Showing posts with label tamil psycho analysis. Show all posts
Showing posts with label tamil psycho analysis. Show all posts

21 Jun 2025

மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு

மதுரையில் முருகபக்தர்கள் மாநாடு.. இது ஒரு கற்பனைப் பொருள், பகற்கனவுப் பொருள்.

         ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது? முருகனை விட்டுவிட்டு, முருகனைக் கனவாக / பகற்கனவாக காணும் தன்னிலையை (சுயம்) விசாரணைக்கு உட்படுத்தினால், இந்தப் புனைவு (FANTASY ), பகற்கனவு (அதாவது எண்ணம்) ஏனென்று புரியும். 

   நீண்டகாலமாக தாமரையை ( BJP ) முளைக்கவைக்க முயற்சி நடக்கிறது. இந்த இச்சை ( DESIRE ) -- ( WISH அல்ல) . இச்சை (DESIRE ) என்பது நனவிலி ஆசை (உளவியல் ஆசை). இது அடக்கப்பட்டதால் ஏற்படும் ஆசை. அதாவது நீண்டகாலமாக தமிழ் மண்ணில் புறக்கணிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்டு வருகிறார்கள் (தேர்தலில்).

                இந்தத் தோல்வி அடக்கப்பட்ட ஆசை. மீண்டும் மீண்டும் நனவிலியாகத் தோன்றுகிறது .

                    அப்படித் தோன்றும் இச்சை (DESIRE ) க்கு ஒரு புனைவு (FANTASY ) , கற்பனைவடிவம் உளவியலாகத் தேவைப்படும். அப்படித் தேவைப்படும் புனைவு (FANTASY ) தான் முருகபக்தர்கள் மாநாடு. இச்சையைப் பூர்த்திசெய்ய எழுந்த இந்தப் புனைவு (மாநாடு), பகற்கனவு திருப்தியை ஒருவேளைத் தரக்கூடும் அவ்வளவுதான்.

                         க.செ

                         19.06.2025


படம்: முருகன் சிலை, வடக்கு கம்பூசியா,கி.பி-7

தட்டச்சு: சிவக்குமார்

நெறியாளர்: புகழேந்தி