ஒருசந்தி பானையை அறியுமா நாய்?
இந்தச்
சொல்லாடல் மொழியில் உள்ளது. ஆகவே இது ஒரு
பிரக்ஞை.
இந்த
பிரக்ஞைபூர்வமான மொழியின் கருத்து என்ன?
புனித
காரியத்திற்கான பானை என்று நாய் அறியாததால் அதைத் தொட்டு, நக்கி இருக்கலாம்.
ஆக,
நாய்க்கு புனிதம் / புனிதமற்றது தெரியாது என்பது உள்ளுரை.
இந்தச்
சொல்லாடலைச் சொன்னவர், நாய்க்காக இதைச் சொல்லியிருக்க மாட்டார் எனப் புரிகிறது.
அப்படியானால், வேறு எதற்காக இது சொல்லப்பட்டிருக்கிறது.
இங்குதான்
நனவிலி ( UNCONSCIOUS ) பற்றி அறிய வேண்டிய
அவசியம் வருகிறது.
“ ஒருவருக்குள் ஒடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு
பிரதிநிதித்துவமும் / காட்சியும் / மனநிலையும்
(
repressed presentation ) ஒரே சமயத்தில் நனவுநிலை / பிரக்ஞை (conscious
) சார்ந்ததாகவும் நனவிலி
( unconscious ) சார்ந்ததாகவும் இருக்கக்கூடும்.
ஒடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் /
காட்சி / மனநிலையானது, அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியில்
உள்ள வார்த்தை என்பதால், அது பிரக்ஞை சார்ந்ததாகவும் ;
ஒன்றோடொன்று தொடர்புடைய நனவிலிக் கூறுகளின் வலைப்பின்னலை ( network )
மீண்டும் ஒன்றிணைக்கக்கூடிய முரண்பட்டதொரு கூறாக இருப்பதால் ( conflictual element ) அது நனவிலி சார்ந்ததாகவும் இருக்கக்கூடும்.”
என்கிறார் Anika .
ஒருசந்தி பானை, நாய் என்பதில் என்ன உறவு உள்ளது. இது ஒரு
முரண்பாடாக தெரிகிறது.
இங்கு
ஒருசந்தி பானை- நாய் என்பது ஒரு முரண்
உறவாக வருகிறது. ஏன் முரண்பட்ட ஒன்று
பிரக்ஞை மொழியில் உள்ளது.
“ நாய்
“ என்ற முரண்பட்ட அச்சொல்லானது, நனவிலியில் பிறருக்கிடையிலான உறவில் உள்ள கூறாகும்” (element ).
“ ஒருசந்தி பானை அறியுமா நாய் ”
இது ஒரு சொல்லாடல். நனவிலியானது இரண்டு குறிப்புகளை ( Inscriptions ) கோட்பாட்டு ரீதியில் தொடர்புபடுத்துகிறது,
அதாவது “ நாய் ” என்ற குறிப்பானானது இரண்டுவித குறிப்புகளை ஒரே
நேரத்தில் பதிவு
செய்கிறது; ஆனால் வித்தியாசமான தளங்களில் ( Topographically) .
ஒன்று
உளவியல் பிரதிநிதித்துவம். அதாவது , நனவிலியில் பிரதிநிதித்துவப்படுகின்ற ஒன்று. அது, காயம்பட்ட /
பாதிக்கப்பட்ட ,வாழும் / வாழ்ந்த அனுபவத்தின் ( imaginary ) ஆற்றல் / Counter
Cathexes (எதிர்பாற்றல்)
ஆகும்.
அதாவது, சம்பந்தப்பட்டவர் வாழ்வில் அனுபவமாக
இருப்பது இது ; தன் அருமை
/ பெருமை உணராது, தன்னை ஒருவர் அவமதித்துவிட்டதாக
நினைக்கும்பொழுது தன் மேன்மையை ஒருசந்தி பானையாகவும் ;
பாதிப்பவரை / தன்னை மதிக்காதவரை, ஒருசந்தி பானையின் அருமை தெரியாமல் நக்கிச் செல்லும் நாயாகவும்
நனவிலியில் உள்ளது. தன் சொந்த மனக்காயத்தை
உருவகமாக சொல்லாடலில் வெளிப்படுத்துகிறது.
சற்று
விரிவாக இதுபற்றி பேசினால் . . . . . .
மனித
அனுபவத்தின் அனுபவத்தளம்
ஒன்றுள்ளது – (மொத்தம் அல்ல) . அந்த மனித
அனுபவம் வெளிப்படுத்த சாத்யமற்றதாக ( real ) உள்ளது.
ஏற்பட்ட அதீதமான வலி அது. இதை எதிர்கொள்ள சாத்யமற்ற சூழலில் செயல்பட ஒருவகையான புனைவு
பாதிக்கப்பட்டவரிடமிருந்து பிறக்கிறது.
