2 Jan 2017

காவிரியும் கள்ளப்பண ஒழிப்பும்

ஒரு தனியன் தன் ஆசைப்படுபொருளை இழந்தவுடன் , அதனை ஈடு செய்யக்கூடிய ஒரு பதிலி கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஏதும் தென்படாவிட்டால் ....என்ன செய்வான் ?
காவிரிப் பிரச்சினை தமிழகத்தில் மேலாண்மை செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் , மோடி கள்ளப் பணத்தை ஒழிப்பேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு 1000 , 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துவிட்டார்.
புதிய பணத்திற்காக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது குதிரைக் கொம்பாயிற்று நடைமுறையில்.
அன்றாடங்காய்ச்சிகள் வேலைக்குச் செல்வதற்குப் பதில் இருக்கும் பழைய நோட்டை மாற்ற ஏ.டி.எம் , பேங்க் வாசலில் தினமும் இரவு பகலாக கிடக்க வைக்கப்பட்டனர். பெண்கள் கைக் குழந்தைகளுடன் நின்றனர். பச்சத்தண்ணீருக்குக் கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை . உடல் துன்பத்துடனும் மனப்பதட்டத்துடனும் தெருவோரம் வீசி எறியப்பட மக்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கூட ஏற்பாடு பண்ணவில்லை இந்த அரசு இயந்திரம் .
தயை என்பதற்கு  இந்த இயந்திரத்திற்கு அர்த்தம் தெரியாது.
       இது ஒருபுறம் ; மற்றொருபுறம் வாடிய பயிரைக் கண்டவுடன் , எதிர்காலம் இருண்டு காட்சி அளிப்பதால் , அன்றாடம் விவசாயிகளின் தற்கொலை எண்ணப்படலாயிற்று . அரசியல் கட்சிகள் ஈடு கேட்டுக்கொண்டிருக்கின்றன. அத்தோடு மௌன ராகம் வாசிக்கின்றனர் .
     தற்கொலையை , இந்த அமைப்பை எதிர்த்த தனிமனித போராட்டமாக உணர்ந்த மாதிரி தெரியவில்லை.
மக்கள்திரள் போராட்டங்கள் நடைபெறாதபோது இம்மாதிரியான தற்கொலை நடவடிக்கைகள் தவிர்க்க இயலாதவையாகும் .
[ போராட்டங்களானது , தொலைக் காட்சிகளில் தலைவர்களின் ‘ காத்திரமான ‘ பேட்டிகளாக மட்டும் உள்ளன].

அங்கு தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத அரசு இயந்திரம் ; விவசாயிகளின்  தற்கொலையை  “  தடுக்க எந்த அவசரச் சட்டமும் / திட்டமும் இல்லாமல் மௌன சாமியாய் உள்ளனர். இம்மாதிரி தற்கொலை , தன் உடலை தானே அழிப்பது , இந்தச் சமூகச் சூழலை எதிர்த்த தனி மனித போராட்டமாகும் ; கையறு நிலை , அவநம்பிக்கை / உயிர் வாழ்வதற்கான தூண்டல் ஏதுமில்லை இங்கு. கிராமங்களுக்குச் சென்று நம்பிக்கை இழந்த விவசாயிகளிடம் நம்பிக்கை ஊட்ட , வாழும் பிற வழிகளைக் காட்ட எந்த அரசு அமைப்பும் இல்லை , கொள்கைகளும் இல்லை. நெறி அற்ற அரசு  / தயை அற்ற அரசு.
க.செ
   1-1-2017


மன அலசல் ஆய்வு தற்கொலையின் பன்முகக் குணாம்சத்தை ஆய்வு செய்துள்ளது . லெக்கானிய பார்வையின் ஒரு சுருக்கப்பட்ட கட்டுரை இப்போது :

