29 Mar 2019

அடைந்தால் மகாதேவி , அடையாவிட்டால் மரணதேவி

                  [ பொள்ளாச்சி , மீண்டும் இந்த மனிதர்கள் தோன்றாமல் இருக்க ]

        [ சென்ற பகுதியின் தொடர்ச்சி…….]

        கோபம் ஒரு தூண்டல். தூண்டலுக்கு செவி சாய்த்தால் நீ அடிமை [ உன் இச்சை (drive ) உட்பட] இந்த துயர சம்பவத்தில் பெண்ணின் வாக்குமூலம் என்ன ? இவனை முன்ன பின்ன தெரியுமா ? சுயமோக, சைக்கோட் வெறியனின் வாக்குமூலம் இல்லை

       [ பொதுவாக இம்மாதிரியான சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள்,அவர்களின் நெருங்கியவர்களை சுதந்திரமாக பேச அனுமதித்து ( free association ), அதாவது முதலில் அவர்களிடமிருந்து, அவர்களின் பிரச்சினைகள் என்ன?, சுயமோகக் காயங்கள் என்ன, ஏமாற்றமென்ன? என்பதை அறிவது மிக மிக அவசியம் . சைக்கோட்டிக் அமைப்பிலிருந்து வெளிவர, சுயமோக வெறி ஏன் இவ்வளவு தூரம்? அவன் வளர்ப்பென்ன / இந்த அவனின் மன நிலைகுலைவிற்கு (mental imbalance ) காரணமென்ன? எந்தெந்தக் காலக்கட்டங்களில், அவன் சித்தம் எப்படிக் கட்டப்பட்டது? அவனின் முன்மாதிரிகள் (role model  ) யார்? [ சிவப்பு ரோஜா கமலா அல்லது காயத்ரி ரஜனியா?. ] சிவப்பு ரோஜாவில் கதாநாயகன் பெண்டாட்டிகளை கொலை செய்வது வாடிக்கை. மற்றொரு படத்தின் நாயகன் தன் மனைவியை விபச்சாரியாக்கி காசு சம்பாதிப்பான் ]
       பார்க்கும் ரசிகர்களையெல்லாம் இது பாதிக்கும் என்று மன அலசல் கூறாது.
        மாறாக , ஏற்கனவே பலவீனமான மனத்தள்ளாட்டம் ( mental imbalance ), Name of the Father, அதாவது , தந்தை அதிகாரத்திற்கு உட்படாத செல்லக் குழந்தைகள், குடும்ப வக்கிரங்களைப்  பார்த்து அதில் நாட்டம் உள்ளவர்கள் , இன்னபிறர் போன்றவர்களுக்கு மனப்பாதிப்பை (affect ) உண்டாக்கும். அந்தப் பாதிப்பு பிரக்ஞையாக இருக்காது, நனவிலியாக உறைந்திருக்கும். சூழலால் உறைந்திருந்த மனப் பாதிப்பானது (affect ) பிரக்ஞை மொழியில் உருவகம், ஆகுபெயெராக வெளிப்படும். ஆய்வாளர் மட்டுமே அதை அறிய முடியும் ]
       காயடிப்புச் சிக்கல் ( castration complex ) காத்திரமானது. அதற்கு அடிமையானால் அரசன் கூட ஆண்டி மாதிரி நடந்துதான் ஆகவேண்டும். இந்தியர் அனைவரும் அறிந்த ராமகாவியத்தில் குறிப்பாக ராமர் இருமுறை தவறு செய்கிறார் . ( மாய மானைத் தேடி மனைவியைப் பறிகொடுத்ததை சேர்த்தால் தவறு 3 ஆகும் ) முதல்முறையில் தன் வீரத்திற்கு தானே இழுக்கைத் தேடியது ; வாலியை மறைந்திருந்து தாக்கியது. ( இதை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஒருவகையில் ஏற்கவில்லை). இரண்டாவது குற்றம் காயடிப்பு அச்சத்தால் மனைவி சீதா தேவியை தீக்குளிக்கச் சொன்னது..

