விவாதத்திற்காக <--------> விவாதத்திற்காக
இப்படி ஒரு
தலைப்பையும், கேள்வியையும் முன்னிலைப்படுத்தும் போது பதிலை வெகுதூரம் பின்நோக்கி
சென்றுதான் தேட வேண்டியுள்ளது. இந்தப்
பின்னோக்கி செல்வதற்கு பிரபல கல்வியாளர் A.K. இராமனுஜன் உதவுகிறார்.
அவரின் “ முன்னூறு இராமாயணங்களின் ஐந்து உதாரணங்கள்”
என்ற அவரின் உரையை (அமெரிக்க பல்கலைக் கழகத்தில்) கட்டுரையாக அட்சரம் இதழ்-4 / டிசம்’02 – பிப் ‘03-ல்
வெளியிட்டிருக்கின்றனர்.
அதில் ...... வால்மீகி இராமாயணத்தையும்,
கம்பனின் இராமாயணத்தையும் அகலிகையின் கதையை வைத்து ஒப்பீடு செய்கிறார். ””வால்மீகியுடையதில், மோகம் கொண்ட இந்திரன் அகலிகையை
வன்புணர்ச்சி கொள்கிறான். கம்பனுடையதில்,
அகலிகை, தான் செய்வது தவறு என்று உணர்ந்த போதிலும் அவளால் அந்தத் தடை செய்யப்பட்ட
இன்பத்திலிருந்து விடுபட முடியவில்லை.
கம்பனுடையதில் அவளுடைய கணவனான முனிவருக்கு யாவும் தெரிவது, ஒரு மெல்லிய
உளவியல் பார்வையை அந்நிகழ்வின் மேல் படர விடுகிறது. இந்திரன் ஒரு பூனையின் வடிவம் எடுத்துத்
தப்பிச் செல்ல முயல்வது,......
....உன் உடல் ஆயிரம் யோனிகளாகட்டும் என்று
சபிக்கப் படுகின்றான் இந்திரன். பின்னர்
அவை கண்களாக மாறுகிறது. அகலிகை உறைந்த
கல்லாக மாறுகிறாள்..... “
இப்போது வெளிவந்த தீர்ப்பைக் குறித்துக்
கொள்வோம்.
வால்மீகிக்கு, இந்திரன் செய்தது வன்புணர்ச்சியாக தெரிகிறது.
தமிழ் கூறும் நல்லுலகின் கம்பனுக்கோ, அகலிகை, தான் செய்வது தவறு என்று
உணர்ந்த போதும் அவளால் அந்த தடை செய்யப்பட்ட இன்பத்திலிருந்து விடுபடவில்லை. அதாவது பலிகடாவுக்கு பங்கு இருக்கிறது என்று
கூறி இந்திரனுக்கு ஒரு மறைமுக வக்காலத்து வாங்குகிறார்.
கல்வியாளர் A.K.
இராமானுஜத்தின் தீர்ப்போ ”இக் கவித்துவ தீர்ப்பின் வழி இருவரும் அவர்களுடைய
தவறுகளுக்காக பலி வாங்கப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறார்கள்
கல்வியாளரின் கவித்துவத் தீர்ப்பு இருவரும் குற்றவாளி
என்பதே.
முன்னொரு காலத்தில் கௌதமர் என்ற முனிவர் இருந்தார். அவர்
பிரம்மாவின் மகளான அகலிகையை
திருமணம் செய்து கொண்டார்.
“ …. அகலிகை கணவரது தவ வாழ்க்கைக்கு ஏற்ற
பணிகளை செவ்வனே செய்து அவருக்கு பல விதத்திலும் உதவியாக இருந்தார்.
தினமும் பொழுது புலரும் முன்பே நதிக்குச்
சென்று நீராடுவது கௌதமரின் வழக்கமாயிருந்தது.
இதைத் தெரிந்துகொண்ட இந்திரன் நடுஜாமம் கழிந்த உடனேயே கோழியாய் உருவெடுத்துக் கூவினான்.
