9 Sept 2014

" குரு உத்சவ் "...........? ................ by

திரு. மோடி  
or 
Mr. Prime Minister 

 இது சற்று தாமதப்பட்ட எதிர்வினைதான், என்ன செய்வது.
       ஆசிரியர் தினம்  என்பது ...... அது முதலில் தாய்மொழி என்ற அடையாளத்தின் குறி.
       மேலும், அது ஒரு நினைவுநாள்.  20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கென்ற நினைவு கூறலுக்கான குறியீட்டுச் சொல்லாக ஆசிரியர் தினம் மேலிருந்து புறப்பட்டு வந்தது.
      இதுவரை ஆங்கிலத்தில் Teachers day என்றும், மலையாளத்தில் அத்யாபகன் தினம் என்றும், தமிழில் ஆசிரியர் தினம் என்றும், தெலுங்கில் ....?  உபாத்யாய தினம் (யூகம்தான்) என்றும் தென்மாநிலத்தவர் அவரவர் தாய் மொழியில் ஆசிரியர் தினம் என்பதைச் சொல்லி அழைத்தனர்.  நினைவு கூர்ந்தனர், கொண்டாடி வருகினறனர்.
       இந்த ஆண்டு (2014-ல்) மோடி அரசாங்கத்துக்கு முதல் ஆசிரியர் தினம் வந்தது.
       திரு. மோடி அல்லது  Mr. Prime Minister  திடீரென, மக்கள் எதிர்பாராத தருணத்தில் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் தினமாகக் கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டார்.  திரு. மோடி கூறினால் அது அவர் விருப்பம் என்றாகிறது.   Mr. P.M (பிரதமர்) என்ற முறையில் கூறப்பட்டிருந்தால் அது ஆணை / கட்டளை / அரசாங்க விருப்பம் கூட ஆணைதான் என்றாகிறது.  ஏனெனில் Mr. Prime minister   என்பது   The Phallus  .  அதிகாரமையம் அது (மனஅலசல்படி). அந்தத் தளத்தில் அதற்குரியவர்/ள் தான் வரமுடியும்.
       அதனால்தான் திரு. மோடி விருப்பமா அல்லது Mr. Prime Minister -ன் குரலா?  என்ற வினா எழுகிறது.  பதில்  Mr. P M -ன் குரல் என்று அடையாளம் கண்டு சொல்வார்களானால் ..... துக்கம் தொண்டையை அடைக்கிறது.
       ஏனெனில்   Mr. PM -மிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது ஒரு வேளைக் கஞ்சியும், தொட்டுக்க முட்டைப் பொறியலும் அல்ல,  அரசியல் ஆசை மக்களைக் கையேந்திகளாக கையேந்த வைப்பதுதான்.  ஆனாலும் மக்கள் மானமிகு தன்னிலையாய் இருக்கும் போது விரும்புவது கஞ்சியைவிட, மக்களிடம்  Mr. PM. தயை நிறைந்தவராய் இருக்க வேண்டும் என்பதுதான்.
       Mr. PM.-ன் விருப்பம்   ஆணையில் தயை எங்கே! குரு உத்சவ் என்று உச்சரிக்ககூடத் தெரியாத அந்நிய மொழியினரைப் பார்த்து நீ இனி இப்படித்தான் குரு உத்சவ் தினம் என்று கூறு என்று கூறுவது, வேறு வேறு மொழியை தாய்மொழியாய்க் கொண்டவர்களை, இந்த ஒரு சொல் (ஒரே மொழி) லைத்தான் கூற வேண்டும் என திரு.. PM ஆசைப்படுவாரானால் அந்த ஆசைக்கடியில் பிற தாய்மொழிகளை அந்த Phallic   மொழிக்கு காலனியாக்குவது என்ற நனவிலி ஆசையாய்த் தெரிகிறது என்று வெளிப்படையாய் மன அலசல் கூறுகிறது.
       புறப்பட்ட இடத்திற்கு வருவோம்.  ஏன்?  திடீரென்று இந்தக் கூற்று செய்தியாகி- யிருக்கிறது?
       ஏன் திடீரென்ற பேச்சு என்பதைப் புரிய, மொழி எப்போது (பேச்சு) ஒரு மனிதனிடம் பிறக்கிறது என்ற கேள்வி அவசியம்.
மன அலசல் கூறுவது “மொழி கலாச்சாரமல்ல, எஜமானனின் மொழியல்ல, பொருளாதாரமல்ல, Trade அல்ல. மாறாக, அது Affects” லெக்கான். 
