மாறாக ஈரானிய குழந்தைகளின் மரணம் , மரணஓலம், வலி , உடல் சிதைவு அனைத்தையும், கண்டு டிரம்பும் அவன் ஆதரவாளர்களும் குதூகளித்து , ஆனந்தக்கடலில் மூழ்கியுள்ளனர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன் உயிருடன் தோல் உருவப்பட்டு , லட்சக்கணக்கில் தன்னிலை மறந்து, ஓடி , ஒளிந்து வாழ்ந்தவர்கள் , இன்று இஸ்ரேலியர் ஆனவுடன் ஆயிரக்கணக்காக ஈரானிய மக்களின் சந்தோசங்களையும் உண்டு உறங்குகின்றனர். அவர்களின் வாழ்வை பாதித்தனர், உணவை மறுத்தனர், உறக்கத்தை பறித்தனர். வாழ்வு முறையையும் இஸ்ரேல் பறித்து மகிழ்கிறது.
இனி , எப்போது ஈரானிய மக்கள் சந்தோசம், இன்பம் என்பதை அனுபவிக்க முடியும் ?அந்த அரூப உணர்வை மீண்டும் எப்போது அடைய முடியும் ?
அந்த அரூபத்தை அடைய எதை, எவ்வளவு இழக்க வேண்டும்?
பிற, இதரருக்கு இது வேடிக்கை பொருளாகிறதோ? தேர்த்திருவிழாவாக தெரிகிறது. அத்துடன் இது கிரிக்கெட்டின் வெற்றி விழாவாக , அமோகமாகப் கொண்டாடப்படும் , எப்படி ? எவ்வளவு பெரிய வெற்றி ! வெற்றி ! வெற்றி !
” தூங்காத இரவு ”
கடந்த செப்டம்பர் மாதத்தில் (2026) கரூரில் இறந்தது 41 பேர் என்பதா? அல்லது 41 பேர் கொலை செய்யப்பட்டனரா?
41 பேர் கொல்லப்பட்டது "வன்முறை" இல்லையா ?
அதாவது கொலை என்பது ஒருவர் மற்றொருவரை கத்தியாலோ, துப்பாக்கியாலோ கொல்வது , ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டவர்களைக் கொல்வது, கவுரவக்கொலைகள் இவை போன்றவைகள் மற்றும் விசாரணை என்ற பெயரில் போலீஸ் அராஜகம் / கொலை போன்றவைகள்தான் வன்முறை, கொலை என்பதை அரசும், சமூகமும் நம்மை நம்பவைத்துள்ளது.
இந்த வன்முறை , அரசுகளாலும் மக்களாலும், இவைகள் கொலை , பலாத்காரம்தான் என்று வெகுஜனங்களின் புத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால் சந்தேகம், அதைப் புரிய வேண்டுமல்லவா / விளங்கிக் கொள்ள வேண்டுமல்லவா?
ஒரு நாட்டின் அதிபரை மற்றொரு நாட்டின் கொலைகார குண்டர் – அதாவது இராணுவ திமிர் அந்நாட்டு அதிபரின் மெய்காப்பாளர்களைக் கொன்று , அந்த நாட்டு அதிபரையும், அவர் மனைவியையும் கடத்தி வந்ததை "அமெரிக்க இராவணன்" செயல் என்பதா? அல்லது கொலைகார , கொள்ளைச் செயல் என்பதா ? இது வன்முறை இல்லையா? இதை யார் விசாரிப்பது
? கொலைகாரன் அமெரிக்க ஜனாதிபதி என்பதால் இந்திய அரசியல் பாரம்பரியம் வாய்மூடிவிட்டது. சமூக ஊடகங்களும் , நேருக்கு நேர் விவாதமேடைகளும் நடைபெறவில்லை. போகட்டும், அது எங்கேயோ நடந்தேறிய தூர தேசச் சம்பவங்கள்.
