18 Jan 2018

தலைநகரா, கசாப்புக் கடையா

உயர்கல்விக்காக டெல்லி சென்ற மருத்துவ மாணவர் சரத் பிரபு அனாமத்தாக இறந்து கிடப்பது அதிர்ச்சியாக உள்ளது.
ஏற்கனவே இறந்த எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணனின் சாவு கொலையா / தற்கொலையா ? என்று உறுதி செய்யப்படவில்லை.
இப்போது இரண்டாவது கொலை? நடந்துவிட்டிருக்கிறது.
தமிழ் மாணவர்கள் மீது தீராப்பகை / வன்மம் எதுவும் பொதுவாக கல்லூரி வளாகத்தில் நிலவுகிறதா?
மாணவர்களிடையே (ஒரே நாட்டின்) சமத்துவம் உள்ளதா? ஒருவரையொருவர் மதிப்பது என்பது வழமையாக உள்ளதா?
கொலையை தனிமனிதக் கொலையாகப் பாவித்து சி.பி.ஐ விசாரணை கோரிக்கை வைப்பது சாதாரண நடைமுறையாகும்.
தமிழ் மாணவர்களின் கொலை ஒரு போக்காக (Trend ) இருப்பதுபோல் தெரிவதால்,
மாணவர்களின் ஒற்றுமை பற்றி ஆராய ஒரு ஆய்வுக் குழு அமைத்து உண்மை அறியவேண்டும்.
மாணவர்களிடையே,
ஒருவரை ஒருவர் மதிப்பது,
சமமாக நடத்துவது,
மொழி சமத்துவம் உள்ளதா ? என்ற ஆய்வும் வேண்டும்.
தமிழ் மாணவர்களின் கொலை சமூகப் பிரச்சினையா / மன வெறுப்பு ( தமிழர் மீது) பிரச்சினையா என்பதை ஆய்வு செய்வதைப் பொறுத்தே வருங்காலம் நிச்சயமானதாக இருக்கும்.
சாவை கிரிமினல் குற்றப் பிரச்சினையாக ஆக்கி கேலி பண்ணக்கூடாது.
க.செ


3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. `சாவை கிரிமினல் குற்றப்பிரச்சினையாக்கி கேலிபண்ணக்கூடாது` - நடந்திருப்பது வெறும் குற்றம் மட்டுமல்ல தமிழினத்தின் மீதான வெறுப்பும்,துவேசமும் வெளிப்படையாய் . ஈழம் தொட்டு இன்றும் தொடர்கதையாய்..... அண்டை நில மீடியா இன்னும் தமிழ் புலிகள் என்ற
    பதத்தையே பயன்படுத்தி வருகிறது...

    ReplyDelete
  3. This is definitely racism.

    ReplyDelete