‘ ரோஹித் வெமுலா ‘ என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்டார் .
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில்
ஆராய்ச்சி மாணவர் அவர்.
“ இவர் பிறப்பால் தலித்”. அவரின் இறப்பிற்கு யார் யார் குற்றவாளி
என்ற வாதப் பிரதிவாதம் இந்திய அரசியல் தளத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
குற்றவாளியாக அந்தப் பல்கலைக்கழகமும் ( வேந்தரும்
) ,மத்திய அமைச்சர் ஒருவரையும் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது.
முதலில் அவரின் இறப்பிற்குப் பின் கிடைத்த கடிதம் .
முதலில் அவரின் இறப்பிற்குப் பின் கிடைத்த கடிதம் .
கடித மொழியாக்கம் தி இந்து 21-1- 2016.
அவரின் இறப்பிற்கு முன் ;
……“ கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச்
சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக் கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும்
, சமூகப்
புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி
தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்
”.
நன்றி – தி இந்து
21-1-2016 தலையங்கத்தில்
|
“ My BIRTH IS MY FATAL ACCIDENT ”
“ இளம் இதயத்தின் கடைசித்
துடிப்பு” – தி
இந்து 21-1-2016
என் பிறப்பு ‘ MY
FATAL ACCIDENT ‘ ( விதி ) என்பது என் இறுதிக்கானது என்கிறாரா? அல்லது
என் பிறப்பு என் சாவுக்கானது என்கிறாரா ? நடந்த நிகழ்வுடன் FATAL-யை அர்த்தப்படுத்தினால் ‘ சாவுக்கானது ‘ என்று பொருள் கொள்வது சரியாய் இருக்கும் .
தன்
தற்கொலைக்கான காரணத்தின் முதல் அடியானது
தன் சாதியில்
( My BIRTH ) இருப்பதாக நினைத்துக்கொள்கிறார் . சாதி ஒரு முக்கிய காரணியாக இருக்கக்கூடும் ; இதுவே முற்றான
காரணமாகச் சொல்லிவிடமுடியாது.அது ஆய்வுக்குரியது.
..... “ எள்ளளவும்
காயமடையாமல் அன்பைப் பெறுவது என்பது கடினமாகிவிட்டது “.
- ரோஹித்தின் கடிதம். [ அங்கீகாரத்திற்கான ( recognition ) நனவிலி ஏக்கம் ]. அவர்
வாழ்ந்த அமைப்பின் “ பண்பைக் ” கூறுகிறார் . அது நட்பு அற்றது , அன்பற்றது ; பிறரை (தலித்தை) நேசிப்பது , தன்னிலையாக ஏற்பது என்பதே இல்லாதது.
மிகச்சரியாக நடைமுறை , பண்பாடு , சமூகப் பழக்கவழக்கங்கள்
இருந்தாலும் தலித் என்பதற்காகவே ஒரு போலியான, கபடமான , வஞ்சப் புகழ்ச்சியான
ஏற்புதான் பிரதானமாய் இருக்கிறது . அவர் வாழ்ந்த , மற்ற தலித் மாணவர்கள் வாழுகின்ற
, இனியாகும் மாணவர்களின் அமைப்பில் பரவலாகவும் , உள்ளார்ந்தும் , நனவிலி
வெறுப்பாகவும் உள்ளது.
இந்த நிறுவனம் மட்டும் விதிவிலக்கல்ல. சமூகத்தில் நிலவும் சாதிய
ஒடுக்குமுறை மனரீதியில் , மதரீதியில் , சமூக , கல்வி நிறுவனங்களிலும் அது
பிரதிபலிக்கத்தான் செய்யும். செய்கிறது.
“ ஒரு மனிதனின் மதிப்பு அவனது பிறப்பு அடையாளங்களால்
நிர்ணயிக்கப்படுகின்றன.”
..................................................
“ ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு
செய்யப்படுகிறானா? என்றால் நிச்சயமாக இல்லை “ ( அதே கடிதம் ) . [தீட்டின் பல வண்ணங்கள் ( depression ) ].
“ சுயமோகம்
மனப்பாதிப்பை (
affect )
எப்போதும் வெற்றிகொண்டதில்லை . அவரின் இத்தோல்வி சுயமோகப் பின்னோக்கல் (
Narcissistic regression )
ஆகிறது “ - Be’la Grunberger.
புற அடையாளங்களின் மதிப்பீடு அளவுக் கருவியை
அவர் ஏற்கவில்லை.