       ஏதோ ஒரு பாதிப்பில், ஏதோ ஒரு பேச்சால் (மொழியால்) பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, நனவிலி பேச்சாகி பிரக்ஞையுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் Mr. P.M குரு உத்சவ் என்று மொழிந்திருக்க முடியும்.  அப்படியானால்   Mr. PM -   பாதித்த மொழி (பேச்சு) எது?  மக்களுக்கு வெளிப்படுத்தலாமே!
       பல மொழிகளின் கூடாரம்தானே இந்தியா?
       ஒரு குறிப்பிட்ட ஒரு மொழியை, பிறமொழிகளைக் காலனியாக்கிவிட்டு உயர்த்திப் பிடிப்பது இந்திய ஐக்கியத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்குமா?  அல்லது வைரஸ்யை பரப்புமா?  (காலம் சொல்லும் பதிலை)
       குரு உத்சவ் என்ற ஓசைகூட அங்கீகரிக்கப்பட்ட அரசு மொழியான ஹிந்தி இல்லையாமே!
       ஆசிரியர் தின வாரத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஒருவரிடம் மாணவர்களாகி அவரிடம் குரு உத்சவ்“ பற்றி கைபேசியில் கேட்டதை அப்படியே வாசகர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
Dr. கரன் கூறியது.
             குரு உத்சவ் என்பது சமஸ்கிருதத்திலிருந்து இந்திக்கு வந்த சொல்லாகும்.
       குரு உத்சவம் என்பது சமஸ்கிருதம் ஆகும்.
       உத்சவம் என்பதன் பொருள் திருவிழா ஆகும்.
       குரு உத்சவ் என்பது ஆசிரியர் திருவிழா என்று பொருள்படும்.
       ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர் நினைவு நாள் என்று பொருள்படும்.
       குரு உத்சவ் என்பது ஆசிரியர் நினைவு நாள் கொண்டாட்டம் ஆகும்.
       குரு என்பதற்கு ஆசிரியர் என்பது ஒரு பொருள்.
       குரு என்ற வார்த்தை ஆன்மீகத்தில் பயன்படும் சொல்.  இதன்பொருள் அறியாமையை நீக்குபவர்.  முன்னோடி என்றும் கூறலாம்.
       ஆசிரியர் என்பது ஒரு நபர் -  person  குரு என்பது மனிதராக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.  மனிதராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ( need not be a person )  குரு ஒரு பறவையாகக் கூட, கடவுளராகக் கூட இருக்கலாம்.  பாகவதத்தில் 24 வகை குரு க்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
குரு உத்சவ் என்ற  structured   ஆக அர்த்தம் கொடுக்கும் ஒரு குறிப்பானை வேகமாகப் பிடுங்கி ஹிந்தியில் ஒட்டவைப்பானேன்.  ஒரு குறும்புக்கார மதிப்பிற்குரிய பெண்ணியவாதி ஹிந்தியைப் பற்றிக் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.  அப்படியே கூற முடியாவிட்டாலும் அதன் சாரம் இதுதான்.  ஹிந்தி என்பது பலமொழிகளால் ஆன ஒரு கொலஜ் (ஒரு வகை   collage ). இருக்கட்டும்.  பெரும்பான்மை ஹிந்தி என்பதால் சிறுபான்மை மேல் சவாரி என்ற கருத்தாக்கத்தால் வழிநடத்தப்பட்டால் அகண்ட பாரதத்திற்கு   பதில் பழைய  குறுநில மன்னராட்சி என்ற திசையை அரசியல் நோக்கப் போகிறது.
Mr. PM -ன் பேச்சு சமூகரீதியாக, சமூக ஆரோக்கியத்தை மையமாக வைத்துப் பேசிய பேச்சல்ல.
பிற மொழியுடன் உறவுகொள்ள வேண்டிய உறவு, கொள்ளவேண்டிய பண்புகுறித்துப் போதுமான விளக்கமளிக்கவேண்டிய பொறுப்பு,அக்கறை அங்கு இல்லை......யோ என்று        தோன்றுகிற்து.
       மாறாக, சுயமோகக் கலாச்சாரம் (  grandiose ) /  கருத்தாக்கம், ஆரோக்கியமற்ற சுயநலம்.
        இதுதான்  Mr. PM -ன் மேலாண்மை அரசியல் சொல்லாடலாகத் தெரிகிறது.  அப்படியா?
இந்தியத் தன்னிலை (subject) என்ற அடிப்படையையே    குரு  உத்சவ் கேள்விக்குள்ளாக்குகிறது ?
க.செ
பி.கு:  இப்படி பேசியதற்காக Mr.Prime minister க்கு நன்றி.


