பிரதமர்
மோடி தன் ஆட்சியைப் பற்றி சுய லாவண்யம் பாடியபடி இருக்கிறார்.
என் ஆட்சியில்
குண்டே வெடிக்கவில்லை என்பார். ஆனால் 47 இராணுவ வீரர்கள் அநியாயமாக சில மாதங்களுக்கு
முன் கொல்லப்பட்டார்களே.ஏன்? எப்படி? என்றால் மூச்சே விடுவதில்லை.
ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் பாராளுமன்றத்
தேர்தலை திருவிழாவாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது இந்து அரசியல்.
ஆனால், பாராளுமன்ற தேர்தல் சமூகத்தின் ஒரு அங்கம்.
சமூகத்தின் அவலங்கள் அனைத்தும் தேர்தலில் விளையாடிவிட்டது. துட்டுக்கு ஓட்டு ; வாக்குச்
சாவடிகள் கைப்பற்றுதல் ; லட்ச லட்சமாய் பறக்கும்படையின் வீரப்பிரதாபங்கள்.
முரண்பாடான , ஒன்றையொன்று விலக்கிக் கொள்கிற
, எதிரிடைப் போக்கு உற்பத்தி முறைகளை சீராட்டுகிறார்கள். தன்னியல்பான வளர்ச்சியை வேரறுக்கிறார்கள்.
இந்திய விவசாயிகள் உள்நாட்டு அகதிகள் ஆகப்போகிறார்கள்.
இனியும் இந்த முதலாளித்துவ ஜனநாயகம் வக்கிரங்களைத்
தவிர வேறெதையும் கொடுக்கப் போவதில்லை.
வங்கிகளை கடன்கொள்ளையர்கள் சுருட்டிக்கொண்டு
வெளிநாடுகளுக்குச் சென்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது. என்ன செய்கிறது மோடி அரசாங்கம்.
அண்டை அயலாரை “ பச்சை
“ வைரஸ் என்று குறிப்பிட்டு வக்கிர வெறுப்புணர்வை மக்களிடையே விசிறி விடுவது ஒரு சாமியார்
முதல்வர்க்கு புனித வேலையாக உள்ளது..
தன் சுயமோக பிரதிபலிப்பாக வானுயர்ந்த பட்டேல்
சிலை பிறர் வழிபாட்டிற்காக கட்டப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல் கடைத்தேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக உள்ளது. அதாவது, மக்களின் வரிப்பணம்,சாராயம்
விற்றுக் கிடைத்த லாபம், பெட்ரோல் விற்பனை லாபங்களை கோடிகோடியாகப் பெருக்கி, அதில்
கொஞ்சம் இலவசமாக வீசி எறிகிறார்கள், எறிவார்கள்..
பரந்துபட்ட மக்கள் வர்க்கமாகத் திரள்வதற்கு முட்டுக்கட்டையாய்
தொழிற்சங்கவாதம் ; அதன் விளைவாக மக்கள் தங்களின் மூதாதையர்
வழியான சாதியரீதியில் திரள்கிறார்கள்.
சாதியத்தை ஒழிக்க எந்தக் கட்சியும்
மறந்தும்கூட மூச்சு விடுவதில்லை. மற்றொருபுறம்
டிஜிட்டல் உலகை விஸ்தரிக்க முஸ்தீபு ; மலைகளையும், மரங்களையும் , தாவரங்களையும் அழித்து
, எட்டு வழி, ஆறுவழி சூப்பர் ஹைவேக்கள். பன்னாட்டு பகாசுரர்களுக்கு தரகு முதலாளிகள்
தொழில் புரிகிறார்கள்.
விடிவு……?
காலம்தான் பதில்கூறும்.
க.செ
No comments:
Post a Comment