மற்றுமொரு 'எரிசாராயம்‘ நுகர்வுச் சந்தைக்குள் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கருத்தியலாக தொலைக்காட்சியில்
கட்டமைக்கப்பட்டது.
[
ஏற்கனவே இந்தியச் சந்தையில் 20-20 ; ஒருநாள்கிரிக்கெட் எரிசாராயம் உள்ளது . ]
கடைசி மூன்று நாட்களும் மிகக் காத்திரமான
நேர்காணல் ; உராய் விச்சு ; நேரலை ஒளிபரப்பு ; இத்யாதி.
அதாவது யதார்த்தமற்ற ( virtual reality ) எதார்த்தத்தை சமூகத்தின் ஒரு அங்கம் பற்றிய பிரச்சினைபோல்
ஒரு கருத்தியலை காட்சிப்படுத்தி , கட்டமைத்து தமிழகத்தின் நுகர்வுச் சந்தையில் ஒரு
பரபரப்பை / எதிர்பார்ப்பை உருவாக்கியது காட்சி ஊடகம்.
ஒரு 3100 ஓட்டுகள் உள்ள தொழிற்சங்கத் தேர்தலை ஒரு உன்னதப் பொருளாக
( sublime object ) ஆக்கிவிட்டனர்.
ஆம். அந்த நடிகர் சங்கம் நடிகர்களுக்கானது என்பதாலேயே ஒரு சட்டசபைத் தேர்தல் மாதிரி
முக்கிய இடமளித்து மக்களின் மகிழ்வு விருப்பத்தில் , மற்றொரு Enjoyment - யை
( அனுபவிப்பு ,துய்ப்பு ) உற்பத்தி செய்து சந்தைப்படுத்தலை நடத்தினர். அது மற்றொரு போதை வஸ்தாக / எரிசாராயமாக காட்சிப்படுத்தப்பட்டது.
இந்தவகைக் கருத்தியல் சமூகத் தன்னிலையில்
தவறானதை ; முக்கியமற்றதை / முக்கியமாக்கிக் காட்டுகிறது ; சமூகத்தின் எந்த மூலையிலும் தொடர்பற்ற நடிகர் சங்கத்தை ; சமூகத்தின் அன்றாட வாழ்வின் முக்கிய
நிகழ்வாக்கி , கட்டியமைக்க முயற்சிக்கிறது காட்சி ஊடகம்.
காட்சி ஊடகத்தின் இந்தச் சுதந்திரம் எந்தவகையைச்
சார்ந்தது ; எந்தவகை ஜனநாயகம் சார்ந்தது?
தமிழகத்தின் நடிகர் சங்கம் ( தொழிற்சங்கம் ?) என்பது காலனிய காலத்தின் விக்டோரியா மஹாராணியாக , தமிழகத்தின் காவேரி / வைகையாக முக்கியத்துவம் பெற்றது ஏன் ?
காட்சி ஊடகத்திற்குக் கிடைப்பதென்ன ? சினிமாவின் பரிவு ( முதல் மந்திரிகளை உருவாக்கும் கர்ப்பஸ்தானம் ! ? ) ; பார்வையாளர்களின் பாராட்டு , அங்கீகரிப்பு , நுகர்வுச் சந்தையின் கடைக்கண் பார்வை....
அரசியல் கூடாரங்களின் தூண்டில்களுக்கான
கவர்ச்சித் தூண்டல் ( Drive ).
ஆசைக்கான காரணப்பொருள் ( object
a ) யார் ? யார் ? என அடையாளம் காட்டல்.
ரசிகர்களுக்கு மற்றொருவகை
Enjoyment ( அனுபவிப்பு , துய்ப்பு ) .
காட்சி ஊடகங்களின் கருத்தியல் நடைமுறை உற்பத்தி
நிகழ்வு நடிகர்களின் சமூக அரசியல் மீதுள்ள அதிகார உறவை ( power
relation ) நியாயப்படுத்துகிறது எனலாம் .
இத்துனை கூத்திற்கும் முக்கிய காரணம்.....
மற்றமையில் / சமூகத்தில் / கலாச்சாரத்தில் / மொழியில் காத்திரமான வர்க்க அரசியல் இல்லாமையே ( lack ) ஆகும் .
க.செ
உதவிய
நூல் : லெக்கான் ; கருத்தியல் பற்றி-சிசாக் 21-10-2015
No comments:
Post a Comment