       இனி, வக்கிரம் ,வக்கிரனின் சித்தக்கட்டமைப்பு:
       முதலில் சமூக அரசியலாகப் பார்த்தால் திடீரென்று ஒருநாள் காலை 1000,500 ரூபய் நோட்டுகள் செல்லாது என்று மக்களிடம் பீதியைக் கிளப்பி,குறிப்பிட்ட நாட்களுக்குள் ரூபாய்களை மாற்றியாக வேண்டும் என்றது. [அலைமோதும் கூட்டத்திற்கு எந்தச் சிறப்பு ஏற்பாடும்,கூடுதல் இடங்களும் ஏற்பாடு பண்ணவில்லை ]. இதில் தந்திரமான ( tricky ), வானளாவிய , வக்கிரமான கருத்தமைவை காட்டினார்கள்.பொழுது புலர்ந்ததும் பல பொருளாதார நிபுணர்களால் அது விமர்சனத்திற்குள்ளானது.
       தமிழக அரசு தேர்தல் நெருங்க நெருங்க கருக்கலில் 2000 ரூபாய், 500 ரூபாய் என்று அதே மக்கள் வரிப்பணத்தை கொடுத்துவிட்டு மார்தட்டும் வக்கிரர்கள் ( pervert ). தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, குறுந்தொழில், சிறு தொழில்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதமாவது ஓடாமல், கதவு அடைத்தும் அடையாமலும் உள்ளன. கிஞ்சித்தும் கவலையற்று எடப்பாடி உலாவுவது வக்கிர மனம் மேலான்மை செலுத்துவதால்.
       வக்கிரனின் சிந்தனை ,செயல்பாடுகள்:
       இவர்களுக்கு தந்தை அதிகாரம் ( Name of the Father ) போதுமான அளவு அச்சுறுத்தலாக இல்லை. ரகசியமாக குடும்ப உறவில் எல்லோருடைய பாத்திரங்களையும்           ( role )எடுப்பார்கள்.
       சட்டத்தை திசை திருப்புவார்கள் (distract ). அதை நியாயப்படுத்தி வக்கிர கருத்தியலை பரப்புவார்கள்.
       வக்கிரர்கள் திருகல், தனக்கேற்ப வளைத்தல், பிறரைத் தூற்றுதல் (twist , bend, abuse)      குணம் கொண்டவர்களாக, அதிகாரம், கேடு விளைவிப்பவர்களாக ( power,corrupt )         இருப்பர். தங்களை தவறாக , சுயமோகத்துடன் வீராப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவர்.
       எல்லாச் சமூக ஒழுங்கிலும் மறைமுகமாக ,வெளிப்படையாக கவிழ்ப்பு ( subvert ) நிலைப்பாடு        எடுப்பர்;
       மறைமுகமாக இனவெறி, சாதி வெறியை தூக்கிப்பிடிப்பர்.
       வக்கிரன் பெண்களை துச்சமாக பயன்படுத்துவான். கேட்டால், அவர்களை மகிழ்ச்சி அடையச்   செய்வது , அந்த மகிழ்ச்சி எனக்குத் திருப்தி என்பான்.
       Pervert does not want to know”. எதை எடுத்தாலும் தன்னை யோக்கியன் என்று நிறுவ பின்னோக்கிச் செல்லும் வழக்கமும்( regression ) உள்ளது.
       வக்கிரி :  படையப்பாவின் நீலாம்பரி: தான் அடைய நினைப்பவனை எப்படியும், எந்த வழியிலும் அடைய முயற்சிப்பது ,இல்லாவிட்டால் ஏகே 47-யை எடுப்பது. தன்னை கற்புடையவளாக விளம்பரப்படுத்துவது.
       சுயமோக வக்கிரனுக்கு, மிகப் பழைய படமான நானே ராஜா சுப்பையா,சிவாஜி நடித்ததை தேடிப்பாருங்கள்.
       தனக்கு, தான் விரும்பும் அடையாளத்தை கொடுக்க மறுக்கும் இந்தியாவை, இந்திய அரசை காட்டிக் கொடுத்து ஜெர்மனுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் வக்கிரனை அந்த நாள் சினிமாவில் பார்க்கலாம்.
       மிக நீண்டுவிட்டது கட்டுரை, வேறு சந்தர்ப்பத்தில் மேற்கொண்டு பார்க்கலாம்.
       குற்றவாளிகளின், இந்த சித்தக் கட்டமைப்பாளர்களின் உளவியல் ஆய்வு தேவை; அத்தோடு அவர்களுக்கு ஆதரவுடன் தோள் கொடுப்பாரும் வேண்டும். சிகிச்சை பற்றி விரிவாக எழுதி போர் அடிக்க விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வரும்.
       இறுதியாக டாக்டர் லெக்கானின் முக்கிய கூற்று:
       உந்தல் (drive ) என்பது வெளிப்படையானதில்லை.
       ஒருவர் திடீரென்று மனத் தள்ளாட்டத்திற்கு (mental imbalance ) உள்ளாகிறார் என்றால் அங்கு தூண்டல் உள்ளது. அதாவது நனவிலி (unconscious )உள்ளது என்று உணரவேண்டும்,
       டாக்டர் லெக்கான் “ உங்கள் நனவிலியை ( unconscious ) அடுத்தவருக்கு மொழியில் தெளிவாகச் சித்தரிக்க ( portray ) முடியாது; மொழியாக்கம்  ( translate) பண்ணிவிட முடியாது” என்கிறார் .
       இறுதியாக,” நமது வாழ்வின் அர்த்தமென்ன ? நாம் தரமான வாழ்வை ( worth living ) வாழுகிறோமா ? கருத்தியலாக (ideology )எப்படி அனுபவப்படுகிறோம் என எண்ணிப்பார்க்கச் சொல்லுகிறது “.
       கூடுதலாக ,துணைக்குபெரியாரை சேர்த்துக் கொண்டால் நாம் சுயமரியாதையான வாழ்வுச் சூழலில் இருக்கிறோமா ?

