4 Oct 2015

ஒபாமாவின் அதிபர் என்ற வரலாற்றின் 15-வது துப்பாக்கிசூடு.

“பிரார்த்தனை“ பலனளிக்கவில்லை என்ற விசனம் ஒபாமாவுக்கு வந்துவிட்டது.
எப்போது?  ( யாழ்த் தமிழர் படுகொலைக்கல்ல ) அமெரிக்காவின் ஓரிகானில் 10 மாணவர்கள் நொடியில் கொல்லப்பட்டனர்.  அப்போது .
இது ஒபாமாவின் அமெரிக்க அதிபர் என்ற வரலாற்றில் 15-வது துப்பாக்கிசூடு நிகழ்வு
இப்போது Fire arms ( control ) கட்டுப்பாடு கொண்டுவரலாமா என்று புலம்புகிறார்.

புண்ணியமில்லை. அமெரிக்காவுக்கு மற்றுமொரு அகப்புற அடையாளமாக பெரும்தீனி , Sex ,  தனிமனித சுகமே சுதந்திரம் , இரவுக் களியாட்டம் , மிதமிஞ்சிய குடி ; இத்தோடு தொடக்கப் பள்ளி முதல் கல்லூரிவரை துப்பாக்கிச் சூடு, சர்ச்சில் படுகொலை. இதெல்லாம் அமெரிக்க வல்லரசின் அடையாளம்தானே !
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்ற நாட்டின் மூளைத் தொழிலாளர்களைச் சுரண்டுவதும், கறுப்பர்களை வெறுப்பதும் உங்கள் அடையாளம்தானே அமெரிக்கா.....
இன்னும்... வரவிருப்பது எதுவோ?
                                                       க.செ
                                                   4-10-2015


No comments:

Post a Comment