27 Apr 2017

ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை ..!!

 “  ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையானது நாட்டில் நிலவுகிற லஞ்ச ஊழல் , கறுப்புப் பணத்தை ஒழிக்கும் “ .
இது மோடியின் குரல் .
சென்ற வாரம் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்திற்காக பணப் பரிவர்த்தனை செய்தது கோடிகளில் . இப்பரிவர்த்தனை ரொக்கத்திலா அல்லது ரொக்கமில்லா பணத்திலா  (electronic transactions )?
இவர்களின் அதிகாரம் வானளாவி இருக்கிறதா ? இல்லையா? அவர்களுக்கு எது வசதியோ அதுதான் பரிவர்த்தனையாகும்.
சேகர் ரெட்டி கோடிகளில் புதிய 2000 நோட்டுகள் வங்கியிலிருந்து பெற்றது பரிவர்த்தனைக்கா அல்லது பதுக்கவா ?
க.செ


19 Apr 2017

முஸ்லீம் சகோதரிகள் மீது பிரதமரின் கருணை..!?

[ “ MUSLIM  SISTERS SHOULD GET JUSTICE ” …. ]

          ககட்டுரையை எழுதத் தூண்டியவர் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
      விதுரர் கூறியது :
      குற்றம் நடைபெறும்போது , அதைப் பார்த்துக்கொண்டு , அமைதியாக இருப்பவர்களும் அந்தக் குற்றத்தைப் புரிந்ததற்குச் சமமே . அதைப்போன்ற நிகழ்வுதான் இதுவும் என்பார்  விதுரர் “.   
- தி இந்து.18-4-2017
       இவர் நெஞ்சைத் தொட்டது யார் ? 
       பதிலை நரேந்திர மோடி ,பிரதமர் சொல்கிறார்
             “ MUSLIM  SISTERS SHOULD GET JUSTICE
            “ not questioning the validity of triple  talaq….but want to end exploitation
-The Hindu 17-4-2017
அதாவது , “  இஸ்லாமியர்களின் முத்தலாக் முறைக்கு முடிவு கட்டுவது அவசியம் என்கிறார்.                                            
 மோடியின் முஸ்லீம் சகோதரிகள்  ‘அதிர்ஷ்டசாலிகள்என்று கூடச் சொல்லலாம் . ஏனெனில் , இந்து என்று சொல்லிக்கொண்டு , ஊரிலிருந்து தள்ளிவைக்கப்பட்டு வாழும் தலித் சகோதரர்களுக்கு இன்னும் இந்த வாய்ப்பை  யோகியும் கொடுக்கவில்லை ; நரேந்திர மோடியும் கொடுக்கவில்லை.
ஏன் , இவர்களின் “ஆதி“  மனு நீதியும் தலித்துகளுக்கு நீதி வழங்கவில்லையே ? அதனால்தான் முஸ்லீம் சகோதரிகள் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறத் தோன்றியது.
யோகி , மோடியின் கரிசனம் எங்கிருந்து வருகிறது ?
வள்ளலார் கூறினாரே “ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் “ என்று , அப்படிப்பட்ட அன்பா இது ?
பா.ஜ.க ; ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பிற்கு தொடக்கத்திலிருந்தே முஸ்லீம் மதத்தின் மீது தீராக் கோபம் / வெறி. இந்த நோய்க்குறி அப்பட்டமாக வெளிப்பட்டது பாபர் மஸ்ஜித் இடிப்பில் ; குஜராத் கலவரத்தில் முஸ்லீம் உடல்கள் சிதைக்கப்பட்டன ; தீ வைப்பும்தான்.
இப்படிப்பட்ட மனம் உண்மையில் முஸ்லீம் பெண்களுக்காக நிற்குமா ?
தன் வீட்டில் தலித்துகளை புழக்கடையில் வாழ விட்டுவிட்டவர்கள் இவர்கள் . இவர்களிடமிருந்தா “ நீதி “ கிடைக்கும் .
‘ முத்தலாக்’-ன் கொடுமையை முதலில் சொல்லாடலாக நாடு முழுவதும் பரப்புரை செய்வதன் மூலம் முஸ்லீம் மனத்தை அவமானத்திற்கு உள்ளாக்குகிறார்கள் ( humiliation ). அவமானத்தில் கூனிக் குறுகி குனியவைக்க நினைக்கிறார்கள் .
முஸ்லீம்களை , மாட்டுக்கறி , முத்தலாக் போன்றவற்றை ஊதிப் பெருக்குவதின் மூலம் இவர்களை ஆட்டிப்படைக்கும் ஊன்றிய கருத்து வெறியால் ( Obsession ) இவர்கள் இயக்கப்படுகிறார்கள்.
மன அலசல் படி இதனை Obsessional Neurosis  எனலாம் . இதன் மூலம் அடையும் மனப் பதட்டத்தால் , இஸ்லாத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைக்க இந்தப் பிரச்சினையை பயன்படுத்துகின்றனர் எனலாம் .