                          
                                                             
       Other -க்கு ( பெரிய O) ஒரு சின்ன அறிமுகம்  
            மற்றமை ( Other )
      மனிதனின் ஆசை மற்றமையின் ஆசையாக ( desire of the Other ) உள்ளது “ என்கிறார் லக்கான் . அதாவது , Big  O  .
      Other  என்பது.....
      1 . மற்றவர் விரும்புவதை மனிதன் ஆசைப்படுகிறான்.
      2 . மற்றவரின் ஆசையை ஏற்பதற்கு விரும்புகிறான் .
      3 . மற்றவரின் வசம் உள்ளதை தன் வசமாக்கிக் கொள்ள விரும்புகின்றான் .
      4 . மற்றவரின் ஆசைப்படு பொருளாக இருக்க ஆசைப்படுகிறான் .
- Lewis A . krishner
      நனவிலியானது ( unconscious )  மற்றமையின் சொல்லாடலாக இருக்கிறது. பேச்சில் நான் ( I ‘ ) எந்தத் தளத்தில் கட்டமைக்கப்படுகிறதோ அந்தத் தளம் மற்றமையின் தளமாகும்- லக்கான்.
      மற்றமை ( Other )  ஒரு நபரல்ல ;
      அது ஒரு தளம் ;
      அது சொல்லாடல் கட்டமைப்பிற்கு அவசியமான ஒரு தளமாகும் ( a  locus ‘ ) .
     Otherஐ லக்கான் பல அவதாரமாக சித்தரிக்கிறார் ;
      The  Other  as language (  ie , as set of all signifiers )
            The  Other  as demand
            The  Other  as  desire ( object  a )
            The  Other  as   jouissance
                 (  பார்க்க . மற்றமை . இதழ் – 3 )
                இந்த சின்ன (o )  other  என்பது இதரர் , இதர, பிற என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது ; ஒருவரின் விருப்பு, வெறுப்பிற்குரிய ஒருவர் ( இதரர்).
 இந்த அடிப்படையான வேறுபாட்டை சுட்டிக் காட்டவேண்டிய அவசியத்தில்தான் இங்கு இது குறிப்பிடப்படுகிறது .



