பிந்தைய
முதலாளியத்தில் ( Late Capitalism ) புதிய
வெகுஜன ஊடகங்கள் பல்கிப் பெருகியுள்ளன.
கருத்தியலானது குறைந்தபட்சம், மூலை முடுக்கெல்லாம் காத்திரமாக ஊடுருவுவதை
இந்த ஊடகங்கள் சாத்தியமாக்கி வருகிறது.
பல சம்பவங்களை /
நிகழ்வுகளைப் பார்த்தால் பிந்தைய முதலாளியமானது நிலப்பிரபுத்துவத்தை
வறுத்து எடுப்பதற்குப் பதிலாக, அதற்கு அடிபணிந்துள்ளது மாதிரி தெரிகிறது.
பஞ்சகுலா , ஆக. 28.
15
ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாலியல் புகார் கூறினர். குற்றவாளி “ தேரா சச்சா சவுதா “ என்ற ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மித் ராம்
ரஹீம் சிங்.
பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம்
குர்மித்சிங்-ஐ நேற்றைக்கு முன்தினம் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை விபரம் 28ந் தேதி என உயர்நீதிமன்றம்
அறிவித்தது.
பெண்களுக்கு எதிரான சாமியார்களின்
அட்டூழியத்திற்கு தண்டனை தர 15 ஆண்டுகள் ஆகியிருக்கிறது !
மக்கள் இந்தத் தீர்ப்பை ஆதரித்து
கொண்டாடியிருக்க வேண்டுமல்லவா? மாறாக,
இந்தத் தீர்ப்பை லட்சக்கணக்கான மக்கள் எதிர்த்தனர், கலகம் புரிந்தனர் ரயில், கார்களை எரித்தனர்.
அரசாங்கங்கள்
என்ன செய்தன? வேடிக்கை பார்த்தன. ஓட்டுக்காக மக்களிடம் சரணடைந்து வேடிக்கை
பார்த்தனர்.
கலவரத்தை வேடிக்கை பார்த்த அரசு
வன்முறையாளர்களிடம் சரண் அடைந்த வேதனை
மத்திய அரசுக்கும் உயர்நீதிமன்றம் சரமாரி
கேள்வி.
பதில் . சமாளிப்புத்தான்.
மாவீரன் அலெக்ஷாண்டருக்குப்பின், இந்தி கிரேக்க
வீரன் மோடிக்கும் இந்த சரணாகதியில் பங்குண்டுதானே!
நிற்க. 24-08-2017
அஜீத்-ன் விவேகம் படம் வெளியீடு. சினிமா கொட்டகை ரோட்டின் பக்கம் போக முடியவில்லை.
பால் அபிஷேகம் அஜீத்-ன் கட்-அவுட்டிற்கு ( cut-out ) அதுவும் கையில் செல்பி கேமராவுடன். ஜீன்ஸ் வாடையுடன் ரோட்டில் பிரமை பிடித்து
இளைஞர்கள் , கனவில் கனவு காணுகிறார்கள். கட்-அவுட் உயிராகி , பின் கடவுளாகி , பின்
அதற்கு பால் அபிஷேகம். இது பதின்பருவ (teen-age) விளையாட்டு.
நிற்க. இதற்கு முன் ஜெ. குற்றவாளி என்று உயர்நீதிமன்றம்
கூறியவுடன் தமிழகம் கலவர பூமியாகியது
பெண்களைக்கூட உயிருடன் எரித்தனர்.
உண்ண மண்சோறு , பால்குடம் , எல்லா சாமிகளும் அன்று பாலில் குளித்தன. மொட்டை அடித்துக் கொண்டனர்.
இப்போதும் கூட
குற்றவாளி ஜெ. என்று T.V சானல்கள் கூறாது குலைநடுக்கத்துடன். அரசு அலுவலகங்களில் கொலு வீற்றிருக்கிறார்
பெரிய மேடம். அ.தி.மு.க. மந்திரிகள்
அனைவரின் அலுவலகங்கள் முதல் அனுதாபிகளின் சட்டைப் பை வரை ஜெ.படம் இடம்
பெற்றிருக்கும்.
