24 Dec 2018

மதவெறி அல்லது இறையாண்மை


வக்கிரமனமானது , தன் லட்சிய அகனை சாந்தப் படுத்துவதற்கு,   பகுத்தறிவுக்குட்படாத வகையில் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் முரட்டுத்தனமாகவும் , , மதவாதிகளுக்கு , ,எளிமையானவர்களுக்கு                  சுயஅழிப்புக்கு வழிகாட்டுகிறது.

      இது ஒன்றும் புதிதல்ல.வடக்கில், மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கான   இட ஒதுக்கீட்டை எதிர்த்து மேல்சாதி மாணவர்கள் கலகம் செய்யும்போது ஒருவர் தீயிட்டு தன்னை அழித்துக்கொண்டது வரலாறு.

 தென்னகத்தில் காலூண்ட அய்யப்பன் உதவிக்கொண்டிருக்கிறார். 
 அயோத்தியில் இராமர் உதவிக்காக காத்திருக்கிறார்.

      ஆளும்கட்சியின் மிகச்சமீபத்திய தேர்தல் ( சட்டசபை ) தோல்விகள் சுயமோகவெறியை தூண்டிவிட்டிருக்கிறது. இது அவமானத்தின் விளைவு.. சுயமதிப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் கட்டுக்கடங்காத சுயமோகவெறி பலவடிவங்களில் வெளிப்படுகிறது..

தன்மோகவெறி , அனைத்து சுற்றுச்சூழல்களையும் கட்டுப்படுத்துவதற்கான  தன்மோகவிருப்பம், காத்திரமாக வெளிப்படுகிறது..
மன அலசல் இதை ( சுயமோக வெறியை ) “ செயலற்ற பழியெடுப்பு  உணர்விலிருந்து மற்றவர்களுக்கு வலியை / துன்பத்தை கொடுக்கக் கூடிய செயலுக்கான பாத்திரமாக மாறுவதற்கான சுயமோகியின் ஒரு முயற்சி இது ; ”
“ அதேநேரத்தில் தன் சொந்த ( உண்மையில்  பொய்யான ) சுயமதிப்பு குறித்த உணர்வை மறுகட்டமைப்பதற்கான முயற்சி இது “ என்கிறது.- ஹோகட்

மதத்தில் உள்ள ஆன்மீகத்தை தவிர்த்துவிட்டு மத அரசியலை முன்னிறுத்தும் வழமையான போக்கு நவீனமாக உடையுடுத்தி உலா வருகிறது.. பக்தர்கள் பாவம்.

இந்தியாவில் பிறந்த மற்றொரு மதக்கருத்தைப் பார்க்கலாம். மத அரசியலின் புரட்டு / பகட்டைப் புரிய இந்த வாசிப்பு உதவக்கூடும்.

ஆன்மீகமற்ற மத அரசியலுக்கும், ஆன்மீகத்தை  ( தன்னகங்காரத்தை  ஒழிப்பதை ) முன்னிறுத்தும் வழிபாட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இதன்மூலம் அறியலாம்.
……….” புலால் மறுத்தலாலும், உடை அணியாது நிர்வாணமாக இருப்பதாலும், தலையை மழிப்பதாலும், அல்லது முடியை வளர்ப்பதாலும், முரட்டுத் துணிகளால் உடை உடுத்துவதாலும், புழுதியை உடல் முழுவதும் பூசிக் கொள்வதாலும், அக்னிக்கு   ஆகுதி செய்வதாலும், தன்னை பொய்மையால் ஏமாற்றிக் கொள்வதாலும் ஒருவர் புனிதமடையப்போவதில்லை.

வேதங்களைப் படிப்பதாலும், பூசாரிகளுக்கு காணிக்கையைத் தருவதாலும் ,கடவுளருக்கு ஆகுதிகளை வழங்குதாலும் , வெயில் மூலமோ குளிர் மூலமோ தன்னை வருத்திக் கொள்வதாலும், அதேபோன்று மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்குப் பல தவங்களைச் செய்வதாலும் ஒருவன் மாசற்றவனாக ஆகமுடியாது.

 புலால் உண்பதாலேயே ஒருவன் அசுத்தப்பட்டுப்      போவதில்லை. மாறாக கோபம், குடிப்பழக்கம்,பிடிவாதம், வெறி,ஏமாற்றம், பொறாமை, தற்புகழ்ச்சி, புறங்கூறுதல்,   
பிறரிடம் அலட்சியம், தீய நினைப்புகள் ஆகியவையே    அசுத்தத்தை உருவாக்குகின்றன.”.புத்தரின் புனிதவாக்கு

தன்னகங்காரத்தைத் துறத்தலே ஆன்மீகத்தின் மையம் என்பது புரிகிறதல்லவா? அய்யப்பனின் ஆரோக்கியம் என்ற பெயரில்    மத வெறிதான், தீண்டாமைதான் வெளிப்பட்டுள்ளது.

மாசற்றவராக இருப்பதற்கு, தன்மன விடுதலைக்கு,                  தான்  யார் என்ற சுய ஆய்வுக்கான கேள்வியை உள்நோக்கிக்         கேட்பதே தன்னகங்கார விடுதலைக்கு வித்தாகும் என்கிறது           ஆன்மீகம்”. 
அய்யப்பன் விசயத்தில், ஊடங்களில் உண்மையான மறுதலிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.விவாதங்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டும்; திட்டம், கொள்கைகள், தொடர்பற்றவைகளாகம் உள்ளன. உண்மைகளுக்கு இரண்டாம்தர முக்கியத்துவமே தரப்படுகிறது; உண்மைகள் பொய்யாக்கப்படுகின்றன.

செய்திகளைக் கொடுப்பதில் ஏற்றதாழ்வுகள் உள்ளன. சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகியுள்ள நிலைமைகள் மூலம் இது சாத்தியமாகிறது. அதிகாரமும், சமூக ஊடகங்களும் சாதாரன மனிதனுக்கு இருண்ட கண்டத்திற்கு வழிகாட்டு கின்றன..தங்கள் நம்பிக்கைகளை / மனச்சார்புகளை உண்மை அரசியலாக முன்னிறுத்துகின்றன. தன்னிலைகள் / பார்வையாளர்கள் சந்தையில் வித்த ஆடுகள் போக சொச்ச ஆடுகள் விழிப்பது போல பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்.
-க.செ

No comments:

Post a Comment