3 Feb 2016

முன்கை நீண்டால் முழங்கை நீளும்

அதிநவீன புனைவுகளில் புகழ் பெற்ற ஒரு தொகுப்பு முல்லா கதைகள் ஆகும.
பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கதையை எப்படி அதிநவீனம் என்று கேட்டால் , கதையாடலுடன் ( Narration ) பயணித்து வந்த முல்லா மனம் இன்றும் புதிர்தான்.

உதாரணம் : முல்லாவின் அண்டை வீட்டுக்காரர் முல்லா என்றார் வீட்டிற்கு முன்வந்து . முல்லா என்ன என்றார். துணி காயப் போட வேண்டும் ; உங்கள் கொல்லையில் உள்ள கயிறை கொஞ்சம் இரவல் கொடுங்கள் என்றார் அண்டை வீட்டுக்காரர். 
                முல்லா புன்முறுவலுடன் , அடுத்த வீட்டுக்காரரிடம், “ கயிறை கொடுக்க முடியாது . ஏனென்றால் , நான் அந்தக் கொடியில் ( கயிறில் ) கோதுமை காயப் போட்டிருக்கிறேன் என்றார். 
ஒரு கயிற்றில் கோதுமை காயப்போடுகிறார் முல்லா என்றால் Virtual Reality தானே அது. நவீன தொழில்நுட்பம் தெரிந்தவரின் பொதுப்புத்தி முல்லாவின் கூற்றை மறுத்துவிடும் இல்லையா ? 
                “
ஓய் ! உமக்குத் தர மனம் இல்லை ; அதைச் சொல்வதை விட்டுவிட்டு கோதுமையை துணி காயப்போடும் கயிற்றில் காயப்போடுகிறேன் என்று கதை அளக்கிறீரே ! எனச் சொல்லும் . 
                உண்மைதான். மனம் இல்லை. இப்படிச் சொல்வது ஒரு வகையில் சரிதான். ஏன் மனம் இல்லை? என்று உண்மை அறிய புறப்பட்டால் எங்கு செல்ல வேண்டும் ?
                ஆய்வு தான் / மனம் பற்றிய நவீன ஆய்வுக்குத்தான் செல்ல வேண்டும்.
                கொடியில் கோதுமை காயப்போடும் முல்லா கதையை ஒரு உருவகமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
       இரண்டு தன்னிலைகள் ; இந்தியா  Vs  பாகிஸ்தான் , இந்தியா  Vs சீனா என்றோ, தமிழகம் VS  கேரளா , கர்நாடகம் ( தண்ணீர் பிரச்சினை ) என்றுகூடப் புரிந்து கொள்ளலாம்.
       இன்னும் சற்று நெருக்கமாக வேண்டுமென்றால் , கருணாநிதி  Vs ஜெ. என்றுகூட வைத்துக் கொள்ளலாம் . இரண்டு தனிநபர்கள், முரண்பட்டவர்கள்...இப்படி.
       மேற்கூறியவர்களின் உறவுகளில் , பிரச்சினைகள் பொதுவாக  Rhetoric - ஆக , அதாவது , என்னாங்க என்றால் நொன்னாங்க என்ற பதில் வரும் வகையில் உள்ளது. உன் ஆட்சியில் லஞ்சம் பெருகிவிட்டது என்று விமர்சித்தால் , உன் ஆட்சியில் இல்லாமலா இருந்தது என்றும்,   அது உலகளாவிய பிரச்சினை என்றும் பதில் வரும் . அடிப்படையில் இவை உறவு பற்றிய பிரச்சினை ஆகும்.
       இந்த உறவுப் பிரச்சினை பற்றி மன அலசல் ஆழ்ந்து சிந்திக்கின்றது . மரபிலிருந்தும் அது கற்றுக்கொள்கிறது ; அதேபோழ்தில் , பாலஸ்தீனம் Vs இஸ்ரேல் போன்ற தீரா இழுபறி பிரச்சினைகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறது. மன அலசலின் இந்தப் போக்கை நமக்கு அணுக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியமான உறவு அமைய ஏதுவாகும் ; இதற்காக லெக்கானின் சில முக்கிய கோட்பாடுகளை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
       மன அலசல் ஆய்வின் குறிக்கோள் அல்லது முடிவானது நமது வாழ்க்கையில் எது real என்பதைக் குறிப்பிடுகிறது . நமது ஆசைகளில் எது நம்மை நம்மிடமிருந்தும் , பிறரிடமிருந்தும் பிரிக்கிறது என்பதை ஆய்வின் முடிவு குறிப்பிடுகிறது.