முத்தலாக்கில் அக்கறை காட்டும் விதுர நீதி ; கவுரவக் கொலைகள் நாடு முழுவதும் பரவிக் கொண்டேதானே இருக்கிறது . இதற்கு விதுர நீதி , யோகி ஆதித்யநாத் நீதி மவுனம் காக்கிறதே ! மாட்டைக் காப்பது சரி ; அத்துடன் கவுரவக் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்படும் திருமணமான பெண்களைக் காப்பாற்ற விதுர நீதி செல்லாதா ? கொலைக் களத்தின் பலி ஆடுகள் உங்கள் இந்து சகோதரிகள்தானே !?
மன அலசலில் இருக்கும் FANTASY பற்றிய கருத்து இங்கு முக்கியமாகிவிடுகிறது.
ஏனெனில் , பா.ஜ.க . எப்போதுமே இந்து மதம் பற்றிய புனைவுருவை ( fantasy )  தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் குணாம்சம் கொண்டது.
விநாயகனுக்கு யானைத் தலை “. இதுபற்றி மோடி கூறுகையில் ,பாரதத்தில் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை முறை இருந்திருக்கிறது என்று சொன்னவர் . இவர்களின் புனைவிற்கு அளவே இல்லை.
புனைவு பற்றி மன அலசல் கூறுவது ;
புனைவு  இயல்நிலை கடந்தது , பேரின்பமளிக்கக் கூடியது , இணக்கமானது ( beatific , blissful , harmonious ) என்ற ஒரு கருத்தும் உண்டு.
ஆனால் , இந்த நாணயத்திற்கு மற்றொரு பக்கமும் உண்டு . அதன் பிரதான வடிவம் காழ்ப்பு / பொறாமையாகும் ( jealous ) .நீங்கள் காழ்ப்பு / பொறாமையால் ( jealous )  பீடிக்கப் பட்டிருக்கும்போது , மற்றவர்கள் என்னை எப்படி ( மோசமாக ) நடத்துகிறார்கள் ; மற்றவர்கள் எப்படியெல்லாம் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பது குறித்தே கவனம் செலுத்திக் கொண்டிருப்பீர்கள் என்கிறார் சிசாக்.
சர்வாதிகார , ஒரு கட்சி ஆட்சிமுறைக் கருத்தியல்கள் ( totalitarian ideologies ) ; ஒரு கட்சி ஆதிக்கமுடைய , எதிர்க் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்கு உரியதாக உள்ள கருத்துகள் , கருத்தியல் நடத்தைகளுக்கு , அவர்கள் சார்ந்த அனைத்துப் புனவுருக்களும் ( மதம் உட்பட) தெய்வீகமானது , பேரின்பம் அளிக்கக் கூடியது ; மற்ற புனைவுரு கீழ்த்தரமானது என்ற இரு கருத்துகளும் உண்டு . அதுவும் மற்றொன்று அனைத்தும் கீழ்த்தரமானது என்ற கருத்தும் உண்டு .
இதன்படி பா.ஜ.க-வினர் இஸ்லாமியரை , இஸ்லாமியத்தை , அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்துவதும் , சிறுமைப்படுத்துவதும் இவர்களின் சர்வாதிகார கருத்தியலிலிருந்தே ( totalitarian ideologies )  வருகிறது . இதிலிருந்தே அவர்களுடைய அரசியல் கருத்துகளும் , கருணைப் பார்வையும் கூட உருவாகிறது .
முத்தலாக் பற்றி வேறுபட்ட , ஆணாதிக்க கருத்துக்கு மாறுபட்ட பார்வையும் எண்ணப்போக்கும் உண்டு. உதாரணத்திற்கு , All  India Muslim personal  law board warned on Sunday ,
…. Whoever gives triple talaq without valid Shariyat reasons will be boycotted by the society …so that  such  cases does not  arise  in  future ”                                  – The Hindu 17-4-2017
[ ஷரியத் சட்ட விதிகளுக்கு மாறுபட்டு முத்தலாக்கைப் பிரயோகிக்கும் எவராக இருப்பினும் , அவர்கள் முஸ்லீம் சமூகத்தால் விலக்கிவைக்கப்படுவார்கள் என்று அகில இந்திய  முஸ்லீம் தனிமனித உரிமை சட்ட வாரியம் எச்சரிக்கிறது . ....இதன் மூலம் இவ்வகையான சம்பவங்கள் எதிர்காலத்தில் எழாது என்கிறது ]
முத்தலாக்கை ஆணாதிக்க வாதம் ஏதோவொரு வகையில் நீடிக்க வைக்கத்தான் முயற்சிக்கும். பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்க்கின்ற போக்கு இருக்கும் வரையிலும் , பெண்களை ஒரு தன்னிலையாக ( subject ) , ஒரு உயிரியாக ( being ) பார்ப்பதற்கு இடம் கொடுக்காது ஆண் ஆணவம்.
சர்வாதிகாரமும் , ஒரு கட்சி ஆட்சி முறைமையும் ( totalitarianism ) ஆணாதிக்க மையவாதத்தின் பிடியில் இருப்பதுதான் . ஆகவே , முஸ்லீம் சகோதரிகளின் விடுதலைக்கான ஆட்டமல்ல இவர்களின் ஆட்டம் . பொது சிவில் சட்டம் என்னும் அடக்குமுறைக்கான ஒரு தப்படி எடுத்து வைக்கிறார்கள் என்று வேண்டுமானால்  இதைப் புரிந்து கொள்ளலாம் .
க.செ