      
       1 . இது எதில் சேர்த்தி

       ஜெய்ப்பூர் ; மார்ச் 10 ; தின மலர்.
       கள்ள உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது – ஐகோர்ட்.
       3 காலத் தலைப்பு ; உபயம் தின மலர்
       ” ராஜஸ்தானில் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கும் ஒரு ஆண் போலீஸ் அதிகாரிக்கும்       இடையே தகாத உறவு ”.
       இதுபற்றிய புகாரின் அடிப்படையில் , “ இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை     எடுக்கப்பட்டது”.
       இதை எதிர்த்து இருவரும் நீதி மன்றம் சென்றனர்.
       உயர் நீதிபதி சர்மா வழங்கிய தீர்ப்பு :
       தகாத உறவு வைத்துள்ளனர் என்பதற்காக அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான       நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது.
       இவர்களின் கள்ள உறவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்      தொடர்ந்து தீர்வு காணலாம் ( அடிக்கோடு மற்றமை ஆசிரியர்).
       பின் நவீனத்துவ தீர்ப்பு மாதிரி உள்ளது . எளிமையாக எள்ளி நகைக்கக்கூடிய செய்திதான்.
       இம்மாதிரியான கள்ள உறவை அனுமதித்தால் போலீஸ் துறை இனி என்னவாகும்.
       இது எல்லா மாநிலத்திற்கும் ஏற்புடையதான முன்னுதாரன தீர்ப்பு என்றால் ?......விடியும்        பொழுது எப்படி இருக்கும்?
       ( இவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்களா ? செய்தியில் இல்லை )
        பாதிக்கப்பட்டவர்கள் என்றால் என்ன ? ஒவ்வொரு காவலனும் பாதிக்கப்பட்டிருப்பான்.
       குடிமகனும் பாதிக்கப்பட்டிருப்பானே !
       என்ன செய்வது ?
       “ எவரும் கஸ்டப்படுவதை விட அதிகமாகக் கஸ்டப்படக்கூடாது……
       முழுச் சமுதாயமும் அதன் உறுப்பினர்களின் லாப நஷ்டங்களின் பங்காளிதான் “…….
       இது வழக்கமான ஒழுக்கமல்ல. சூஃபிகளின் நெறி ( Ethics ) - சூஃபி கதைகள் ,பூமா வாசுகி


.

      2. வக்கிரத்தின் கருத்தியல் வழிகாட்டி
      நவீனமயமாக்குதல் [ அதாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற
       சுய கௌரவம் ( சுயமோகம்) ]  என்ற பெயரில் தமிழகமெங்கும்             இந்தியாவெங்கும் சுமார் லட்சக்கணக்கான கோடிகளில்,                     8 வழிச்சால  4 வழிச்சாலை  14 வழிச்சாலை என்றும் அதுதான்            நவீன வளர்ச்சி என்றும் வக்கிர கருத்தியலை பரப்புகின்றனர்.
       லட்சக்கணக்கன மரங்களை , சின்னஞ் சிறு செடிகளை ,கொடிகளை        அழித்துவருகிறனர்.
       அடுத்த பத்தாண்டுகளில் இதன் பலன் தெரிய வரும்.
       உண்மையில் இவர்களின் சேவை கார் தொழில்சாலைகளுக்காக,        கான்ட்ராக்டர்களுக்காக, கட்சி நிதிக்காக.
       வாழ்க வளமுடன்.
             

       3. ஒரு அவசரச அறிவிப்பு

                                                               வருங்கால பாரத் 007
        007 என்பது ஹாலிவுட் சினிமா கதாநாயகன். 1970 , 80 - களிலேயே விண்ணில்                    ஏவப்படும் ராக்கெட்டுகளை கடத்திவரும் வில்லனை அழிப்பவராக சீன்கானரி (007)             நடித்தார்.
       இன்று மார்ச், 27- 2019ல் நவீன பாரத்தின் ( வருங்கால ) 007 வெளிப்பட்டுள்ளார் ( நடிகர்          மோடி).
       3 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது
       எந்த எதிரியின் ராக்கெட் சுட்டு வீழ்த்தப்பட்டது ??
       எதிர்கால அச்சுறுத்தலுக்கு கைகொடுக்கும்
       இந்தியாவில் எல்லைத் தகராறு இரண்டுபேரிடம் மட்டுமே.- பாகிஸ்தான் , சீனா.
       இவர்களில் யார் பிரதான எதிரி? சீனாவிடம் கைகட்டி நிற்பது யார் ? யார் ?
       அதாவது ,ப்ரான்ஸ் , இங்கிலாந்து , ஜெர்மனி போன்ற நாடுகளால் முடியாதது மோடி            தலைமையிலான இந்தியாவில் நடந்திருக்கிறது . அப்படித்தானே !.
       போர் விமானங்களும் , ராணுவ டாங்குகளும் ஐரோப்பாவிடமிருந்து சொன்ன விலை கொடுத்து வாங்கும் இந்தியா, இன்று உலகின் நான்காவது ( வல்லரசு ) தினவெடுத்த நாடாம்.
       பாவம் இந்தியர்கள்
       அண்டை, அயலார்களோடு சுமுகமாக வாழ்வதற்கு பிறருடன் நட்பு , ஒருவரையொருவர்    மதித்தல் , போன்றவையே தேவை ; போர் தளவாடங்களையும் ராக்கெட்டுகளையும்     குவிப்பதால் பகையுணர்வே புகையும்.
        இந்த நவீன 007-னின் தோற்றத்தை வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று குறுக்கிவிடக்கூடாது           
                பாஜக-வின் அகண்ட பாரத கனவிற்கான அச்சாரமாக இதைக் கொள்ளவேண்டும்.

