26 Oct 2015

“ கடவுள் இருந்தால் , எல்லாம் அனுமதிக்கப்படுகிறது “.

  கடவுள் இருந்தால் , எல்லாம் அனுமதிக்கப்படுகிறது
       இது தாஸ்தாயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற வாசகம் .
       இன்று இது 100 சதவீதம் சிவசேனாவுக்கும் , தீவிர, மதவாத, மத அரசியல் குழுக்களுக்கும் பொருந்துகிறது .

       1.  பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகம்மது கசூரி புத்தக வெளியீட்டிற்காக          சிவசேனையினர் சுபீந்திர குல்கர்னி மீது மை வீச்சு.
        2.  சிவசேனா எதிர்ப்பால் பாகிஸ்தானிய பாடகர் குலாம்நபி ஆசாத்தினுடைய நிகழ்ச்சிகள் ரத்து.
        3.  சிவசேனா எதிர்ப்பால் இந்திய பாகிஸ்தானிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை டெல்லிக்கு இடமாற்றம் .
        4. சிவசேனை அச்சுறுத்தலால் இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் நடுவர் அலீம்தார் விலக்கிக்கொள்ளப்பட்டார்.
       சிவசேனைக்காக சொந்த கடவுள் இருக்கிறார் .  ஆகையால் , அவர்கள் விரும்பியதெல்லாம் ((drive ) செய்கிறார்கள் . ஆட்சி அதிகாரத்தின் கடைக்கண் பார்வை அவர்கள் பக்கம் இருப்பதால் இது எளிதாக இருக்கிறது . 
       சிவசேனை , நிகழ்வின் ஒழுக்கம் / கடமைகள் , அரசியல் ஆகியவற்றை செப்பனிடும் கருவி (instrument ) என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்ளும் இந்த அடாவடியில் / சண்டியர்த் தனத்தில் ( விருமாண்டி ! ) இறங்குகின்றது .
       சிவசேனா என்பது ஒரு கருத்தியலை பரப்பும் இயக்கம் என்பதோடு அது இப்போது இதரரின் ஜனநாயக உரிமையை  ஒடுக்கும் கருவி என்று நிரூபணம் ஆகிறது .
மும்பையின் நவீன தாதா என்ற அளவில் , அவர்களின் விருப்பு / வெறுப்பிற்கிணங்க (drive ) இதரர் (other )  நடக்க வேண்டும்; அல்லது கலாச்சார தானாக்காரனாக ( police ) எந்தநெறிகளும் (ethics ) கட்டுப்பாடுமின்றி , ஸ்பெயின் காளைச் சண்டையில் சுவர் ஏறி மக்கள் காலரியில் குதித்து அதம் பண்ணும் மூர்க்க காளையாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் .  ஏனெனில் முஸ்லீமோ , பாகிஸ்தானோ செய்வதெல்லாமே தவறு என்ற நோக்கில் பார்ப்பது :  நேர்மறை உள்ளடக்கம் கூட இருக்கலாம் என்று கிஞ்சித்தும் எண்ணாமல் , ஆய்வு இல்லாமல் செயல்படும் மூர்க்க உந்தலுக்கு அடிமையாய் செயல்படும் சிவசேனா; நாளை, தமிழர்களுக்கு , பீகாரிகளுக்கு , மலையாளிகளுக்கு etc.,  உரிமைகளை பறிக்க அந்த மூர்க்க காளை புஸ் என்ற மூச்சுடன் கொம்பை கீழே சாய்க்கமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? .

பெண் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் மூர்க்க சாதிகளின் கௌரவ கொலைகாரர்களுக்கு சற்றும் குறையாமல் , சிவசேனாவின் சுயமோக வெறி உந்தல் , அனைத்துக்குமான ஏகத்துவ கடவுள் அவதாரமாக மாறியுள்ளது ஹிட்லரிசம் .
       ஜனநாயகமோ / மக்கள் ஜனநாயகமோ பரந்து பட்ட ஐக்கிய முன்னணி இல்லாமல் நவீன ஹிட்லரிசத்தை எதிர்கொள்ள முடியுமா ? .
நினைத்ததைச் செய்வதல்ல் சுதந்திரம் “.
       ( சிவசேனாவின் ) தூண்டலை ( impetus ) தன்னியல்பாக உணர்வதை தடுப்பதுவே சுதந்திரம் ஆகும் சிசாக் .   அப்படி இல்லாமல் உந்தலுக்கு ( drive ) கட்டுப்பட்டு நடப்பது என்பது பாவப்பட்ட அடிமைத்தனம் என்றாகிறது .
       அவர்களுக்கு , அவர்களின் தூண்டலுக்கு பிரக்ஞை பூர்வமான சிந்தனையை ஊட்டவும் ஐக்கிய முன்னணி தேவைப்படுகிறது .
க.செ
25-10-2015

23 Oct 2015

எப்போது கல்கி ?

