(தொழிற்சங்க முதலாளித்துவமும்,அரசு முதலாளித்துவமும்.)
ஏன் தொழிற்சங்க முதலாளித்துவம் என்ற பதத்தை பிரயோகப்படுத்துகிறோம் என்றால், பஸ் கார்ப்பரேசன்களை அரசு சொத்தாக; அதாவது, உங்கள் சொத்தாக பாவிப்பதுதான் வழக்கமாக உள்ளது.
இப்போது, கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் பொருளாதார நலனை காக்கும் பொருட்டு,
நீங்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டம் நியாயமானதுதான்.
ஆனால் கார்ப்பரேசன் நட்டத்தில் ஓடுவதாகக் கணக்கு காட்டுகிறதே!
இந்த நட்டக் கணக்கு உண்மைதானா ? நாணயமானதுதானா ?
மாணவர்களுக்கு இலவச பாஸ் கொடுப்பதால் எத்தனை கோடி தினமும் நட்டமாகிறது. இலவசம் ஒரு அரசியல்
தேர்தலுக்காக, ஓட்டுப் பொறுக்க இது நடக்கிறது. மக்களின் வறுமை ஒரு புறம்; இலவசத்தின் கவர்ச்சியிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளை எந்தக் கட்சியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவில்லை.
மறுபுறம்., மார்க்சிய – லெனினியமும், பெரியார் சிந்தனைகளும் நூல் வடிவத்தில் முடங்கிக் கிடக்கிறது.
இலவசம் சுயமரியாதையை குழிதோண்டி புதைத்து
விட்டது.
[ இலவச அரசியல் ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் என்று ஏலத்திலும் போயிருக்கிறது]
அரசுப் பள்ளி இருக்கும்
ஊர் மாணவர்களுக்கும் பஸ் பாஸ் நகரத்துப் பள்ளிகளுக்குச் செல்ல (அத்துடன்
மாணவர்க்கு விலையில்லா சைக்கிளும் கூட).இது ஊதாரித்தனம் இல்லையா?அரசுப் பள்ளியை
நன்றாக / ஒழுங்காக நடத்துவதற்கு வக்கில்லாத அரசாங்கம் நிர்வாகப் பொறுப்பில் ஏன்
இருக்கிறது?
இதை நீங்கள் / தொழிலாளிகள் என்றாவது கேட்டதுண்டா?கண்டித்ததுண்டா? இலவசம்
உங்களைத்தானே உடனடியாகப் பாதிக்கிறது;நட்டம் உங்களுக்குத்தானே! இப்படிப்பட்ட
அரசாங்கம் ஆட்சியில் ஏற நீங்களும் காரணம்தானே!
இலவசம் யார் வீட்டு சொத்து ? மக்களின் சொத்து . அரசாங்கம் , நிர்வாகம் பண்ணுவதற்குத்தான் உரிமை. பதவியை காப்பதற்கு இலவசம் கொடுத்து மக்கள் சொத்தை நட்டப்படுத்த உரிமையில்லை. இந்த நட்டத்தை நீங்கள் தடுத்திருந்தால் ? அங்கு (கம்பெனி) நடக்கும் ஊழலை தடுத்திருந்தால் இன்றைய போராட்டம் தேவையாய் இருந்திருக்காது. தொழிலாளர் பணத்தை அரசாங்கம் கொள்ளையடிக்க ஏன் உங்கள் தலைமை விட்டது; வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது?
அதை எதிர்த்து, அன்றைக்கு போராடியிருந்தால் இந்த நிலை வருமா ?
இந்த இலவசத்தில் நீங்களும் உரிமை எடுத்துக் கொள்கிறீர்கள்தானே ?
அரசுடமை ஊழியெரன்றால் , பஸ்ஸில் ஓசி. அதாவது, மக்கள் மூலதனத்தை கம்பெனித் தொழிலாளிகளே இலவச உரிமை என்ற சலுகை. இது லஞ்சமாகாதா? மோசடியாகாதா?..
உங்கள் யூனியன் அனைத்தும் (கிட்டத்தட்ட) ஏதோவொரு கட்சி சார்ந்ததே . உங்கள் யூனியன் (அதன் கட்சி) மீது கண்மூடித்தனமான நம்பிக்கை , என்ன ஊழல் நடந்தாலும் ஒரு பக்கச் சார்பு , நியாயமற்றதை , தீங்கானதை எதிர்ப்பதும் சரியானவற்றை ஆதரிப்பதும் என்ற இருவழிப்பாதை உணர்வு உங்களுக்கு இல்லை; இதை யாரும் சொல்லித்தருவதுமில்லை , ஊட்டவுமில்லை . இத்தோடு இயற்கை சீற்றத்தால் மக்கள் துயர் அடைந்தாலும் , ஒரு தார்மீக ஆதரவுகூட ( moral support ) கொடுப்பதில்லை நீங்கள். நீங்கள் மக்கள் சொத்தாக இருக்கும கம்பெனித் தொழிலாளிகள். நீங்களும் , நிர்வாகிகளும் (அரசாங்கம் மந்திரி) அதை உங்கள் சொத்தாக்கிக் கொண்டீர்கள்.
இது யார் சொத்து , உங்கள் சொத்தா ? வடிவேலு சினிமா மாதிரி இது தொழிலாளர் சொத்தாகவும்; மந்திரிகள், நிர்வாகிகள் சொத்தாகவும் ஆகிவிட்டது.
மக்களின் பக்கம் நீங்கள் இருங்கள் ; உங்களின் நியாயமான போராட்டத்தில் அவர்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.
நீங்கள் வெல்லற்கரிய சக்தியாகி விடுவீர்கள். உங்களின் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் கந்து வட்டி அரசியலுக்கு மக்கள் தகுந்த புத்தி புகட்டுவார்கள்.
எப்போது ?
No comments:
Post a Comment