3 Nov 2017

கருத்தியல் மாயை

தலித் என்பது ஒரு கருத்தியல் ( ideology )
முதலில் கருத்தியல் என்றால் என்ன என்பதை அறியலாம்.
 கருத்தியல் ( ideology ) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு அறிவாகும் (  instrumental reasoning ) . கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் ( attitude ) . சமூக மேலாண்மையில் அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே உள்ளது “ சிசாக்.
தலித் என்பது தன்னளவில் தலித்தாக இல்லை. அது எப்போதும் பாராளுமன்றம் , சட்டசபை அரசியல் நடவடிக்கையுடன் ஒரு அதிகாரத்திற்கான சொல்லாடலாக இணைக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் தலித் கருத்தியல் பல குறுங்குழு அர்த்தத்துடன் அரசியல் தளத்தில் பலவாக ஊடாடுகிறது.
கருத்தியலின் உண்மைத் தன்மையை (  truth ) நாம் நம்பவேண்டும் என்பதற்காக , கருத்தியலானது  ஒரு கோட்பாடாக , கருத்துக்களின் தொகுதியாக , நம்பிக்கையாக , கருத்தாக்கங்களாக , இன்னபிறவாக உள்ளது என்கிற பரவலான கருத்து முன்வைக்கப்படுகிறது  ”  - சிசாக்
இவ்வளவு நீண்ட முன்தயாரிப்பு ஏன் என்றால் தமிழ் இந்து நாளிதழின் சமஸ் செப்டம்பர் 2017-ல் நடுப்பக்கக் கட்டுரையாக சாதி ,மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா ? எனக் கேட்கிறார்.
தமிழ் சமூகம் தன்னையே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி ஒன்றையும் முன்வைக்கிறார்.
ரஜனி , கமல்ஹாசன் , இவர்களோடு திருமாவளவனை ஒப்பிட்டு , நடிகர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ( தமிழ்நாட்டின் முதல் மந்திரி பதவி ) திருமாவுக்கு ஏன் இல்லை  (தமிழகச் சூழல் இல்லையே) என்ற கேள்வியோடு நிற்காமல் எங்கும் தமிழ் , எதிலும் தமிழுக்காக முழக்கமிடும் தமிழ்ச் சமூகம் மிக ஆழமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி இது “ என்கிறார்.
தமிழை முன்னிலைப் படுத்தாமல் தமிழக அரசியல் சூழலைப் பற்றி விவாதிக்கலாம்.
முதலாவதாக மறத் தமிழனின் அரசன் அம்மணமாக ஊர்வலமாக வருவதை பலமுறை பார்த்திருக்கிறான் : பார்த்துக்கொண்டும் இருக்கிறான். ஆனால் , அரசன் அம்மணமாக உலா வருவதை / ஆட்சி செய்வதை அவனால் உணர முடியவில்லை. அவ்வளவு ஞானம் தமிழனுக்கு. தமிழனிடமிருந்து இதையே நீக்காமல் இருக்கும்போது , ஒரு விலை அவர்களும் கொடுத்துத்தானே ஆகவேண்டும்.
அடுத்ததாக ‘ சாதி ஒழிக , தமிழ் வாழ்க ‘ . இது திருமாவளவனின் அறைகூவல் என்கிறார். இதற்கு தலித் அல்லாதோர் கூறக்கூடிய பதில் என்ன?
சமஸ் உங்களுக்கு சாதியம் / சாதிய உணர்வு என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கலாம் . ஆனால் , அதன் நடைமுறை அரசியலில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
உறவு பற்றிய நெறிகள் எந்தக் குழுவில் , சாதிய ஒழிப்பிற்கான உறவு / ஒழுங்குடன் செயல்படுகிறது ?
உறவுமுறை என்பது மனிதத்  தன்னிலையின் மையமாகும் “ என்கிறார்  Stephen Frost.
சட்டசபைக்கு ஓட்டுச் சேகரிக்கும் நேரத்துடன் , சாதி ஒழிப்பிற்கான நேரத்தை ஒப்பிடுங்கள் சமஸ் . அப்பொழுதுதான் சாதி ஒழிப்பின் தீவிரம் பற்றி வெளிப்படையாகும்.
       “ மனக்காயம் , ஒடுக்குதல், துன்ப துயரங்கள் இவைகளுக்கு ஊடாக இதரத் -தன்மையுடன் ( otherness ) நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வேலையை சாதி ஒழிப்புச் சிந்தனை மேற்கொள்வது பற்றி வெளிச்சத்திற்கு வரும்.
விலக்குதலும் , மனிதாபிமானமற்ற தன்மையும் நிலவுகிற , தீவிரமான அரசியல் முரண்பாடுகளிலும் நாசகரமான வெறுப்பு மனப்பான்மை நிலவுகிற தளத்தில் உண்மை அறியும் ,  வேற்றுமை அகற்றி சமரசப்படுத்தும் குழுக்களிலாவது இத்தன்மைகள் என்ன வடிவில் செயல்படுகிறது ?
சாதியத்தை நீக்கிவிட்டு மனிதத் தன்னிலைகளைக் கட்டமைப்பவையாக எது உள்ளது ?
சாதிகளின் சமத்துவம் எதன்மேல் கட்டப்படுகிறது ?