சரி, தமிழ்நாட்டில் , கரூரில் 41 பேர் மாய்ந்ததற்கு காரணம் யார் ? ஏன் இது வன்முறையாகப் பார்க்கப்படவில்லை. இந்த மரண ஓலம் அடங்குவதற்கு முன்னரே வெள்ளிச்செங்கோல் வாங்கியவன் குற்றவாளியில்லையா? இந்திய சட்டத்தில் இது வன்முறை என்று கூறப்படவில்லை.
சாதியில் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்பது வன்முறை ஆகாதா? அதாவது உடல் அழிவு மட்டுமே வன்முறை என்றால் கரூரில் 41 பேர் கொல்லப்பட்டது. இன்றுவரை அரசும்,, ஊடகங்களும் ஏன் நீங்களும் சொல்வதில்லையே மனிதன் என்பது உடல்மட்டுமேவா? உள்ளமும் ஆகாதா
? உளவியலாக , கூனிக்குறுகி வாழவைப்பது வன்முறை ஆகாதா? நடைபிணமாக்குவது கொலையில்லையா?
ஆக, அரசு சொல்வதுதான் குற்றம் , கொலை , வன்முறை 41 பேர் கொல்லப்பட்டதற்கான சமூகச் சூழலுக்கு காரணமானவர்கள் கொலையாளிகள் இல்லையா?
41 பேர் கொலையை TV-யில் இமைக்காமல் உற்றுப் பார்த்து , மவுனமாக இருக்கும் சமூகம், நாளை அமெரிக்க இராவணன் , மோடியை தூக்கிக்கொண்டு போனாலும் சும்மாதானே இருக்கும் TV-யில் பொழுதைக் கழிக்கும். இப்போது இந்தியப் பொருட்கள் மீதான வரிகளை டிரம்ப் உயர்த்தியது வன்முறைதானே
? அரசும் மக்களும் இந்த வன்முறையை மௌனமாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றார்கள். . .
.
சமூக வலைதளங்கள் ஒரு மோட்டார் வாகன விபத்தை ஒரு வாரத்திற்குக் காட்டி மகிழ்கிறார்களே இதற்கு கேமராவை ஆன்செய்வது குற்றமில்லையா?
41 பேர் கொல்லப்பட்டதற்கு நஷ்டஈடு ! சில லட்சங்கள் மனிதக்கொலைக்கு நஷ்டஈடு . இது கந்துவட்டிக்கார மனம்தானே ? உயிருக்கு நஷ்டஈடு ! நாளை உங்க வீட்டுக்கதவு தட்டப்படாதா? இது ஒரு பக்கம். மற்றொரு மக்கம் , மக்களே ஆயிரக்கணக்கில் ஏன் கரூரில் கூடினீர்கள். யோசித்து முடிவெடுத்தா நீங்கள் கூட்டத்திற்குப் போனீர்? இல்லைதானே ?
விஜய் கரூரில் ( TV செய்தி )
இதைக் கேள்விப்பட்டவுடன் அரசியல் தலைவர் வருகிறார் என்று நினைத்தீர்களா? அல்லது உங்க ஆழ்மனதின் ஆசைப்பொருள் , பிம்பம் , உயிருடன் காட்சியளிக்கப் போகுது என்று நினைத்தீர்களா? உண்மையில் ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள்.
உங்கள் ஆசையை, ஆசைப்படு பொருளை காண எந்தவித ஆய்வு , யோசிப்பு , முன்னெச்சரிக்கை ஏதுமின்றி விழுந்தடித்துக் கொண்டு போனீர்கள், நீங்கள் போனீர்களா
? அல்லது உங்க ஆழமனத்தின் ரகசியத் தூண்டுதல் , முடுக்கத்தால் (
DRIVE ) போனீர்களா?
