மாட்டுக்கறி உண்டால் மரண தண்டனை;
இந்து தீவிரவாதத்தை, மக்கள் ஜனநாயத்திற்காக கேள்விக்- குட்படுத்தினால்,துப்பாக்கிக் குண்டு அவர்களுக்குப் பரிசாகும். (பெங்களூரின் பேராசிரியர் கல்புர்கி, பத்திரிக்கை ஆசிரியர்
கௌரி லங்கேஷ் ,மகாராஷ்டிராவின்
டாக்டர்.நரேந்திர தபோல்கர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந் பன்சாரே....).
இந்த பாசிசக் கலாச்சாரத்தை சமூக ஊடகங்கள், நல்ல போலீஸ்
(மத்ய அரசு),கெட்ட போலீஸ் (மனச்சாட்சிக்காக கொன்றவர்கள்,
ஜனநாயக உணர்வுமிக்கவர்களுக்கு துப்பாக்கிக் குண்டை பரிசாக கொடுத்தவர்கள்) என்கின்றன.
நல்ல போலீசும், கெட்ட போலீசும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை ஊடகங்கள் அறியாத மாதிரி நல்ல போலீஸ்,கெட்டபோலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள்.
‘இயற்கை பேரழிவு என அறிவி’ என்று நூற்றுக்கணக்கில்
கடலை விட்டு ரோட்டில் வந்து மீன்பிடிக்கிறார்கள் மக்கள்.
ஒரு பிரதமரும், இரண்டு மாநில முதல்வர்களும் அவர்களுக்குள்ளேயே கசகசத்துவிட்டு, பிரச்சினை கோடிக் கணக்கில் தானே தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி அரசியல் செய்கிறார்கள்; ஊடகங்களும் சட்டசபை வெற்றிகளை, உற்சாகக் கொண்டாட்டங்களை காட்டுவதன் மூலம் இவர்களும் அந்த உற்சாகத்தில் பங்கேற்றுக் கொள்கின்றனர்.
அரசியல் செயல்களில் சட்டம் (Law ) மட்டும் போதாது என்றும்;
அரசியல் , சட்டம், நீதி, கருத்து சுதந்திரம் (கூட) போன்ற நடவடிக்கை என்பது நெறியின்(Ethics) வழிகாட்டலுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும்; மக்கள் தளத்தில் நிற்பவர்களுக்கு, தன் நாடு,அரசாங்கம் என்பதில் கூட, நடவடிக்கை , அரசியல் செயல்பாடுகள் நெறிகளின் வழிகாட்டலில் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு கட்டுரை இது.
ப்ரெஞ்ச் தத்துவவாதி ஆலன் பேடோவின்,உளவியல் அணுகுமுறை- யிலான கட்டுரை இங்கு சுருக்கமாக கொடுக்கப்படுகிறது.
. -க.செ
THE RED FLAG AND
THE TRICOLORE
- Alain Badiou
( செங்கொடியும் மூவர்ணக் கொடியும்)
. . . . ஏதோவொரு தேவனை (some deity), ஒவ்வொருவரும் மரியாதை செய்ய வேண்டும் என்று மற்றவர்களை நிர்ப்பந்திப்பதற்காக; கொலைகார, ஆயுதமேந்திய குழுக்கள், (murderous armed gangs) அல்லது தனிநபர்கள், தங்களின் ஆயுதங்களை உயர்த்துகின்றனர். மறுபுறம், காட்டுமிராண்டித்தனமாக (savage), உலகளாவிய இராணுவக் குழுக்கள் மனித உரிமைகள் (human rights) , ஜனநாயகம் என்ற பெயரில் யுகோஸ்லாவிய, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சூடான், காங்கோ, மாலி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுகள் . . . . இன்ன பிறவற்றில் அரசுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த யுத்தங்களானது, எண்ணெய் வளங்களை; தங்கம், நிலக்கரி, உலோக சுரங்கங்களை; உணவு மூலாதாரங்களை; பெரும் வணிக நிறுவனங்கள் கொழிப்பதற்கு உகந்த நிலப்பகுதிகளை கைப்பற்றுவதற்கானவை என்பதைத் தவிர வேறு எதையும் சாதித்துவிடவில்லை. இந்த நோக்கங்களுக்காக இந்நாடுகளில் உள்ள மிக மோசமான கொள்ளைக்காரர்களுடன் சந்தேகத்திற்கிடமான சமரச ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளன…
சார்லி ஹெப்டோ இதழானது ( Charlia Hebdo) , 1970- களின் கலகக்கார இடதுகளின் (rebellious leftism) குழந்தையாகும்.