ஒருவரை  ஒருவர் , எப்போது , எப்படி அங்கீகரிப்பார் ?
ஒரு சாதி , பகை முரண்பாட்டை விட்டு , மற்றொரு சாதியை அங்கீகரிக்கும்பொழுது , லட்சிய , பரஸ்பர உறவு சாத்தியமாகும் . அப்போதுதான் இருவரும் சமமாவார்கள்.
அங்கீகரிப்பின் நெறி என்பது பிறரை வாழவிடுவதில் உள்ளது “ என்கிறார் Judith Butler.
ஜூலியா கிறிஸ்தவா “ நமக்குள் உள்ள நனவிலியானது பிறரை இதரராக, அன்னியமானவராக , புதிரானவராக ; விளக்கமுடியாத , சொல்ல முடியாதவராகவும் ( real ) பார்க்கிறது. அதாவது , புதிரானவராகவும் ( uncanny ) நமக்கு நாமே அன்னியர்களாகவும் , பிளவுபட்டவர்களாகவும் உள்ளோம் ( we are our own foreigner ; we are divided ) என்கிறார். 
                சித்தப்பிளவை ( சாதிகளின் ) நீக்க ,
       ஒருவரை ஒருவர் சமமாகப் பாவிக்க என்ன திட்டங்களைத் தன் அணியினரிடமும் , இதரரிடமும் முன்வைக்கின்றனர்.
       பாராளுமன்ற / சட்டமன்ற அரசியல் அதிகாரத்திற்காகத்தானே அணிதிரட்டல்
( mobilization ) நடத்தப்படுகிறது ? சாதியப் பகைமை கூர்மையடையத்தானே செய்யும்.
       தலித் அரசியல் என்று பொது வெளியில் பேசுபவர்களின் விசுவாசம் எதன் பக்கம் இருக்கிறது?
       விசுவாசம் சாதி ஒழிப்பில் இருக்கிறதா , அல்லது சாதி உட்பிரிவிற்கான அதிகாரம் தேடுதலாக இருக்கிறதா ? சாதியத் தீயை ஊதிப் பெருக்கத்தானே செய்கின்றனர் ?
       பகுதிக்கும் முழுமைக்கும் உறவு உண்டா , இல்லையா ? என்னவகை ?
       உறவை அரசியலாக்கியிருக்கின்றனர் இதுவரை.. நிச்சயமாக தாழ்த்தப்பட்டவர்கள் முன்புமாதிரி இல்லை. அடங்கமறுப்பது , தங்களுக்கான அரசியலில் வளர்க்கப் பட்டுள்ளனர் . ஆனால் , கிராமத்தில் பிறருடன் எப்படி அரசியல் உறவு கொள்வது ? தெரியவில்லை , குழப்பம் ; பிற்பட்ட சாதியின் நிலமற்ற கூலித்தொழிலாளி கூட பகையாய் தெரிகிறான் . எந்தவகையான நெறிகள் தலித் அரசியலுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன ?
       சமூகத்தில் ( கிராமம் , நகரம் ) மனிதர்களுக்கிடையில் உறவு பற்றிய நெறி (ethics)  எப்படியிருக்கவேண்டும்? நெறி என்பதை இங்கு ஒழுக்கம் என்ற பொருளில் கூறவில்லை.
       லெக்கானின் மன அலசலின் அடிப்படைக் கூறான நெறிகள் ( ethics ) பற்றி புதிய பரிமாணம் கட்டப்பட்டுள்ளது.
       லெக்கான் நெறியை கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.
        மனிதர்களாய் உள்ள நாம் , சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்  என்பதாகும்  “ .
நெறியின் செயல்பாடு பலவாகச் சொல்லப்படுகிறது .இங்கு அனைத்தையும் கொடுக்க இயலாது . போகப்போக அறிமுகமாக்கிக்கொள்ளலாம் “ நெறி “யை .
 நெறி க் கோட்பாட்டைத் தத்துவவாதி “ஆலன் பேடோ –வும் ஒத்துப்போகிறார் ; அவர் அதை வளர்க்கவும் செய்கிறார்.
ஒழுக்க விதிகளைப்போல் மனிதனை பிளவுபடுத்தாது ( நல்லது / கெட்டது ) எப்போது நெறி இயக்கத்திற்கு வரும் என்பதை லெக்கான் இப்படிச் சொல்கிறார் ,
ஒரு தன்னிலையானது , சமூகக் கட்டமைப்பில் நனவிலியாகத் தேடுகிற நல்லது குறித்த பிரச்சினையை எழுப்புகின்ற அந்தத் தருணத்தில் “ நெறி “ துவங்குகிறது . இந்தக் கணத்தில் தீர்மானகரமான உறவைக் கண்டுபிடிக்க அவர் இட்டுச் செல்லப்படுகிறார் “.
இங்கு மொன்னையான அரசியல் பேசப்படவில்லை .ஆரோக்கியமான உறவு மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக நெறிகள் வருகின்றன. நெறிகள் ஆத்திசூடியல்ல மனப்பாடம் செய்ய . அவை நனவிலியாக வந்து திசைகாட்டும் வழிகாட்டியாகும் . இவை கட்டப்படவேண்டும்.
“ பிளவுபட்ட தன்னிலைகளுக்கிடையில் எவ்வகையான நெறி உறவு இருக்கமுடியும் ?
“ ஒருவரை ஒருவர் மதிக்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவும் “ – லெக்கான்
                                                                                                                       -Seminar- Ethics of Psychoanalysis


