6 Jan 2016

இதுக்குத்தானா ? ....... இதுக்குத்தானா ?

மாதம் 20 கிலோ இலவச அரிசியை வாங்க கால்கடுக்க ரேசனில் நின்று , வாங்கி வயிரை நிரப்பிக்கொள்ளும் என்னைப் பார்த்து ; எச்சில்கையால் காக்காய் கூட விரட்டத் தயாராக இல்லாத என்னைப் பார்த்து ;
       தெரு நாய்கள் கவளச்சோற்றுக்காக ஊர்முழுவதும் அலையவேண்டியுள்ளது .ஏனெனில், ஊரெங்கும் அடுக்குமாடிகள் / வசதிதான். வயதான பெற்றோர்களும் , தெரு நாய்களும் , காக்கா குருவிகளும் வந்து தொந்தரவு செய்யமுடியாது. சந்தோசமாக தில்லி தில்லி பொம்மக்கா விளையாடலாம் அல்லவா ?
       இப்படிப்பட்ட நம்மைப்பார்த்து ஒரு அழைப்பு ! அறைகூவல் !!
                4-1-2016 தொலைக்காட்சியில் அழைத்தது புன்முறுவலுடன் :
       “ வாருங்கள் ! இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம்  ”.
       இதற்கு முன்னும் இதேமாதிரி ஒரு ஓசை கேட்டமாதிரி ஞாபகம்.
       இந்த அழைப்பைப் பார்த்தவுடன் மொழியில், வார்த்தையில் சொல்லமுடியாத ( real ) ஒரு பீதி உணர்வு குருதியை உறைநிலைக்குக் கொண்டு சென்றது ; மூச்சு முட்டியது.
       ஏனென்றால் , ஆப்பிரிக்கக் கண்டம் முழுமையையும் அழித்துச்சுரண்டி , மூலைமட்டங்களை ( Set square ) வைத்து நாடுகளைப் பிரித்து , காங்கோ இடிஅமீன்கள், ஆப்கானிஸ்தான்களில் ஒசாமாக்களை உருவாக்கி , தென் அமெரிக்காவில் அலெண்டே , சேகுவாராவை அழித்து ; ஈராக்கை நாசம் செய்து , பாலைவன எண்ணெய்க்காக ஊரை ரெண்டாக்கி ‘ உலக போலீஸ் ’  என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஏகாதிபத்திய தானாக்காரன் ; சில காலத்துக்கு முன் இருதுருவ ( bipolar ) சோசலிச முகமூடி அணிந்த சோவியத் ரஷ்யா ; அதற்குமுன் நம் ஊர் இங்கிலீஸ் எஜமான் ...
       புத்தன் கால்பட்ட இடத்தில்தான் வல்லரசுக்கான ஆசைக்குரல் கேட்கிறது . அன்பே சிவம் ‘ என்ற ஒலி , .... ஓம் ‘ என்ற ரீங்காரத்தை நிறுத்தி , ‘ வல்லரசு ‘ , ‘ இந்திய வல்லரசு ‘ என்ற பேராசையை , பேரோசையாக ஒலிக்கச் செய்கிறது ;
       மாவல்ல சுயமோகம் , புற்றுச் சுயமோகமாக ( malignant narcissism ) மாறிவருகிறது.
       ( இலவச ஜனங்கள்தானே ; நம் கனவுக்கு , நாளைய கூலிவேலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே என்று நினைக்கிறதோ ? )
       இதற்கு ,கிட்டத்தட்ட அனைத்து  கட்சிகார்ப்பரேட்டுகளும் , ஊடகங்களும் ஒற்றைக்கால் கொக்காக காத்திருக்கிறார்களோ ? 

              வல்லரசு ! மாவல்லரசு !! என்பது
              ரத்தப்புற்றுநோயை உருவாக்குமிடம்.
      
         இதுக்குத்தானா வல்லரசாகனும் ?        இதுக்குத்தானா வல்லரசாகனும் ?.
க.செ
5-1-2016

       பி.கு :  “  மாவல்லரசு ‘ என்பது பூகோளப்பரப்பு , மக்கள்தொகை ,பொருளாதாரம் , கனிம மூலாதாரங்கள் , இராணுவம் , அரசியல் தந்திரம் , தேசிய அடையாளம் ( geography , population , economy , resources , military , diplomacy , and national  identity ) போன்றவற்றை இந்த வல்லரசு தன்னகத்தே கொண்டு ; எவரிடமிருந்தும்  தனக்குவேண்டியதை அடைந்து கொள்ளும் ஆற்றலையும் உள்ளடக்கியதாகும்.  
    -https://en.wikipedia.org/wiki/Superpower



No comments:

Post a Comment