       மகிழ்வுக் கோட்பாட்டை மையமாகக் கொண்டே வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் . நமது விருப்பத்திற்கிணங்க ,  நினைப்பிற்கிணங்க நம் ஆற்றல்களை அதில் செலுத்துகிறோம்.
“ முக்கியமான ஒன்று ; மகிழ்வுக் கோட்பாடு நானுணர்வின் மீது ( Ego ) கட்டப்பட்டது . அது நம் விருப்பங்களை , அல்லது தேவைகளை கிட்டத்தட்ட  பகுத்தறிவுக்குட்பட்ட விதத்தில் திருப்திப்படுத்தி ந்ம் வாழ்க்கையை வழிநடத்துகிறது / ஒழுங்குபடுத்துகிறது எனலாம்.
       லெக்கானின் தன்னிலை குறித்த கோட்பாடானது நம்மை நம்மிடமிருந்தும் , பிறரிடமிருந்தும் பிரிக்கின்ற ஒன்றைப் பற்றிய கோட்பாடாகும் ; மையமழிக்கப்பட்ட அல்லது பிளவுபட்ட தன்னிலைகளுக்கிடையில் எவ்வகையான நெறி உறவு ( Ethical bond ) இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
       உறவுமுறை மனிதத் தன்னிலையின் மையமாகும் .
       உறவுமுறைகள் மனிதத் தன்னிலைகளின் கட்டமைப்பாகவும் உள்ளன .
       முல்லாவிடம் கயிறு கேட்டு வந்தவரை முல்லா தன்னிலையாக ஏற்கவில்லை. மாறாக , இதரராக ( other ) பார்க்கிறார்.
       இப்போது முல்லாவின் திருகல் மனம் ( perverted ) பற்றி ;
துணி காயப்போடும் கயிற்றில் கோதுமை காயப்போட்டு விட்டதாக கூறும் முல்லா மனம் எற்கனவே   Foreclosed – ஆக  இருந்திருக்கிறது . அதாவது முன்கூட்டியே அந்த அண்டைவீட்டுக்காரரை மறுத்து விட்டிருக்கின்றது ; உறவாக ஏற்காமல் இருந்திருக்கின்றது ; அதனால்தான் அவர் கயிறு கேட்டவுடனேயே  ,  முல்லாவின் நனவிலி , உடனடியாக , வக்கிரமாக உனக்கும் எனக்கும் உறவில்லை  என்னும் அடையாளத்தில் கயிற்றில் கோதுமை காயப்போட்டுவிட்டேன் என்று கூறுகிறார்.   
                இப்போக்கைச் சற்று விரித்துப்பார்த்தால் , காவேரி , பெரியாறு,கிருஷ்ணா போன்ற நதிப் பிரச்சினை பற்றிய உறவும் ; நடுவண் அரசுக்கும்,மாநில அரசுகளுக்குமிடையில் உள்ள உறவும்; மாநிலத்தில் ஆளும் கட்சி  Vs எதிர்கட்சிகள் ; அதிகார வர்க்கத்தின் படிநிலை உறவுகள் ; சாதியத்தில் தலித் Vs  ஆதிக்க சாதிகள் , கருத்துருவத்தை பிறப்பிக்கும் சாதிகள் என்றும் ; ஏகமாக பன்னாட்டு மூலதனத்திற்கும் இந்திய மக்களின் பாடும் சொல்ல முடியாததாக உள்ளது .
       மன அலசல் இதற்கான தீர்வைச் சொல்ல முடியாது .மனம் பற்றிய பிரச்சினை இதில் தலையாய பங்கு வகிப்பதால், பேச்சு வார்த்தைக்கு முன் , இரு கட்சிகளும் , சமாதானக் குழுக்களும் , தங்களை / தம் மனத்தை எந்தெந்த வகையில் தயார்படுத்திக்கொண்டால் , ஒரு ஆரோக்கியமான சூழலைப் படைக்கத் தேவையான  -  உறவுமுறைகளின் நெறி - அவசியத்தை முன்னிறுத்துகிறது  லெனினியம் .
        உறவுமுறை மனிதத் தன்னிலையின் மையமாகும் “
                இவைகள் மனிதத் தன்னிலைகளைக் கட்டமைப்பவையாகவும் உள்ளன .
                அரசியலில் அங்கீகரிப்பின் நோக்கமே அகம் சார்ந்த சீர்குலைவை  / பாதிப்பை 
( self dislocation ) சரிப்படுத்துவதாகும் ; எதன்மூலம் ?
       மேலாண்மைக் கலாச்சாரத்தின் மூலமாக ஒரு குழு மாற்றுக் குழுவினர்  ( பாகிஸ்தான் Vs  இந்தியா ) மீது கொண்டுள்ள தவறான அறிதலை , தவறான பிம்பத்தை புறந்தள்ளி விட- வேண்டும் ( reject ) . அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் புதிய பிரதிநிதித்துவத்திற்காக இதனைச் செய்யவேண்டும் .
      
