ஏய் !  ஏய் !!  விட்டுடா !! என்றாவது மொத்தமாக சப்தம் எழுப்பியிருந்தாலும், அது ஒரு எதிர்ப்பாகவும் , மிருகத்திற்கு ஒரு அவசரத்தை கட்டாயப்படுத்தியிருக்கக் கூடும்.

      பொதுப்புத்தியை , கொடூரன் உணர்ந்திருக்கின்றான்.  இதே மாதிரி திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் கடைவீதியில் ஒரு ஆட்டோ   ஓட்டுனர் குடும்பத்தில் தகராறு ; பேச்சு முற்றி தள்ளுமுள்ளு. வந்தனர் சீருடைக்காவலர். லத்திக்கம்மால் மாட்டை அடிப்பது போல் அடித்து , ஓட, ஓட, கத்த, கத்த, அங்கேயும் உறைபனி. கடைவீதி / அங்காடி அமைதியாக கவனித்துக் கொண்டிருந்து .  சீருடை லத்திக்கம்பு சிலம்பு விளையாட்டை , பரப்புரை செய்தது  T.V.  உள்ளுர் ஆட்டோ சங்கம் மட்டும் ஒரு வேலை நிறுத்தம் .  தமிழ் அரசியல் கட்சிகளின் கணக்கில் இது வரவு வைக்கப்படவில்லை.

                                                                   க.செ.