வராகத்தின் மூர்க்கம் பலகோடி மக்களின் அன்றாட உணவுப் பொருளான பருப்பைப் பதுக்கி பகாசுர லாபத்திற்காகவும் , இன்பத்திற்காகவும் மக்களின் வாழ்வைப் பதறவைக்கும் பதர்கள் அவர்கள் [ ஒரு களை எடுப்பு வேண்டும் ].
வராகத்தின் மூர்க்கம் உச்சமானதால் ஏழைகளின் குடிசைகளுக்கு தீ வைத்தலும் அதற்கு ‘ ஆகுதி ‘ யாக பச்சிளம் குழந்தைகளைப் போடுகிறது அது . 
 கடவுள் இல்லையென்றால் அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படுகிறது - தாஸ்தாயேவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்களில்.
நடப்பது அதுதானே ! 
அப்புறம் ஏன் மாட்டுக்கறி கொலை , மதக் காவல், பிரதமரையே மண்டியிடச் சொல்லும் மதர்ப்பு  ( சிவசேனை சுவரொட்டி )
கடவுள் இல்லாவிட்டாலும் எது வேண்டுமானாலும் செய்ய அனுமதி இல்லை  . இது லக்கான். 
நெறிகளை ( ethics ) மதிக்க வேண்டாமா ? காலியான கடவுளின் இடத்தில் நெறிகளை  ( ethics ) முன்னிறுத்துகிறார் லக்கான் என அதை வாசிக்கலாம். மனிதத்தின் லட்சுமண் கோடு நெறிகளே  .
 
எந்த புற உலக அதிகாரமும் மனிதத்துடனுன் உடன்பிறப்பாக இருக்காது. ஆனால் நெறிகளை தன்னகத்தே இருத்தினால் இனியாகும் செய்கைகளுக்கு , கொந்தளிப்பு வசப்பட்ட மனங்களுக்கு , அதிகார , அதீத தாக்குதலுக்கான மூர்க்கத் திற்கெல்லாம் தன்னிலைகளுக்குள்ளிருந்தே வாய்க்கூடும், கடிவாளமும் பிறக்கும். 
[ நெறி எந்தத் தன்னிலையையும் ஒடுக்காது. வழிகாட்டும் அவ்வளவே . அங்கு குற்ற உணர்வு ( guilty ) , ஒடுக்குதலுக்கு ( suppression ] இடமில்லை.
      நாம் எப்படி மதத்தின் பேரால் நடக்கும் நியாயமற்ற பலாத்காரத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறோம் எனக் கேட்கிறார் சிசாக்  என்ற மனஅலசல்காரர்.
      அவரே இப்படிப் பதிலளிக்கிறார் :
       நாம் அறம் / கருத்தியலைக் கடந்த சமூகத்தில் வாழ்கிறோம் ( post ideological)என்கிறார்.
      மக்கள் சேவகர்கள் , மக்களின் அன்றாட வாழ்வின் அடிவயிற்றில் அடிப்பவர்களுக்கு எதிராக , மக்கள் பலாத்காரத்திற்கு தயார்ப்படுத்தவில்லையே ஏன்?
      எழுத்தாளர்கள், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், கலைஞர்கள் ( artists )                         ( M.F. ஹுசைன் தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்டவர்) போன்றவர்களை தாக்குதலுக்கான இலக்காக ஆக்குவது ஏன்?
      தன் படம் திரையிடத் தடை என்ற உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று மிரட்டும் தயாரிப்பாளரும், நடிகரும் குடிசை எரிப்பை , குழந்தை எரிப்பை , திரைக்கதைக்கான கருவாக்கும் காலம் வருமா? .
புராணகாலம் திரும்பி விட்டதோ?. தேவர்கள் ( ஆட்சியாளர் , நுகர்வு முதலாளியம் ) மக்களை அரக்கர்களாக்கி, சுரண்டி , பின் கொள்ளி வைக்கவும் , கூச்சமில்லாமல் / தயங்காமல், இந்திரலோக வாழ்வு லயிப்பில் உள்ளனர்.
மதமும், சாதிமேலாண்மையும், கொலைவெறிக்கு தூபம் போடுகிறது /தூண்டுகிறது.   மக்களைக் காப்பாற்ற பரந்தாமன் கல்கி அவதாரம் எடுக்க முடியாது.(ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்). 
சாதி , மதம் கடந்து ( நோயிலிருந்து விடுபட்டு ) மக்களாகி, இன்றைக்கான காண்டீபத்தையும் , பரசுராம கோடாலியையும் தாங்கி , தங்களின் இருத்தலை நிறுவிக்கொள்ள வேண்டிய கட்டாயக் காலமிது.
( அதுதான் மக்களுக்கான, மக்களின் கரசேவையாகும் ) .
க.செ.
22-10-2015