இது ஒன்றை, ஒரு உறவைப் புரிந்துகொள்ளவும் , புதியவகை உறவைக் கட்டமைக்கவும் நம்மை வலியுறுத்துகிறது .
       1 . பாகிஸ்தான் இந்தியாவை இந்துக்கள் நாடு என்ற பிம்பத்தோடுதான் பார்க்கிறது .
( இந்துத்வா ஒரு சிறிய பகுதி ; முழுமை இந்தியா  என்பது ,எல்லா மதக் குழுக்களும் ஒரு புரிதலுணர்வோடு இந்தியர் என்ற ஐக்கியத்தில்தான் உள்ளது .
       2 . காஷ்மீர் பற்றிய பிரச்சினை , காஷ்மீரிகளுக்கும் இந்திய அரசுக்குமிடையிலானது . பாகிஸ்தான் மூக்கு எல்லைமீறி நீட்டவேண்டியதில்லை . பாகிஸ்தான் Vs இந்தியா எல்லைப் பிரச்சினையைத்  பேசித்தீர்க்க வேண்டுமானால் பாகிஸ்தான் உடனடியாக பயங்கரவாதி -களுக்கான பாசறைகளை மூடவேண்டும் , மூடச்செய்யவேண்டும் .
       இந்தியாவும் , பாகிஸ்தான் Vs  இந்தியா கிரிக்கெட் போட்டிகளுக்கான தடைவிதிப்பை நீக்கி , உறவுக்கான, நல்லுறவுக்கான பச்சைவிளக்கை எரியவிடவேண்டும் .
       மேற்கூறியவைகள் நாடுகளுக்கிடையிலானது . கட்சிகளுக்கிடையில் , கட்சிக் கூட்டணிகளுக்கிடையில் , மேற்கூறிய நெறியை வழிகாட்டியாகக் கொண்டால் , பிரச்சினைகளின் ( பகையின் ) கூர்மை ,காத்திரம் , தீவீரம் குறைந்து ஒரு சுமூகச் சூழலுக்கு வழிவகுக்கும் .
       மனிதத் தன்னிலையின் மையமான உறவுமுறை நெறிகள் , நட்பு , கணவன்  Vs மனைவி உறவு ; தந்தை Vs பிள்ளைகள் உறவுக்குக்கூட கைகொடுக்கும் எனலாம் .
       அரசியலில் , உறவில் , அங்கீகரிப்பின்  ( Recognition ) நோக்கம் அகம் சார்ந்தும் , சீர்குலைவை  / பாதிப்பை ( self dislocation ) சரிப்படுத்தும் நோக்கத்திற்கானது . இதுதான் அதன் மையம்.
       அங்கீகரிப்பு ( Recognition ) என்பது தன்னிலைகளுக்கிடையிலான லட்சிய பரஸ்பர உறவாகும் . இதில் இருவருமே சமமானவர் . அதேநேரத்தில்,அவர்களுக்கான தனித்தன்மையும் உண்டு . இந்த உறவானது தன்னிலைத் தன்மையை  ( subjectivity ) கட்டுவதற்கானது “ என்கிறார் ஆய்வாளர் Stephen Frosh .
 முன்கை நீண்டால் முழங்கை நீளும்
       இப்போது இதரரால்   ( other ) அங்கீகரிக்கப்பட்ட தன்னிலையானது தனித் தன்னிலையாக ( individual ) மாறுகிறது . இப்போது அவர்கள் பாகிஸ்தானியர் ; பயங்கரவாதிகள் இல்லை என்ற மனோபாவம் விடைபெறுகிறது .
       பிறரால் அங்கீகரிக்கப்படும்போது Sense of self  ( சுயம் பற்றிய பிரக்ஞை ) வளர்கிறது . [ ஹைதராபாத் மாணவர் ரோஹித்தின் மரணத்திற்கு இதுவும் ஒரு காரணம் . அதாவது , அவரின் Sense of self  இதரரால் ( other ) அங்கீகரிக்கப்படவில்லை ].
       அங்கீகரிப்பின் நெறி என்பது பிறரை வாழவிடுவதில் உள்ளது என்கிறார் Judith Botler .
                இதற்கெல்லாம் முதலில் நம் அகம் நோக்கிய பயணம் தேவை. ஜூலியா கிறித்துவா இதுபற்றிய மன அலசல் பார்வையைத் தருகிறார் :
     