ஜனநாயகம், குடியரசு, மதச்சார்பின்மை (Laicite) , கருத்துச் சுதந்திரம், சுதந்திரமான வர்த்தகம், பாலியல் சுதந்திரம், சுதந்திரமான அரசு . . . . போன்றவற்றை; சுருக்கமாக, ஏற்கனவே நிறுவனப்படுத்தப்பட்டுள்ள (established) அரசியல், ஒழுக்க நெறிகளை நகைமுரணாகவும், தீவிரமாகவும் (ironic and feverish) தற்காக்கின்றவர்களாக கூறிக்கொள்ளும் அறிவு ஜீவிகள், அரசியல்வாதிகள், ‘புதிய தத்துவவியலாளர்கள்’, செயலூக்கமற்ற பொருளாதார வல்லுநர்கள், மேலும் பல்வேறு கோமாளிகளின் வரிசையில், சார்லி ஹெப்டோவும் (Charlie Hebdo) ஒன்றாகியுள்ளது. இவ்வகையான காட்டிக் கொடுப்போர், துரோகிகள் (renegade) பெருகியுள்ளனர் ;மேலும்,மாறிவரும் சூழலில் ஆர்வம் குறைந்தவர்களாக ஆகிவிட்டதால் இவர்கள் தம்மளவில் பொறுப்பற்றவர்கள் ஆவார்கள்.
நாம் வெவ்வேறு விதமான காரணங்களைக் கூறி விவாதித்த போதிலும்,
சார்லி ஹெப்டோ இதழைப் பொருத்தவரை,அன்றைய முகமது நபியிலிருந்து இன்றைய முஸ்லீம் மக்கள் வரை ‘ விரும்பத்தகாத ஆசைப்படு பொருளே ஆகும் ”(bad object of desire) . முஸ்லீம்களையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும் நையாண்டி செய்வது / ஏளனம் செய்வது (mocking) இந்த கீழத்தரமான ‘ கேலிச்சித்திர ’ இதழின் வர்த்தகமாக உள்ளது.
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பாரசிக
பூர்ஷ்வாக்கள் தங்களின் குழந்தைகளின் புட்டங்களை /ஆசனத்துவாரங்களை சுத்தம்
செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ப்ரான்சின் ப்ரிட்டானி( Brittany) பகுதி ஏழை விவசாயிகளை
(அக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள்) கேலி செய்வதற்காக Becassine என்கிற ப்ரெஞ்ச் சித்திரக் கதையில்
வரும் Becassine என்கிற கதாபாத்திரம் பயன்படுத்தியவை
போன்றதாகும் இது.
சார்லி ஹெப்டோ இதழின் கேலிச்சித்திரங்கள் உண்மையில் முஸ்லீம்களை தாக்கவில்லை. மாறாக, மத அடிப்படைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளையே தாக்குகின்றன என்று இங்குமங்குமாக மக்கள் பேசிக் கொள்ளலாம்.இது முற்று முழுவதுமாக தவறான ஒன்றாகும் .
இந்த இதழின் கேலிச் சித்திரங்களுள் குறிப்பிடத்தக்க ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம் .
‘‘ நிர்வாணமாக இரண்டு புட்டங்களையும் (naked buttocks) அதன் கீழ் உள்ள
‘ Et le cul de
Mohamet , on a le droit ?’(முகமது நபியின் புட்டங்களை / ஆசனவாயை (arise) நாம் பயன்படுத்திக் கொள்ளலாமா? என்கிற தலைப்பையும் நாம் பார்க்கிறோம்.முஸ்லீம்களின் விசுவாசத்திற்குரிய முகமது நபி தொடர்ந்து இம்மாதிரியான அறிவுகெட்ட செயல்களின் இலக்காக உள்ளார்.
