செப்டம்பர் 28-ல் உத்திரபிரதேசம் தாத்ரி கிராமத்தில் ஒருவர் வீட்டில் சமைப்பதற்காக மாட்டுக்கறி (beef beef ) வைத்திருந்தார் என்ற வதந்தி பரவி அந்த மனிதனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுவிட்டது. இது பற்றி ஊடகங்களில் வாத , பிரதிவாதங்கள் ஏனோ தானோ வென்று நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சாக்ஷி மகராஜ்
என்ற பா.ஜ.க எம் . பி இன்று ( 6.10.2015) கொல்லப் -பட்டதை , கொல்லப்பட்ட நபருக்கு
இழப்பீடு தொகையாக உ.பி. அரசாங்கம் கொடுத்த 45 லட்சத்தை விமர்சிக்க ஆரம்பித்து
விட்டார் மகராஜ்.
சாக்ஷி மகராஜ் ,
......” நமது தாயை எவராவது
கேவலப்படுத்தினால் நாம் அதைப் பொறுத்துக் கொள்வதை விட
செத்துமடிவோம்....நமக்கு அது பாரதமாதா , நமது உயிரியல் தாய் , கோமாதா. .முகம்மது
ஆசாம் கான்-யும் ( உ . பி மந்திரி , சமஜ்வாதி கட்சித் தலைவர் ) மாட்டுக்கறி
சாப்பிடுவதை ஆதரிப்பவர்களையும் பார்த்து கேட்க விரும்புவது இதுதான்., நீங்கள்
தெய்வமாக வணங்கும் தாயை ஒருவர் வெட்டிக் கொன்றால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? ” ....
“ ஒரு
பயங்கரவாதி பாரத மாதாவை தாக்கினால் ( அவனைக்
) கொல்வதற்கும், கொல்லப்படுவதற்கும் தயார்தான் ” .
“ உயிரியல்
தாயையும், கோமாதாவைப் பொறுத்தும் இதுதான். ”...
- The New
Indian Express. 6-10-2015
“ முஸ்லீம்
இறந்தால் 20 லட்சம் ரூபாய், ஆனால் இந்துக்கள் 20000 ரூபாய் கூட பெறுவதில்லை ”. -
India today. 6-10-2015
|
பசு தெய்வமாக
வணங்கப்படுகிறது; பசுவதையை ஏற்க முடியாது., அதைச் செய்பவன் குற்றவாளி என்று கோபம்
கொந்தளிக்க உராய்வீச்சு நடத்தி இருக்கிறார்.
முதலில் இந்தியா ஒரு பன்முக சமூகம் ( plural society ) . ஆகவே, தவிர்க்க இயலாதவாறு தெய்வங்களும் பலதரப்பட்டதாகத் தானே இருக்கும் ; வழிபாடுகளும் அப்படித்தானே !
இப்படிப்பட்ட சமூக அமைப்பிற்குத்தான்
இந்தியப் பாராளுமன்றம். இந்து ஏகத்து- வத்திற்கு பசுமாடு தெய்வம் என்றால், மற்றொரு
வகை ஏகத்துவத்திற்கு பன்றி தீயது ( evil ) .
இப்படி
ஒவ்வொரு மதக்குழுவும் வணங்குவதற்கான மிருகங்களும் , தீயவை என்று சொல்வதற்கான
மிருகங்களும் பலதரப்பட்டதாக உள்ளது . இதை , இந்த பன்முக சமூகத்தை , பன்முகkக்
கலாச்சாரத்தை கணக்கில் கொள்ளாமல், பா.ஜ.க அரசு மத்தியில் ஆளுகிறது என்பதாலேயே ஒரு
எம் . பி- யே , ஆளும்கட்சி எம்.பி -யே பேசுவதும் , அது பற்றி அக்கட்சி மௌனம்
சாதிப்பது என்பதில் பா.ஜ.க-வின் அடிமன ஆசை எந்தத் திசை நோக்கி இருக்கிறது என்பது புரிந்து
கொள்ளக்கூடியதே.
பன்முக
சமூகத்தை ஏகத்துவமாக , ஏகத்துவ அதிகாரத்திற்கு உட்படுத்துவதற்காகத் தானே இந்தக்
கொந்தளிப்பு அரசியல்.
இந்து
ஏகத்துவம் , இந்தியர்களின் ஒரு பகுதி . அதையே முழுமை போல் பாவிப்பது என்பது
சமச்சீராக்கமாகும் ( symmetricization ) மனஅலசல்படி . கொந்தளிப்பு வசப்பட்ட மனம்
இப்படித்தான் பகுதியை முழுமையாக எடுத்துக் கொள்கிறது.
இந்த
மனக்கிளர்ச்சிச் சொல்லாடல், எப்போதுமே தர்க்கத்தை மீறுகிறது.
மனக்கிளர்ச்சி
நனவிலியின் குழந்தை என்கிறது மனஅலசல்.
இந்த மாதிரி இன்று பசுவதைக்கு இவ்வளவு
கொந்தளிக்கும் மனம், பசுமைப்புரட்சியால் ( green revolution) கால்நடைகள்
பெருத்துவிட்டதா ? சுருங்கி விட்டதா ? இதுபற்றி இவர்களின் மனச்சாட்சியை பேசச்
சொல்லுங்களேன்.
சில
பத்தாண்டுகளுக்கு முன் தமிழகத்தின் உழவர் தினம் என்பது ( தைப்பொங்கல் )
கிராமங்களின் பன்முக சமூகத்திற்கான விழாக்காலக் கொண்டாட்டம் ( carnival
). இப்போது அது ஜல்லிக்கட்டு
மாடு அரசியலுக்கு போய்விட்டது. அதை வைத்தும் ஒரு I P L. தொடர் நடத்தக்கூட செய்வார்கள் ஆதாயம்
இருக்குமானால்.
