இந்திய ராணுவத்தின் மீது பயங்கரவாதிகளின்
தாக்குதலால் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பாளர்கள் இதற்கு உலக மூலைமுடுக்குகளிலிருந்து
கண்டனக்குரல் எழுப்பினர்.
நீங்கள் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது எதிர் தாக்குதல் தொடுத்து
சிலநூறு பயங்கரவாதிகளை கொன்றழித்துவிட்டதாக
சூளுரைத்தீர்கள்.இது உண்மையா?
உலகநாடுகளிடமிருந்து பயங்கரவாதிகள் மீதான உங்கள் எதிர்வினைக்கு
எவ்வளவு ஆதரவுக்குரல்கள் கேட்டன? எத்தனை பாராட்டுக்குரல்கள்
கேட்டன?
தயவுசெய்து சொல்லுங்கள்.
பி.கு: பிரான்ஸில் ஒரு பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கிட்டத்தட்ட ஐரோப்பாக் கண்டமே கொதித்தெழுந்தது.
இந்திய பாராளுமன்ற ஜனநாயக நாட்டிற்காக ஆசியக்கண்டம் என்ன செய்தது?
உங்கள் அயலுறவுக் கொள்கைகள் என்னவாயிற்று?
உலகம் சுற்றும் வாலிபரே , இனியாவது ஆசியக்கண்டத்தை உங்கள் நண்பர்களாக மாற்ற முயலுங்கள்.
-முள்ளிப்பள்ளம்
பிட்சு
No comments:
Post a Comment