ஏன் ஆன்மீக பீடாதிபதிகள் ,
மடாதிபதிகள் ஆண்டவன் கட்டளைகளுக்கு எதிராக , பெண்கள் மீது பாலியல் பலாத்காரம்
செலுத்துகிறார்கள். இந்த நோயாளர்கள்
(சுயமோகிகள்)
( Narcissist ) மாவல்லமை
( omnipotent ) எண்ணங்
கொண்டவர்கள். இவர்களைக் கட்டுப்படுத்தி வழி
நடத்திட நெறிகள் ( ethics ) ஏதும் நடைமுறையில் இல்லை.
இந்த இடத்தில் ப்ராய்டின் மன அலசல்
கோட்பாட்டைப் பார்ப்பது உதவிகரமாக இருக்கும்.
. . . . ” ஒரு தன்னிலையை ( subject ) நெறிப்படி ( ethics) நடக்குமாறு உந்துகிற முகமைக்கு
( agency) மூன்று குறிப்பிடத்தக்க வார்த்தைகளை ப்ராய்டு பயன்படுத்துகிறார். அவர் லட்சிய அகன் ( ideal ego), தன் முனைப்புக் குறிக்கோள் ( ego- ideal ) , பேரகன் ( super ego ) என்று மூன்றைக் குறிப்பிடுகிறார். . . . . ”
இந்த மூன்றில்
மாவல்லமை சுயமோகிகளின் பேரகனானது ( super ego ) எவரையும் அனுபவி என்று வழிகாட்டுகிறது. பேரகனைத் தவிர வேறெதுவும் இப்படி
நிர்ப்பந்திக்காது. சுசான்சுக்கு (jouissance) ,அதாவது அனுபவிப்பதற்கு ( to enjoy ) பேரகனானது அத்தியாவசியமான ஒன்றாகும் என்கிறார்
லக்கான். ( Nothing forces any one
to enjoy except to super ego. The super
ego is imperative of Jouissance – enjoy )
–Ego Ideal and the Super Ego : Lacan as a viewer of
casablanga – Silavoj Zizek
இப்போது பீடாதிபதிகளுக்கும், அவரை வழிபடுவோருக்கும்
(devotee ) உள்ள உறவென்ன?
…..” மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பற்றிய புரிதலுக்கான
முயற்சிகள் செய்யும்போது, ல்க்கான் எஜமான் / அடிமை உறவினைச் சுட்டிக்
காட்டுகிறார். நம் வசதிக்காக இதை
உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்று கூட மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
ஆனால்,
லக்கான் எஜமான் / அடிமை உறவின் மூலம் வழக்கமான மனித உறவுகளின் பண்பினைச்
சுட்டுவதற்கும் , அடிபணிதல் மற்றும் அடிமைத்தனம் என்பதிலிருந்தும்
தனித்துக்காட்டும் ஒரு உருவகமாக எத்தனிக்கிறார்.
. . . .” லக்கானைப்
பொருத்தவரை மனிதத் தன்னிலையாக்கம் ( subjectivity ) உண்மையில் முதலில் அடையாளமற்ற
இல்லாமையில் குணாம்சப்படுத்துகிறது.
இருந்தாலும், தாம் யார்? என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம் .
லக்கான், மனிதர்களின் வழமையான விரும்பும் ஒன்றாக “want- to- be “ என்பது பற்றிக் கூறுகிறார். அடையாளப்படுத்திக் கொள்ளுதல் என்பது
தன்னிலையாக்க முழுமையாக்கம் ( subjective completion ) செய்ய முற்படும்
ஒரு வழியாகும்.
ஆனால், ஒரு
அடையாளத்தை அடைய ஒருவர் மற்றொருவரிடம் முறையிட வேண்டும். ஆகையால், மற்றொருவருடன் ஒரு உறவை ஏற்படுத்தும்
பொழுதுதான் தன்னுடைய அடையாளத்தை அவர் கோரிப்பெற முடியும். இதேபோல், ’அடையாளம்’ என்பது
இயறகையான ஒரு நிலை அல்ல, அது சமூக உருவாக்கம் ஆகும் ” .
