ஒருவரின் தன்னகங்காரம் ( Narcissism ) பிறரால் அங்கீகரிக்கப்படாவிட்டால், புறக்கணிப்பு,
நட்பை பகையாக்குதல்,அவதூறு, இதரரின் நடத்தையை பழித்தல் / அவதூறு செய்தல் ( Assassinate ) போன்றவைகள் தனிமனித உறவில் நடக்கிறது.
ஒருதலைக் காதலில் தன்னகங்காரம் தன்னின் காதல் இணையை உடல் ரீதியாக அழித்தொழிக்கிறது.
மறுபுறம் ME TOO என்கிறது,.
சரி. அரசியலில் இதன் பங்கென்ன?
இயற்கைச்
சீற்றத்தால் தண்டிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டு, தங்கள் இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கும் மக்களை அணுகி,தேவைகளை அறிந்து , அவற்றை நிறைவேற்றவேண்டிய
கடமையும்,அந்த மக்களிடம் அன்பும் அனுதாபமும் காட்டவேண்டிய கட்டாயமும் சக்கரவர்த்திக்கு
(Prime
Minister
) இருந்தும்கூட, அதைவிடுத்து, மௌனமாக இருந்தே காலம் கடத்தி,,மக்களின் மறதிக்கு விட்டுவிடும்
சாமர்த்தியம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு?
மாநிலங்களுக்கிடையில்
தண்ணீர் பிரச்சினை இருக்கும்பொழுது, ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து அணைகட்டும் பேராசைக்கு
கொடி அசைத்தல் போன்றவைகள் பயங்கர வாதமாக ஆகாதா?
ஒரு
மாநில மக்கள் மீது இவ்வளவு பகைமை / வெறுப்பின் வெளிப்பாட்டை பின்
எதில் சேர்ப்பது?
உதவிக்காக,
உடுத்த, படுக்க , கதறியழும் குழந்தைக்கு பாலுக்காக, ஆறுதலளிக்க, காலாகாலத்தில் யாரும்
( அரசுரீதியாக) அவர்களை அணுகாததற்கு என்ன பொருள்?
ஆயிரக்கான
தென்னைகளை, குடியிருப்புகளை கஜா புயல் அழித்ததை எதிர்க்கமுடியாது நம்மால். உண்மைதான்.ஆனால்
இனியாகும் வாழ்வுக்கான இனிய பாதைகளை வெட்டி உருவாக்கிட , மக்களிடமிருந்து அரசு வசூலித்த
கோடிகளைக் கொண்டு காலாகாலத்தில் உதவி செய்யலாமே!
தன்னகங்காரம்
, மக்களின் துன்பத்தையும் அவஸ்தையையும் SLAPSTICK
COMEDY மாதிரி மகிழ்ந்து, மனதுக்குள் ரசித்து, ” பன்னாட்டு
உறவுக்கு” எனும் பெயரில் ஊர்வலம் தொடருகிறது.
தன்னகங்காரமும்
,வெறுப்பு மனப்பான்மையும் மக்கள் ஜனநாயக மனப்போக்கல்ல: இது பயங்கவாதப்போக்கே ஆகும்.இதை
ஹிட்லர் ஏற்கனவே நிரூபித்துவிட்டார்.
இப்போதைய
அபாயம் பயங்கரவாதமல்ல:
தன்னகங்காரமும்,வெறுப்பு
மனப்பான்மையுமே இன்றைய அபாயமாகும்..
க.செ.
No comments:
Post a Comment