ஒன்றை வழிபடுவதும் , தெய்வம் என்பதும்
தனிமனித நம்பிக்கை / விசுவாசம் சார்ந்தது (
personal belief / faith system ) ; தனிமனித அனுபவத்தைச் சார்ந்தது.
விசுவாசமாக இருப்பது (faith faith ) என்பது அதன் மீது கொண்ட விசுவாசத்தைக்
காட்டுகிறது. அதை எல்லோருக்குமான எதார்த்தம் என்று திணிக்க முயற்சிப்பது அந்தக்
குழுவைச் சார்ந்தவர்களின் சுய மனப்போக்கு , சுயமோகம் ஆகும் .
“
சுயமோகம் என்பது நடத்தைகள் , மனப்பாங்குகள், தான் எனும் அகங்காரம். என்னுடையது
என்ற மமகாரம் போன்றவற்றால் விசுவாசப் பொருள் [ பசு / பன்றி ( evilevil ) ] , உடைமைகள்
முன்னிலைப்படுத்தப்பட்டு , தற்செயலாக அவைகள் பாதிக்கப்பட்டாலும் கூட பித்து
தலைக்கேRiறி விடுகிறது. கொலைவெறி தெருவிற்கு வந்து விடுகிறது. இதுவும் மனஅலசல்
தான் ” –Bella Grunberger
இந்தியா
பலத்தரப்பட்ட சமூகக் குழுக்களால் ஆனது என்பதைப் பார்த்தோம். அதாவது சமச்சீரற்ற
சமூகம் ( asymmetric society ) . இந்த பன்முகப்பட்ட சமூகத்தில்
ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருவதை சுயநல அரசியலுக்காக பலியிடப்
போகிறார்களா ?
இந்தப்
பன்முகப்பட்ட சமூகம் , கலாச்சாரம் பகை முரண்பாட்டை நட்பு முரண்பாடாக்கி ஒரு தேசமாக
காட்சி அளிக்கிறது . இதை அழிக்க , ஏகத்துவத்தின் பெயரால் அழிக்க முற்பட்டால் விளைவு
விபரீதம்தான். இதை மனஅலசலனின் கூற்றுபடி சொன்னால்,
[ ”” Finally , In the deep
unconscious we enter a sort of black
hole of meaning . If symmetric logic rules , everything is balanced by its
opposites and no one thing is distinguishable from any other ( for whatever way
a is , for example , greater than b , in the same way it is also less ) ” ]
–Matte Blango
இறுதியாக , மகராஜ் ,
“ புலன்நோக்கப் பொருட்களை எண்ணுவதால்
ஒருவன் பற்றை வளர்த்துக் கொள்கிறான். இந்தப் பற்றினின்றும் காமமும் ,
காமத்தினின்றும் சினமும் வளர்கின்றன .”
.
-பதம்
62, 2-ம் அத்தியாயம்.; கீதை .
இது
கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு சொல்லியது.
[ ( மக்கள் ) ஜனநாயகம் காக்க ,
தற்காப்புக்கான ஐக்கிய முன்னணி , கிளர்ச்சிகள் ஆகியவைகள் நடக்கும் நாள்
வெகுதூரத்தில் இல்லையோ என்று தோணுகிறது ].
உதவிய நூல்கள் : Religious truth in the light of bi-logic Matte Blango
© க.செ.
7-10-2015
© க.செ.
7-10-2015
மற்றமைக்கு....
ReplyDeleteமற்றமையிடமிருந்து,
பன்றி,பசு.....கட்டுரை குறித்து ,
கடந்த வாரம் ஒரு வேலை நாளில் 12 ஆண்டுகளாக சென்று வரும் கறிக்
கோழிக் கடைக்காரரிடம் நடந்த உரையாடல்....
என்னாச்சு புரட்டாசியா?
ஆமாங்க புரட்டிப்போட்டுருச்சு....முன்னயெல்லாம் ஏதோ 2,3 சாதிதான்
புரட்டாசியில சாப்பிட மாட்டாங்க.... (மொழிச் சிறுபான்மை சாதிகளைக் குறிப்பிடுகிறார்) இப்போ பயம் வந்துருச்சு போல....
அவ்ர் குறிப்பிட்ட இந்த பயம் ஆண்டவன் மீதா? `ஆள்பவர்’ மீதா?
(இன்றைய (11.10.2015)தினமலர் முகப்பு கார்ட்டூன் வலு சேர்க்கிறது)
உணவுத் தெரிவு தனி மனித ,இனக்குழுவின் அடிப்படை சுதந்திரம்.
இதை நுண் அரசியலாக்கி சொல்லாடலாக, செயல் திட்டமாக, கொலைகளாக பொதுதளத்தில் உலவ வைத்திருப்பதில் `அவர்களுக்கு’ வெற்றிதான் என்றாலும்
மற்றமையின் பதிவுகள் எதிர்ப்பைக் காத்திரமாக முன்னெடுக்கின்றன.
(Cliché என்ற போதிலும் வேறொரு வார்த்தை கிடைக்காததால்)
தோலுரிப்பைத் தொடர்கிறது மற்றமை.
(`அவர்களின்’ தோல் கிருஷ்ணனின் வஸ்திராபரணம் போல உரிக்க உரிக்க...........)
இளைய புள்ளிக்காரன்
புள்ளி.. அருமையான தினசரி வாழ்க்கையின் உளவியல் வெளிப்பாடு..
ReplyDelete