‘ ரோஹித் வெமுலா ‘ என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்டார் .
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில்
ஆராய்ச்சி மாணவர் அவர்.
“ இவர் பிறப்பால் தலித்”. அவரின் இறப்பிற்கு யார் யார் குற்றவாளி
என்ற வாதப் பிரதிவாதம் இந்திய அரசியல் தளத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
குற்றவாளியாக அந்தப் பல்கலைக்கழகமும் ( வேந்தரும்
) ,மத்திய அமைச்சர் ஒருவரையும் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது.
முதலில் அவரின் இறப்பிற்குப் பின் கிடைத்த கடிதம் .
முதலில் அவரின் இறப்பிற்குப் பின் கிடைத்த கடிதம் .
கடித மொழியாக்கம் தி இந்து 21-1- 2016.
அவரின் இறப்பிற்கு முன் ;
……“ கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பட்டியல் இனத்தைச்
சேர்ந்த 18 மாணவர்கள் இப்படி உயர் கல்விக் கூடங்களில் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களையும்
, சமூகப்
புறக்கணிப்புகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி
தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்
”.
நன்றி – தி இந்து
21-1-2016 தலையங்கத்தில்
|
“ My BIRTH IS MY FATAL ACCIDENT ”
“ இளம் இதயத்தின் கடைசித்
துடிப்பு” – தி
இந்து 21-1-2016
என் பிறப்பு ‘ MY
FATAL ACCIDENT ‘ ( விதி ) என்பது என் இறுதிக்கானது என்கிறாரா? அல்லது
என் பிறப்பு என் சாவுக்கானது என்கிறாரா ? நடந்த நிகழ்வுடன் FATAL-யை அர்த்தப்படுத்தினால் ‘ சாவுக்கானது ‘ என்று பொருள் கொள்வது சரியாய் இருக்கும் .
தன்
தற்கொலைக்கான காரணத்தின் முதல் அடியானது
தன் சாதியில்
( My BIRTH ) இருப்பதாக நினைத்துக்கொள்கிறார் . சாதி ஒரு முக்கிய காரணியாக இருக்கக்கூடும் ; இதுவே முற்றான
காரணமாகச் சொல்லிவிடமுடியாது.அது ஆய்வுக்குரியது.
..... “ எள்ளளவும்
காயமடையாமல் அன்பைப் பெறுவது என்பது கடினமாகிவிட்டது “.
- ரோஹித்தின் கடிதம். [ அங்கீகாரத்திற்கான ( recognition ) நனவிலி ஏக்கம் ]. அவர்
வாழ்ந்த அமைப்பின் “ பண்பைக் ” கூறுகிறார் . அது நட்பு அற்றது , அன்பற்றது ; பிறரை (தலித்தை) நேசிப்பது , தன்னிலையாக ஏற்பது என்பதே இல்லாதது.
மிகச்சரியாக நடைமுறை , பண்பாடு , சமூகப் பழக்கவழக்கங்கள்
இருந்தாலும் தலித் என்பதற்காகவே ஒரு போலியான, கபடமான , வஞ்சப் புகழ்ச்சியான
ஏற்புதான் பிரதானமாய் இருக்கிறது . அவர் வாழ்ந்த , மற்ற தலித் மாணவர்கள் வாழுகின்ற
, இனியாகும் மாணவர்களின் அமைப்பில் பரவலாகவும் , உள்ளார்ந்தும் , நனவிலி
வெறுப்பாகவும் உள்ளது.
இந்த நிறுவனம் மட்டும் விதிவிலக்கல்ல. சமூகத்தில் நிலவும் சாதிய
ஒடுக்குமுறை மனரீதியில் , மதரீதியில் , சமூக , கல்வி நிறுவனங்களிலும் அது
பிரதிபலிக்கத்தான் செய்யும். செய்கிறது.
“ ஒரு மனிதனின் மதிப்பு அவனது பிறப்பு அடையாளங்களால்
நிர்ணயிக்கப்படுகின்றன.”
..................................................