இது சமகாலத்திய பயங்கரவாதம் ஆகாதா?. இது எந்தவித அரசியலிலும் சேராது ;‘ கருத்துச் சுதந்திரத்தை ’ காப்பதறகான பெருமிதத்தோடு இந்நடவடிக்கை எவ்விதத்திலும் தொடர்புடையதல்ல.
இது இஸ்லாம் மதத்தை நோக்கிய அபத்தமான / முட்டாள்தனமான, ஆத்திரத்தைக் கிளப்புகிற, ஒழுக்கக்கேடான (ridiculous ,
provocative obscenity), நடவடிக்கையாகும்.
இது மூன்றாம தர கலாச்சார இனவாதம் (cultural racism) என்பதைத் தவிர வேறல்ல; இது குடிபோதையில் உள்ள (pissed-up) Front National - ன் ஆதரவாளர்களைக் குஷிப்படுத்துவதற்கான ஒரு ‘ கேலிச் சித்திரமாகும் ’ (Joke) .
......CHARLIE HEBDO (சார்லி ஹெப்டோ) பத்திரிக்கை அலுவலகத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ப்ரெஞ்ச் இளைஞர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
அவர்களின் கொலை நம்மை வழக்கு விசாரணையிலிருந்து காப்பாற்றிவிட்டது என்பதை நாம் போகிற போக்கில் கூறியாக வேண்டும். அந்த வழக்கு விசாரணையானது சம்பவத்திற்கான சூழலையும், அதற்கான காரணம் எங்குள்ளது என்பதையும் விவாதிப்பதாக இருந்திருக்கக் கூடும். ஆனாலும் ,பெரும்பாலான மக்கள் இக்கொலையில் மகிழ்ச்சியடைந்தார்கள்.
மேலும் தூக்குத் தண்டனை சட்டம் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் மறந்து விட்டனர்.
அதாவது,மேற்கந்திய நாடுகளில் போலவே வெளிப்படையான பலியெடுப்பிற்கு நாடு திரும்பியுள்ளது.
பாசிச வகைக் குற்றச் செயல்கள் (fascist type crimes ) என்று நாம் குறிப்பிட வேண்டிய செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாசிச வகை குற்றச் செயல்கள் மூன்று குணாம்சங்களைக் கொண்டதாக உள்ளது என்று நான் பார்க்கிறேன்.
I. பாசிச வகைக் குற்றச் செயல்கள் நோக்கமற்றவை அல்ல (not blind) ; அவை குறிப்பிட்ட இலக்கைக் கொண்டவையாகும் ( targetted). அதன் தூண்டு சக்தி ஒரு கருத்தியலாகும் (ideology). அது பாசிசக் குணம் கொண்டதாகும். கறாரான அடையாள அரசியல் ( identitarian) சார்ந்ததாகும். அதாவது, தேசிய, இன, இனக்குழு, உள்ளுர் கிராமியக் குழு, மத அடையாளம் சார்ந்ததாகும் (National , racial , communal , folk , religious . .)
இந்த விசயத்தில், கொலைகாரர்கள், பாசிச மரபானது பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதல் தொடுக்கிற மூன்று அடையாளங்களைத் தங்களின் தாக்குதலுக்கான இலக்காக, மிகத் தெளிவாகக் கொண்டுள்ளனர்.
(1). எதிரி முகாமை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக கருதப்படும் ஊடக- வியலாளர்கள்,
(2) வெறுக்கத்தக்க பாராளுமன்ற ஒழுங்கை, அதிகாரத்தை பாதுகாக்கின்ற காவல்துறையினர்,
(3) யூதர்கள்.
ஆக, முதல் விசயத்தில் அது மதம் சம்பந்தப்பட்டதாக உள்ளது; இரண்டாவதில் தேசிய அரசு (Nation State), மூன்றாவதில் ஊகித்துக் கொள்ளப்பட்ட‘ இனம் ’ (supposed race) சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது.
11. பாசிச வகைக் குற்றச் செயல்கள் உச்சபட்சமான ; ஒளிவு மறைவற்ற (unabashed ), கவனம் ஈர்க்கும் காட்சித் திறன் கொண்ட (spectacular) வன்முறையாகும் ;
இச்செயல்கள் மிகக் கொடூரமான, முழுமையான மனவுறுதியை (cold,absolute determination) வெளிப்படுத்த முனைகின்றன – தங்களின் சாவு நிச்சயமான ஒன்று என்பதை கொலைகாரர்கள் ஏற்றுக் கொண்டவர்களாக உள்ளனர்.
