6 Aug 2013

நீதிஅரசர் சதாசிவத்தின் ஆதரவு - ? RULE OF LAW - ? (OR ) தர்மத்துடனான சட்டமா......?


“ ONE  SHOULD  FIRST  ESTABLISH
  ONESELF  IN  WHAT  IS  PROPER.
  ONE  MAY  THEN  TEACH  OTHERS
  AND  WISE,  ONE  IS  NOT  BLAMED ”.
                           
            - THE TREASURY OF TRUTH
                    (DHAMMAPADA)


புதுதில்லி, ஜூலை 7;  தினமணி.
      உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தனி ஒதுக்கீடு சட்டம் இல்லைதான். எனினும் பல்வேறு பிரிவினர்களை உள்ளடக்கிய நமது நாட்டில் அவர்களுக்கு நீதிபதிகள் நியமனத்தில் பிரதிநிதித்துவம் அளிப்பது தேவையானது.  இதுபற்றி நீதிபதிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்”.
      நீதிஅரசரின் சொல்லாடலில் ஒரு எச்சரிக்கை உணர்வு தென்படுகிறது.  இப்பாதையில் Black hole  இருக்கும்போல் தெரிகிறது.      
  அது அவரின் சொல்லாடலை வடிவமைக்கிறது ( shape ),  கவனமூட்டுகிறது,   எச்சரிக்கை   பண்ணுகிறது,   வகைமாதிரியை    உருவாக்குகிறது.  [ இது  real* -யை சந்திக்கும்போது நேருவது   Zizek ]  
நீதிஅரசர் சதாசிவம் அவர்களின் கூற்று என்ன சொன்னார் என்பதைத் தெளிவுபடுத்துவதைவிட ஒரு புதிர் போடுவது போல் தோன்றுகிறது.  அவர் ஒரு குக்கிராமத்திலிருந்து கையை நீட்டி வானைத் தொட்டவராக இருக்கிறார்.  அதாவது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.  அவர் வைத்துள்ள கோரிக்கை (அந்தப் பதம் அவர் குறிப்பிடவில்லை)  பல்வேறு பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்.  யார் கொடுக்கவேண்டும்?  நீதிபதிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ளவர்கள். 
அவர் கேட்டுக் கொண்டாரா?  கோரிக்கையாய் வைத்தாரா?  ஆலோசனை சொல்கிறாரா?  நாடே அவரிடம் கோரிக்கை ( பல ) வைக்க தயாராயிருக்கிறது.  அவரது ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.  இந்தச் சூழலில்தான் நீதிஅரசர் நீதிபதிகளைத் தேர்வு செய்யும் குழுவிடம் முன்வைக்கிறார்.  இந்தக் கட்டத்தில் அவர் ஒரு இரட்டையைக் கடைப்பிடிக்கிறார்.  அதாவது  Rule of  Law   என்பதை உயர்த்திப் பிடிக்கிறார்.  அதாவது, தகுதி அடிப்படையில் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும்“ என்பதுதான் அது. 
மற்றொன்று எல்லாப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் கேட்கிறார்.  அதாவது மொழியால் சொல்லப்படாமல் ( unsaid ) ஒரு நெறியாய் ( ethics ) முன்வைக்கிறார்.
நீதித்துறையில் பிரதிநிதித்துவக் கொள்கை ஏதும் இதுவரை இருந்ததில்லை என்பதற்கான “குறி“ (sign ) தான் நீதிஅரசரின் பேச்சு.  இதற்கான கோட்பாட்டைக் கூறினால்,

A sign or representation is something stands to somebody for something in some respect or capacity                                                                                                                           - Issac Facatt
                                                                                                    ( Communicology and Narcissism).

மேற்கூறியதை ஏற்றால்,
மேலும் ஒரு அடி பின்னால் சென்றால் இன்றைய நீதிஅரசர் தன் பிறந்த குக்கிராமத்திலிருந்து உச்சநீதிமன்றத்தின் உச்சியைத் தொட்டிருக்கிறார் என்றால், பல ஆண்டுகளாய் நீந்தித்தானே வந்திருப்பார்; நேரடியாகவோ, பார்த்தல், கேட்டல் மூலம் அந்த நிகழ்வுகளைக் கடந்துதானே வந்திருப்பார்.
இப்படிப்பட்ட கலாச்சார மனிதர்களின் அனுபவங்களை குறியின் திருமறை விளக்கங்களாகத் தொகுத்துப் பார்க்கும் தத்துவமாகவும், ஆய்வாகவும் குறியியல் உள்ளது.
அதாவது, கடந்துவந்த பாதையின் தடத்தை ஒரு செய்தியாக அடையாளப்படுத்துகிறது ;  
 செய்தியை, செய்திப்பரிமாற்றத்திற்கு இணையாகக் கருதுகிறது.

