டிசம்பர்-6
“ கமல் ஹாசன் சுட்டுக் கொல்லப்படவேண்டும் “ – இந்து மகாசபைத் தலைவர் பண்டிட் சுவோக்
ஷர்மா.- INDIA TODAY
–NOV.4,2017
ஐயா , பண்டிட்
அவர்களே, நீவிர் இவ்வளவு தொட்டால்
சிணுங்கியாக இருந்துகொண்டு மகாசபையை எப்படி வழிநடத்துவீர் ?
“ மன
எழுச்சியின்றி காண்பானும் இல்லை ; காட்சியும் இல்லை “
இந்தக் கூற்று மன அலசல் சார்ந்ததில்லை ; ஆன்மீகம்
சார்ந்தது. அதாவது’ ,
எந்த மதமும் சார்ந்ததில்லை. எளிமையாகச் சொன்னால் சுயமோக வெறிக்கு எதிரானது .
இது நான் என்ற அகம்பாவத்தை அழிக்க / ஆசையின் மூலத்தை
அறிந்து அதை அழிக்க வந்த ஆத்ம விசாரத்தின் ஒரு வரியாகும் . [ தன்னிலை என்று கூடப்
புரிந்து- கொள்ளலாம் ] .உங்கள் அக மனத்தைநோக்கி /
உள்முகமாக பயணப்படுங்கள்.. காண்பானும் / காட்சியும் அகன்றுவிடும்..
கமல் ஹாசனை ( அவர்
கருத்தை ) ஆதரித்து எழுதும் எழுத்தல்ல இது .ஒரு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்
மனப்பாதிப்பினால் தீங்கான / தீய கட்டளையை அணிகளுக்கு அறைகூவல் விடுவதை எண்ணி
வியப்பினால் எழுந்த எழுத்துதான் இது .
“ எங்கே ஒரு
இந்துத் தீவிரவாதியை காட்டுங்கள் ? என்ற சவாலை இனி அவர்கள் விடமுடியாது “ . இதுதானே நடிகர் கமல் கூறியது .ஆனந்த
விகடன் 8-11-77.
இந்தக் கணத்தில்கூட
நடிகர்தான் அவர் ; அரசியல் பேசும் நடிகரே தவிர , பாராளுமன்றவாதக் கட்சியின் தலைவர்
அல்ல .
அவர் சொன்ன கருத்து
உண்மையா , பொய்யா ? என்ற அறிதல் கேள்விதானே முதலில் வரவேண்டும். ஆயிரம் தலை
வாங்கிய அபூர்வ சிந்தாமணியின் கோபத்தைக் காட்டி கல்புர்க்கி ,கௌரி லங்கேஷ் போன்றவர்களுக்கு
விதித்த மரண தண்டனையை ஏன் விதித்தீர் ?
“
கமல் ஹாசன்
சுட்டுக் கொல்லப் பட வேண்டும் “ என்று தீர்ப்பளித்த நீங்கள் யார் ? இந்து மகாசபை என்ற பெயருள்ள
முன்னணி அமைப்பு தானே அது . இந்தியாவின் அனைத்து இந்தியரும் ஓட்டுப் போட்டு
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரல்லவே நீங்கள் ? [ மோடியே எம்பிக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். நேரடியாக இந்திய மக்களால் அல்ல]
இந்தச் சூழலில் இல.
கணேசன், எம்பி ( தமிழக பாஜக வைச் சேர்ந்தவர் )“ நடிகர் கமல் ஹாசனின் இந்து
தீவிரவாதம் குறித்த கருத்து பற்றி விவாதம் நடத்த வேண்டும் “ என்று
கூறியிருக்கிறார் . உங்களை மாதிரி ஆயிரம் தலை வாங்கப் புறப்படவில்லை
மரண தண்டனையை எந்த விசாரணையுமின்றி ஹிட்லர் பாணியில்
நீங்கள் கொடுத்தது ஏன் என்று தெரியுமா? இந்து தீவிரவாதம் என்றவுடன் மனக்
கொந்தளிப்பு ( affect )
வசப்பட்டுவிட்டது உங்கள் மனம் . இப்படி வார்த்தைகளைக் கேட்டாலே ஒரு குழு / மதம்
பற்றிய கருத்து என்று முன்முடிவுக்கு வந்து பழகிய மனசு உங்கள் அமைப்பு .