That in the nihilist allure , the ‘Viva la muetre ‘ sentiment
behind such actions (இம்மாதியான நடவடிக்கைகளில் ‘ மரணத்தை நேசிக்கின்ற’ மனப்பாங்கே
மேலோங்கியுள்ளது) .
111. பெருமளவிலான, அசாதாரணமான வகையிலான, வியப்பளிக்கக்கூடிய நிகழ்வுகள் இக்குற்றச் செயல்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன ; அவை, பீதியை, பேரச்சத்தை (terror) விதைப்பவையாக உள்ளன.
அவை,அரசின்மீதும், வெகுஜனக் கருத்திலும் ஆத்திரத்தை தூண்டி, அதீத எதிர் வினைகளுக்கு (excessive responses) வித்திடுகிறது. இந்த எதிர்வினைகள் பழிவாங்கும் எண்ணம்கொண்ட எதிர் அடையாளத்தை(vengeful counter identity) உறுதிப்படுத்துவதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கக்கூடாது என்பதே கொலையாளிகளின் திட்டமாக உள்ளது. குற்றவாளிகள், அவர்களின் புரவலரகளின் (patrons) பார்வையில் இந்த எதிர்வினைகள், சமச்சீராக்க முறையில், அவர்களின் கொடூரமான செயல்களை நியாயப்படுத்துவதாக உள்ளது.
உண்மையில், இதுதான் இப்போது நடந்துள்ளது.இந்த விசயத்தில் பாசிச குற்றச் செயல்கள் ஏதோவொரு விதத்தில் வெற்றி பெற்றுள்ளன என்றே கூறவேண்டியுள்ளது.
இவ்வகையான குற்றச் செயல்களுக்கு கொலையாளிகள் தேவைப்படுகிறார்கள். குற்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு இவர்களைக் கையாளுபவர்கள், அவர்களின் தலையெழுத்தை அவர்களிடமே விட்டுவிடுகின்றனர்.
இக்கொலையாளிகள் பெரும் வல்லுநர்கள் அல்ல (great professionals) ; உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர்கள் (agents) அல்ல; அல்லது கைதேர்ந்த கொலையாளிகளும்
(seasoned criminals) அல்ல. இவர்கள், வாழ்க்கையில் எந்தவித அர்த்தத்தையும் காணாது, அந்த வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கு வழியேதுமில்லை என்று எண்ணுகிற உழைக்கும் வர்க்கச் சிறுவர்கள் ஆவார்கள்.
அத்துடன், Wild அடையாளமும், அதிநவீன போர்க் கருவிகள், வெளிநாட்டு பயணங்கள், குழு அடையாளம், அதிகாரம், மகிழ்வு / சுசான்சஸ்( jouissance), அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பொருளுதவி அனைத்தும் சேரும் போது இந்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பிரான்சின் முந்தைய வரலாற்றுக் காலக்கட்டத்தில் பாசிசக் குழுக்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தக் காரணங்களுக்காக எந்தளவிற்கு கொலைகாரர்களாகவும், சித்திரவதை செய்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். குறிப்பாக, ப்ரான்சை நாசிகள் கைப்பற்றியபோது ”தேசிய புரட்சி” என்ற பதாகையின் கீழ் Vichy அரசாட்சி மேற்கொண்ட பெரும்பாலான ராணுவ நடவடிக்கைகள் இதற்கு உதாரணமாகும்….
இப்போது “கருத்துச் சுதந்திரம்” பற்றி (freedom of
expression) பார்க்கலாம்.
ப்ரான்சில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணி கருத்துச் சுதந்திரத்திற்கானது தானா? நிச்சயமாக இல்லை.
மாறாக, மூவர்ணக் கொடியின் கீழ் திரண்ட அப்பேரணி ஒரு விசயத்தை உறுதிப்படுத்தியது.ப்ரெஞ்ச் குடிமகனாக இருப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரேவிதமான கருத்தை, அதாவது, அரசினால் வழிகாட்டப்பட்ட கருத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமான ஒன்று என்பதை உறுதிப்படுத்தியது.
