17 Mar 2016

சாதியம் நரசிம்மமாக

1.        பொதுவாக சாதிவிட்டு சாதித் திருமணம் என்பது தீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது.
2.        தலித்-பிற்படுத்தப்பட்டோரின் கலப்புத் திருமணத்தை  Evil - ஆக , தீயது  / கெட்டது  / கொடூர மிருகத்தனமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
3.        உயர்சாதி என்பது மேலாண்மை ( தலித்துக்குள்ளும்தான் ) சிந்தனை – அதாவது நோய்க்கூறு சுயமோகத்திற்கு , சுயமோக அதிகாரத்திற்கான சான்றை சாதியம் வழங்கி உள்ளது.
4.        உயர்சாதிப் பெண் , தலித் ஒருவரை திருமணம் செய்துவிட்டால் , அப்பெண்ணிற்கு முதல் எதிரி பெற்றோரை விட அந்த சாதிச் சொந்தக்காரர்கள்தான் ; அவர்களிடம் இழந்து போன மதிப்பை மீட்க , அதாவது மற்றமையிடம் அங்கீகரிப்பை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெண் பெற்றோருக்கு உண்டு.
சங்கர் போன்றவர்களை கொல்ல வேண்டும், கௌசல்யாவும் இறக்க வேண்டும் ( இவர் எப்படியோ பிழைத்துக் கொண்டார்) . இது பெரிய சாதியின் நிர்ப்பந்தம்.
5.        இங்கு மனிதர்களுக்கான அடையாளம் பெயர் மட்டுமல்ல , அரூபமான சாதிப் பெயரும் தான்.
6.        உதாரணம் , பேச்சு வழக்கில் அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்று  ‘ ஒருவரைக் கேட்டால் பதில் நம்ம உடையார் கல்லூரியில்தான் etc.. 
7.        ஓட்டுக்கான கட்சிகள் ஒருபோதும் சாதியை  Evil -  ஆக நினைத்து சொந்த வாழ்வையும் அரசியல் வாழ்வையும் நடத்துவது இல்லை.
       ஓட்டுக்கான பிரச்சாரம்தான் மேlலோங்கியுள்ளது . Evil -  க்கான எதிர்ப்பு , தருமபுரி, உடுமலைப்பேட்டை போன்ற சம்பவங்களுக்குப் பின் அதை உபயோகித்து சாதிய எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள் ; அவ்வளவே.
       சாதியம் கலாச்சாரமாக , சித்தமாக , நடத்தையாக , திருவிழாவாக , குலதெய்வ வழிபாடாக , சடங்காகவும் கல்வி நிறுவனமாகவும் நீடித்து நிலவுகிறது.
       தேர்தல் கட்சிகள் சாதியம் என்ற பாசிசத்தை ஒழிக்க , அவரவர் அன்றாட சமூக வாழ்வின் நடவடிக்கையில் , எண்ணப்போக்காக இருக்க என்னென்ன திட்டங்கள் உள்ளன ? உடன் வெளியிடட்டும் ; விவாதம் தொடங்கட்டும்.
      கொலை நடக்கலாம் / தாக்குதல் நடக்கலாம் எனும் அபாயம் உள்ள கலப்பு திருமணம் புரிந்தோருக்கு உடனடிப் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் ( அரசாங்கம் தவிர ) என ஒரு உரையாடலை துவக்கலாமே ?

       மமஹாரமும் , அகங்காரமும் , சாதியின் படிநிலையில் உறைந்திருக்கிறது.
      சாதியத்தை உருவகப்படுத்தினால் அது ,
      உள் / வெளி ; பகல் , இரவு கடந்து ,  தூண் , துரும்பில் வசிக்கும் நரசிம்மம் அது.

                                                                     க.செ
                                                                     17-03-2016



2 comments:

  1. "சாதியம் ஒரு நரசிம்மமாக"
    சாதியம் = நரசிம்மம்
    ஒப்பீடு சரியான ஒன்றா?
    சாதியம் = தீயசக்தி
    நரசிம்மம் = தீயசக்தியை அழிக்கும் தெய்வ சக்தி : ஒப்பீடு மேலாட்டமாக எங்கும் வியாபித்து இருக்கிறது என்பதை குறிப்பதற்காக மட்டும் கூறப்பட்டிருந்தால் சரி.
    2. குல தெய்வ வழிபாட்டை சாதியம் துடன் இணைப்பது சரியல்ல. ஒரு சாதிக்குள்ளே நூற்றுக்கணக்கான குழுக்கள் /தெய்வங்கள் உண்டு என்பது அது சாதிக்கு முந்தைய குழு வாழ்க்கையேடு சம்பந்தப்பட்ட ஒன்றுதானே தவிர சாதியத்துடன் அல்ல.

    ReplyDelete
  2. Dear Sir,
    It is a wonderful article; every one should read it and analyze oneself.

    ReplyDelete