Ref :  Interrogating The RealSlavoj  Zizek

9 Apr 2017

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்......?

இம்மக்களின் ஆசைக்கான காரணப் பொருளான ( object petit a )
ஜெ .யின் கருத்தியல்  மாயையின் பங்கு என்னவாக இருக்கும்.
மாயாவாதத்திலிருந்து விடுபடுமா அல்லது......?
( இக்கட்டுரை தேர்தல் வெற்றி யாருக்கு என்பதை நோக்கமாகக் கொண்டதல்ல) .

மரியாதைக்குரிய ஸ்ரீ நரேந்திர மோடி , இந்தியப் பிரதமரின் National e- governance plan படி ( மக்கள் அனைவரையும் டிஜிட்டல் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவது ) செயல்பாட்டிற்கு நிர்வாகத்துறை முடுக்கி விடப்பட்டிருக்கிறது .
ஆனால் , ஸ்ரீ நரேந்திர மோடியின் ப்ரிய மக்களோ , “ கிரிமினல் குற்றவாளி “ என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட கிரிமினலை ;
அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி
அதிமுக அம்மா கட்சி
அதிமுக ஜெயா  தீபா பேரவை
என்று  இப்படி கிரிமினல் பெயரில் குழுக்கள் தோன்றுவானேன் ?
எல்லாம் மக்களின் பேராதரவை ( ஓட்டு ) பெறத்தான் என்பது புரிகிறது.
இதில் அண்ணா , எம்ஜிஆர் இடம் பெறுவானேன் ?
நாங்கள் புதியவர்கள் அல்ல ; பூர்வீகர்கள் ; அதாவது அண்ணாவின் வழித் தோன்றல்கள் . ஆகவே , எம்ஜிஆர் , ஜெ. உட்பட எங்கள் தலைவர்கள்.
ஆக , இன்றைய அதிமுக என்பது ஜெ. காலத்தில் இருந்தது அல்ல ; மாறாக , இது அண்ணா , எம்ஜிஆர் , ஜெ.வின் வழித் தோன்றல்களின் அதிமுக.
சட்டப்படி அதிமுக என்ற சொல்லை , இரட்டை இலையை யாரும் பயன்படுத்தக் கூடாது . இது சட்டம்.
எல்லாம் மக்களின் மாயத்தைப் பொருத்தது . மக்களோ , மன அலசல் படி REAL –ஆக இருக்கிறார்கள் .
ஜெ.வைப் பொருத்து , அவர்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு ; இதுதான் அது என்று சொல்ல முடியாத அளவிற்கு ; கற்பனைக்கு அப்பாற்பட்டதாக ; மெய்யற்றதாக ; ஆனால் , மக்களால் உள்ளார்ந்து உணரமட்டும் முடிந்ததாக இருக்கிறது .
ஒருவாறாக, தத்துவார்த்தமாக சொல்ல வேண்டுமானால் MYSTICISM  மாதிரி உள்ளது . இதனால்தான் லக்கானின் வகைமாதியான REAL எனப்பட்டது.
இதற்கு வழமையான அர்த்தம் கிடையாது ; அது வார்த்தைகளுக்கு ( மொழிக்கு ) அப்பாற்பட்டது ; அதனளவில் அதனை உணர முடியும் ; அவ்வளவே.
மக்களின் இந்த மாயா ஜாலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதற்குப் பதிலாக ,
பால்குடம் எடுத்து , தீச்சட்டி , காவடி, கரகாட்டத்துடன் சாமி கும்பிட்டு, ஜெ.வைக் காப்பாற்ற மண்சோறெல்லாம் உண்டனர்.
இப்போது ஜெ. மறைந்துவிட்டார். மக்களின் REAL –ன் நிலைப்பாடு தொடருமா ? தொடருமானால் எந்த வழியில் ?
ஜெ.வின் மகா வாக்கியமான ,
“  நான் அனாதை , எனக்கு நீங்கள்தான் உறவு ; உங்களுக்கு நான் “
அந்த மாய உறவிலிருந்து மக்கள் விடுபட்டுவிட்டார்களா என்ன?
இந்த விளையாட்டில் டிஜிட்டல் ஸ்ரீ மோடியின் ஆட்டம் வெளிப்படையாக இல்லை ; மாய விளையாட்டாகத்தான் உள்ளது .
மக்களை REAL நிலைப்பாட்டிலிருந்து எப்படி விடுவிப்பார் மோடி ? அல்லது , அது ஒருபுறம் எதற்கும் இருக்கட்டும் ; புறவயமான டிஜிட்டலுக்கு மக்கள் மாறினால் போதும் என்பாரா ?
மீண்டும் மாயாவாத சொற்றொடரையும் அதன் அரூப விளையாட்டையும் பார்க்கலாம்.