“ ஒரு மனிதன் எப்போதாவது அவனது ஆன்மாவின் அடிப்படையில் மதிப்பீடு
செய்யப்படுகிறானா? என்றால் நிச்சயமாக இல்லை “ ( அதே கடிதம் ) . [தீட்டின் பல வண்ணங்கள் ( depression ) ].
“ சுயமோகம்
மனப்பாதிப்பை (
affect )
எப்போதும் வெற்றிகொண்டதில்லை . அவரின் இத்தோல்வி சுயமோகப் பின்னோக்கல் (
Narcissistic regression )
ஆகிறது “ - Be’la Grunberger.
புற அடையாளங்களின் மதிப்பீடு அளவுக் கருவியை
அவர் ஏற்கவில்லை.
ரூபத்தில்தானே சாதி உள்ளது . புறத்தை அளக்கும்
கருவியை நீக்கிவிட்டு இங்கு ஆன்மா என்பதை சித்தத்திலிருந்து புறப்படும் தன்னிலை / Self
என்று எடுத்துக் கொள்ளலாம் – ( way of thinking ) - என்கிறார்
போலும் .
அப்போது சமூக மதிப்பு , சமூக அதிகாரம் , ஏற்பு போன்றவைகள் தவிர்க்கவியலாமல்
கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கை அவருக்கு.
சுயமோகப் பிம்பம் ( illusion ) உடைந்தவுடன் ,
“ எனது பால்யப் பருவத் தனிமையில் இருந்து என்னை
எப்போதுமே விடுவித்துக் கொள்ளமுடிந்ததில்லை ” .
........................................
“ யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது
பிம்பம் மிஞ்சுகிறது “
( கடிதத்திலிருந்து
) .
[ இது Regression ( பின்னோக்கல் ) . காணொலிக் காட்சி
தனக்குமட்டும் ].
“ இது
பாலுக்கு அழும் குழந்தை மனமல்ல . இது அன்புக்கு , அரவணைப்பிற்கு , தன்னின் அங்கீகாரத்திற்காக அழுகிறது “ - Otto F. Kernberg
இதுவரை வாசித்தது எல்லாம் ரோஹித் இறந்தபின்,
அவர் கடிதத்தை வைத்து கண்டுணர்ந்தது.
இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டிய
எதார்த்த சூழலில் கண்டபடி இருந்தது எனலாம் .
பின் நவீனத்துவத்தின் தீண்டாமை
பின் நவீனத்துவத்தின் தீண்டாமை
இந்த 5 மாணவர்களும் பல்கலைகழகத்தில்
படிப்பை தொடரலாம்.
ஆனால்
பல்கலைக்கழக விடுதிக்கோ, நிர்வாக அலுவலகத்திற்கோ, பொது இடத்திற்கோ செல்லக்கூடாது
என்று நிபந்தனை விதித்து டிசம்பர் 15-ல் உத்தரவிட்டது. ரோஹித்தின் ஆய்வு
உதவித்தொகை கடந்த
ஏழு மாதங்களாகநிறுத்தப்பட்டுள்ளது ” .
- The Hindu 21-1-2016
|
தீண்டாமையின் ( பல்கலைக்கழக விதி ) பிடியில் சுமார் 10 நாட்கள் வானத்தை
மட்டுமே கூரையாகக் கொண்டு வெட்டவெளியில் தானும் , தண்டிக்கப்பட்ட மற்ற மாணவர்களும் பல்கலைக்கழக விதி கொடுத்த
தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் ; பிற , சக
மாணவர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டு இருப்பதும் ; சக மாணவர் சமூகம் தங்கள் மீதான
தீண்டாமை என்னும் வன்கொடுமை சட்டப் பிரயோகத்தை எதிர்க்காமலும் , எதேச்சதிகாரத்திற்கு
அடிபணிந்து போய்விட்ட தங்கள் மாணவ நண்பர்கள் ; பின் நவீனத்துவத்தை ( post modernism ) போதித்த பேராசான்கள் ; இவர்களின்
மனப்போக்கை , நடத்தையை எப்படிப்
புரிந்து கொள்வது ? Is there any way to intellectualise within that relation .