      மீண்டும் மோடி வந்தால் பாகிஸ்தான் என்ற நாடு இராது என்ற சொல்லாடல்கள்      அரசியல் வெளியில் உலவ ஆரம்பித்துவிட்டது.
      இது வக்கிரத்தின், அகண்ட பாரத் கருத்தியலின் ஒரு பாகம் ( part ) ஆகும்.
                                                                              க.செ

25 Mar 2019

அடைந்தால் மகாதேவி , அடையாவிட்டால் மரணதேவி


[ பொள்ளாச்சி , மீண்டும் இந்த மனிதர்கள் தோன்றாமல் இருக்க ]
     கொங்கு நாட்டின் முக்கிய சந்தை நகரில் நடந்த பெண்கள் மீதான பாலியல் வன்முறை படமாக எடுக்கப்பட்டுள்ளது. பெண்களை நிரந்தர அடிமை ஆக்குவது, அவைகளை ரகசியமாக  விற்பனைப் பொருளாக்குவது 5அல்லது 6ஆண்டுகளாக வெற்றிகரமாக (ஆளும் கட்சி உட்பட ) நடந்தேறியிருக்கிறது. வக்கிரம் ( perversion ) பாலியல் வக்கிரம் இது. தண்டனை இபிகோவின் சட்டப்படிதான் நடக்கும். சட்டம் கடந்த காலத்தில் இயற்றப்பட்டது.
       ஒருவேளை இஸ்லாமிய , அரேபிய நாடுகளைப்போல் மரண தண்டனை ,பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு போன்ற அச்சுறுத்தல் தண்டனைகள் பாலியல் வக்கிரத்தை குறைக்க உதவக்கூடும். பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்கள் இதை எதிர்க்கக்கூடும். காலம் பதில் சொல்லும் .
       உலகெங்கும் , இந்தியாவெங்கும் பாலியல் வக்கிரம் நடைபெறுவது ஏன்?
        இது கேட்கப்படவேண்டிய கேள்வியா , இல்லையா? நம்முள் பதில் இருக்கிறதா?
       ஊடகங்கள் , அரசியல் எல்லாம் தண்டனை பற்றி விலாவாரியாகப் பேசுகின்றன.
        பாலியல் என்பது இச்சையின் (desire) ஒரு அம்சம் என்கிறது மன அலசல்.
       இச்சை என்பது மனித, இனங்களின் உள்ளார்ந்தது. பொதுவாக தூண்டல் ( drive )               (அகத்தூண்டல்,புறத்தூண்டல் ) என்பது புறத்தூண்டல், சமூகம் சார்ந்தது.
சினிமா , டிவி, நகை விளம்பரத்தை சற்று கூர்ந்து பாருங்கள்.ஆடை விளம்பரங்கள், செல்பி விளம்பரங்கள் அமெரிக்க நாகரீகத்தை வளர்ச்சி என்றும் , அது ஒன்றுதான் மோட்சத்திற்கான பாதை என்றும் வக்கிரத்தின் கருத்தியல் வழிகாட்டுதலாக உள்ளது.
        பாலியல் கவர்ச்சி , பாலியல் வக்கிரம் தனித்துவமாக இயங்கவில்லை. தரகு முதலாளிய அதிகாரம் தனக்கானது என்று மதம், சாதி மேட்டிமை கைப்பற்றி வைத்துள்ளது. தூண்டல் மேலே சுட்டிக்காட்டியதிலிருந்துதான் தூண்டப்படுகிறது. இதற்கு அமெரிக்க நாகரீகமென்ற படையெடுப்பு காரணமே.
       இப்படி உண்மையை புரிந்தால் ஊடகம், சினிமா, விளம்பரம், வக்கிர நாகரீகம், பெண்களின் வசீகரம் (seduce) பண்ணுகிற மாதிரியான உடை, உடல் மொழி ( body language ) உட்பட அனைத்தையும் காத்திரமான விமர்சன ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி வரும்.
       இப்படிச் சொன்னால் எல்லா ஆண்களுமா இப்படி இருக்கிறார்கள்?என்றும் சிறுமிகளும் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்களே என்ற கேள்வி எழும்.