இப்படிப் பார்த்தால் நீதிஅரசர் நேரடியாக பாதிக்கப்படாமல் இருந்தாலும்கூட....இது அவரின் கலாச்சார அனுபவிப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
அதாவது, அறிவு பூர்வமான தேடலின் விளைவாகவே மேற்கூறிய சொல்லாடல் வெளிவந்திருக்கக்கூடும்.  (அதாவது, Intellectual Discourse - ஆக).
ஏனென்றால் இவரே கீழிருந்து உச்சிதொட்டவர்தான்.  இவருக்கு முன்பிருந்த நீதிஅரசர் பாலகிருஷ்ணணும் சிகரம் தொட்டவர்தான்.  இது வரலாறு.
ஆனாலும், நீதிஅரசரின் வேண்டுகோள் / கோரிக்கை என்ன?  விதிவிலக்காக சில பேருக்கு “ பரமபத பெரிய ஏணி “ கிடைத்துவிடக்கூடும்.
ஆனாலும் நீதிஅரசர் தேடுவது என்ன?  அவர் உணர்வது இல்லாமையை  ; அதாவது real.    இதன் பொருள் புறம்பற்றியதல்ல. /  யதார்த்தமல்ல.
மாறாக, அகம்பற்றியது.  அது ஒரு உணர்வு / வெறுமை / முன்னொரு காலத்திலேயே இழந்ததாகக்கூட இருக்கலாம்   இது ஒரு நனவிலி ( unconscious ) ].
அந்த உணர்வை மொழியால் வெளிப்படுத்தமுடியாது.  மொழிக்கு சூன்ய உணர்வை வெளிப்படுத்தும் திறனில்லை என்பார் லக்கான்.
அதாவது, சமூகத்தளத்தில் வரலாற்று ரீதியில் பிரிவுகளும், பிளவுகளும் இருக்கத்தானே செய்கிறது.  [ அது இப்போதும் மேல்கட்டுமானத்தில் பிரதிபலிக்கிறதுதானே ] .  பசியாற, இடஒதுக்கீட்டை சமூக அரசியல் வல்லுநர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.  இதுபோன்ற உயர், உச்சி அதிகாரங்களுக்குக் கிடையாதுதானே.  அந்தக் கீழ்மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஏதோ ஒரு வகையில் நிற்க தளம் ( space ) இல்லையே, ஏற்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட தளமில்லையே.  இது ஒரு பகுப்பாய்வு, மனத்திற்கு Affect -ஐ, மனப்பாதிப்பை கொடுக்காதா?  கொடுக்கும்.  ஆனால், நீதிஅரசருக்கு சட்டமாக (Ruling ) இல்லாததைச் சொல்லாடலாக ஆக்குவது ஒரு தர்மசங்கடம் 360o - யிலும் ஏற்படும்தானே!  ஒரு நரம்பதிர்வு ஏற்படக்காரணமாக இருக்க வேண்டாமே என்றுகூட இருக்கலாம்.  சட்டத்தில் இல்லை.  ஆனால், சமூகத்தில் அதற்கான அவசியம் இருக்கிறது என்பதை உணரமுடியுமே!
இப்போது சட்டத்திற்கு (ego ) எதிராக, தர்மம் / நெறி போன்ற சூப்பர் ஈகோக்கள் பேச
 ஆரம்பித்துவிட்டால்.......

   முடிவு, சத்யம் / தர்மம் பக்கம் சட்டதிட்டத்தின் (Rule of Law) பார்வையை விழவைக்க விரும்பும் ஆசையே (desire ) அந்தச் சொல்லாடல் என்று கூறலாமே.
சட்டத்திற்கு மாறாக சிகண்டி ( பீஷ்மரை அழிக்க ) நின்றான், ஆனால் சத்தியத்திற்கு
எதிராக இல்லை.

கதா யுத்தத்தில் துடையில் அடிக்கக்கூடாது.  இது சட்டவிதி ( Rule of Law ).  ஆனால்,துரியோதனனை அழிக்காமல் அவனின் அரச அநீதியை அழிக்க முடியாதே !
பீமன் துடையில் அடித்தான் சத்யம் பிழைக்க.


அறிவால் நீதிஅரசர் வரலாற்றுப்பிழையை சரிசெய்ய, ஒடுக்கப்பட்டவர்களுக்கான தளத்தை ஏற்படுத்த அதிகாரமாடத்தை நோக்கிக் குரல் எழுப்புகிறார். 
                                                                                      
சத்யத்திற்கான குரல் கேட்குமா-?                                                                                                        
      * real – “The real is an order of affect / experience of inside not outside”  - Lacan.

(மற்றமை 4-ம்
இதழிலிருந்து)