[ பொள்ளாச்சி , மீண்டும் இந்த மனிதர்கள் தோன்றாமல் இருக்க ]
[
சென்ற பகுதியின் தொடர்ச்சி…….]
கோபம்
ஒரு தூண்டல். தூண்டலுக்கு செவி சாய்த்தால் நீ அடிமை [ உன் இச்சை (drive ) உட்பட]
இந்த துயர சம்பவத்தில் பெண்ணின் வாக்குமூலம் என்ன ? இவனை முன்ன பின்ன தெரியுமா ? சுயமோக,
சைக்கோட் வெறியனின் வாக்குமூலம் இல்லை
[ பொதுவாக இம்மாதிரியான சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள்,அவர்களின்
நெருங்கியவர்களை சுதந்திரமாக பேச அனுமதித்து ( free association ), அதாவது முதலில் அவர்களிடமிருந்து,
அவர்களின் பிரச்சினைகள் என்ன?, சுயமோகக் காயங்கள் என்ன, ஏமாற்றமென்ன? என்பதை அறிவது
மிக மிக அவசியம் . சைக்கோட்டிக் அமைப்பிலிருந்து வெளிவர, சுயமோக வெறி ஏன் இவ்வளவு தூரம்?
அவன் வளர்ப்பென்ன / இந்த அவனின் மன நிலைகுலைவிற்கு (mental imbalance ) காரணமென்ன?
எந்தெந்தக் காலக்கட்டங்களில், அவன் சித்தம் எப்படிக் கட்டப்பட்டது? அவனின் முன்மாதிரிகள்
(role model ) யார்? [ சிவப்பு ரோஜா கமலா அல்லது காயத்ரி ரஜனியா?.
] சிவப்பு ரோஜாவில் கதாநாயகன் பெண்டாட்டிகளை கொலை செய்வது வாடிக்கை. மற்றொரு படத்தின்
நாயகன் தன் மனைவியை விபச்சாரியாக்கி காசு சம்பாதிப்பான் ]
பார்க்கும்
ரசிகர்களையெல்லாம் இது பாதிக்கும் என்று மன அலசல் கூறாது.
மாறாக
, ஏற்கனவே பலவீனமான மனத்தள்ளாட்டம் ( mental imbalance ), Name of the Father, அதாவது , தந்தை அதிகாரத்திற்கு உட்படாத செல்லக்
குழந்தைகள், குடும்ப வக்கிரங்களைப் பார்த்து அதில் நாட்டம் உள்ளவர்கள்
, இன்னபிறர் போன்றவர்களுக்கு மனப்பாதிப்பை (affect ) உண்டாக்கும். அந்தப் பாதிப்பு பிரக்ஞையாக
இருக்காது, நனவிலியாக உறைந்திருக்கும். சூழலால் உறைந்திருந்த மனப் பாதிப்பானது (affect ) பிரக்ஞை மொழியில் உருவகம், ஆகுபெயெராக வெளிப்படும்.
ஆய்வாளர் மட்டுமே அதை அறிய முடியும் ]
காயடிப்புச் சிக்கல் ( castration complex ) காத்திரமானது.
அதற்கு அடிமையானால் அரசன் கூட ஆண்டி மாதிரி நடந்துதான் ஆகவேண்டும். இந்தியர் அனைவரும்
அறிந்த ராமகாவியத்தில் குறிப்பாக ராமர் இருமுறை தவறு செய்கிறார் . ( மாய மானைத் தேடி
மனைவியைப் பறிகொடுத்ததை சேர்த்தால் தவறு 3 ஆகும் ) முதல்முறையில் தன் வீரத்திற்கு தானே
இழுக்கைத் தேடியது ; வாலியை மறைந்திருந்து தாக்கியது. ( இதை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
ஒருவகையில் ஏற்கவில்லை). இரண்டாவது குற்றம் காயடிப்பு அச்சத்தால் மனைவி
சீதா தேவியை தீக்குளிக்கச் சொன்னது..
இனி, வக்கிரம் ,வக்கிரனின் சித்தக்கட்டமைப்பு:
முதலில் சமூக அரசியலாகப் பார்த்தால் திடீரென்று
ஒருநாள் காலை 1000,500 ரூபய் நோட்டுகள் செல்லாது என்று மக்களிடம் பீதியைக் கிளப்பி,குறிப்பிட்ட
நாட்களுக்குள் ரூபாய்களை மாற்றியாக வேண்டும் என்றது. [அலைமோதும் கூட்டத்திற்கு எந்தச்
சிறப்பு ஏற்பாடும்,கூடுதல் இடங்களும் ஏற்பாடு பண்ணவில்லை ]. இதில் தந்திரமான ( tricky ), வானளாவிய
, வக்கிரமான கருத்தமைவை காட்டினார்கள்.பொழுது புலர்ந்ததும் பல பொருளாதார நிபுணர்களால்
அது விமர்சனத்திற்குள்ளானது.