இம்மாதிரி தடாலடி தண்டனைக்கான காரணம் உங்கள் உளவியல்
அடையாளம்
(
psychological identity ) முதிர்ச்சி பெற்று நிலையான
சுயமாக கெட்டிதட்டி போயிருப்பதுதான். அதனால் எவ்வித ஆய்வுமின்றியே , ‘ நாராயணா ‘ என்ற பெயர் ஓசை கேட்டாலே , மகன்
என்றும் பாராமல் மரணதண்டனை விதித்தானே இரண்யகசிபு , அவன் ஞாபகம் தான் வருகிறது
உங்களை நினைத்தால் .
பயங்கரவாதம் /
தீவிரவாதம் பற்றிய ஆய்வு மொக்கையாக
பூமியில் பலவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரான்சின் கார்ட்டூன் பத்திரிக்கையை
விமர்சித்ததற்காக அந்த பத்திரிக்கை ஆசிரியர்களைக் கொன்றது ,கொலையாளியை போலீஸ்
சுட்டுக் கொன்றது . ஒரு உலகப் பயங்கரவாதமாக எவ்வித விசாரணையுமின்றி லட்சக்
கணக்கில் கூடி பயங்கரவாதத்தை எதிர்த்தது. இப்படியான கூத்து கூட கேள்விக்கு
உட்படுத்தப்படுகிறது.
“ தீவிரவாதம்
/ பயங்கரவாதம்
“ பயங்கரவாதக் கருத்தியலின் அடிப்படையாக உள்ள
நம்பிக்கைகளை சந்தேகிக்க அல்லது விமர்சிக்க முடியாது “.
கருத்தியல்
செயல்பாடு
“கருத்தியல்
நடத்தைசார் கடமைகள் (behavioral mandate )
, வழிநடத்தி , நியாயப்படுத்தும்
நம்பிக்கைகளை அளிக்கவேண்டும் . அந்த நம்பிக்கைகள் புனிதமானவைகளாக ,
மீறக்கூடாதவைகளாக , கேள்விக்குட்படுத்த முடியாதவையாகவும் , முன்னெப்போதுமே
சந்தேகத்திற்கு உட்படாதவையாகவும் இருக்கவேண்டும்.
மத
அடிப்படைவாதக் கருத்தியல்களில் பிளவுபட்ட, முற்றுமுழுதான ‘ நல்லது –கெட்டது ‘
என்று பிரிக்கிற சிந்தனைகளும் , நியாயம் குறித்துப் பேசும் சிந்தனைகளும் பொதுவாகக்
காணக்கிடக்கின்றன “ – Kernberg.
ஆகவே ,
இந்த ‘ புண்ணிய பூமியில் ‘ கமல் கொஞசநாள் வாழ்ந்து தீவிரவாதம் / பயங்கரவாதம் பற்றி
மக்களையும் விவாதிக்க வைத்தபின் தீர்ப்பிடுங்கள்.- இப்போது மக்கள் கருத்துக்கு ,
விவாதம் எல்லா முனைகளிலும் நீங்கள் நினைத்தால் நடத்தலாம்…. நடத்த வேண்டும் .
நீங்கள் விதிவிலக்கு என்று
முடிவுபண்ணிக்கொண்டு பாசிச குட்டையில் விழாதீர்கள் . மக்கள் ஜனநாயகம் எல்லாவற்றையும்விட
முக்கியமானதாகும் ; அடிப்படையானதாகவும் இருக்கிறது ...
.இனி உங்கள் விருப்பம்
க.செ
உதவிய
நூல் :
‘
பயங்கரவாதம் ‘ ஓர் உளவியல் பார்வை - கார்முகில் பதிப்பகம்
No comments:
Post a Comment