“ கடவுள் இருந்தால் , எல்லாம் அனுமதிக்கப்படுகிறது ”
மும்பையின்
நவீன தாதா என்ற அளவில் , அவர்களின் விருப்பு / வெறுப்பிற்கிணங்க (drive ) இதரர் (other
) நடக்க
வேண்டும்; அல்லது கலாச்சார தானாக்காரனாக (
police ) எந்தநெறிகளும் (ethics
) கட்டுப்பாடுமின்றி ,
ஸ்பெயின்
காளைச் சண்டையில் சுவர் ஏறி மக்கள் காலரியில் குதித்து அதம் பண்ணும் மூர்க்க
காளையாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . ஏனெனில் முஸ்லீமோ ,
பாகிஸ்தானோ
செய்வதெல்லாமே தவறு என்ற நோக்கில் பார்ப்பது : நேர்மறை உள்ளடக்கம் கூட
இருக்கலாம் என்று கிஞ்சித்தும் எண்ணாமல் , ஆய்வு
இல்லாமல் செயல்படும் மூர்க்க உந்தலுக்கு அடிமையாய் செயல்படும் சிவசேனா; நாளை,
தமிழர்களுக்கு , பீகாரிகளுக்கு ,
மலையாளிகளுக்கு
etc., உரிமைகளை
பறிக்க அந்த மூர்க்க காளை ‘ புஸ் ’ என்ற மூச்சுடன் கொம்பை கீழே
சாய்க்கமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா? .
பெண் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் மூர்க்க சாதிகளின் கௌரவ கொலைகாரர்களுக்கு சற்றும் குறையாமல் , சிவசேனாவின் சுயமோக வெறி உந்தல் , அனைத்துக்குமான ஏகத்துவ கடவுள் அவதாரமாக மாறியுள்ளது ஹிட்லரிசம் .
இது
தாஸ்தாயேவ்ஸ்கியின் புகழ்பெற்ற வாசகம் .
இன்று
இது 100
சதவீதம்
சிவசேனாவுக்கும் , தீவிர, மதவாத, மத அரசியல் குழுக்களுக்கும்
பொருந்துகிறது .
1. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித்
முகம்மது கசூரி புத்தக வெளியீட்டிற்காக சிவசேனையினர் சுபீந்திர குல்கர்னி மீது மை வீச்சு.
2. சிவசேனா எதிர்ப்பால் பாகிஸ்தானிய பாடகர்
குலாம்நபி ஆசாத்தினுடைய நிகழ்ச்சிகள் ரத்து.
3. சிவசேனா எதிர்ப்பால் இந்திய பாகிஸ்தானிய
கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை டெல்லிக்கு இடமாற்றம் .
4. சிவசேனை
அச்சுறுத்தலால் இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான்
நடுவர் அலீம்தார் விலக்கிக்கொள்ளப்பட்டார்.
சிவசேனைக்காக
சொந்த கடவுள் இருக்கிறார் . ஆகையால்
,
அவர்கள்
விரும்பியதெல்லாம் ((drive ) செய்கிறார்கள் .
ஆட்சி
அதிகாரத்தின் கடைக்கண் பார்வை அவர்கள் பக்கம் இருப்பதால் இது எளிதாக இருக்கிறது .
சிவசேனை
, நிகழ்வின் ஒழுக்கம் /
கடமைகள் ,
அரசியல்
ஆகியவற்றை செப்பனிடும் கருவி (instrument )
என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்ளும் இந்த அடாவடியில் / சண்டியர்த் தனத்தில் (
விருமாண்டி ! ) இறங்குகின்றது
.
சிவசேனா என்பது ஒரு கருத்தியலை
பரப்பும் இயக்கம் என்பதோடு அது இப்போது இதரரின் ஜனநாயக உரிமையை ஒடுக்கும் கருவி என்று நிரூபணம் ஆகிறது
.
பெண் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் மூர்க்க சாதிகளின் கௌரவ கொலைகாரர்களுக்கு சற்றும் குறையாமல் , சிவசேனாவின் சுயமோக வெறி உந்தல் , அனைத்துக்குமான ஏகத்துவ கடவுள் அவதாரமாக மாறியுள்ளது ஹிட்லரிசம் .
ஜனநாயகமோ / மக்கள் ஜனநாயகமோ பரந்து பட்ட ஐக்கிய முன்னணி இல்லாமல் நவீன ஹிட்லரிசத்தை
எதிர்கொள்ள முடியுமா ? .
” நினைத்ததைச் செய்வதல்ல் சுதந்திரம் “.
( சிவசேனாவின்
) “ தூண்டலை ( impetus ) தன்னியல்பாக
உணர்வதை தடுப்பதுவே சுதந்திரம் ஆகும் ” –
சிசாக் . அப்படி இல்லாமல் உந்தலுக்கு ( drive ) கட்டுப்பட்டு நடப்பது என்பது பாவப்பட்ட
அடிமைத்தனம் என்றாகிறது .
அவர்களுக்கு , அவர்களின்
தூண்டலுக்கு பிரக்ஞை பூர்வமான சிந்தனையை ஊட்டவும் ஐக்கிய முன்னணி தேவைப்படுகிறது .
க.செ
25-10-2015