தமிழக அரசு தேர்தல் நெருங்க நெருங்க கருக்கலில்
2000 ரூபாய், 500 ரூபாய் என்று அதே மக்கள் வரிப்பணத்தை கொடுத்துவிட்டு மார்தட்டும்
வக்கிரர்கள் ( pervert ). தமிழகத்தில்
விவசாயிகள் தற்கொலை, குறுந்தொழில், சிறு தொழில்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதமாவது ஓடாமல்,
கதவு அடைத்தும் அடையாமலும் உள்ளன. கிஞ்சித்தும் கவலையற்று எடப்பாடி உலாவுவது வக்கிர
மனம் மேலான்மை செலுத்துவதால்.
வக்கிரனின் சிந்தனை ,செயல்பாடுகள்:
இவர்களுக்கு தந்தை அதிகாரம் ( Name of the Father ) போதுமான
அளவு அச்சுறுத்தலாக இல்லை. ரகசியமாக குடும்ப உறவில் எல்லோருடைய பாத்திரங்களையும் ( role
)எடுப்பார்கள்.
சட்டத்தை திசை திருப்புவார்கள் (distract ). அதை
நியாயப்படுத்தி வக்கிர கருத்தியலை பரப்புவார்கள்.
வக்கிரர்கள்
திருகல், தனக்கேற்ப வளைத்தல், பிறரைத் தூற்றுதல் (twist , bend, abuse) குணம்
கொண்டவர்களாக, அதிகாரம், கேடு விளைவிப்பவர்களாக ( power,corrupt ) இருப்பர்.
தங்களை தவறாக , சுயமோகத்துடன் வீராப்பாக பிரதிநிதித்துவப்படுத்துவர்.
எல்லாச் சமூக ஒழுங்கிலும் மறைமுகமாக ,வெளிப்படையாக
கவிழ்ப்பு ( subvert
)
நிலைப்பாடு எடுப்பர்;
மறைமுகமாக இனவெறி, சாதி வெறியை தூக்கிப்பிடிப்பர்.
வக்கிரன் பெண்களை துச்சமாக பயன்படுத்துவான்.
கேட்டால், அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்வது
, அந்த மகிழ்ச்சி எனக்குத் திருப்தி என்பான்.
“ Pervert
does not want to know”.
எதை
எடுத்தாலும் தன்னை யோக்கியன் என்று நிறுவ பின்னோக்கிச் செல்லும் வழக்கமும்( regression ) உள்ளது.
வக்கிரி : படையப்பாவின்
நீலாம்பரி: தான் அடைய நினைப்பவனை எப்படியும், எந்த வழியிலும் அடைய முயற்சிப்பது ,இல்லாவிட்டால்
ஏகே 47-யை எடுப்பது. தன்னை கற்புடையவளாக விளம்பரப்படுத்துவது.
சுயமோக வக்கிரனுக்கு, மிகப் பழைய படமான
நானே ராஜா சுப்பையா,சிவாஜி நடித்ததை தேடிப்பாருங்கள்.
தனக்கு, தான் விரும்பும் அடையாளத்தை
கொடுக்க மறுக்கும் இந்தியாவை, இந்திய அரசை காட்டிக் கொடுத்து ஜெர்மனுக்கு தப்பிச் செல்ல
முயற்சிக்கும் வக்கிரனை அந்த நாள் சினிமாவில்
பார்க்கலாம்.
மிக நீண்டுவிட்டது கட்டுரை, வேறு சந்தர்ப்பத்தில்
மேற்கொண்டு பார்க்கலாம்.
குற்றவாளிகளின், இந்த சித்தக் கட்டமைப்பாளர்களின்
உளவியல் ஆய்வு தேவை; அத்தோடு அவர்களுக்கு ஆதரவுடன் தோள் கொடுப்பாரும் வேண்டும். சிகிச்சை
பற்றி விரிவாக எழுதி போர் அடிக்க விரும்பவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வரும்.
இறுதியாக டாக்டர் லெக்கானின் முக்கிய கூற்று:
உந்தல்
(drive ) என்பது
வெளிப்படையானதில்லை.