ரூபத்தில்தானே சாதி உள்ளது . புறத்தை அளக்கும்
கருவியை நீக்கிவிட்டு இங்கு ஆன்மா என்பதை சித்தத்திலிருந்து புறப்படும் தன்னிலை / Self
என்று எடுத்துக் கொள்ளலாம் – ( way of thinking ) - என்கிறார்
போலும் .
அப்போது சமூக மதிப்பு , சமூக அதிகாரம் , ஏற்பு போன்றவைகள் தவிர்க்கவியலாமல்
கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கை அவருக்கு.
சுயமோகப் பிம்பம் ( illusion ) உடைந்தவுடன் ,
“ எனது பால்யப் பருவத் தனிமையில் இருந்து என்னை
எப்போதுமே விடுவித்துக் கொள்ளமுடிந்ததில்லை ” .
........................................
“ யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது
பிம்பம் மிஞ்சுகிறது “
( கடிதத்திலிருந்து
) .
[ இது Regression ( பின்னோக்கல் ) . காணொலிக் காட்சி
தனக்குமட்டும் ].
“ இது
பாலுக்கு அழும் குழந்தை மனமல்ல . இது அன்புக்கு , அரவணைப்பிற்கு , தன்னின் அங்கீகாரத்திற்காக அழுகிறது “ - Otto F. Kernberg
இதுவரை வாசித்தது எல்லாம் ரோஹித் இறந்தபின்,
அவர் கடிதத்தை வைத்து கண்டுணர்ந்தது.
இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டிய
எதார்த்த சூழலில் கண்டபடி இருந்தது எனலாம் .
பின் நவீனத்துவத்தின் தீண்டாமை
பின் நவீனத்துவத்தின் தீண்டாமை
இந்த 5 மாணவர்களும் பல்கலைகழகத்தில்
படிப்பை தொடரலாம்.
ஆனால்
பல்கலைக்கழக விடுதிக்கோ, நிர்வாக அலுவலகத்திற்கோ, பொது இடத்திற்கோ செல்லக்கூடாது
என்று நிபந்தனை விதித்து டிசம்பர் 15-ல் உத்தரவிட்டது. ரோஹித்தின் ஆய்வு
உதவித்தொகை கடந்த
ஏழு மாதங்களாகநிறுத்தப்பட்டுள்ளது ” .
- The Hindu 21-1-2016
|
தீண்டாமையின் ( பல்கலைக்கழக விதி ) பிடியில் சுமார் 10 நாட்கள் வானத்தை
மட்டுமே கூரையாகக் கொண்டு வெட்டவெளியில் தானும் , தண்டிக்கப்பட்ட மற்ற மாணவர்களும் பல்கலைக்கழக விதி கொடுத்த
தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் ; பிற , சக
மாணவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு இருப்பதும் ; சக மாணவர் சமூகம் தங்கள் மீதான
தீண்டாமை என்னும் வன்கொடுமை சட்டப் பிரயோகத்தை எதிர்க்காமலும் , எதேச்சதிகாரத்திற்கு
அடிபணிந்து போய்விட்ட தங்கள் மாணவ நண்பர்கள் ; பின் நவீனத்துவத்தை ( post modernism ) போதித்த பேராசான்கள் ; இவர்களின்
மனப்போக்கை , நடத்தையை எப்படிப்
புரிந்து கொள்வது ? Is there any way to intellectualise within that relation .
அறிவுமயமாக்கல் எதிர்திசையில். அவர் அறிவாளி
என்பதை விட கொந்தளிப்பு மனத்திற்கு (Emotion ) அடிபணிந்தவர். அடிப்படையில் அவர்
பங்கேற்ற போராட்டம் தோல்வி நோக்கிச் செல்கிறது என்பது தெரிந்துவிட்டது. சக மாணவர்
சமூகமும் தீண்டாமையை ஏற்றுக்கொண்டுவிட்டது. அது மாணவர் அமைப்பு மட்டுமே ; கட்சி
அல்ல. பிரச்சாரம் , கிளர்ச்சி , போராட்டம் போன்றவைகளுக்கிடையில் வித்தியாசம்
தெரியாது அதற்கு. ஒரு வலிமையான ஐக்கிய முன்னணி இல்லை. நம்பிக்கையான ஆதரவு
சக்திகளும் இல்லை. தலித் மாணவர் போராட்டங்களை ஒடுக்குபவர்களுடன் தலித் தலைவர்களே
சேர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து வாழ்கிறார்கள்.
ஓட்டு வியாபாரக் கட்சிகள் இம்மாதிரியான ஐனநாயகத்திற்கான , போர்க்குணமுள்ள
அமைப்புகளை ஓரம் கட்டி விடுவார்கள் ஒரு முத்திரை குத்தி.