       சிறுமிகளுக்கு பிற ஆண்கள் எங்கெங்கெல்லாம் தொடலாம், தொட அனுமதிக்கக் கூடாது என்று சில பள்ளிகளில் ( பெண் பள்ளிகளில்) சொல்லித்தருகிறார்கள். அதன்படி புரிந்து வளராத பெண்களுக்கு பெற்றோர் ,உறவினர், நலம் விரும்பிகள்தான் சொல்லித்தரவேண்டும்.        அஜாக்கிரதையான அந்தப் பெண்குழந்தை அகங்காரம்,பிடிவாதம் இல்லாமல் வளர்ந்திருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக அதைப் புரிந்துகொள்ளும்.இல்லாவிட்டால் விவகாரம்தான், எத்தனை ஆண்டுகளானாலும்.
       குழந்தை வளர்ப்பில், தாய், குழந்தை உறவில் [ இருவர் உறவில் ( dyadic relation ) ] கவனிக்கவும், சில மாதங்களாவது பிரதான உறவில் தாய் மிகப்பெரிய பங்காற்றுகிறாள்.
       அப்போது தந்தைக்காக குழந்தை அழுவதில்லை.பசி,கதகதப்பு,நீர் நைப்பால் எரிச்சலுற்று அழுது அம்மாவின் முகம் தேடும்.
       இச்சை (Desire ):
         இந்த உறவில் குழந்தை முதல் ஆசைப்பொருளாகிறாள் (other ). ’ M ‘   ஆசையின் பிறப்பிடம் இந்தக் கட்டமே. அதாவது, ஆசைப்படுபொருளை (other ) தேடும், நாடும் இச்சை ( desire ) [ other (சின்ன o) பிற, இதரர் ].மன அலசலில் other என்பதின் பொருள் அவரவர் ஆசைப்படும் நபர், நெருக்கமான ஒருவர் , வஸ்து, பிறர் , இன்னபிறவாகும்.
Other முற்றிலும் வேறான அர்த்தமாகும்  (பார்க்க மற்றமை ஆய்விதல் 2; ஆய்விதழ்கள் ).
       பிறப்பு காலக்கட்டம் முதல் இறுதி காலம் வரை இச்சை (Desire )        தொடர்கிறது.
       இரண்டாம் கட்டத்தில் தந்தையின் அதிகாரம், செல்வாக்கு,
 குழந்தைக்கு மொழிமூலம்  செய்யக்கூடியது, செய்யக்கூடாதது (dos and donts ) அறிமுகமாகிறது;  இதைத் தொடலாம்,அதைத் தொடக்கூடாது, இன்னபிற.
          தந்தையின் இச்செயல்களால் குழந்தைக்கு காயடிப்பு அச்சம் (castration fear,  complex ) ஏற்பட்டு கடைசிவரை நீடிக்கிறது. நண்பர்களிடம், ஆசிரியர்களிடம், காவல் துறையினரிடம், சினிமா, டிவி அனைத்திலும் தன் ஆழ்மன ஆசை உணர்ச்சியை கேள்விக்குட்படுத்தும் சினிமாப்பாட்டு, வார்த்தைகள் உட்பட காயடிப்பு அச்சத்தை ஏற்படுத்தும். இந்தச் சிக்கலின் பாதிப்பு குறிப்பான்களாக (signifier ) சித்தத்தில் பதிவாகிறது.
       மன அலசலின் பிதாமகன் பிராய்டு காயடிப்பை ஆண்குறி நீக்கப்பட்டுவிடுமோ என்ற குழந்தை அச்சம் என்று வெளிப்படுத்தினார்.அது உடலியல் போக்கு என்பதால் டாக்டர் லெக்கான் அதை நீக்கிவிட்டு மேலே குறிப்பிட்ட காயடிப்பச் சிக்கலை ( castration complex ) மீள்வாசிப்பிற்குள்ளாக்கினார்.
       இந்தக் காயடிப்புச் சிக்கலை ,ஆண்குறி நீக்கப்பட்டுவிடுமோ என்ற குழந்தை அச்சம் (பிராய்டு)என்று தமிழகத்தில்,ஆதிகாலத்தில் பரவியது; அது சாசுவதமாக்கிவிட்டது பெரியோரால்.
1970 களிலேயே டாக்டர் லெக்கானின் மன அலசல் ப்ராய்டின் கோட்பாட்டை வளர்த்தெடுத்தது.