ஒருவர் திடீரென்று மனத் தள்ளாட்டத்திற்கு (mental imbalance ) உள்ளாகிறார்
என்றால் அங்கு தூண்டல் உள்ளது. அதாவது நனவிலி (unconscious )உள்ளது என்று உணரவேண்டும்,
டாக்டர் லெக்கான் “ உங்கள் நனவிலியை ( unconscious ) அடுத்தவருக்கு
மொழியில் தெளிவாகச் சித்தரிக்க ( portray ) முடியாது;
மொழியாக்கம் ( translate) பண்ணிவிட
முடியாது” என்கிறார் .
இறுதியாக,” நமது வாழ்வின் அர்த்தமென்ன ? நாம்
தரமான வாழ்வை ( worth
living
) வாழுகிறோமா ? கருத்தியலாக (ideology )எப்படி
அனுபவப்படுகிறோம் என எண்ணிப்பார்க்கச் சொல்லுகிறது “.
கூடுதலாக ,துணைக்குபெரியாரை சேர்த்துக் கொண்டால்
நாம் சுயமரியாதையான வாழ்வுச் சூழலில் இருக்கிறோமா
?
Other -க்கு ( பெரிய O) ஒரு சின்ன அறிமுகம்
மற்றமை ( Other )
“ மனிதனின் ஆசை மற்றமையின் ஆசையாக ( desire of the Other ) உள்ளது “ என்கிறார் லக்கான் . அதாவது , Big ‘ O
’
.
Other என்பது.....
1 . மற்றவர் விரும்புவதை மனிதன்
ஆசைப்படுகிறான்.
2 . மற்றவரின் ஆசையை ஏற்பதற்கு விரும்புகிறான்
.
3 . மற்றவரின் வசம் உள்ளதை தன் வசமாக்கிக்
கொள்ள விரும்புகின்றான் .
4 . மற்றவரின் ஆசைப்படு பொருளாக இருக்க
ஆசைப்படுகிறான் .
-
Lewis A . krishner
நனவிலியானது (
unconscious ) மற்றமையின் சொல்லாடலாக
இருக்கிறது. பேச்சில் நான் ( ‘ I
‘
) எந்தத் தளத்தில் கட்டமைக்கப்படுகிறதோ அந்தத் தளம் மற்றமையின்
தளமாகும்- லக்கான்.
மற்றமை ( Other ) ஒரு நபரல்ல ;
அது ஒரு தளம் ;
அது சொல்லாடல் கட்டமைப்பிற்கு அவசியமான ஒரு
தளமாகும் ( a locus ‘ ) .
Other – ஐ லக்கான் பல அவதாரமாக
சித்தரிக்கிறார் ;
The Other
as language ( ie , as set of all
signifiers )
The
Other as demand
The
Other as desire ( object a )
The Other as jouissance
( பார்க்க . மற்றமை .
இதழ் – 3 )
இந்த
சின்ன (o ) other என்பது இதரர் , இதர, பிற என்ற
பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது ; ஒருவரின் விருப்பு, வெறுப்பிற்குரிய ஒருவர் (
இதரர்).
இந்த அடிப்படையான வேறுபாட்டை சுட்டிக்
காட்டவேண்டிய அவசியத்தில்தான் இங்கு இது குறிப்பிடப்படுகிறது .
1 . இது எதில் சேர்த்தி
ஜெய்ப்பூர் ; மார்ச் 10 ; தின மலர்.
கள்ள
உறவுக்காக அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது – ஐகோர்ட்.
3 காலத் தலைப்பு ; உபயம் தின மலர்
” ராஜஸ்தானில் ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கும்
ஒரு ஆண் போலீஸ் அதிகாரிக்கும் இடையே தகாத
உறவு ”.
இதுபற்றிய புகாரின் அடிப்படையில் ,
“ இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது”.
இதை எதிர்த்து இருவரும் நீதி மன்றம் சென்றனர்.
உயர் நீதிபதி சர்மா வழங்கிய தீர்ப்பு
:
தகாத உறவு வைத்துள்ளனர் என்பதற்காக அரசு ஊழியர்கள்
மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது.
இவர்களின் கள்ள உறவால் பாதிக்கப்பட்டவர்கள்
அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து
தீர்வு காணலாம் ( அடிக்கோடு மற்றமை ஆசிரியர்).
பின் நவீனத்துவ தீர்ப்பு மாதிரி உள்ளது . எளிமையாக
எள்ளி நகைக்கக்கூடிய செய்திதான்.
இம்மாதிரியான கள்ள உறவை அனுமதித்தால் போலீஸ்
துறை இனி என்னவாகும்.
இது எல்லா மாநிலத்திற்கும் ஏற்புடையதான முன்னுதாரன
தீர்ப்பு என்றால் ?......விடியும் பொழுது
எப்படி இருக்கும்?
