2 Jan 2018

நாங்கள் சொல்லவில்லை

‘‘ தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன்              பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான் ’’ .
ஆனால், நடைமுறையில் ,
வாசலில் வேட்பாளரின் அடையாளச் சின்னத்தை வரைவதின் மூலம் பெற்ற
லஞ்சம் 200 ரூபாய்;
வேட்பாளரை மலர்தூவி வரவேற்றால் 500 ரூபாய்;
வேட்பாளர், குழந்தைக்கு பெயர்சூட்ட குழந்தையை வாடகைக்குவிட்டால்
1000, 2000 ரூபாய்; .
ஊர்வலத்திற்கு போய்வந்தால் ரூ.100-ம் பிரியாணி பொட்டலமும் .
இது எதைக்காட்டுகிறது ?  ஓட்டர்களின் தன்மானத்தையா, தமிழனின் சுயமரியாதையையா?
‘‘ ஒரு மனிதன் தன் செல்வத்தை அல்லது முக்கியமான    பொருளை எங்கே இழந்துவிட்டானோ, அந்த இடத்தில் தேடினால்தானே கிடைக்கும் .பொருளை இழந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடினால் கிடைக்குமா ?  அதுபோலத்தான் நம்முடைய மக்கள் தங்களுடைய மானத்தை-சுயமரியாதையை எந்த இடத்தில் இழந்துவிட்டார்களோ அந்த இடத்தில் தேடவேண்டும் ’’ .
மேலும், இது பற்றி அந்தப் பெரியவர் கூறியது ,
‘‘ மானத்தைப் பற்றிக் கவலை இல்லாதவன் எவ்வளவு படித்தவனானாலும் அவன் தாசிக்குச் சம்மானவனே ஆவான் அவனது படிப்பும் மானாபிமானம் உள்ளவர்களுக்கு ஆபத்தாகவே முடியும் “. ’’
கடந்த ஒரு ஆண்டாக (ஜெயலலிதா இறப்பிற்குப் பின்) நடந்த கேலிக்கூத்து பற்றி நினைவில் கொள்ளவும் .  இது பற்றி அப்பெரியவர் பேசும்போது ,
‘‘ அரசியலில் கூடுவிட்டு கூடு பாய்வது ஒரு மாதிரி அரசியல் விபச்சாரமே ஆகும் . . .  படிப்பும் , பணமும் , அந்தஸ்தும் உடையவர்கள் அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து விபச்சாரி ஆவதைவிட கொடுமை , மானக்கேடு , துரோகம் வேறுண்டா? ”.
அரசியல் , இன்றைய அரசியல் பற்றி அந்தப் பெரியவர் சொன்னதைப் பார்க்கலாம்:                                                        
‘‘ சினிமாத் துறைக்கு நிர்வாணக்காட்சி எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து வருகிறதோ, அதேபோல், அரசியலுக்கு அயோக்கியத்தனங்கள், காலித்தனங்கள், சண்டித்தனங்கள், திருட்டும், மானம், வெட்கமற்ற பொய், பித்தலாட்டங்கள் பெரிதும் கவர்ச்சிகரமாய் இருந்து வருகினறன. ’’
அந்தப் பெரியவர் யாருமல்ல.  பெரியார்தான்.
அதாவது அரசியல் ஞானத்தைவிட சுயமரியாதையின் முக்கியத்துவம் நன்றாகப் புலப்படுகிறதல்லவா !
வெகு ஜனங்களின் சுயுமரியாதையை, கவர்ச்சி காட்டி வாங்கிப் பிழைப்பவர்களின் மானம் மரியாதை எப்படிப்பட்டதாக இருக்கும் ?
. . . . ‘‘ அறிவையும் மானத்தையும் தமிழர்களிடையே பெருக்க , அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றனவா என்றால் இல்லையென்றுதானே சொல்ல வேண்டியுள்ளது ’’ .
                                                   -க.செ.


                                  

No comments:

Post a Comment