நெறியின் ( Ethics ) நடைமுறை வெளிப்பாடு பற்றி ஒரு சின்ன உதாரணம்.

திப்பு ஜெயந்தி
.... மைசூருவை ஆண்ட மன்னனும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவருமான திப்பு சுல்தானின் பிறந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது . கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக அரசு இந்நாளை ‘ திப்பு ஜெயந்தி ‘ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது . இதற்கு பாஜக , ஆர் எஸ் எஸ் , விஹெச்பி உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு திப்பு ஜெயந்தியை முன்னிட்டு , மாநிலத்தில் உள்ள அனைத்து எம்பி , எம் எல் ஏ , மத்திய அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாநில சிறுபான்மையினர் நலத்துறை அழைப்பிதழ் அனுப்பி வருகிறது . அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பாஜக மூத்த தலைவர்களுக்கும் எம்பி , எம் எல் ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு எதிராக போரிட்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை (திப்பு ஜெயந்தி ) கர்நாடக அரசு சார்பில் கொண்டாட மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் (பாஜக).... – தி இந்து 22-10-2017.
காங்கிரஸின் திப்பு ஜெயந்தி என்பது பிஜேபி-க்குஎதிரான அரசியல் நடவடிக்கை . ஆனால் ஏற்கனவே சியா / சன்னி முஸ்லீம் என்ற பிளவும் ; இந்து / முஸ்லீம் என்ற பிளவும் உள்ளது.
ஜெயந்தி கொண்டாடுவது எந்த அடிப்படையில் என்பதெல்லாம்  இங்கு ஆய்வுக் கில்லை.  மொட்டை அரசியல் சதுராட்டம்.
முஸ்லீம்களுக்கு அதிகாரம் (Phallic Power) இல்லை என்று காங்கிரஸ் எண்ணிக்கொண்டு முஸ்லீம்களுக்கு பதிலான அதிகாரமாக ( Phallic Power ) நிலைப்பாடு எடுக்கிறது .இதன் மூலம் முஸ்லீம்களின் ஆசைப்படுபொருளாக (object petit a ) தன்னைத்தானே அந்த இடத்தில் வைத்து , தன்னை முஸ்லீம்களின் ஆசை நாயகனாகக் காட்டிக் கொள்ள ஜெயந்தி கொண்டாடுகிறது.
முஸலீம்கள் இந்தவகை கோரிக்கையை ( demand ) காங்கிரஸிடம் வைத்தார்களா என்ன ?
ஆதரவு , வக்கிரமாக ( perversion ) தன்னைத்தானே முஸ்லீம்களின் அதிகார நாயகனாகப் பாவித்து , முஸ்லீம்களின் ஆசைப்படுபொருளாக தன்னைத்தானே ஆக்கிக்கொள்வதுதான் வக்கிர மனம் என்பது .
நெறிகளற்ற ஒரு உறவு முறையை தனக்குத்தானே கட்டிக்கொள்வது , முஸ்லீம் களிடையே பலாத்காரமான போக்கை ( violent move ) திணிப்பது காங்கிரஸின் அரசியல் வக்கிரச் செயலாகும்.
[ அரசியல் தளத்தில் நிறைய உலாவும் வக்கிரத்தை ( perversion ) , கட்டுடைப்பு செய்யவேண்டியுள்ளது. இனி வரும் ]
க.செ





No comments:

Post a Comment