 [ டாக்டர் லெக்கான் சாகும்வரை தன்னை,தான் ஒரு ப்ராட்டியன் என்றே கூறிவந்தார்.நான் செய்ததெல்லாம் ப்ராய்டின் கருத்தமைவை வளர்த்தெடுத்ததுதான் என்றே சொல்லி வந்திருக்கிறார் ]
       தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்த ( வைணவ ) பேராசிரியர் உட்பட அனைவரும் ப்ராய்டின் ஆரம்ப கட்டத்தையே தொங்கினர் அது இன்றும் புது ஜீவிகளால் ஜிவிக்கிறது.
       இச்சை ( desire ) என்பது பொருள்மீது கொள்ளும் ஆசையல்ல ( இது,அது ). மாறாக, இல்லாமை உணர்வு (lack) வலிமையாகும்போது ஏற்படும் இச்சை. பொருள் விருப்பத்திற்கு Wish , Want போன்ற பதங்கள் பயன்படுத்தப்படும்.
       பால் கவர்ச்சி ( sexuality  ): சிலரின் குரல் ஓசைகூட சிலருக்கு மட்டும் ஆசைப்படு பொருளாகிவிடும் ( object). குரலின் ஓசை பற்றி பேசும்போது பாடகி ஜானகியின் ” இஞ்சி இடுப்பழகா “ சில நடிகர்களையே பாதித்தது ( பாவம் அவர்களுக்கு அது தெரியாது).1960களில் கன்னடத்துப் பைங்கிளியின் கொச்சையான ( கொஞ்சும் !) தமிழ் உச்சரிப்பு ஏகமாய் வரவேற்பு பெற்றது. சில பெண்களின் கண் அழகு கூட கவர்ச்சி பரப்பலாம். ஏன் சிலபேர்களின் பேச்சு கூட பால் தன்மையைக் கொடுக்கலாம்.    
       ஆகவே,சினிமா,நடிகர்களின் பால்தன்மை (sexuality) பற்றிய மேதமைப் பேச்சுக்களை சற்று ஒதுக்கிவிடவும்.
       இரண்டு முக்கிய காரணிகள்.
       சற்று விரிவாகப் போவதற்கான காரணம்,லெக்கானின் மன அலசல்படி இச்சை ( desire ) என்பதில் காமமும் அடங்கும். மற்றொன்று காயடிப்பு அச்சம் (சிக்கல்) (castration complex ). மேற்கூறிய இந்த இரண்டும், கருத்தாக்கங்களும் ( concepts ) எவ்வளவு தூரம் பிடிபடுகிறதோ,உணர முடிகிறதோ அந்த அளவிற்கு தனிமனித சித்தக் கட்டமைப்பு , சமூக உளவியல், இலக்கிய உளவியல் போன்றவற்றை புரிய ,உணர ஏதுவாகும்.
       இச்சை பற்றிய புரிதல் ,இல்லாமை உணர்வு, ஏக்கம் தனிமனிதனிடம்    செல்வாக்கு செலுத்தும் (அக முரண்பாடு ). அதேபோல் புறத்தூண்டல், குரல் இனிமை,பேச்சு கூட காமத்திற்கு தீனிப் பொருள்தான் என்பதை இனி எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
       தூண்டல் ( drive ):
       தூண்டல் என்பது தொடு உணர்வால் மட்டும் நடப்பதில்லை. தொட்டு உணரமுடியாத இரண்டு பரிமாணம்,முப்பரிமாண விளைவால் ( 3d effect )காட்சியளிக்கும் சினிமா ( இது நிழல் மட்டுமே ) என்ற பௌதீகப்பொருள் தூண்டல் உணர்ச்சிக்கு வித்திட முடியும்.
       நடிகை பிரியாவாரியரின் கண்ணடிப்பு  காட்சியில் இடம்பெறும் அப்பெண்ணின் ஆசைப்படு பொருளான ( object ) பையனின் கண் விபச்சாரத்திற்கு துணைபோவதை கூர்ந்து பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம்.
       ஆக, காம உந்தலின் பல பரிமாணங்களை சுருக்கமாகப் பார்த்தோம். இக்கட்டுரையின் அடித்தளத்தை இத்துடன் முடிப்போம்.