இதை எல்லாம் கணக்கில் கொள்ளவிடாமல் அவரது மனப்பாதிப்பு / மனக்காயம்
உள்முகமாகப் பயணித்துவிட்டது எனலாம்.
“ Suicidal
ideation , Suicidal intention ,
Affective disorder are commonly associated within
Personality disorder “ .- Otto F.
Kernberg.
தற்கொலை ஒரு வாழ்க்கை முறையாக. ஏனென்றால் தன் சுசான்ஸ் (
Jouissance ) - தன் மகிழ்ச்சி - அதிகார
வர்க்கத்தால் காயடிக்கப்பட்டு விட்டது.
“ சுயமோகம்
தன்மேல் மட்டும் பிரேமை கொள்வதில்லை. அத்துடன் தன்னை எல்லாம் வல்ல (Omnipotence )
என்ற உணர்வும் கொண்டுள்ளது “. – Be’la Grunberger.
“ எல்லாம்
வல்ல நான் “
என்பது எளிதில் மனக்காயத்திற்கு உள்ளாகிறது. இந்த சுயமோகக் காயம் , தான் எந்த
அதிகாரமும் அற்றவனான உணர்வை ஏற்படுத்துகிறது“ .
”“எல்லாம்
வல்லவனுக்கு “
ஏங்கிய மனம் ( illusion )
ஏதுமற்றவனாகத் தன்னைத் தானே பார்க்கச்
சகிப்பதில்லை . [ “
will power
“ எல்லாம் வாடி / வடிந்து விட்டது ].
இப்போது சுயமோக ஏக்கம் (
longing
)
வீபரீதமான ஆசையை விதைத்துவிட்டிருக்கிறது.
சாதியத்தை பல்கலைக்கழக நிறுவனத்துடன் மட்டுமே
என்று நானுணுர்வு ( Ego ) சுருக்கிப்
பார்த்துவிட்டது.
தலித் சாவு என்றால் பிணத்தை பொதுவழியில் கூட
எடுத்துப் போகமுடியாது. அது தீட்டு . வயல்வெளியேதான் எடுத்துச் செல்ல வேண்டும் .
போலீஸ் அதிகாரம் அவர்களின் புனிதம் கெடாமல் பார்த்துக் கொள்ளும்.
‘ ரோஹித்
‘ பகுதியை முழுமையாகக் கருதிவிட்டார். ஆனாலும் ஒருவகையில் –
‘
சீதக்காதிதான் ‘ . அவர் ஆசையை நிறைவேற்றி , ஒரு வகைத் தூக்கத்தை கலைத்திருக்கிறார்
எனலாம் .
விநாயகம்
க.செ
23-1-2015
"தலித் என்பதற்காகவே ஒரு போலியான, கபடமான , வஞ்சப் புகழ்ச்சியான ஏற்புதான் பிரதானமாய் இருக்கிறது"- முற்போக்கு நரகத்தில் நிதர்சனமான உண்மை. இதற்கு இந்து நாளிதழே பெரிய உதாரணம். இந்த விசயத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்த பத்திரிகை உயர் கல்வி நிறுவனங்களில் கொண்டு வர முயலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்பதில்லை.
ReplyDelete-"எல்லாம் வல்ல நான் “ என்பது எளிதில் மனக்காயத்திற்கு உள்ளாகிறது. இந்த சுயமோகக் காயம் , தான் எந்த அதிகாரமும் அற்றவனான உணர்வை ஏற்படுத்துகிறது“ . ”“எல்லாம் வல்லவனுக்கு “ ஏங்கிய மனம் ( illusion ) ஏதுமற்றவனாகத் தன்னைத் தானே பார்க்கச் சகிப்பதில்லை . [ “ will power “ எல்லாம் வாடி / வடிந்து விட்டது ]. இப்போது சுயமோக ஏக்கம் ( longing ) வீபரீதமான ஆசையை விதைத்துவிட்டிருக்கிறது.- இது தான் முக்கியமான ஒன்று. பலி எதனால்? தனது வீச்சு எவ்வளவு என்பதை தன்னளவில் சுய அளவீடு செய்யாமல் சமூக நிறுவனங்களுடன் முட்டும் போது அவன் தனிமைபட்டு விடுகிறான். தனிமையை தாங்கிக் கொள்ள தத்துவமோ அரசியலோ கடைசியில் ஆன்மீகமோ இல்லாத போது இந்த மாதிரி பலி நடந்து விடுகிறது.
அற்புதமான ஆய்வு கட்டுரை.