ஒரு வகையில் கண்மூடித்தனமாக ஒரு நடிகனை அல்லது உங்க ஆழ்மனத்தின் பிம்பத்தைக் கண்டுகளிக்கத் துடிப்புடன் சென்று இருக்கின்றீர்களே
! சரி , போனீர்கள். எவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள்
? கூட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதை ஏன் உணரவில்லை? குழந்தைகள் ! பெரியவர்கள்
! இயற்கை உபாதைகள் தண்ணீர் உட்பட ஏதாவது வசதி செய்யப்பட்டிருந்ததா? மக்களின் ஒரே பிரதிநிதி விஜய் ஏற்பாடு ஏதாவது செய்திருந்தாரா?
பார்த்தீர்களா
! கேட்டீர்களா
? ஏன் இல்லை ? இது குற்றமாகப்டவில்லையே
! ஏன்
? நீங்கள் பார்க்கச் செல்லவில்லை ! உற்றுப்பார்க்க (
GAZE ) சென்றிருந்தீர்கள்.
இரகசிய ஆசையைத் துய்ப்பதில் இருந்த ஆவல் , உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அறியவிடாமல் செய்துவிட்டது. அப்படித்தானே ?
இனி ஆபத்தான ஆளுமைகளைப் புரிய முயற்சிக்கலாம்.
முதலில் அரசு – அதாவது போலீஸ் சிவில் நிர்வாகம்.
அரசுக்கு ஒரு நடிகருக்கு – அதுவும் பொதுவெளியில் காட்சிப் பொருளாகிறார் என்றால் எவ்வளவு ஜனங்கள் கூடுவார்கள் என்பது தெரியாதா?
சினிமா எங்கள் ரத்தத்தில் எனும் கும்பல் கலாசாரத்தைக் கணக்கிட்டிருந்தால் , தேர்தல் கூட்டத்திற்கு , இத்தனை மணிக்கு ஆரம்பித்து இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என்று வழிகாட்டல் சொல்லப்பட்டதா? இல்லையா ?
தேர்தல் அன்றும் ஒவ்வோர் வீட்டிற்கும் விஜய் வருவார்.
தவெக
இது நமக்குத் தெரியப்போவதில்லை. நீதிமன்றம் சென்றால் தெரியலாம். குறிப்பிட்ட நேரத்தில் நடிகர் வராததை கூட்டம் நடப்பதற்கான பொறுப்பாளரிடம் கேட்கப்பட்டதா? இல்லையா?
இன்னும் தாமதமாகும் என்ற நிலையில் அதை மக்களிடம் சொல்ல வேண்டும் என்ற கடமை என்னவாயிற்று ?
கடமை , கண்ணியம் , என்பதெல்லாம் நாடக வசனமா
! நடவடிக்கைக்கு அவைகள் பூஜ்யமா?
கவனக்குறைவு , கடமை தவறா போலீஸிடம் இருந்ததா? இல்லையா? போலீஸ் துறை மந்திரியின் ஆய்வு நடந்ததா? இல்லையா? இது ஒருபக்கம் இருக்கட்டும்
. இனி மீட்டிங்கிற்குப் பொறுபேற்றவர்கள் மேடையில்தானே இருந்தார்கள்? விஜய் வருவது – தாமதம் ஆவது தெரியாதா? விஜய் மொபைலில் பேசி தெரிந்துகொண்டுதானே இருப்பார். மக்களுக்கு அதை தெரிவித்திருக்க வேண்டாமா?
நடிகர் வருவதற்கு சில மணிநேரம் ஆகலாம், அதுவரை காத்திருப்பீர்களா
? என்று கேட்டிருக்க வேண்டாமா?
குழந்தைகளுக்கு பசித்திருக்காதா
? கூட்டக் கசகசப்பு அவர்களை பாதித்திருக்காதா? தண்ணித்தாகம் , தவித்த வாயக்கு தண்ணீர் என்பார்களே
! இவர்கள் ஏதாவது யோசித்து செய்திருக்க வேண்டாமா? இயற்கை உபாதையை போக்குவது எப்படி?