  நம்மின் நனவிலியானது அடுத்தவரை இதரராக , அந்நியராக , புதிரானவராக , விளக்கமுடியாத , சொல்லமுடியாதவராகவும்  ( real  ) பார்க்கிறது . அதாவது , புதிரானவராகவும் ; நமக்கு நாமே அந்நியர்களாகவும்,பிளவு பட்டவர்களாகவும் உள்ளோம் “
       [ தன்னிலைகளுக்கிடையிலான உறவில் முரண்பட்டவர்களின் பெயரைக் கேட்டவுடன் தீயாய் எரியும் மனத்தைக் கூட பரவலாக மனித உறவில் இனம் காணலாம் . இதுவும்
‘ தீட்டுப் போன்றதே] .
       உறவு அங்கீகரிக்கப்பட்டால்  இரண்டு தன்னிலைகள் தங்களை வெளிப்படுத்தும் போதும் ( expressing and receiving ) மாறி மாறி வெளிப்படுத்தலாம் ; உள்வாங்கலாம் . அத்துடன் , இருவரும் சேர்ந்தும் , தாங்கள் தனித்தனியாக இருப்பதாகவும் யூகித்துக்கொள்ளலாம் .
       தலித் பிரச்சினைகள் எழும்போதும் , கௌரவக் கொலை நடக்கும் போதும் , பிற உறவுப் பிரச்சினைக்குமான உறவுகளில் நெறிக்கோட்பாட்டை முன்னிறுத்துகிறது மனஅலசல் .
       இதற்குப் பின் முல்லாவின் அண்டை வீட்டார் கொடிக் கயிறு வேண்டுமென்று கேட்டால், கோதுமை காயப்போட்டிருக்கிறேன் என்று அப்பட்டமான மனவெறுப்பைக் காட்டமாட்டார் என நம்பலாம் .

க.செ
2-2-2016
               

           



No comments:

Post a Comment