Showing posts with label virtual reality. Show all posts
Showing posts with label virtual reality. Show all posts

22 Oct 2015

எரிசாராயம்

ற்றுமொரு  'எரிசாராயம்நுகர்வுச் சந்தைக்குள் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கருத்தியலாக தொலைக்காட்சியில் கட்டமைக்கப்பட்டது.
       [ ஏற்கனவே இந்தியச் சந்தையில் 20-20 ; ஒருநாள்கிரிக்கெட் எரிசாராயம் உள்ளது . ]
       கடைசி மூன்று நாட்களும் மிகக் காத்திரமான நேர்காணல் ; உராய் விச்சு ; நேரலை ஒளிபரப்பு ; இத்யாதி.

       அதாவது யதார்த்தமற்ற (  virtual reality ) எதார்த்தத்தை சமூகத்தின் ஒரு அங்கம் பற்றிய பிரச்சினைபோல் ஒரு கருத்தியலை காட்சிப்படுத்தி , கட்டமைத்து தமிழகத்தின் நுகர்வுச் சந்தையில் ஒரு பரபரப்பை / எதிர்பார்ப்பை உருவாக்கியது காட்சி ஊடகம்.
       ஒரு 3100 ஓட்டுகள் உள்ள தொழிற்சங்கத் தேர்தலை ஒரு உன்னதப் பொருளாக
 ( sublime object  )   ஆக்கிவிட்டனர்.
       ஆம். அந்த நடிகர் சங்கம் நடிகர்களுக்கானது என்பதாலேயே ஒரு சட்டசபைத் தேர்தல் மாதிரி முக்கிய இடமளித்து மக்களின் மகிழ்வு விருப்பத்தில் , மற்றொரு Enjoyment -  யை
( அனுபவிப்பு ,துய்ப்பு ) உற்பத்தி செய்து சந்தைப்படுத்தலை நடத்தினர். அது மற்றொரு போதை வஸ்தாக / எரிசாராயமாக காட்சிப்படுத்தப்பட்டது.
       இந்தவகைக் கருத்தியல் சமூகத் தன்னிலையில் தவறானதை ; முக்கியமற்றதை  / முக்கியமாக்கிக் காட்டுகிறது ; சமூகத்தின் எந்த மூலையிலும் தொடர்பற்ற நடிகர் சங்கத்தை ; சமூகத்தின் அன்றாட வாழ்வின் முக்கிய நிகழ்வாக்கி , கட்டியமைக்க முயற்சிக்கிறது காட்சி ஊடகம்.
       காட்சி ஊடகத்தின் இந்தச் சுதந்திரம் எந்தவகையைச் சார்ந்தது ; எந்தவகை ஜனநாயகம் சார்ந்தது?
       தமிழகத்தின் நடிகர் சங்கம் ( தொழிற்சங்கம் ?) என்பது காலனிய காலத்தின் விக்டோரியா மஹாராணியாக , தமிழகத்தின் காவேரி / வைகையாக முக்கியத்துவம் பெற்றது ஏன் ?
       காட்சி ஊடகத்திற்குக் கிடைப்பதென்ன ? சினிமாவின் பரிவு ( முதல் மந்திரிகளை உருவாக்கும் கர்ப்பஸ்தானம் ! ? ) ; பார்வையாளர்களின் பாராட்டு , அங்கீகரிப்பு , நுகர்வுச் சந்தையின் கடைக்கண் பார்வை....
       அரசியல் கூடாரங்களின் தூண்டில்களுக்கான கவர்ச்சித் தூண்டல் ( Drive ).
       ஆசைக்கான காரணப்பொருள் ( object a ) யார் ? யார் ? என அடையாளம் காட்டல்.
       ரசிகர்களுக்கு மற்றொருவகை  Enjoyment   ( அனுபவிப்பு , துய்ப்பு ) .
       காட்சி ஊடகங்களின் கருத்தியல் நடைமுறை உற்பத்தி நிகழ்வு நடிகர்களின் சமூக அரசியல் மீதுள்ள அதிகார உறவை ( power relation ) நியாயப்படுத்துகிறது எனலாம் .
       இத்துனை கூத்திற்கும் முக்கிய காரணம்.....
       மற்றமையில் / சமூகத்தில் / கலாச்சாரத்தில் / மொழியில் காத்திரமான வர்க்க அரசியல் இல்லாமையே (  lack ) ஆகும் .
.செ
உதவிய நூல் : லெக்கான் ; கருத்தியல் பற்றி-சிசாக்                                                                                                                                                      21-10-2015