இனி இறுதியாக கதாநாயகனிடம் வருவோம். மக்களே ! உங்கள் ஆழ்மன ஆசைப்படுபொருள் இந்த பிம்பம் , உடனுடன் உங்கள் முன் வருவதற்கு முன், உங்களைப் பற்றி ,உங்கள் தேவைகள் என்ன என்பதை யோசித்தாரா? கூட்ட நேரம் நண்பகல், கரூர், கொடைக்கானல் இல்லை. வெயில் காலத்தில், நண்பகல் கூட்டம் இது சரியா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டாமா? தாமதமாய் போகிறோமே, மக்கள் நமக்காக பிள்ளைகுட்டிகளோடு அல்லல் படுவார்களே என்ன ஏற்பாடு நடந்த்து
? அவருக்குத் தேவை உங்கள் ஓட்டு , உங்கள் கஷ்டமல்ல, உங்கள் நலமல்ல.
உங்கள் ஆசைப்படுபொருள் ஒர் அதீத சுயமோகியாய் இருக்கிறார். அவன் 41 பேர் சாவுக்கு / இழவுக்கும் போகாதவன். அதற்கு சால்சாப்பு வேறு. தேர்தல் அன்று "ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருப்பாராம்" எப்படி இருக்கிறது பாருங்கள் இந்த அதீத சுயமோகம் !
மக்களுக்காக போராட்டமோ, அறிக்கையோ கொடுக்காதவர். இவர் காண்பது முதல்மந்திரி கனவு. இவரின் அதீத சுயமோகம் இன்னும் சில மாதங்களில் மோடியின் நாற்காலி மேல் கனவானாலும் ஆச்சரியமில்லை.
இவர்கள் ரத்தத்தில் கலந்தது சினிமாவாம் ! வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்று வாழும்போது சினிமா பிம்பங்களுடன் குழாவுவோம் என்று இனியும் வாழப்போகிறீர்களா?
இறுதியாக என்ன நடந்தது? பொதுக்கூட்டம் முடிந்த பின் கூட்டம் கலைந்ததா? இடையிலே திடீரென பீதி ஏற்பட என்ன காரணம்
? மக்கள் வெளியேற போதிய பாதைகள் இல்லையா? அல்லது குழப்பம் விளைவிக்கப்பட்டதா?
இத்தனை கேள்விகள் கொலைக்களத்தைப் புரிய அவசியமாகிறது.
இது விபத்தல்ல, பல பேர்களால் நடத்தப்பட்ட கொலை பல்லாத்காரம் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் எந்தவித நெறிமுறைகளும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவில்லை என உணரமுடிகிறது.
குறிப்பு
41 பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை சினிமா நாயகன் அறிந்தும் , சென்னை சென்றதை ஜீரணிக்க முடியவில்லை. சாவுகளை அவர் பார்த்த கோணம் வக்கிரமாக உள்ளது. பிறகு உங்கள் விருப்பம்.
கடைசியாக உங்களுக்கு.
ஒருவர், தலைவர், நடிகர் இவரின் சொற்ப அறிவினை கவர்ச்சியைப் புரிய எத்தனிக்க வேண்டும். அவரின் செயல், அவரின் ஆசைக்கு தகுதியானவரா? பண்பானவரா? அவர் சொல்லும் , ஆசைப்படும்பொருள் பற்றி ( முதல் மந்திரி ) அதற்கான அனுபவம் உள்ளதா
? அதற்கான பண்புள்ளவரா ? போன்றவைகள் முக்கியம்.
குறிப்பு
மனிதர்களின் ஆழ்மன விருப்பங்கள் எவ்வாறு அதிகாரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நம்மைப் பிணைக்கின்றன என்பதை காட்டுகின்றன. இக்காலகட்டத்தில் சகிப்புத்தன்மை (மக்களின், ஊடகங்களின்,கட்சிகளின்
) என்பது பிறரது உண்மையான அடையாளங்களை நிராகரிக்கும் போக்காக மாறியுள்ளது.
இதை எளிமையாகச் சொன்னால் மனிதர்களின் ஆழ்மன விருப்பங்கள் சந்தோசத்திற்காக உண்மையை நிராகரித்துவிடுகின்றன.
க.செ.
உதவியோர்
சிவா