இங்குள்ள மாணவர்கள் எத்தனை பேர் சூரியன் உதிப்பு மற்றும் மறைவை பார்த்திருக்கிறீர்கள் என்று பிரதமர் மோடி கேள்வி கேட்டார். சில மாணவர்கள் தங்களின் கரங்களை உயர்த்தினார்.தொடர்ந்து மோடி கூறுகையில், நாம் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்றார்.   
                                                                                                                 செப் 05,2014,தினமலர்
 I recently met Nagpur's Mayor. He told me they shut off street lights on full-moon nights and ask people to come out and enjoy the moon lit night. People actually do that and in the process, we save a lot of electricity. So, small things like these help us save our environment. How many of you have witnessed the sunset, or a full moon? These habits have gone.
                                                                                                               NDTV.com | Sep 05, 2014

4 Sept 2014

இந்திரன் கற்பழிப்பாளனா? இல்லையா? (Rapist ?)

விவாதத்திற்காக  <-------->  விவாதத்திற்காக  
இப்படி ஒரு தலைப்பையும், கேள்வியையும் முன்னிலைப்படுத்தும் போது பதிலை வெகுதூரம் பின்நோக்கி சென்றுதான் தேட வேண்டியுள்ளது.  இந்தப் பின்னோக்கி செல்வதற்கு பிரபல கல்வியாளர் A.K. இராமனுஜன் உதவுகிறார்.  அவரின் முன்னூறு இராமாயணங்களின் ஐந்து உதாரணங்கள்” என்ற அவரின் உரையை (அமெரிக்க பல்கலைக் கழகத்தில்) கட்டுரையாக அட்சரம் இதழ்-4 / டிசம்02 – பிப் 03-ல் வெளியிட்டிருக்கின்றனர்.
       அதில் ...... வால்மீகி இராமாயணத்தையும், கம்பனின் இராமாயணத்தையும் அகலிகையின் கதையை வைத்து ஒப்பீடு செய்கிறார்.  வால்மீகியுடையதில், மோகம் கொண்ட இந்திரன் அகலிகையை வன்புணர்ச்சி கொள்கிறான்.  கம்பனுடையதில், அகலிகை, தான் செய்வது தவறு என்று உணர்ந்த போதிலும் அவளால் அந்தத் தடை செய்யப்பட்ட இன்பத்திலிருந்து விடுபட முடியவில்லை.  கம்பனுடையதில் அவளுடைய கணவனான முனிவருக்கு யாவும் தெரிவது, ஒரு மெல்லிய உளவியல் பார்வையை அந்நிகழ்வின் மேல் படர விடுகிறது.  இந்திரன் ஒரு பூனையின் வடிவம் எடுத்துத் தப்பிச் செல்ல முயல்வது,......
       ....உன் உடல் ஆயிரம் யோனிகளாகட்டும் என்று சபிக்கப் படுகின்றான் இந்திரன்.  பின்னர் அவை கண்களாக மாறுகிறது.  அகலிகை உறைந்த கல்லாக மாறுகிறாள்.....
       இப்போது வெளிவந்த தீர்ப்பைக் குறித்துக் கொள்வோம்.
       வால்மீகிக்கு, இந்திரன் செய்தது வன்புணர்ச்சியாக தெரிகிறது.

       தமிழ் கூறும் நல்லுலகின் கம்பனுக்கோ, அகலிகை, தான் செய்வது தவறு என்று உணர்ந்த போதும் அவளால் அந்த தடை செய்யப்பட்ட இன்பத்திலிருந்து விடுபடவில்லை.  அதாவது பலிகடாவுக்கு பங்கு இருக்கிறது என்று கூறி இந்திரனுக்கு ஒரு மறைமுக வக்காலத்து வாங்குகிறார்.

