தொடரும் ஆனவக் கொலைகளின் போக்கு தினசரி வாடிக்கையாய் உள்ளது. பரவளான பேச்சுப் பொருளாய் சமூக வெளியில் இடம் பிடித்தமாய் தெரியவில்லை.
ஜல்லிகட்டுத்தடையை எதிர்க்கக் கூடிய ஜனத்திரளாகவோ அல்லது தண்ணீருக்காக காலிக்குடங்களோடு பெண்கள் திரண்டு பெருவழிச்சாலை, சாலை மறியலைப் போல எதுவும் நடந்திடவில்லை.
இதற்கு முக்கிய காரணியாய் இருப்பது சாதியம். இந்திய மக்கள் திரள் மனத்தில் சாதியம் நனவிலியாய் கோல்லோச்சுவதுதான்.
சாதியம் அகமண முறையாக, சடங்காக, குல தெய்வங்களாக, வளைகாப்பாக இழவாகவும், அதன் கருத்தியல் மற்றமையாக மொழியாகவும், மூச்சாகவும், பெரும்மூச்சாகவும் காத்திரமாக, கருவியாய் நிரந்தர இட ஒதுக்கீடாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனை கண்டிப்பவர்கள், எதிரிப்பவர்கள், தனித்தனி குழுக்களாய் கண்டண குரலாய் மட்டும் ஒலிக்கிறார்கள்.
ஆனவக் கொலைக்கெதிராக கடுமையான புதிய கிரிமினல் சட்டங்கள் இயற்ற அரசாங்கங்களுக்கு கோரிக்கை வைக்கிறார்கள். வரட்டும்.
ஆனால் ஆனவக்கொலை தனிமனிதர்களின் வாழ்வில் தலையிடுகிறது, இனியாகும் வாலிபர்களுக்கு, - ஆண் / பெண் – அச்சுறுத்துகிறது , மனித உறவுகளுக்குக்கிடையில் நச்சாக இயங்குகிறது . அத்தோடு தனிமனிதர்களின் அடிப்படைச் சுதந்திரத்தை அச்சுறுத்தி, பறிக்கிறது.
1947ல் நாடு சுதந்திரம் பெற்றது உண்மைதான். பெற்றது அரசியல் சுதந்திரமே. சமூக சுதந்திரம் தனி மனிதர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு மிகச்சமிபத்ய உதாரணம் பார்க்கலாம்.
ஜூன் 30 – 2019யில் கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் ஒரு அண்ணன் (வயது – 25) தம்பியை ( வயது – 22) கொலை
செய்கிறான். காரணம் தன் தம்பி சாதிவிட்டு
அடுத்த சாதிப் பெண்னை காதலித்ததால், தங்கள் சாதிக் கௌரவம் பாதிக்கப்பட்டுவிட்டதால்,
தம்பியையும், அவரின் காதலியையும் (வயது – 16) கொலை செய்து விடுகிறார்.
அண்ணனும்
தம்பியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்.
இதிலிருந்து எந்த வர்க்க உணர்வும் கிடைக்கவில்லை போலும். ஆனால் சாதியத்தின் கௌரவமே அண்ணனை
ஆட்டிப்படைத்து கொலைகாரனாக மாற்றிவிடுகிறது.
சாதியம் அண்ணனுக்கு உயிர் மூச்சாக தொழில் புரிகிறது. கொலையுண்ட இருவருக்கும் (ஆண் / பெண்) என்ன சுதந்திரம் இருக்கிறது கிடைக்கும் சுதந்திரம் பற்றி சிசாக் கூறுவதை சிறிது பார்க்கலாம். தனி மனிதனிடம் – தன்னிலையிடம் – எந்த சமூகத்தை சார்ந்ததோ அந்த சமூகத்துடன் தனியனுக்குள்ள – தன்னிலைத் – உறவில் அச்சமும் அவனிடம் பின்வருமாறு கூறுகிறது.
சரியானதை நீ தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உனக்கு தேர்வு சுதந்திரம் உண்டு உதாரணமாக, நீ சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும் அதாவது சூளுரையில் (Oath) நீ கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் , சூளுரையில் கையொப்பமிடுவதற்கு அல்லது கையொப்பமிடாமல் இருப்பதற்கான தேர்வு சுதந்திரம் உண்டு, நீ தப்பான தேர்வை மேற்கொண்டால் நீ தேர்வுச் சுதந்திரத்தையே இழந்துவிடுவாய் ” , என்கிறது சமூகம் . “ சிசாக் ”
தம்பி தப்பான சுதந்திரத்தை ( வேறு சாதியில் திருமணம் ) தேர்வு செய்ததால் , தேர்வு சுதந்திரத்தையும் , உயிரையும் இழந்துவிட்டார். ஆக சாதி சமூகத்தின் தனி மனிதனுக்குரிய சுதந்திரம் அவனுக்கானதல்ல, அந்தந்த சாதி மனிதனாக வாழ மட்டுமே சுதந்திரம். இவர்களுக்கு வர்க்க சுதந்திரம் உண்டு தன் சாதிவிட்டு திருமணத்திற்கான உரிமை கிடையாது. சாதியில் பிறந்த நீ அந்த சாதியின் மனிதானகத்தான் சாக வேண்டும் என்பது சாதியத்தின் ஆனையாக உள்ளது. இப்போது கௌரவக் கொலை என்பது தனி மனிதப்பிரச்சினை இல்லை. மாறாக அது சமூக அரசியல் பிரச்சினை என்ற பேருண்மை உணர்ந்தால் மட்டுமே சரியான சமூக அரசியல் தீர்வுக்கான காத்திரமான பாதை தெரியும்.
க.செ
No comments:
Post a Comment