......” சமூக நீதிக்காகத்தான் இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார் ”...
( ஆம் உண்மைதான் ; ஆனால் நடப்பது ! )
......” இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும்
செய்யப்படாது என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட
சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை . அதை யாரும் பறிக்க
முடியாது.
.....நான் ஏற்கனவே கூறியதுபோல் அம்பேத்கரே
மீண்டும் தோன்றினாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது “ என்று அம்பேத்கர்
நினைவிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார் - தி
இந்து , 22-3-2016 .
பிரதமர்
மோடியின் பேச்சில் கூர்ந்து நோக்கவேண்டியவைகள் (1) சமூக நீதிக்காகத்தான் ; (2)
தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை ; அதை
யாரும் பறிக்க முடியாது .
அதைப்
பறிக்க யார் வருவது ? .
அதை
என்றும் காப்பாளனாகத் தன்னை நனவிலியாக
முன்னிறுத்துவதேன் ?
“ அம்பேத்கர் மீண்டும் தோன்றி வந்தாலும்
முடியாது ” என்ற கூற்றின்
அடியில் ஓடும் எண்ணம் என்ன ?
இடஒதுக்கீட்டுக் காப்பாளன் “ நமோ “ ; அதாவது , குறிப்பாக கி.பி 2000 –ற்கான
தலித்தின் நவீன காப்பாளர் “ நமோ “ என்பதாகிறது . நமோ இந்த நூற்றாண்டின் இட
ஒதுக்கீட்டின் அடையாளமாகிறது. சற்று யோசித்தால் , நமோவின் இயங்கும் திசை அச்சமாக
இருக்கிறது . இதை அறிய ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம் .
நேருவின் இடத்தில் படேலை வைக்க எடுத்த
அரசியல் நடவடிக்கையை நினைவு கூறும் நேரமிது ; இப்போது ‘ அம்பேத்கரே வந்தாலும் இட
ஒதுக்கீட்டைத் தடுக்க முடியாது ‘ . ‘ நானிருக்கப் பயமேன் ‘ என நனவிலியாகக்
கூறுகிறார் .
இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது
என்று உறுதியாகச் சொல்கிறது . இது மோடியின் தன்னிலையாகிறது . எது ? . இட
ஒதுக்கீடு என்பது நிரந்தரம் / மாறாதது / அம்பேத்கர் திரும்பினாலும் மாற்ற முடியாது
என்பது நனவிலியாகும் ஆசையாகும் . ஏன் இப்போது இவ்வளவு அக்கறை ?
அம்பேத்கர் திரும்பினாலும் முடியாது என்பது
கற்பனை ஒழுங்கு ( imaginary order ) . சாத்தியமற்ற ஒன்றை ஏன் முன்னிறுத்த வேண்டும்
?
ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது .
காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட படேல் , போஸ் ; இப்போது அம்பேத்கர் வருகிறார் .
சமகால அரசியலில் , கலாச்சாரம் , மொழி
சிம்பாலிக்காக ( symbolic ) ; மோடியின் நனவிலி ஆசை ( unconscious desire ) மேற்கூறிய
சிம்பாலிக் அதிகாரத்தை ; படேல் , போஸ், அம்பேத்கர் போன்றோரின் வழித்தோன்றலாக
, பாதுகாவலராக ; வரலாற்று நீடிப்பாக , தன்னை
அடையாளப் படுத்துகிறார் மக்களிடம் .
அவரின் நனவிலி ஆசையை
அவரின் மனசுக்குள் சென்று அறிய வேண்டியதில்லை . அவரின் சொல்லாடல்களும் அதன்
விளைவுகளும் ( effects ) , அதனை நடைமுறைப்படுத்தும் நினைவு விழாக்களும் ,
விளம்பரமும் ; தன்னை அவைகளுடன் நேரடியாக , மறைமுகமாக அடையாளப்
படுத்திக்கொள்வதுதான் ( இன்றைய காவலனாக) அவரின் நனவிலி ஆசையின் உந்தலுக்கான சாட்சி
.
இட ஒதுக்கீடு தனித்துவமானது ( entity ) அல்ல . அது சாதிய சமூகத்தின் பகுதி மட்டுமே . அதுவும் ஒரு இடைக்கால சரிசெய்தல் மட்டும்தான் .
இட ஒதுக்கீடு தனித்துவமானது ( entity ) அல்ல . அது சாதிய சமூகத்தின் பகுதி மட்டுமே . அதுவும் ஒரு இடைக்கால சரிசெய்தல் மட்டும்தான் .
முழுமை என்பது சாதியம் . அந்தத்
தீட்டை / Evil - ஐ ஒழிக்க , குடியுரிமையை ( திருமணம் பண்ணும்
உரிமையை ) நிலைநாட்ட , ஒரு சமூகப் புரட்சி தேவை / உண்மையான சமூக ஜனநாயகப் புரட்சி
தேவை .
அதை விடுத்து இந்தப் பாராளுமன்றத்தின்
ஜனாதிபதி , முதல் மந்திரி , இட ஒதுக்கீடு , போன்றவற்றிற்கு உழைப்பது , பேசுவது ,
அதுவும் காத்திரமாக எழுதுவதும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் காக்கத்தான் பயன்படும்
. நடைபெறும் மாற்றமெல்லாம் பகுதியிலேதான் ; முழுமையில் அல்ல . முழுமை
இன்னும் வெகு தூரத்தில்.
பாராளுமன்றமுறை நிரந்தரமாகக் கோலோச்ச சாதிய சமூகம் வேண்டும்
.
மனுவால் கட்டப்பட்ட சாதியம் அந்தந்த சாதிக்குரிய பாராளுமன்றவாதத்தால்
நிரந்தரமான ஒதுக்கிடத்தில் ( Bay )
நங்கூரமிட்டு , சாதியம் நிற்கவைக்கப்பட்டுள்ளது . அவ்வளவுதான் .
க.செ
No comments:
Post a Comment