7 Apr 2019

அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி----- பகுதி - 3


மோடி அரசு தமிழகத்திற்கு ஒரு முக்கிய சடங்கை ,அதன் முக்கியத்துவத்தை   உணர்த்திவிட்டது.
       அதுதான் பாராளுமன்ற தேர்தல் , அழகர் ஆற்றில் இறங்கும் நாள்தான் [ சித்திரைத் திருவிழாவில் அதிமுக்கிய நிகழ்வு ] இதுவரை மிகப்பெரிய திருவிழாவாக இருந்து வந்திருக்கிறது.
       அந்த வரலாற்று நம்பிக்கையை எளிமையாகப் புறந்தள்ளிவிட்டு , பாராளுமன்ற தேர்தல் எதற்காகவும் காத்திருக்காது என்றும், தேர்தல் தேதியை தள்ளிவைக்க முடியாது என்றும் சொல்லிவிட்டது.
       முதலாளித்துவ பாராளுமன்றம் வைணவ ( அத்வைதம்) கட்டிலில் இடம் பிடித்துக் கொண்டது.
       பரம்பரை நம்பிக்கையின் ( சடங்கு ) இடத்தில் நவீன விழாவின் ( பாராளுமன்ற தேர்தல் ) வித்தை ஊன்றி புதிய நம்பிக்கைக்கு காவிக்கொடி அசைக்கப்பட்டிருக்கிறது.
       “ நம்பிக்கையானது மறைமுகமாக செயல்படுகிறது ; அதாவது , கருத்தியல் அடையாளத்திலிருந்து ( ideological identity ) சிந்தித்தலை நீக்கிவிடுகிறது ; கருத்தியல் நம்மீது ஒரு பிடிமானத்தை செலுத்துவதற்கு இது வழிவகுக்கிறது “ என்கிறார் சிசெக். கூடுதலாக  “ நம்பிக்கையும் ஆசையும் ( desire ) ஒன்றோடொன்று உறவுடையதாகும் “
       சென்ற பகுதியில் காமம் என்பது ஆசையில் ( desire ) அடக்கம் என்பதைத் தெரிந்தோம்.
       கூடுதலாக , மனிதகுல இருத்தல் ( humans being ) ஆசையாக இருக்கிறது ;         ஆசையானது இதரரின் ஆசையாக இருக்கிறது . இது புகழ்பெற்ற தத்துவார்த்த      விசயங்களாக உள்ளது ” என்கிறார் Kojeve.
       Kojeve ஆசையை பார்க்கும்விதம் புதினமாக உள்ளது.
       ” ஆசையானது இயற்கையானதாக இல்லாத ( non - natural  ) பொருளின் மீது செலுத்தப்படும்பொழுது மட்டுமே விலங்கின ஆசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய மனிதகுல ஆசையாக இருக்கிறது .
        இன்னும் காத்திரமாக அவர் “ பிறரின் பௌதீக உடல்மீதல்லாமல் இதரரின் ஆசையை நோக்கி ஒருவரின் ஆசை செலுத்தப்படும்பொழுது மட்டுமே இந்த ஆசையை மனிதகுல ஆசையாகக் கருதமுடியும் “ என்கிறார்..
              ஆக , பெண் உடல் மீது செலுத்தப்படும் ஆசை , மிருக ( விலங்கின )ஆசையே ;
       அது மனிதத்தின் விருப்பமோ , காதலோ இல்லை என்றாகிறது.

       ஆசை குறித்த லெக்கானிய கருதுகோள்:
       ஆசை நனவிலியாக ( unconcious ) உள்ளது என்கிறார் லெக்கான்.
       ……”ஆசையும் இல்லாமையும் ( lack ) மற்றமையின் இல்லாமை ( lack of the Other )    குறித்த பிரச்சினையாக உள்ளது. அது தன்னிலையின் ( subject ) இல்லாமை ( lack )    குறித்ததல்ல “ என்பதில்தான் லெக்கானின் கண்டுபிடிப்பு உள்ளது .

       இனி சுயமோக வெறி ( narcissistic rage ) :
        ஆசைப்பட்ட பெண்ணால் , தான் மறுக்கப்படும் பொழுது., சுயமோக மனக்காயம் ஏற்பட்டுவிடுகிறது . அந்தப் பெண்ணைக் கொல்வது , அவள்மீது ஆசிட் ஊற்றுவது என்பது சுயமோக மனக்காயத்திற்கான (narcissistic injury ) ஒரு எதிர்வினையாகும். சுயமோகியின் சுயகௌரவம் ( self esteem ) சுயமதிப்பிற்கு எதிரான உணரப்பட்ட அச்சுறுத்தலாகும் . இதுவே சுயமோக வெறியாகிறது என்கிறார் ஹோகட்.
       சுயமோக வெறி உண்மையான தன்முனைப்பாக ( real assertiveness )  வெளிப்பட முடியாது ; சுயமோகிகளால் உணரப்பட்ட அல்லது கற்பனை செய்துகொண்ட ( தன்னைத்தானே) ( perceived or imagined ) சுயமோக மனக்காயங்கள் குறித்து மிக அதீத உணர்ச்சியாக ( over sensitivity ) இருப்பார்கள். இதன் விளைவு சுயமோக வெறியாக உள்ளது.
        இந்த வெறி எந்த வகையிலாவது பழியெடுப்பதற்கான மார்க்கத்தைத் தேடுகிறது .        இது ஹோகட்டின் கொடை. இது மிக கவனத்திற்குரியதாகவும் உள்ளது.
       “அடைந்தால் மகாதேவி இல்லையேல்…….”
                                                                                  க.செ

No comments:

Post a Comment