விடிந்துவிட்டதென்று
அரக்கப்பரக்க எழுந்த கௌதமர் ஜபத்துக்கும், நீராடலுக்கும் உரியபொருள்களை
எடுத்துக்கொண்டு ஆற்றுக்குப் புறப்பட்டார்.
அவர் வெகுதூரம்
சென்ற பிறகு கௌதமரின் வடிவில் ஆசிரமத்துள் நுழைந்தான் இந்திரன்.
அகலிகை ஆச்சரியத்துடன், “ஸ்வாமி! எதை மறந்துவிட்டீர்கள்? ” என்று கேட்டாள்.
(இந்திரன்) வேஷதாரி, ”பிரியே! எதையும் மறக்கவில்லை! ஆகாயத்தைப் பார், மூன்றாம் ஜாமம்
ஆரம்பித்திருப்பதை உணர்வாய். இப்போது
எப்படி நீராட முடியும்? அதுதான்
திரும்பிவிட்டேன், வா சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் “ என்று அழைத்தார்.
அகலிகை அருகில் அமர்ந்தாள். பேச்சு சிருங்கார ரஸமாக மாறியது.
நதிக்குச் சென்ற கௌதமரோ ’இன்னும் விடியவில்லை’ என்று
உணர்ந்தார். ஆசிரமத்திற்குத்
திரும்பினார். ஆசிரமக் கதவு
தாளிட்டிருந்தது. உள்ளே இருவர் சிரித்து உரையாடும்
சப்தம்.
கதவை தட்டினார்.
“அகலிகை !
கதவைத்திற”.
கணவரின் குரலும், கதவு தட்டும் ஒலியும்
அகலிகையைத் திடுக்கிடச் செய்தது.
”ஸ்வாமி!
கணவரின் வடிவில் உள்ள தாங்கள் யார்?”
எனக் கேட்டாள்.
”அம்மணி!
நான் இந்திரன். என்னை
மன்னித்துவிடுங்கள்” என்றான் தேவேந்திரன்.
அலையக் குலைய
வந்து கதவைத் திறந்த அகலிகை கணவர் பாதத்தடியில் சரிந்தாள்.
பூனை வடிவில் வெளியேற முயன்ற இந்திரனை
கௌதமர் “அடேய்! தேவேந்திரன் செய்யும்
காரியமா இது? எந்த சுகத்துக்காக இத்தனை
நாடகம் போட்டாயோ, அந்தச் சின்னம் உன் உடலெங்கும் தோன்றி மற்றவர் முன்
அவமானப்படுவாய்” என்று சபித்தார். அவமானம்
தாங்காத இந்திரன் தாமரைத் தண்டில் போய் ஒளிந்து கொண்டான்.
“கல்லுக்குத்தான் உணர்ச்சி இருக்காது. உணர்ச்சிப் பூர்வமாக என்னைத் தெரிந்து கொள்ளாத
நீ கல்லாகவே கிட” என்று அகலிகையையும் சபித்து விட்டு தவத்தில் ஈடுபட்டார் முனிவர்.
கௌதமர் தீர்ப்பை வாசித்து விட்டு
மௌனியாகிவிட்டார்.
தேவேந்திரன் அகலிகை என்ற பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு
வந்திருக்கலாம். அகலிகையை அடைவது என்பது
இந்திரனின் பால் விருப்பம் மட்டும் அல்ல.
அது அவனின் phallic jouissance ஆகும். அதாவது, அதிகாரத்தை நிலை நாட்டிய பூரிப்பு
எனலாம்.
மேலே வால்மீகி, கம்பர், கௌதமர், கல்வியாளர் A.K. ராமானுஜனின் தீர்ப்பை அறிந்து கொண்டோம்.