22 Oct 2015

எரிசாராயம்

ற்றுமொரு  'எரிசாராயம்நுகர்வுச் சந்தைக்குள் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கருத்தியலாக தொலைக்காட்சியில் கட்டமைக்கப்பட்டது.
       [ ஏற்கனவே இந்தியச் சந்தையில் 20-20 ; ஒருநாள்கிரிக்கெட் எரிசாராயம் உள்ளது . ]
       கடைசி மூன்று நாட்களும் மிகக் காத்திரமான நேர்காணல் ; உராய் விச்சு ; நேரலை ஒளிபரப்பு ; இத்யாதி.

       அதாவது யதார்த்தமற்ற (  virtual reality ) எதார்த்தத்தை சமூகத்தின் ஒரு அங்கம் பற்றிய பிரச்சினைபோல் ஒரு கருத்தியலை காட்சிப்படுத்தி , கட்டமைத்து தமிழகத்தின் நுகர்வுச் சந்தையில் ஒரு பரபரப்பை / எதிர்பார்ப்பை உருவாக்கியது காட்சி ஊடகம்.
       ஒரு 3100 ஓட்டுகள் உள்ள தொழிற்சங்கத் தேர்தலை ஒரு உன்னதப் பொருளாக
 ( sublime object  )   ஆக்கிவிட்டனர்.
       ஆம். அந்த நடிகர் சங்கம் நடிகர்களுக்கானது என்பதாலேயே ஒரு சட்டசபைத் தேர்தல் மாதிரி முக்கிய இடமளித்து மக்களின் மகிழ்வு விருப்பத்தில் , மற்றொரு Enjoyment -  யை
( அனுபவிப்பு ,துய்ப்பு ) உற்பத்தி செய்து சந்தைப்படுத்தலை நடத்தினர். அது மற்றொரு போதை வஸ்தாக / எரிசாராயமாக காட்சிப்படுத்தப்பட்டது.
       இந்தவகைக் கருத்தியல் சமூகத் தன்னிலையில் தவறானதை ; முக்கியமற்றதை  / முக்கியமாக்கிக் காட்டுகிறது ; சமூகத்தின் எந்த மூலையிலும் தொடர்பற்ற நடிகர் சங்கத்தை ; சமூகத்தின் அன்றாட வாழ்வின் முக்கிய நிகழ்வாக்கி , கட்டியமைக்க முயற்சிக்கிறது காட்சி ஊடகம்.
       காட்சி ஊடகத்தின் இந்தச் சுதந்திரம் எந்தவகையைச் சார்ந்தது ; எந்தவகை ஜனநாயகம் சார்ந்தது?
       தமிழகத்தின் நடிகர் சங்கம் ( தொழிற்சங்கம் ?) என்பது காலனிய காலத்தின் விக்டோரியா மஹாராணியாக , தமிழகத்தின் காவேரி / வைகையாக முக்கியத்துவம் பெற்றது ஏன் ?
       காட்சி ஊடகத்திற்குக் கிடைப்பதென்ன ? சினிமாவின் பரிவு ( முதல் மந்திரிகளை உருவாக்கும் கர்ப்பஸ்தானம் ! ? ) ; பார்வையாளர்களின் பாராட்டு , அங்கீகரிப்பு , நுகர்வுச் சந்தையின் கடைக்கண் பார்வை....
       அரசியல் கூடாரங்களின் தூண்டில்களுக்கான கவர்ச்சித் தூண்டல் ( Drive ).
       ஆசைக்கான காரணப்பொருள் ( object a ) யார் ? யார் ? என அடையாளம் காட்டல்.
       ரசிகர்களுக்கு மற்றொருவகை  Enjoyment   ( அனுபவிப்பு , துய்ப்பு ) .
       காட்சி ஊடகங்களின் கருத்தியல் நடைமுறை உற்பத்தி நிகழ்வு நடிகர்களின் சமூக அரசியல் மீதுள்ள அதிகார உறவை ( power relation ) நியாயப்படுத்துகிறது எனலாம் .
       இத்துனை கூத்திற்கும் முக்கிய காரணம்.....
       மற்றமையில் / சமூகத்தில் / கலாச்சாரத்தில் / மொழியில் காத்திரமான வர்க்க அரசியல் இல்லாமையே (  lack ) ஆகும் .
.செ
உதவிய நூல் : லெக்கான் ; கருத்தியல் பற்றி-சிசாக்                                                                                                                                                      21-10-2015