23 Oct 2015

எப்போது கல்கி ?

வராகத்தின் மூர்க்கம் பலகோடி மக்களின் அன்றாட உணவுப் பொருளான பருப்பைப் பதுக்கி பகாசுர லாபத்திற்காகவும் , இன்பத்திற்காகவும் மக்களின் வாழ்வைப் பதறவைக்கும் பதர்கள் அவர்கள் [ ஒரு களை எடுப்பு வேண்டும் ].
வராகத்தின் மூர்க்கம் உச்சமானதால் ஏழைகளின் குடிசைகளுக்கு தீ வைத்தலும் அதற்கு ‘ ஆகுதி ‘ யாக பச்சிளம் குழந்தைகளைப் போடுகிறது அது . 
 கடவுள் இல்லையென்றால் அனைத்துச் செயல்களும் அனுமதிக்கப்படுகிறது - தாஸ்தாயேவ்ஸ்கி கரமசோவ் சகோதரர்களில்.
நடப்பது அதுதானே ! 
அப்புறம் ஏன் மாட்டுக்கறி கொலை , மதக் காவல், பிரதமரையே மண்டியிடச் சொல்லும் மதர்ப்பு  ( சிவசேனை சுவரொட்டி )
கடவுள் இல்லாவிட்டாலும் எது வேண்டுமானாலும் செய்ய அனுமதி இல்லை  . இது லக்கான். 
நெறிகளை ( ethics ) மதிக்க வேண்டாமா ? காலியான கடவுளின் இடத்தில் நெறிகளை  ( ethics ) முன்னிறுத்துகிறார் லக்கான் என அதை வாசிக்கலாம். மனிதத்தின் லட்சுமண் கோடு நெறிகளே  .
 
எந்த புற உலக அதிகாரமும் மனிதத்துடனுன் உடன்பிறப்பாக இருக்காது. ஆனால் நெறிகளை தன்னகத்தே இருத்தினால் இனியாகும் செய்கைகளுக்கு , கொந்தளிப்பு வசப்பட்ட மனங்களுக்கு , அதிகார , அதீத தாக்குதலுக்கான மூர்க்கத் திற்கெல்லாம் தன்னிலைகளுக்குள்ளிருந்தே வாய்க்கூடும், கடிவாளமும் பிறக்கும். 
[ நெறி எந்தத் தன்னிலையையும் ஒடுக்காது. வழிகாட்டும் அவ்வளவே . அங்கு குற்ற உணர்வு ( guilty ) , ஒடுக்குதலுக்கு ( suppression ] இடமில்லை.
      நாம் எப்படி மதத்தின் பேரால் நடக்கும் நியாயமற்ற பலாத்காரத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறோம் எனக் கேட்கிறார் சிசாக்  என்ற மனஅலசல்காரர்.
      அவரே இப்படிப் பதிலளிக்கிறார் :
       நாம் அறம் / கருத்தியலைக் கடந்த சமூகத்தில் வாழ்கிறோம் ( post ideological)என்கிறார்.
      மக்கள் சேவகர்கள் , மக்களின் அன்றாட வாழ்வின் அடிவயிற்றில் அடிப்பவர்களுக்கு எதிராக , மக்கள் பலாத்காரத்திற்கு தயார்ப்படுத்தவில்லையே ஏன்?
      எழுத்தாளர்கள், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள், கலைஞர்கள் ( artists )                         ( M.F. ஹுசைன் தன்னைத் தானே நாடு கடத்திக் கொண்டவர்) போன்றவர்களை தாக்குதலுக்கான இலக்காக ஆக்குவது ஏன்?
      தன் படம் திரையிடத் தடை என்ற உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று மிரட்டும் தயாரிப்பாளரும், நடிகரும் குடிசை எரிப்பை , குழந்தை எரிப்பை , திரைக்கதைக்கான கருவாக்கும் காலம் வருமா? .
புராணகாலம் திரும்பி விட்டதோ?. தேவர்கள் ( ஆட்சியாளர் , நுகர்வு முதலாளியம் ) மக்களை அரக்கர்களாக்கி, சுரண்டி , பின் கொள்ளி வைக்கவும் , கூச்சமில்லாமல் / தயங்காமல், இந்திரலோக வாழ்வு லயிப்பில் உள்ளனர்.
மதமும், சாதிமேலாண்மையும், கொலைவெறிக்கு தூபம் போடுகிறது /தூண்டுகிறது.   மக்களைக் காப்பாற்ற பரந்தாமன் கல்கி அவதாரம் எடுக்க முடியாது.(ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்). 
சாதி , மதம் கடந்து ( நோயிலிருந்து விடுபட்டு ) மக்களாகி, இன்றைக்கான காண்டீபத்தையும் , பரசுராம கோடாலியையும் தாங்கி , தங்களின் இருத்தலை நிறுவிக்கொள்ள வேண்டிய கட்டாயக் காலமிது.
( அதுதான் மக்களுக்கான, மக்களின் கரசேவையாகும் ) .
க.செ.
22-10-2015

1 comment:

  1. very good and rare blog in tamil.. keep it up

    ReplyDelete