       கல்வியாளர் A.K.  இராமானுஜத்தின் தீர்ப்போ ”இக் கவித்துவ தீர்ப்பின் வழி இருவரும் அவர்களுடைய தவறுகளுக்காக பலி வாங்கப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறார்கள்

கல்வியாளரின் கவித்துவத் தீர்ப்பு இருவரும் குற்றவாளி என்பதே.
தேவேந்திரனின் திருவிளையாடல் 
       முன்னொரு காலத்தில் கௌதமர் என்ற முனிவர் இருந்தார்.  அவர் பிரம்மாவின் மகளா அகலிகையை திருமணம் செய்து கொண்டார்.
       “ …. அகலிகை கணவரது தவ வாழ்க்கைக்கு ஏற்ற பணிகளை செவ்வனே செய்து அவருக்கு பல விதத்திலும் உதவியாக இருந்தார்.
       தினமும் பொழுது புலரும் முன்பே நதிக்குச் சென்று நீராடுவது கௌதமரின் வழக்கமாயிருந்தது.  இதைத் தெரிந்துகொண்ட இந்திரன் நடுஜாமம் கழிந்த உடனேயே கோழியாய் உருவெடுத்துக் கூவினான்.
விடிந்துவிட்டதென்று அரக்கப்பரக்க எழுந்த கௌதமர் ஜபத்துக்கும், நீராடலுக்கும் உரியபொருள்களை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குப் புறப்பட்டார்.
அவர் வெகுதூரம் சென்ற பிறகு கௌதமரின் வடிவில் ஆசிரமத்துள் நுழைந்தான் இந்திரன்.
       அகலிகை ஆச்சரியத்துடன், ஸ்வாமி!  எதை மறந்துவிட்டீர்கள்? ”  என்று கேட்டாள்.
       (இந்திரன்) வேஷதாரி, ”பிரியே!  எதையும் மறக்கவில்லை!  ஆகாயத்தைப் பார், மூன்றாம் ஜாமம் ஆரம்பித்திருப்பதை உணர்வாய்.  இப்போது எப்படி நீராட முடியும்?  அதுதான் திரும்பிவிட்டேன், வா சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அழைத்தார்.
       அகலிகை அருகில் அமர்ந்தாள்.  பேச்சு சிருங்கார ரஸமாக மாறியது.
       நதிக்குச் சென்ற கௌதமரோ இன்னும் விடியவில்லை என்று உணர்ந்தார்.  ஆசிரமத்திற்குத் திரும்பினார்.  ஆசிரமக் கதவு தாளிட்டிருந்தது.  உள்ளே இருவர் சிரித்து உரையாடும் சப்தம்.
       கதவை தட்டினார்.
       “அகலிகை !  கதவைத்திற”.
       கணவரின் குரலும், கதவு தட்டும் ஒலியும் அகலிகையைத் திடுக்கிடச் செய்தது.
       ”ஸ்வாமி!  கணவரின் வடிவில் உள்ள தாங்கள் யார்?”  எனக் கேட்டாள்.
       ”அம்மணி!  நான் இந்திரன்.  என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான் தேவேந்திரன்.
அலையக் குலைய வந்து கதவைத் திறந்த அகலிகை கணவர் பாதத்தடியில் சரிந்தாள்.
       பூனை வடிவில் வெளியேற முயன்ற இந்திரனை கௌதமர் அடேய்!  தேவேந்திரன் செய்யும் காரியமா இது?  எந்த சுகத்துக்காக இத்தனை நாடகம் போட்டாயோ, அந்தச் சின்னம் உன் உடலெங்கும் தோன்றி மற்றவர் முன் அவமானப்படுவாய்” என்று சபித்தார்.  அவமானம் தாங்காத இந்திரன் தாமரைத் தண்டில் போய் ஒளிந்து கொண்டான்.
       “கல்லுக்குத்தான் உணர்ச்சி இருக்காது.  உணர்ச்சிப் பூர்வமாக என்னைத் தெரிந்து கொள்ளாத நீ கல்லாகவே கிட” என்று அகலிகையையும் சபித்து விட்டு தவத்தில் ஈடுபட்டார் முனிவர்.
       கௌதமர் தீர்ப்பை வாசித்து விட்டு மௌனியாகிவிட்டார்.
       தேவேந்திரன் அகலிகை என்ற பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு வந்திருக்கலாம்.  அகலிகையை அடைவது என்பது இந்திரனின் பால் விருப்பம் மட்டும் அல்ல.  அது அவனின் phallic jouissance ஆகும்.  அதாவது, அதிகாரத்தை நிலை நாட்டிய பூரிப்பு எனலாம்.
       மேலே வால்மீகி, கம்பர், கௌதமர், கல்வியாளர்  A.K.  ராமானுஜனின் தீர்ப்பை அறிந்து கொண்டோம்.
       கல்வியாளர் ராமானுஜத்தின் தீர்ப்பு சென்ற காலத்தை (வால்மீகி, கம்பன் காலத்தை) நவீன காலத்திற்கு கொண்டு வந்து விட்டது.  தேவேந்திரன் வேதகாலத்தின் தலைவனா?  அல்லது இந்த இந்திரன் எத்தனாவது இந்திரன்?  தெரியவில்லை.
       போகட்டும்.  இவன் கற்பழிப்பாளனா (கறுப்பு/ சிவப்பல்ல கேள்வி) வல்லுறவா (rape) இல்லையா?  குற்றவாளியா?  இல்லையா?
       இப்போது இந்திய குற்றவியல் சட்டம் கூறுவது என்ன?
       Indiatoday.in லிருந்து
       இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 375-ன் படி rape என்பது,
1.   ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக (against her will)
2.   பெண்ணின் சம்மதமின்றி (without her consent)
3.   பலாத்காரமாக (coercion)
4.   வேறொன்றாக (misrepresentation) அல்லது மோசடி செய்து  (fraud) அல்லது ஒரு பெண் குடிமயக்கத்தில் இருக்கும்போது அல்லது பொய்யான வாக்குறுதிகள் கூறி (duped) அல்லது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் போது (unsound mental health)
5.   In any case 16 வயதுக்குக் குறைவாக இருக்கும் போது நடைபெறுவது வல்லுறவாகும்.                                           Indiatoday.in 09.09.02
                                          