“ஒரே நேரத்தில் நனவுநிலை /
பிரக்ஞை ( conscious ) சார்ந்ததாகவும்
நனவிலி சார்ந்ததாகவும்
( unconscious ) அது இருக்கக்கூடும்.
பாதிக்கப்பட்டவரின்
பிரதிநிதித்துவம், மனநிலை அன்றாட வாழ்வில் புழங்கும் மொழியில் உள்ள வார்த்தையாக
இருக்கும் பொழுது, அது பிரக்ஞை சார்ந்ததாகத் தெரிகிறது. இங்கு ஒருசந்தி பானையும் நாயும் புனைவு (myth )
வகைப்பட்டது. அது பாதிப்பின் (affect
) பிரதிநிதித்துவம்;
தன்னைப்
பாதித்தவர் நாயாக உருவகமாகிறது ;
நான் / தான் என்ற
சுய மோகம் (அகந்தை)
” ஒருசந்தி
பானை” யாகிறது.
அதாவது மதரீதியிலான கருத்தாக்கமாக;
அதாவது, ஒருசந்தி பானை புனிதமானது.
நோன்பு
, விரதம்விடுதல் போன்றவற்றுடன்
சம்பந்தமில்லாத நபர்கள் ஒருசந்தி பானையைத் தொட்டால் தீட்டு, புனிதம்
கெட்டுவிடும் என்பதாகும்.
ஆனால்,
புனிதம் / தீட்டு என்பது பற்றி நாய்க்கு தெரியுமா.
இந்தப்
போக்கானது, பாதித்த நபரை சமூக மனிதனாக ஏற்பதில்லை ; தன்னைப் புனிதனாகவும் ,தான் எதிர்கொண்ட
நபரை தன் அருமை தெரியாத முண்டமாக, நாயாக (உருவகம்)
பாவித்துவிடுகிறது..
இந்த
எதிர்வினை மற்றொரு முரண்பாட்டை துவக்குகிறது.
இதில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.
ஆனால், பாதிப்புக்குள்ளானவர் பாதகமான / முட்டுச்சந்து ( impasse ) சூழலில் தன்னை புனிதனாக / ஒருசந்தி பானையாக பிரதிநிதித்துவப்படுத்தியும்,
பாதித்தவரை நாயாக உருவகமாக்கியும் சூழலை
எதிர்கொள்கிறார் எனலாம். சொல்ல முடியாத ,
வெளிப்படுத்த முடியாத வலியை (real ) இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.
இந்த
பிரக்ஞைமொழியுடன் நனவிலிமொழி சேர்ந்ததும் ஒரு
கவித்துவம் / புனைவு நனவிலியாக,
” ஒருசந்தி பானையை அறியுமா நாய் “
என்று உருவகமாக்குகிறது எனலாம்.
லெக்கான்
Myth பற்றிய
விளக்கத்தில் “ Myth is a way of
confronting an impossible situation by the successive articulation of all of
the forms of impossibility of solution” என்கிறார். -க.செ
ஒரு சந்திபானையை அறியுமா நாய்?:
ReplyDeleteஇச்சொல்லாடலின் மூலம் இதோ:
பிலஹரி மிஷ்ர சாபு மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பல்லவி
நாயகர் பக்ஷமடி எனக்கது
ஆயிரம் லக்ஷமடி (நாயகர்)
அ. பல்லவி
நீயறியாயே அவர் குணமானே
நாயறியுமோ ஒரு சந்திப்பானை (நாயகர்)
சரணம்
பர்த்தாவின் பக்ஷம் உள்ளாள் மகராசி
பர்த்தாவின் பக்ஷம் இல்லாள் பரதேசி
வித்தாரமாகத் திரவிய ராசி
மேன்மேலிருந்தும் பலனென்ன சீ சீ (நாயகர்)
ஏழையானாலும் எனக்கெஜமானே
என்றும் அடிமை அவருக்கு நானே
கூழை உண்டாலும் எனக்கது தேனே
கொண்டவர் இருக்கக் குறைவென்ன மானே (நாயகர்)
மாலை பொன்னோலைகள் வண்ண முத்தாரம்
மற்ற நகைகளெல்லாம் பெரும் பாரம்
சீலமும் கற்புமே தேக சிங்காரம்
திவ்ய மாணிக்கத்துக்கேன் அலங்காரம் (நாயகர்)
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் நானே
ஐயர் க்ருபை உண்டானால் அஞ்சேனே
பாயேர் பிடித்தவன் என்ன செய்வானே
பானை பிடித்தவள் பாக்கியம் தானே (நாயகர்)
இங்கு நாய் என்பதும் சந்திப்பானை என்பதும் உவமையாக வருகின்றது. சந்திப்பானை என்பது மருந்து செய்யும் பானையை அல்லது பண் இசைக்கும் கருவியான பானையைக் குறிக்கலாம். ஒரு சொல் எப்படி பல பொருள் குறிக்கின்றதோ அப்படி, ஒரு உவமை, சொல்தொடர் பல பொருள்களை கொடுக்கும் வல்லமை பெறுகின்றது.