-
Burn out and inter subjectivity ; A Psycho Analytical study from a Llacanian
perspective – Stijn Vanhuele.
இப்போது,
விவேகம் அஜீத்துக்கு பால் அபிஷேகம் பண்ணிய சினிமா ரசிக சிகாமணி களின் உள்ளார்ந்த ஆசை என்ன என்று
புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா. ஆம்.
அவனுக்கென்று ஒரு அடையாளம் கிடைத்துவிட்டது. அது ஒரு மாயை, ஆனாலும் அவனைப் பொருத்தளவில் அது
ஒரு real . இந்தப் போக்கு ஜெயிலுக்குப் போன
குற்றவாளிக்காக தீச்சட்டி எடுப்பது , மண்சோறு உண்பது
பால்குடம் எடுப்பது , அலகு குத்துவது என்பதிலும்
வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
மடாதிபதிகள் இம்மாதிரியான கூடா லீலைகளில்
ஈடுபடுவது பற்றி சிசாக்-ன் கருத்தைக் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்.
. . . . “ இந்துக் கலாச்சாரத்தில்
வைதீகத்திற்கும் ( வேதத்
தொகுதிக்கும் ) [ Veidika (vedic corpus ) தாந்த்ரீகத்திற்கும் ( Tantrika )
இடையிலான வேறுபாடாக அது உள்ளது. அதாவது, தந்த்ரா
என்பது வேதமுறையுடன் ஒத்துப்போகாத ( ரகசியமான)
மற்றொரு வழிமுறையாகும் [ obscene ( secret
supplement to Vedas ) . அது , வேதத்தின் பொதுவான விளக்கங்கள் ( public teaching )
குறித்த எழுதப்படாத ( அல்லது ரகசியமான , வேத சட்டங்களாக இல்லாத ( Non canonic ) அடிப்படைக் கருத்துகளாகும். அது, வெளிப்படையாக மறுக்கப்பட்ட , ஆனாலும்
தேவையான மற்றொரு வழிமுறையாகும் ( publicly
disavowed but necessary
supplement ).
தந்த்ரா (
Tantra ) , இன்று மேற்குலகில்
மிகப்பிரபலமான ஒன்றாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. அது, “ பிந்தைய முதலாளியத்திற்கு “ ( Late
capitalism ) அடிப்படையான “ ஆன்மீகத் தர்க்கங்களை “ ( ultimate
spiritual logic ) வழங்குகிறது.
தந்த்ராவானது, ஆன்மீகத்தையும், இகவுலக
மகிழ்வுகளையும் ( spirituality
and earthly pleasure )
எல்லை கடந்தவற்றையும் பருண்மையான லாபத்தையும் ( transcendence
and material profit) , தெய்வீக அனுபவங்களையும் வரைமுறையற்ற பொருள்
வாங்கலையும்
( divine
experience and unlimited shopping)
இணைக்கிறது. அனைத்து விதிகளையும் ( rules)
சமூகத்தடைகளையும் ( taboos ) மீறுமாறும்,
புத்துணர்வுக்கான ( enlightenment )
பாதையாக உடனடித் திருப்தியையும் ( instant gratification)
பிரச்சாரம் செய்கிறது “. . . . .
- Slavoj zizek ; “ Denial ; The liberal utopia”
·
குற்றவாளிக்கு ஜெயில்தண்டனை என்பது செய்த செயலுக்கானது
·
செய்யும் காரியம் நெறியானது என்று தன்னிலைக்கு
( subject ) வழிகாட்டிட வேண்டும் ; செய்யும் தொழிலை நெறிப்படுத்த வேண்டும்.
·
இந்திரன் கதை போன்றவைகள் கட்டுடைக்கப்பட வேண்டும். சடங்கு சாத்திரங்களை நடைமுறைக்கு
முன் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
·
மதமும் ஆன்மீக வாதிகளும் கூட சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான்.
·
ஓட்டுக்காக மதவாதிகளின் ஆதரவை நாடும் கட்சிகளை கேள்விக்குட்படுத்த வேண்டும்.
க.செ
No comments:
Post a Comment