“  நான் ஒரு அனாதை ; எனக்கு உறவினர் யாரும் கிடையாது “
இது ஒரு கருத்தியல்  (Ideology ) . இக்கருத்தியலில் தனிச் சிறப்பானது எது ?
 ( மேற்கூறிய வார்த்தை குறிப்பீடல்ல ; குறிப்பான் . பல பொருள்கள் அதனுள் மறைந்திருக்கிறது ).
எனெக்கென்று யாரும் கிடையாது ( உறவினர் ) ; நீங்கள்தான் என் உறவினர் ; நீங்கள் எனக்கும் ; நான் உங்களுக்கும் உறவு என்று மக்களின் அகவய நிலைப்பாட்டுடன் ஜெ. தன் கருத்தியலை தொடர்புபடுத்துகிறார் எனலாம்.
இன்றைய அரை நிலப்பிரபுத்துவ ( சாதியம் ) கலாச்சாரத்தின்படி கள்ளச் சாராயம் காய்ச்சுபவர் அவர்தம் சாதியுடன் நெருக்கமாக இருந்தால் , அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால் , அதை எதிர்த்து ஊரே ( சாதி ) திரளும் என்பது எதார்த்தம்.
கிராமத்தில் பெரிய சாதிக்காரர் கிராமத்துத் தண்ணீரை நகர்புறத்திற்காக  தண்ணீர் லாரிகளுக்கு விற்றால் யாரும் கேட்கத் துணியமாட்டார்கள். உள்ளூர் தண்ணீர் நிலத்தில் கொட்டப்பட்டால் அது மீண்டும் கிணற்று நீராக , ஊற்று நீராக வாய்ப்புள்ளது. ஆனால் , கிராமத்துடன் சம்பந்தப்படாமல், முற்றிலும் கிராமத்தை விட்டு , தண்ணீர் பண்டப்பொருளாக வெளியேறினால் காலக்கிரமத்தில் ஊற்று வற்றிவிடும் . ஆழ்குழாய் தண்ணீரும் விதி விலக்கின்றி நீர் வற்றிவிடும். இது அந்தச் சாதியினருக்கும் தெரியும். தெரிந்தாலும் தண்ணீர் விற்பதை எதிர்க்க மாட்டார்கள் ; தட்டிக் கேட்கமாட்டார்கள்.
தண்ணீர் விற்கப்பட்டாலும் சாதி , மாமன் , மச்சான் உறவு வேறு ; உறவு கெட்டுவிடும்; சாதிக் கட்டுமானம் உடைந்துவிடும்  ( என்பது அவர்களின் உளவியல் ). ஆகையால் உறவு என்றால் உறவுதான் . நீ எது செய்தாலும் உறவுதான் . நீ ஜெயிலுக்குப் போனால் நாங்கள் பால் குடம் எடுத்து , ரோட்டில் உட்கார்ந்து மண்சோறு சாப்பிட்டு உன் விடுதலைக்காக போராட்டம் நடத்துவோம்.
மக்களின் இந்தத் தாராளவாத எண்ணப்போக்கே ;  “ எனக்கு நீங்கள் , உங்களுக்கு நான் என்ற கருத்தியல் , மக்களிடையே பற்றுறுதியைக் கட்டுகிறது . இந்த உறவு , பற்றுறுதிதான் 100-க்கணக்கான கோடிகளின் மோசடியை கேள்வி கேட்காமல் ; தண்டனை வழங்கியதை குற்றம் என்று ஆர்ப்பாட்டம் செய்தது .
ஏன் ஜெ.வுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் தேவைப்பட்டது ? யாருக்காக ? என்ற கேள்வி மக்களுக்கு எழவேண்டும் . ஆனால் எழவில்லை.
கேள்விகள் எழாது ; எழுந்தாலும் அது மலட்டுத் தனத்திற்கே இட்டுச் செல்லும். எதிர்க் கட்சிகள் சொல்லுகிற மாதிரி பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார் ஜெ. என்பது ஓரளவு உண்மையாக இருக்கக்கூடும் .