அறிவுமயமாக்கல் எதிர்திசையில். அவர் அறிவாளி
என்பதை விட கொந்தளிப்பு மனத்திற்கு (Emotion ) அடிபணிந்தவர். அடிப்படையில் அவர்
பங்கேற்ற போராட்டம் தோல்வி நோக்கிச் செல்கிறது என்பது தெரிந்துவிட்டது. சக மாணவர்
சமூகமும் தீண்டாமையை ஏற்றுக்கொண்டுவிட்டது. அது மாணவர் அமைப்பு மட்டுமே ; கட்சி
அல்ல. பிரச்சாரம் , கிளர்ச்சி , போராட்டம் போன்றவைகளுக்கிடையில் வித்தியாசம்
தெரியாது அதற்கு. ஒரு வலிமையான ஐக்கிய முன்னணி இல்லை. நம்பிக்கையான ஆதரவு
சக்திகளும் இல்லை. தலித் மாணவர் போராட்டங்களை ஒடுக்குபவர்களுடன் தலித் தலைவர்களே
சேர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து வாழ்கிறார்கள்.
ஓட்டு வியாபாரக் கட்சிகள் இம்மாதிரியான ஐனநாயகத்திற்கான , போர்க்குணமுள்ள
அமைப்புகளை ஓரம் கட்டி விடுவார்கள் ஒரு முத்திரை குத்தி.
இதை எல்லாம் கணக்கில் கொள்ளவிடாமல் அவரது மனப்பாதிப்பு / மனக்காயம்
உள்முகமாகப் பயணித்துவிட்டது எனலாம்.
“ Suicidal
ideation , Suicidal intention ,
Affective disorder are commonly associated within
Personality disorder “ .- Otto F.
Kernberg.
தற்கொலை ஒரு வாழ்க்கை முறையாக. ஏனென்றால் தன் சுசான்ஸ் (
Jouissance ) - தன் மகிழ்ச்சி - அதிகார
வர்க்கத்தால் காயடிக்கப்பட்டு விட்டது.
“ சுயமோகம்
தன்மேல் மட்டும் பிரேமை கொள்வதில்லை. அத்துடன் தன்னை எல்லாம் வல்ல (Omnipotence )
என்ற உணர்வும் கொண்டுள்ளது “. – Be’la Grunberger.
“ எல்லாம்
வல்ல நான் “
என்பது எளிதில் மனக்காயத்திற்கு உள்ளாகிறது. இந்த சுயமோகக் காயம் , தான் எந்த
அதிகாரமும் அற்றவனான உணர்வை ஏற்படுத்துகிறது“ .
”“எல்லாம்
வல்லவனுக்கு “
ஏங்கிய மனம் ( illusion )
ஏதுமற்றவனாகத் தன்னைத் தானே பார்க்கச்
சகிப்பதில்லை . [ “
will power
“ எல்லாம் வாடி / வடிந்து விட்டது ].
இப்போது சுயமோக ஏக்கம் (
longing
)
வீபரீதமான ஆசையை விதைத்துவிட்டிருக்கிறது.
சாதியத்தை பல்கலைக்கழக நிறுவனத்துடன் மட்டுமே
என்று நானுணுர்வு ( Ego ) சுருக்கிப்
பார்த்துவிட்டது.
தலித் சாவு என்றால் பிணத்தை பொதுவழியில் கூட
எடுத்துப் போகமுடியாது. அது தீட்டு . வயல்வெளியேதான் எடுத்துச் செல்ல வேண்டும் .
போலீஸ் அதிகாரம் அவர்களின் புனிதம் கெடாமல் பார்த்துக் கொள்ளும்.
‘ ரோஹித்
‘ பகுதியை முழுமையாகக் கருதிவிட்டார். ஆனாலும் ஒருவகையில் –
‘
சீதக்காதிதான் ‘ . அவர் ஆசையை நிறைவேற்றி , ஒரு வகைத் தூக்கத்தை கலைத்திருக்கிறார்
எனலாம் .
விநாயகம்
க.செ
23-1-2015