( இவர்கள் இருவரும் திருமணம் ஆனவர்களா ? செய்தியில்
இல்லை )
பாதிக்கப்பட்டவர்கள்
என்றால் என்ன ? ஒவ்வொரு காவலனும் பாதிக்கப்பட்டிருப்பான்.
குடிமகனும் பாதிக்கப்பட்டிருப்பானே !
என்ன செய்வது ?
“ எவரும்
கஸ்டப்படுவதை விட அதிகமாகக் கஸ்டப்படக்கூடாது……
முழுச் சமுதாயமும் அதன் உறுப்பினர்களின் லாப
நஷ்டங்களின் பங்காளிதான் “…….
இது வழக்கமான ஒழுக்கமல்ல. சூஃபிகளின் நெறி
( Ethics ) - சூஃபி கதைகள் ,பூமா வாசுகி
.
2. வக்கிரத்தின் கருத்தியல் வழிகாட்டி
நவீனமயமாக்குதல் [ அதாவது அமெரிக்க ஜனாதிபதி என்ற
சுய கௌரவம் ( சுயமோகம்) ] என்ற பெயரில் தமிழகமெங்கும் இந்தியாவெங்கும் சுமார் லட்சக்கணக்கான கோடிகளில், 8 வழிச்சால 4 வழிச்சாலை 14 வழிச்சாலை என்றும் அதுதான் நவீன வளர்ச்சி என்றும் வக்கிர கருத்தியலை பரப்புகின்றனர்.
லட்சக்கணக்கன
மரங்களை , சின்னஞ் சிறு செடிகளை ,கொடிகளை அழித்துவருகிறனர்.
அடுத்த
பத்தாண்டுகளில் இதன் பலன் தெரிய வரும்.
உண்மையில்
இவர்களின் சேவை கார் தொழில்சாலைகளுக்காக, கான்ட்ராக்டர்களுக்காக,
கட்சி நிதிக்காக.
வாழ்க
வளமுடன்.
3. ஒரு அவசரச அறிவிப்பு
வருங்கால
பாரத் 007
007 என்பது ஹாலிவுட் சினிமா கதாநாயகன்.
1970 , 80 - களிலேயே விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளை
கடத்திவரும் வில்லனை அழிப்பவராக சீன்கானரி (007) நடித்தார்.
இன்று மார்ச், 27- 2019ல் நவீன பாரத்தின் (
வருங்கால ) 007 வெளிப்பட்டுள்ளார் ( நடிகர் மோடி).
3 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது
எந்த எதிரியின் ராக்கெட் சுட்டு வீழ்த்தப்பட்டது
??
எதிர்கால அச்சுறுத்தலுக்கு கைகொடுக்கும்
இந்தியாவில் எல்லைத் தகராறு இரண்டுபேரிடம் மட்டுமே.-
பாகிஸ்தான் , சீனா.
இவர்களில் யார் பிரதான எதிரி? சீனாவிடம் கைகட்டி
நிற்பது யார் ? யார் ?
அதாவது ,ப்ரான்ஸ் , இங்கிலாந்து , ஜெர்மனி
போன்ற நாடுகளால் முடியாதது மோடி தலைமையிலான
இந்தியாவில் நடந்திருக்கிறது . அப்படித்தானே !.
போர் விமானங்களும் , ராணுவ டாங்குகளும் ஐரோப்பாவிடமிருந்து
சொன்ன விலை கொடுத்து வாங்கும் இந்தியா,
இன்று உலகின் நான்காவது ( வல்லரசு ) தினவெடுத்த நாடாம்.
பாவம் இந்தியர்கள்
அண்டை, அயலார்களோடு சுமுகமாக வாழ்வதற்கு பிறருடன்
நட்பு , ஒருவரையொருவர் மதித்தல் , போன்றவையே
தேவை ; போர் தளவாடங்களையும் ராக்கெட்டுகளையும் குவிப்பதால்
பகையுணர்வே புகையும்.
இந்த நவீன
007-னின் தோற்றத்தை வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று குறுக்கிவிடக்கூடாது
பாஜக-வின்
அகண்ட பாரத கனவிற்கான அச்சாரமாக இதைக் கொள்ளவேண்டும்.
மீண்டும் மோடி வந்தால் பாகிஸ்தான் என்ற நாடு
இராது என்ற சொல்லாடல்கள் அரசியல் வெளியில்
உலவ ஆரம்பித்துவிட்டது.
இது
வக்கிரத்தின், அகண்ட பாரத் கருத்தியலின் ஒரு பாகம் ( part ) ஆகும்.
க.செ
sema mokkai
ReplyDelete