       மன்னிக்க .   இந்திய பீனல்கோடுபடி இந்திரன் கற்பழிப்பாளனா இல்லையா என்று சில சட்ட வல்லுநர்களை கேட்டதற்கு பதில்  “மண்டைவலிதான்”.  [misrepresentation   என்பதை வைத்து   rape  பண்ணப்பட்டது என்பதை உறுதியாக கூறுவது என்பது முடியாது].
       மீண்டும் ஆய்வுக்கு வரலாம்.  இந்திரன் கோழியாகி கூவி முனிவருக்கு தவறான தகவல் தந்து, பின் கௌதமராகி, அகலிகையின் கணவனாக பேசி, நடித்து - ஏமாற்றி – தன்  ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான்.
       இது இ.பி.கோ 375-ல்,
       “மோசடி” செய்வது என்ற பிரிவின் படி  rape  ஆகும்.  அதாவது, கௌதமராக தன்னை ஆள் மாறாட்டம் செய்து பெண்ணை அடைவது சட்டப்படி பலாத்காரம்தான்.
       தேவேந்திரன் என்ற அதிகாரச் செருக்கு எதார்த்தத்தை (ego) மறைத்துவிட்டது.
       ஆக,
       தேவேந்திரன் இன்றைய காலத்தில் வல்லுறவு கொண்டவனாகிறான்.
       தண்டனை அவருக்குண்டு, அவன் பக்தர்கள் விரும்பாவிட்டாலும் உண்டு.
       இன்னும் சில வழக்கப்படி இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் இருக்கிறது.
       கணவன் கௌதமன், கம்பன், கல்வியாளர் A.K. ராமானுஜன் ஆகியோர் ஆண்கள்.  அவர்களின் பால்தன்மைக்கேற்ப அகலிகையும் உடன்பட்டவள் தானே!  என்ற கருத்தும், கற்பழிப்பில் ஒரு (contingent)-யை  / விளிம்பு நிலையை உருவாக்கி உள்ளனர்.
சாதிவழக்கு : -       இந்திரன் என்ன சாதி என்று தெரியவில்லை.  தெரிந்தால் அவன் சார்ந்த சாதியினர் அவனை குற்றமற்றவன் என்றும், அகலிகையை கணிகை என்றும், அல்லது இன்னும் புதிய வார்த்தைகளை உண்டாக்கி இந்திரனை விடுதலை செய்வர்.
இக் கட்டுரையின் முதல் அத்தியாயத்தை முடிப்பதற்கு முன் முனிவர் கௌதமர், கம்பன், கல்வியாளர் A.K.இராமானுஜன் இவர்களின் குற்றச்சாட்டான(மறை பொருளாகக் கூட ) அகலிகையை ஏதோ ஒரு வகையில் உடந்தைதான் என்ற கல்வீச்சு பற்றி மன அலசல் ஆய்வுக்குட்படுத்தலாம்.  மன அலசலில் மதிப்பீடு, தீர்ப்புகளெல்லாம் அங்கு இல்லை.  ஏனென்றால் அது உண்மையல்ல.  அது  illusion; தோற்றப்போலி தான்(sembalance ).
       கற்பு என்ற மதிப்பீடுகள்  phallic   ஆண் அதிகாரத்தின் உடமை வர்க்க மதிப்பீடுதான்.  பெண்ணை சொத்தாக பார்க்கும் பார்வைதான் அது.  அந்த மனப் போக்கில் ஜனநாயகத் தன்மை முற்றிலும் கிடையாது.
