நெறி ( Ethics ) பற்றி லெக்கான் இப்படிக் கூறுகிறார் :
“ மனிதர்களாக உள்ள நாம் ,
சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்
“ என்பதாகும் .
சமீபத்தில் ‘ வாட்ஸ் அப் ’ மூலம் மக்களுக்கு
முதல்வர் கொடுத்த உறுதிமொழி ;
“ ‘
வெள்ள துயரத்தில் இருந்து
உங்களை விரைவில் மீட்பேன் ‘
‘ வாட்ஸ் அப் ‘ மூலம்
மக்களுக்கு உறுதி “ .
“ ......வெள்ள
சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து வருந்துகிறேன் . கவலை வேண்டாம் .
இது உங்கள் அரசு . உங்களுக்காக உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன் . விரைவில்
இப்பெரும் துன்பத்தில் இருந்து உங்களை மீட்பேன். இது உறுதி .
உங்களுக்கு
வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் . எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது . எனக்கென உறவினர்
கிடையாது . எனக்கு சுயநலம் அறவே கிடையாது . எனக்கு எல்லாமும் நீங்கள்தான் .
என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான் .
எத்துயர் வரினும் அதை இக்கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் “ என்று
ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .” - தி இந்து 15-12-2015 . ( -http ://tamil.thehindu.com/tamilnadu )
அவர் கூற்றில் உள்ள உண்மைத்தன்மை பற்றி
அறிந்துகொள்வது நல்லது .
“ எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது , எனக்கென்று
உறவினர் கிடையாது....” என்கிறார்.
லெக்கானியம் , “ ரத்த உறவுகளின் அடிப்படைக் கட்டமைப்புகள் ( elementary structures of kinship )
உள்ளன ; சொத்து மற்றும் பொருட்களின் பரிமாற்றம் குறித்த
கட்டமைப்புகள் என்ற சிலவை உண்டு .
இந்தக் கட்டமைப்புகளின் விளைவாகத்தான் ஒரு மனிதன்
தன்னைத்தானே ஒரு குறியாக ( sign )
அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பரிமாற்றத்தின் நபராக்கிக் கொள்கிறான் “ என்கிறது.
முதல்வரின் மேற்கூறிய
கூற்று கேள்விக்குறியாகிறது.
ஒருவேளை இதற்கு
அப்பால் இருக்கிறாரோ !
அவருக்கான சுசான்ஸ் ( jouissance ) உறவுமுறையிலிருந்து அல்ல என்பதும் மேற்கூறியதிலிருந்து
தெரிகிறது .
அதிகாரத்தில் (
முதல்வர் ) இல்லாதபோதும் மக்களுக்கு வரும் துன்பத்தை செல்வி ஜெ. வே சுமக்கிறாரா ?
மன அலசல் , அதிகாரம் பற்றி ஆண் / பெண் இருவருக்குமே ஆசை
உண்டு என்கிறது.
அதிகாரம் : இல்லாமையின்
( lack ) குறிப்பான் ,
( காயடிக்கப்பட்டுவிடுவோம்
; அதைத் தவிர்க்கவேண்டுமானால் அதிகாரம் வேண்டும்) .
அதிகாரம் : ஆசையின்
குறிப்பான் , மேலதிக முக்கியத்துவமுள்ள குறிப்பான்.
அதிகாரம்தான் சென்னை பாரிஸ்கார்னர் முதல்
கன்னியாகுமரி அய்யன் சிலைவரை லட்சக் கணக்கானோரை மேடம் ஜெ . யின் காலில்
விழவைக்கிறது .
ஏன் ‘ வாட்ஸ் அப்பில் ‘ “ உங்களுக்கு வரும்
துன்பங்களை நானே சுமக்கிறேன் ” என்கிறார்.
” மற்றமை
( மக்களின் ) ஆசையின் ஆசைப்படுபொருளாக இருக்கவேண்டும் என்பது ( ஜெ ) தன்னிலையின்
ஆசையாக உள்ளது . இது , மற்றமையால், தான்
ஏற்கப்படவேண்டும் , அங்கீகரிக்கப்படவேண்டும்
( recognized ) என்பதற்கான ஆசையைக் குறிப்பிடும் ” -
Calum Neill.
ஆக , ‘ வாட்ஸ் அப்பில் ‘ பேசியது அன்பை , பாசத்தைப்
பரிமாற அல்ல . மாறாக , அதிகாரத்திற்கான அங்கீகாரம் பெற மட்டுமல்ல . தன்
சுசான்ஸை
( மகிழ்வை )
அதிகாரத்தின் மூலம் அடையவும்தான்.
இதேமாதிரி மற்றொரு குரலும் “ கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன் ” எனத்
தினமும் முகாரி பாடும் .
லெக்கான் , “ கடமையாளர்கள் , தனிமனிதர்களின் நெறி உணர்வு ( Ethics )
,
ஒரு தன்னிலையானது , சமூகக்கட்டமைப்பில்
நனவிலியாகத் தேடுகிற நல்லது
குறித்த பிரச்சினையை எழுப்புகின்ற அந்தத்தருணத்தில் நெறி துவங்குகிறது “ என்கிறார் .
……“ இப்போதுதான் தன்னை முன்னிறுத்துகிற ஆசையின்
கட்டமைப்பு நெருக்கமாக இணைந்துள்ளது . அதாவது , தகாத உறவுக்கான ஆசையாக ( as a desire of incest ) இருப்பதை அந்தத்
தன்னிலை கண்டுபிடிக்கும் “ என்கிறார் ப்ராய்ட்.
ஆக , கடமை , அதிகாரம் என்னும் பெயரில்
உறைந்துள்ள ஆசையின் வர்ணங்களை ( தகுந்த / தகாத ) ஆராய்ந்து அறிவது நமது கடமையாகிறது.
க.செ
16-2-2016
No comments:
Post a Comment