கல்வியாளர் ராமானுஜத்தின் தீர்ப்பு சென்ற
காலத்தை (வால்மீகி, கம்பன் காலத்தை) நவீன காலத்திற்கு கொண்டு வந்து விட்டது. தேவேந்திரன் வேதகாலத்தின் தலைவனா? அல்லது இந்த இந்திரன் எத்தனாவது இந்திரன்? தெரியவில்லை.
போகட்டும். இவன் கற்பழிப்பாளனா (கறுப்பு/ சிவப்பல்ல கேள்வி) வல்லுறவா (rape) இல்லையா?
குற்றவாளியா? இல்லையா?
இப்போது இந்திய குற்றவியல் சட்டம் கூறுவது
என்ன?
Indiatoday.in லிருந்து
“இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 375-ன் படி rape என்பது,
1. ஒரு பெண்ணின்
விருப்பத்திற்கு மாறாக (against her will)
2. பெண்ணின்
சம்மதமின்றி (without her consent)
3. பலாத்காரமாக (coercion)
4. வேறொன்றாக (misrepresentation) அல்லது மோசடி செய்து
(fraud) அல்லது ஒரு
பெண் குடிமயக்கத்தில் இருக்கும்போது அல்லது பொய்யான வாக்குறுதிகள் கூறி (duped) அல்லது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது (unsound mental
health)
5. In any case 16 வயதுக்குக்
குறைவாக இருக்கும் போது நடைபெறுவது வல்லுறவாகும்”. –Indiatoday.in 09.09.02
மன்னிக்க . இந்திய பீனல்கோடுபடி இந்திரன் கற்பழிப்பாளனா
இல்லையா என்று சில சட்ட வல்லுநர்களை கேட்டதற்கு பதில் “மண்டைவலிதான்”. [misrepresentation என்பதை வைத்து rape பண்ணப்பட்டது என்பதை உறுதியாக கூறுவது என்பது
முடியாது].
மீண்டும் ஆய்வுக்கு வரலாம். இந்திரன் கோழியாகி கூவி முனிவருக்கு தவறான தகவல் தந்து, பின் கௌதமராகி,
அகலிகையின் கணவனாக பேசி, நடித்து - ஏமாற்றி – தன்
ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான்.
இது இ.பி.கோ 375-ல்,
“மோசடி” செய்வது என்ற பிரிவின் படி rape ஆகும். அதாவது, கௌதமராக தன்னை ஆள் மாறாட்டம் செய்து பெண்ணை அடைவது சட்டப்படி பலாத்காரம்தான்.
தேவேந்திரன் என்ற அதிகாரச் செருக்கு எதார்த்தத்தை (ego) மறைத்துவிட்டது.
ஆக,
தேவேந்திரன் இன்றைய காலத்தில் வல்லுறவு
கொண்டவனாகிறான்.
தண்டனை அவருக்குண்டு, அவன் பக்தர்கள் விரும்பாவிட்டாலும் உண்டு.
இன்னும் சில வழக்கப்படி இந்த வழக்கு
விசாரிக்கப்படாமல் இருக்கிறது.
சாதிவழக்கு : - இந்திரன் என்ன சாதி என்று
தெரியவில்லை. தெரிந்தால் அவன் சார்ந்த
சாதியினர் அவனை குற்றமற்றவன் என்றும், அகலிகையை கணிகை என்றும், அல்லது இன்னும் புதிய வார்த்தைகளை உண்டாக்கி இந்திரனை விடுதலை
செய்வர்.
இக்
கட்டுரையின் முதல் அத்தியாயத்தை முடிப்பதற்கு முன் முனிவர் கௌதமர், கம்பன்,
கல்வியாளர் A.K.இராமானுஜன் இவர்களின் குற்றச்சாட்டான(மறை பொருளாகக் கூட )
அகலிகையை ஏதோ ஒரு வகையில் உடந்தைதான் என்ற கல்வீச்சு பற்றி மன அலசல்
ஆய்வுக்குட்படுத்தலாம். மன அலசலில்
மதிப்பீடு, தீர்ப்புகளெல்லாம் அங்கு இல்லை.