சம்பவம் நடந்த காலக் கட்டத்தில் நமது சுதந்திரம், நமது குடியரசு பற்றி போற்றிப் புகழும் கருத்துக்களுக்கு மாறாக வேறு எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமாக இல்லை.
முஸ்லீம் பாட்டாளி இளைஞர்கள், பயங்கரமான முகத்திரையிட்ட பெண்களால் நமது அடையாளம் சீர்குலைந்துவிட்டதாக கண்டனமும் ,வன்முறைக்கு எதிராக யுத்தத்திற்கு ஆண்மையுடன் தயாராவது போன்றவையுமே இங்கு வெளிப்பட்டன.
நமது பேச்சுச் சுதந்திரத்திற்கான மிகச் சிறந்த உதாரணமாக, ”நாம் அனைவருமே காவலர்கள்தான் ” (we all police) போன்ற கோஷங்களையும் கேட்க முடிந்தது.
ஒரு சில ஊடகங்களைத் தவிர, அனைத்து பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி நிலையங்களும் மாபெரும் தொழில்துறை முதலாளிகளிடமும், நிதிநிறுவனக் குழுக்களின் கையிலும் உள்ள ஒரு சூழலில் ”கருத்துச் சுதந்திரம்” பற்றி இன்று ஒருவரால் எப்படிப் பேச முடியும்?
Bouygues ,
Lagardere , Niel போன்ற பெரிய முதலாளியக் குழுக்களும், மற்றவர்களும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரத்தின் பலிபீடத்தில் தங்களின் சொந்த நலனை பலி கொடுக்கத் தயாராக இருக்கும் சூழலை நாம் கற்பனை செய்து கொண்டால் மட்டுமே, நமது குடியரசு ஒப்பந்தமானது (Republican pact) நெகிழ்வுத் தன்மையுடனும், அனைவருக்கும் இடமளிக்கக் கூடியதாகவும் உள்ளது(flexible and accommodating) என்பதை நாம் ஒப்புக் கொள்ளமுடியும்.
வெளிப்படையான அதிகாரத் தொனியில்(true
authoritarian style), கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு அரசே குரல் கொடுத்தபோது குழப்பம் அதன் உச்சத்தை எட்டியது.
‘கருத்துச் சுதந்திரம்’ நிலவுகின்ற இந்த நாட்டில், அரசின் ஆணைக்கிணங்க ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நாம் கண்டோம்.
இதில் கலந்து கொள்ளாதவர்களை சிறையில் அடக்க Valls நினைத்திருக்கக் கூடும் என்பது ஆச்சரியமான விசயமாகும். ஒரு நிமிட மௌன அஞ்சலியில் கலந்து கொள்ளாதவர்கள் இங்கும் அங்குமாக கண்டிக்கவும்பட்டனர்…… –(மொழிபெயர்ப்பு-பிட்சு)
Alain Badiou
From Wikipedia, the free encyclopedia
Alain Badiou (French: [alɛ̃ badju] (born 17 January 1937) is
a French philosopher, formerly chair of Philosophy at the École
normale supérieure (ENS) and founder of the
faculty of Philosophy of the Université
de Paris VIII with Gilles
Deleuze, Michel
Foucault and Jean-François
Lyotard. Badiou has written about the concepts of being, truth, event and the subject in a way that, he claims,
is neither postmodern nor simply a repetition
of modernity. Badiou has been involved
in a number of political organisations, and regularly comments on political
events. Badiou argues for resurrecting the idea of communism.[1]

கட்டுரையின் எழுத்து நிறம் கருப்பில் இருந்தால் வாசிக்க நன்றாக இருக்கும். முக்கியமான மொழிபெயர்ப்பு கட்டுரை. எனது முகநூலில் பகிர்கிறேன்.
ReplyDeleteமதங்களை கிண்டல் செய்வது தவறானது என்னும் கருத்து இஸ்லாம் மதத்துக்கு மட்டும் பொருந்துமா அல்லது ஏனைய மதங்களுக்கும் பொருந்துமா ?
ReplyDelete