       சைக்கோட்டிக் ( psychotic ) என்பது மன அலசலின் முக்கிய சித்தக்கட்டமைப்பில் ஒன்று. பைத்திய நிலை, சித்தக் கோளாறு. இப்போதைக்கு இது போதும்.[ நீதிபதி கண் எதிரே மனைவியை கத்தியால் குத்திய கணவர். உபயம் : தினத் தந்தி 20-3-2019]
       19-3-2019ல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதி மன்றத்தில் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. கொலை முயற்சி செய்தவர் மாஜி கணவர். ஜீவனாம்சம் கேட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கின் வாய்தாவிற்கு வந்தபோதுதான் இந்தக் கொலை முயற்சி.
       இந்தச் சம்பவத்தின் பௌதீகச் சூழல்:  நீதிபதி அறை , நீதிபதி, வழக்குறைஞர்கள் முன்னிலையில்,  போலீஸ் கட்டுப்பாடு, கண்காணிப்புப் பிரதேசம் அது. அந்தப் பிரதேசத்தில், மாஜிக் கணவனின் கொலை முயற்சியின் போது,   சற்றுமுன் சித்தம் என்னவாக இருந்திருக்க வாய்ப்பு. கண்டிப்பாக நானுணர்வு (ego ) என்பது உந்தலால் (drive) , பழிவாங்கும் தன்னகங்காரத்தால் நானுணர்வு முன்னமேயே மூடப்பட்டிருக்கும் / ஏற்கனவே தடுக்கப்பட்டிருக்கும்
( foreclosed).( இந்த நானுணர்வுதான் முக்கிய தற்காப்பு சாதனம்.)
       அது ( ego ) மூடப்பட்டுவிட்டதால் தந்தை அதிகாரம் (Name of the Father ) - அதாவது கலாச்சார ஒழுங்கு, போலீஸ், அதிகாரம், தண்டனை, தூக்கு, சாவு, இவை எதுவுமே எண்ணத்தில் ஏற்படாது. இது நானுணர்வு அற்ற நிலை அல்லது பைத்திய நிலை மாதிரி. அதாவது,சைக்கோட்டிக் நிலை.
       மற்றொன்று மகாதேவி? ஒருதலைக் காதல் கொலை, திராவக வீச்சு , இன்னபிற. இந்த சினிமாக் காதலனுக்கு தான் காதலித்துவிட்டால் அப்பெண் அவனின் ஆசைப்படுபொருள் ( object ) என்பது அவன் எண்ணம். அப்பெண் ஏதோ சொந்தக் கரணங்களுக்காக அவன் காதலை ஏற்க முடியாமல் போய்விட்டால் - தான் பணக்காரி,அவன் சராசரியான மனிதன் என்பதற்காகக் கூட அவனை ஏற்க மறுக்க அவளுக்கு எல்லாவித உரிமையும் உண்டுதானே- ,
        இப்போது அவன் தனக்குள்ளேயே ( மனம் ) இஸ்டத்திற்கு கதை வசனம் எழுதிக் கொள்கிறான். அவனுடைய சுயமோகக் கோபத்தால் அதீதமாக சிந்திக்கும் திறனை இழக்கிறான். விளைவு ? சென்ற ஆண்டில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல. அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி ( நடிகர் வீரப்பா ).இங்கோ பெண்.ரயில் நிலையத்தில்,நூற்றுக் கணக்கானவர்கள் மத்தியில் கொலை அரங்கேறுகிறது.அவனும் சுயமோக மரணதேவிக்கு மாலையிட்டு விட்டான் என்றனர் காவலர்
       கோபம் ஒரு தூண்டல். தூண்டலுக்கு செவி சாய்த்தால் நீ அடிமை [ உன் இச்சை (drive ) உட்பட] இந்த துயர சம்பவத்தில் பெண்ணின் வாக்குமூலம் என்ன ? இவனை முன்ன பின்ன தெரியுமா ? சுயமோக, சைக்கோட் வெறியனின் வாக்குமூலம் இல்லை………….( தொடரும் )
                                                                                                                                                  க.செ