       இந்திரனின் களவாணித்தனமா சூறையாடலில் அகலிகை நிலை குலைந்து affect  -க்கு (பாதிப்புக்கு) உள்ளாகி இருக்கக் கூடும்.  அந்த அவளின் அனுபவம் ஒரு   real   ஆகும்.  (இது எதார்த்தமல்ல).  இந்த  real  சித்தத்தின் ஒரு நிலை.  இந்த நிலையில் ஏற்படும் அனுபவிப்பை மொழியாக, குறியீடாக, வேறு எந்த வகையிலும் வெளிப்படுத்திவிட முடியாது.  இதைப் புரிந்து கொள்ள எளிமையாகச் சொன்னால் மனம் ஒரு உறைபனி  state -க்கு வந்துவிட்டது என்று கூறலாம்.
       இந்நிலையில் தான் முனிவர் கெளதமரின் குற்றச்சாட்டிற்கு அகலிகையால் எந்த பதிலும் கூற முடியாமல் போனது.  இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் கம்பனும் அகலிகை இன்பத்திலிருந்து விடுபட முடியவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.  இது ஒரு நனவிலியான   male  -ன் பார்வை.  ஆணின் பார்வை அவ்வளவுதான்.  இந்த கூற்றிற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  விவாதிக்கலாம்.  சமகால பெண் மீதான பாலியல் வன்முறை பற்றியும் இதன் நீடிப்பாக விவாதிக்கலாம் ..... (தொடரும்)
                                                       ஆதாரம்
1.     Real order - Lacan
2.   ஸதி அகலிகை
-மங்கையர்குல மாணிக்கங்கள்
3.     Lacanian link
4.     Zizek.
குறிப்பு :-
       தேவேந்திரனின் அந்தக் கணம் பற்றி சில வார்த்தைகள்.  அவன் சித்தம் குறியீட்டு ஒழுங்கிற்குள் (symbolic order) அதாவது   Law,  கலாச்சாரம், சமூக ஒழுங்கு இவற்றிற்குள் நுழையவில்லை ;  புறக்கணித்துவிட்டது அவன் சித்தம்.
                “ Desires are themselves as separated from our actual bodily needs ”.
       “இயற்கையிலேயே நமது ஆசையானது உடல் தேவைகளைத் தாண்டியது ; வேறுபட்டது.  அதிகாரம் ( phallus ) என்பது ஆணுறுப்பல்ல என்பது போல.  மிருகங்களின் பாலுமை பூஜ்ய நிலையிலிருந்து   copulation -  க்காகும், மனிதர்களின் பாலுமை பூஜ்ய நிலையிலிருந்து சுயஇன்பம் காண்பதாகும் ;  மனிதர்களின் பாலுறவு நடவடிக்கை நம் புனைவுகள் சார்ந்ததாகும்.  நம்மைப் பற்றியும், பாலுறவில் பங்கேற்பவர் குறித்தும் நம்மின்  idealized images   ஆகும்.  இறுதியாகப் பார்க்கும்போது பாலுறவு நடவடிக்கை சுயமோகமாகும்.

-       லக்கான்.
-ECRIT.




                                                                                                                                                 ~க.செ~
ஓவியம் :
Ahalya & Indra.--Raja Ravi Varma