ஆனால் , ஜெ. , இரட்டை இலை , எம்ஜிஆர் போன்றவைகள் மாயாவாதம் ; கருத்தியல் ( Ideology ) . இந்த மாயையால் கட்டுண்டவர்கள் இதிலிருந்து விடுபடுவது சிரமம் ; ‘ டாஸ்மார்க் ‘ சரக்கை விட இது காத்திரமானது .
கருத்தியல் மாயை பற்றி SLAVOJ  ZIZEK  ( சிசாக் ) கூறுவது கவனிக்கத்தக்கது .
“ கருத்தியல் ( ideology ) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு கருவியாகும் ( instrumental reason  ) ; கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் ( attitude ) ; சமூக மேலாண்மையில் (social domination ) அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே ( very foundation ) உள்ளது “ ( சிசாக் ) .
இந்த மாயக்கட்டில் உள்ளவர்களுக்கு ‘ கிரிமினல் ‘ என்பது பிரச்சினையாக இருக்காது . அந்த மாய உறவு பல்வேறு கனவுகளுக்கு , வண்ணக் கனவுகளுக்கு ஆதாரமாய் இருப்பதால் பகுத்தறிவோ / சுய கவுரவமோ ( ego ) வேலை செய்யாது .
இப்படி மாயாவாதத்தால் கட்டுண்டதால் ஜெ. மக்களின் petit a –வாக மாறிவிடுகிறார். அதாவது, மக்களின் ஆசைக்கான காரணப் பொருளாக , அவர்களின் மனத்தில் , நனவிலியில் நங்கூரமாகிவிடுகிறார் .
அதாவது , இந்த உறவைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால், குழந்தைக்கு தாயின் மார்பு மீது எவ்வளவு தூரம் பிணைப்பு ( attachment ) இருக்குமோ அந்த அளவிற்கு இருக்கும் .
தாயின் மார்பானது குழந்தையின் உடைமை உரிமையிலிருந்து விடுபட்ட கண்ணியை பிரதிநிதித்துவம் செய்கிறது.
இக்குழந்தையின் இந்த ஆசைப்படு பொருளானது இதரர் / பிறரைச் ( other ) சார்ந்தது . இது குழந்தையின்  கற்பனையான பகுதி ஆசைப்படு பொருளாகும் ( imaginary part object ).. அதாவது , குழந்தை , உடலிலிருந்து மார்பு பிரிந்த ஒன்றாக கற்பனை பண்ணிக்கொள்கிறது என்கிறார் கெலின் ( Klenian ).
மக்கள் இந்த ஆசைக்கான பொருளிடமிருந்து அவர்களுடைய கற்பனைக்கு தோன்றியபடியெல்லாம் உறவும் , ஆதாயம் பெறும் ஆசையும் அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது.
லக்கான் , petit a  -ன் ( ஆசைப்படு பொருளின் ) இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது , அது காமப் படங்களைப் பார்த்து பாலின்பம் பெறுவதற்கான தூண்டல் ( Scopophilic drive ) என்கிறார். மக்கள் ஆசையின் இயக்கத்தின் கைதியாகிவிடுகின்றனர். அந்தளவிற்கு காத்திரமானது petit a -ன் தாக்கம். இதை ஜெ. ஜெயிலுக்குப் போனபோது மக்களின் செயல்பாடு வீதிக்கு வந்த முறை தெட்டத்தெளிவாக விளக்கிவிடுகிறது.
இதிலிருந்து ஒன்றுக்கு வரலாம். இந்த மாயாவாதத்திலிருந்து விடுபடாதவரை எதார்த்தத்தை பார்ப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஆற்றல் பிறக்காது.

