ராகுல் ஹைதராபாத்தில் உண்ணாவிரதம் ( 30-1-2016 ) இருந்தார் .
இறந்த மாணவர் ரோஹித்தின்
பிறந்தநாள் நினைவு கூறப்பட்டது .
அந்தப் பல்கலைக் கழகத்தில் 4 ஆண்டுகளில்
18 தலித் மாணவர்கள் தற்கொலை என்பது ,
அப்படி ஒன்றும் அது அல்பமல்ல.
அந்தப் பல்கலைக்
கழகத்தில் ஏதோ ஒருவகை வாழ்க்கை நடத்தப்பட்டு வந்திருக்கிறது ; வருகிறது . இதில்
ஆராய்ச்சி மாணவர்கள் என்பதற்கு பொதுவான அர்த்தமொன்றும் , குறிப்பான
(மறைபொருளாகவும் ) அர்த்தமொன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது எனலாம்.
அதாவது , F
C
ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் , S C ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் இருந்து வந்திருக்கிறது எனலாம்.
பொதுவாக , மேம்போக்கான உறவு தலித்துகளோடும் ; மற்றவர்களோடு வேறுவகை உறவும் இருந்துவருகிறது.
அதாவது , முதல் வகையினருக்கு தலித் உறவில் சுசான்ஸ்
( மகிழ்வு / திருப்தி )
( Jouissance ) இல்லை . அதுபோல் தலித்துகளுக்கு
F C - களுடனான உறவில் சுசான்ஸ் ( மகிழ்வு / திருப்தி ) கிட்டவில்லை . அதாவது , அவர்களிடையே வித்தியாசமான சுசான்ஸ் முறையே
இருந்துவருகிறது.
சுசான்ஸ் அரசியல்
ஒருவருக்கொருவரின்
உறவில் சுசான்ஸ் நிறைவளிக்கவில்லை ( Other’s jouissance is insupportable ) . F C - களிடம்
தீட்டு ( taboo )
என்ற நனவிலி உள்ளுறைந்துள்ளது ; ஒவ்வொரு கலாச்சார நடத்தையிலும் அதன் சாயலைத் தேடி
உண்மையான மாணவர்கள் , மனிதர்கள்
, உறவுக்குக் குந்தகம் விளைவிக்கிறது அது.
S C மாணவர்களிடம் தாம் இரண்டாம்தர குடிமகன் என்ற
கட்டப்பட்ட கலாச்சார ஒடுக்குமுறை நனவிலியாக உறைந்துள்ளது.
F C நடவடிக்கைகளை சந்தேகத்துடனே
, தாக்குதலுக்கான தயார் மனநிலையிலேயே இருக்கவேண்டிய கட்டாயத்தில் ( obsession )
உள்ளனர்.
அடிப்படையில் ஒன்றை அனைவருக்கும்
நினைவூட்டவேண்டும் . அது மன அலசல்
ஆராய்ச்சியாளர் சிசாக் கூறியது :
“ The ultimate incompatibility is not between
mine and other’s Jouissance, but between myself and my own jouissance , which forever remains an ex-timate intruder “ – zizek.
இங்கு ஒரு முட்டுச்சந்தை ( deadlock ) எதிர்கொள்கிறோம். ஒவ்வொருவரின்
சுசான்ஸிற்கும் மற்றவரின் பண்பு மீதான முன்னிலைப்படுத்தலே முக்கிய காரணியாக
உள்ளது.
ஆனால் ,
சாதியம் என்ற பண்பு ,
எண்ணப்போக்கு , கலாச்சாரம்
,
தீண்டாமை ஒரு படிநிலை நிறுவனமாக உள்ளது.
ஆனால் ,
ரூபமாக அது இல்லை .
அது
அனைவரது ( சமூகத்தில் ) மனத்திலும்
நிரம்பிவழிகிறது . அதைப் பாராளுமன்ற அரசியல் நெய்யூட்டி வளர்க்கிறது.
சாதி
அடையாளமாக , அரசியலாக , தனக்கான இடத்தை
, உற்பத்தி உறவில் , கல்விக் கூடத்தில்
இடம்பிடித்து , ஜீவித்து ,
அது ஒவ்வொரு தனியனிடமும் உந்தலாக ( drive ) ,
சித்தத்தில் ஆட்சி செலுத்துகிறது. இந்தத்
தீட்டை எப்படி மனத்திலிருந்து கலாசாலையும், பாராளுமன்றமும் நீக்கும்.
திருமணம்
, கலாசாலை , உற்பத்தி உறவு போன்ற Elements (
கூறுகள் ) சாதியை மறுஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.
இது பொறாமைக்கு ( jealousy )
வழி வகுக்கிறது.
பொறாமை
அரசியலுக்கு ஒரு உதாரணமாக ஹிட்லர் கூறியதாகக் கூறும் கூற்று கூர்ந்து கவனிக்கப்பட
வேண்டியது . அது We have to kill the Jew within us . இங்கு பொறாமை நனவிலியாக கொலைவெறிக்கான
உந்தலாக உள்ளது.
புறத்தை ஆய்ந்து PhD வாங்குவதோடு அகத்தை ஆய உள்நோக்கி பயணம் தேவை.
அதற்கான திட்டம் ( agenda ) அரசியல்வாதிகளிடமும் , அதிகாரவர்க்கத்திடமும் இல்லையே
! அவர்கள் சாதியத்தை
ஆயுதமாக பயன்படுத்தும் வியாபாரிகள்.
இனியாகும் சமூக மனிதனின் நெறியாகவும் , சுசான்ஸாகவும் அது இருக்கும்போதே ; “நான் ” யார்? என்ற உள்முகத்
தேடல் இருக்கும்போதே சாதியம் என்ற நனவிலியை உயிரூட்டமில்லாமல் இருக்க வைக்க
முடியும் .
க.செ
விநாயகம்
1-2-2016
No comments:
Post a Comment