MASOCHISM   IN   POLITICAL   BEHAVIOUR :  A  LACANIAN  PERSPECTIVE 
-FILIP  KOVECEVIC
                தன்னைத் தானே துன்புறித்து இன்புறுபவர் ( masochist )
.......தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுபவர் ( masochist )  தன்னளவில் உடல் துன்பத்திற்கும் , துயரங்களுக்கும் ஆட்படுத்திக் கொள்பவர் ஆவார் . இதற்கு , அவரின் உள்ளார்ந்த உளவியல் நிர்ப்பந்தம் காரணமல்ல ; [ பிராய்ட் ( இந்த நிர்ப்பந்தத்தை ) நனவிலிக் குற்றவுணர்வு , தண்டனைக்கான தேவை என்கிறார் ] .
மாறாக , தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட உடல் வேதனை , துயரங்கள் மூலம் , மற்றமையை  ( Other ) செயல்படத் தூண்டுவதற்கான , அவர்களின் உறவை மறுவரை செய்வதற்கான ஒரு வழி இருப்பதைக் கண்டுகொண்டதால்தான் அவர் இச்செயலில் ஈடுபடுகிறார். தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுவர் , மற்றமையின் ( Other ) உணர்வை ஆட்டங்காணச் செய்கின்ற ஒரு காட்சியை உருவாக்குகிறார் ; அதன் மூலம் அவர்களின் உறவை தெளிவாக வழிநடத்தக்கூடிய விதிகளை வகுக்குமாறு அவன்-அவளை நிர்ப்பந்திக்கிறார் என்கிறார் லெக்கான் (Van Haute 2002  )
       தன்னைத் தானே துன்புறுத்தி இன்பங்காணுபவர் தன் அரசியல் போராட்டங்களில், மனப் பதட்டத்தை உருவாக்குதல் என்பதை பிரதானமான ஆயுதமாகப் பயன்படுத்துவதிலிருந்து இது தெளிவாகிறது.
       துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை ( passivity ) மேலாக போர்த்திக் கொண்டுள்ள ஒரு முகமூடி மட்டுமே. ஏனெனில், இந்த முகமூடிக்குப் பின்னால் தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுபவர் ஒளிந்து கொண்டிருகிறார். அவர் மற்றமையைக் ( Other ) கட்டுப்படுத்தி , வழிநடத்த முயற்சிக்கின்றார் என்கிறார்கள் ரெய்க் , லெக்கான்  ( Reik ,Lacan ) .  ஆக , தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுபவரின் பிரதான நோக்கம் மகிழ்வு அல்ல ; உடல் துன்பத்தில் மகிழ்வுறுதலும் அல்ல ; மாறாக , ஒரு வகை அதிகாரத்தை நிலைநிறுத்துவதே அவரின் நோக்கமாக உள்ளது என்று இப்போது விளங்கிவிடுகிறது.
       தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுகிற நடவடிக்கையானது உண்மையில் மற்றமையிலிருந்து ( Other ) தன்னிலை தனியாகப் பிரிந்து செல்வதற்கான நடவடிக்கையாகும். அதாவது , மற்றமையின் மேலாண்மையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்வதற்கு ஒரு தன்னிலை மேற்கொள்ளும் முயற்சி என்கிறார் லக்கான்.
       தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுவது என்பது சுயத்தைக் கட்டமைப்பதாகும்., சுயத்திலிருந்து விலகுவதல்ல ( the construction and not the dissolution of the self ) ; ஒரு தன்னிலையானது , தன்னின் சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்கான , மற்றமையின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொள்வதற்கான முயற்சியாகும் அது.
   

  தன்னைத் தானே துன்புறுத்தி இன்பங்காணுபவர் தன் அரசியல் போராட்டங்களில், மனப் 
பதட்டத்தை உருவாக்குதல் என்பதை பிரதானமான ஆயுதமாகப் பயன்படுத்துவதிலிருந்து இது தெளிவாகிறது

      இந்நிலையில், மற்றமையால் ( Other ) ஒடுக்கப்படுகிற , நிராகரிக்கப்படுகிறவர்களின் தன்னைத்தானே துன்புறுத்தி இன்புறும் நடவடிக்கைகளை எவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்வது?  இந்நடவடிக்கைகள் , பட்டினிப் போராட்டம் முதல் தற்கொலை  வெடிகுண்டாக செயல்படுதல் வரை  நீள்கிறது . மேற்கூறிய பார்வையில் , சாகும்வரை உண்ணா நோன்பிருப்பவர் , தனக்குத் தானே தீயிட்டு அழித்துக் கொள்பவர் , அல்லது தன்னையே வெடிகுண்டாக்கி வெடித்து சிதறுபவரின் நடத்தையை எப்படி விளக்குவது? இந்த அனைத்து நிகழ்வுகளிலும் தன்னைத் தானே துன்புறுத்தி இன்புறுபவர் எதிர்த்துப் போராடுகின்ற அந்த மற்றமை என்பது அவரின் சொந்த சமூகக் குழுவின் - ஏற்கனவே குறிப்பிட்ட சிறப்புரிமை பெற்றவர்களின்- மற்றமையாக இல்லை 
.
மாறாக , இந்தத் தனியன்கள் கண்டுணர்ந்து கொண்டுள்ள எதிரிகளின் மற்றமையாகவே  ; ஒடுக்குபவரின் மற்றமையாகவே ( Other ) உள்ளது. இருப்பினும், தன்னிலையின் தனிப்பட்ட அடையாளத்திற்கான இந்தவகைப் போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
ஏனெனில் தன்னிலையின் கோரிக்கைகள் மீது அக்கறை செலுத்தக்கூடிய சட்டங்களை உருவாக்குமாறு மேலாண்மை செலுத்துகிற மற்றமையைக் கடுமையாக நிர்ப்பந்திக்க வேண்டியுள்ளது. இந்த மற்றமை , மேலாண்மை செலுத்துகிற மத, அல்லது மதச்சார்பற்ற கருத்தியல் நடவடிக்கைளில் ஒரு கூட்டுப் புனைவுருவாக ( collective fantasy ) தொடர்ந்து பிரதிநிதித்துவம் ஆகிறது ( .. this Other is frequently represented by the practices of the dominant religious or secular ideology as a collective  fantasy ) .....                -தமிழாக்கம் : பிட்சு


பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ( குஜராத் ) ஒருநாள் கூட மோடி பேசியதில்லையாம் ! பின் எதற்கு பாராளுமன்றமும் சட்டமன்றமும் ; கலைத்துவிட வேண்டியதுதானே .
மோடியும் அவரின் “ சிங்கி “ களும் மட்டுமே ஆளட்டும் .
எதிர்க் கட்சிகள் ஏதாவது கோவில் சப்பரம் தள்ளட்டும் .