இப்போது ஜெ. இல்லை . இந்த ஆசைப்படு பொருளானது அவரின் கட்சியான , கட்சிக் குழுக்களின் ஏதோ ஒன்றிற்கு சாதகமாகுமா அல்லது ஜெ.யை இழந்து விட்டதால் ஆசைப்படு பொருளிலிருந்து விடுதலை பெற்றுவிட்டனரா என்று ஆர்கே நகர் தேர்தல் முடிவு நமக்கு புலப்படுத்தக் கூடும்.
இது லெக்கானிய மன அலசல் ஆய்வு முறையாகும். ஓட்டளிப்பில் யார் ஜெயிப்பது , தோற்பது என்பதிலெல்லாம் அது அக்கறை கொள்ளாது.
மக்களின் ஆசைக்கான காரணப்பொருளாக ( object petit a ) ஜெ. இருப்பதா ,இருக்கக் கூடாதா என்பது தனிமனிதனின் விருப்பம்.
ஆனால் , ஜெ. என்கிற ஆசைக்கான காரணப் பொருளில் கோடிக்கணக்கான சொத்து மதிப்பு உண்டு ; அத்தோடு அதிகாரம் வேற. பின் எப்படி மக்களும் ஜெ.யும் உறவினர்களாக முடியும்.
மக்கள் அளித்த அதிகாரத் தளம் ( Phallus ) ( முதன் மந்திரி ) துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரவேண்டும்.
ஜெ.யின் உறவில் மட்டுமல்ல ; எந்த உறவிலும் முரணியக்கம் உண்டு ; இயற்கைக்கும் கூட ( சுனாமி ) .முரணியக்கத்தை புரியும்போதே எதார்த்தம் புலப்படும்.
க.செ
உதவியவர்கள் : Slavoj Zizek