2018 பிப்ரவரி முதல் வாரத்தில் வேலூர்
மாவட்டம் திருப்பத்தூர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தப்பட்டார்.
குத்தியது 11வது வகுப்பு மாணவன்.
இந்த போக்கைத்தான் மனஅலசல் ஆய்வு சமூகம் தன்னைத்தானே குத்தி துன்புறுத்தி இன்பம் காண்கிறது என்கிறது.
[மாணவ, மாணவிகளை படிக்கவும், மார்க் வாங்குவதற்குமான பிரதிகளாக மட்டுமே பார்க்கின்றனர். வீட்டில் அவர்களுக்கு என்ன சூழலோ? எவ்வளவு கொடுந் துன்பத்தை அனுபவிக்கின்றார்களோ? இவற்றையெல்லாம் ஆசிரியர் பெருந்தகைகள் அறிவதுமில்லை, அறிய முயற்சிப்பதுமில்லை.]
சமூகத்தின் அங்கங்களாக உள்ள நாம் ஒருவரை ஒருவர் துன்புறுத்தி இன்புறுவது (masochism) குறித்து மன அலசல் ஆய்வு செய்கிறது. பிராய்டின் ’ சாவு உந்தல் கோட்பாட்டைக் கடந்து (concept of death instinct ) செல்கிறது மனஅலசல்.
மனிதர்களாகிய நாம் ஒரு குழுவை அல்லது தனியன்களாகிய இதரர்களை (else ) துன்புறுத்துகிறோம் என்ற அர்த்தத்தில் சமூகம் தனக்குத்தானே குற்றமிழைத்துக் கொள்கிறது என்று உருவகமாக சொல்கிறார் ஆய்வாளர் Henri Parens .இவர் வன்மம் (aggression
) பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்.
பிறரைத் துன்புறுத்தி இன்புறுதல் (sadism ) , தன்னைத்தானே துன்புறத்தி இன்புறுதல்(masochism
)ஆகிய இரண்டுக்குமான அடிப்படைக் காரணம் எது
என்று தேடுகிறார்.
“ பிரதானமாக, தங்கள் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட கொடும் துன்ப உணர்வுகளால் உந்தப்பட்டே மனிதர்கள் பிற மனிதர்கள் மீது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்” என்ற கருத்தை ஆய்வாளர் முன் வைக்கிறார்.
இந்த நடவடிக்கையானது, குழந்தை / சிறுவர்களின் நடத்தைகளில் காணக் கூடியதாகவும், ஊகிக்கக்கூடியதாகவும் உள்ளவற்றை நன்றாக புரிந்து கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை கொடுக்கிறது (2018ல் தலைமையாசிரியர்; சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு மரித்தார்).
கொடுந்துன்ப உணர்வே முக்கிய காரணி என்கிறார் ஆய்வாளர். அதாவது,
’crimes by
humans against humans are driven by experienced – derived experience of
excessive unpleasure’ என்கிறார்.
அரசும், மக்களும் குற்றவாளிகளை - சிறுவர்களை – மைனர் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுவதோடு தன்
பொறுப்பை முடித்துக்கொள்கிறது.
இச்செயலில் ஈடுபட்டதற்கான காரணம் சித்த எதார்த்தமாக ( psychic
real ) எண்ணப் பதிவேட்டில் பதிவானது அப்படியே இருக்கிறது.
மனிதர்களிடம் நிலவுகிற, தவிர்க்கப்படக் கூடிய கொடும் துன்ப உணர்வுகளை (avoidable experiences of excessive unpleasure )அடையாளங்கண்டு, வன்ம மனப்போக்கை நீக்க வேண்டும்/சமனப்படுத்த வேண்டும். கொடும் மன துன்பத்திலிருந்து விடுதலைக்- கானதை மன அலசலால் கட்டமுடியும். பள்ளிகளும் கல்வி தொழிற்சாலைகளும் இதை எதார்த்தமாக்கிட வேண்டும்.
பிறருடனான உறவில் (இஷ்டத்திற்கு) அடிமைப்படுத்துவது ,துன்புறுத்துதல், சித்திரவதை
போன்ற நடவடிக்கைகள் தனியன்மீது ஏற்படுத்துகின்ற பாதிப்புகளையும் , அதனைத்
தொடர்ந்து வரக்கூடிய அனைத்து விளைவுகளையும் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.பாதிக்கப்பட்டவர்கள்
தங்களைத் தாங்களே புரிந்துகொள்வதற்கு ஆய்வாளர் உதவுவார்.அவர்கள் எதிகொள்ள வேண்டிய
சவால்களை விவரிக்க முடியும். அவர்களை அவர்களே புரியும்படி செய்யமுடியும்.
சாதி சமூகமான நம் சமூகத்தில் தனியன்களை தனியன்களாக பார்ப்பதில்லை. தனியன்களை அவன் சாதி அடையாளத்துடன் காண்பதே ஒருவனை மனத்தளவில் காயப்படுத்துவதான்.(இதுவே ஆண் மைய வாதத்திற்கு வழிகாட்டுகிறது . அத்தோடு காதல் திருமணங்களுக்கு எமனாகவும் சாதியம் இருக்கிறது ) .
அதாவது தனியனை தனியனாக அங்கீகரிக்கப்பதில்லை.
ஜீலியா கிறிஸ்துவா சொன்னது , “ நமக்குள் உள்ள நனவிலியானது பிறரை இதரராக (else ) ,அன்னியராக, புதிரானவராக(uncanny), விளக்கமுடியாத, சொல்ல முடியாதவராகவே (real ) பார்க்கிறது. அதாவது, புதிரானவராகவும் (uncanny) நமக்கு நாமே அன்னியர்களாகவும் , பிளவு பட்டவர்களாகவும் உள்ளோம்.”
உறவின் நெறிகள் பற்றி விளக்க பள்ளி , வீடுகளிலும் , வழிகாட்டிகள் இல்லை.
சாதியை அதிகாரமாக பார்க்கப்படுவதே கிரிமினல் குற்றம்தான்.
உறவு முறை மனித தன்னிலையின் மையமாகும்.
க.செ
No comments:
Post a Comment