ஏனென்றால் அது உண்மையல்ல. அது illusion; தோற்றப்போலி தான்(sembalance ).
கற்பு என்ற மதிப்பீடுகள் phallic ஆண் அதிகாரத்தின் உடமை வர்க்க
மதிப்பீடுதான். பெண்ணை சொத்தாக பார்க்கும்
பார்வைதான் அது. அந்த மனப் போக்கில்
ஜனநாயகத் தன்மை முற்றிலும் கிடையாது.
இந்திரனின் களவாணித்தனமான சூறையாடலில்
அகலிகை நிலை குலைந்து affect -க்கு (பாதிப்புக்கு) உள்ளாகி இருக்கக் கூடும். அந்த அவளின் அனுபவம் ஒரு real ஆகும்.
(இது எதார்த்தமல்ல). இந்த real சித்தத்தின் ஒரு நிலை. இந்த நிலையில் ஏற்படும் அனுபவிப்பை மொழியாக,
குறியீடாக, வேறு எந்த
வகையிலும் வெளிப்படுத்திவிட முடியாது. இதைப்
புரிந்து கொள்ள எளிமையாகச் சொன்னால் மனம் ஒரு உறைபனி state -க்கு
வந்துவிட்டது என்று கூறலாம்.
இந்நிலையில் தான் முனிவர் கெளதமரின்
குற்றச்சாட்டிற்கு அகலிகையால் எந்த பதிலும் கூற முடியாமல் போனது. இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் கம்பனும்
அகலிகை இன்பத்திலிருந்து விடுபட முடியவில்லை என்ற குற்றச்சாட்டை
வைத்திருக்கிறார். இது ஒரு நனவிலியான male -ன் பார்வை. ஆணின் பார்வை அவ்வளவுதான். இந்த கூற்றிற்கு எந்த முகாந்திரமும்
இல்லை. விவாதிக்கலாம். சமகால பெண் மீதான பாலியல் வன்முறை பற்றியும்
இதன் நீடிப்பாக விவாதிக்கலாம் ..... (தொடரும்)
ஆதாரம்
1. Real order -
Lacan
2. ஸதி அகலிகை
-மங்கையர்குல மாணிக்கங்கள்
3. Lacanian link
4. Zizek.
குறிப்பு :-
தேவேந்திரனின் அந்தக் கணம் பற்றி சில
வார்த்தைகள். அவன் சித்தம் குறியீட்டு
ஒழுங்கிற்குள் (symbolic order) அதாவது Law, கலாச்சாரம், சமூக ஒழுங்கு இவற்றிற்குள்
நுழையவில்லை ; புறக்கணித்துவிட்டது
அவன் சித்தம்.
“ Desires are
themselves as separated from our actual bodily needs ”.
“இயற்கையிலேயே நமது ஆசையானது உடல் தேவைகளைத் தாண்டியது ; வேறுபட்டது. அதிகாரம் ( phallus ) என்பது ஆணுறுப்பல்ல என்பது போல. மிருகங்களின் பாலுமை பூஜ்ய நிலையிலிருந்து copulation
- க்காகும், மனிதர்களின் பாலுமை பூஜ்ய
நிலையிலிருந்து சுயஇன்பம் காண்பதாகும் ; மனிதர்களின் பாலுறவு நடவடிக்கை
நம் புனைவுகள் சார்ந்ததாகும். நம்மைப்
பற்றியும், பாலுறவில் பங்கேற்பவர் குறித்தும் நம்மின் idealized images ஆகும்.
இறுதியாகப் பார்க்கும்போது பாலுறவு நடவடிக்கை சுயமோகமாகும்.
-
லக்கான்.
-ECRIT.
~க.செ~
ஓவியம் :
Ahalya & Indra.--Raja Ravi Varma
மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..
ReplyDeleteதன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.
இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?
உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)
இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.
ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.
ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”
நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.
ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.
இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.
இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?
உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?
http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.html