11 Mar 2018

ஆணவக் ... கொலை... மனித உரிமைதான் என்ன..?

திருச்சி:
 மார்ச் 9ம் தேதி முன்பக்கத்தில் தமிழ் தி இந்து நாளிதழில 4 பத்தி தலைப்பில்
3 மாத கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான
போக்குவரத்து காவல் ஆய்வாளர்
 திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
      கொலைகளில் பல வகை உண்டு,  அதில் ‘‘ஆணவக் கொலைஎன்பது சாதிவிட்டு வேறு சாதியில், குறிப்பாக தலித் இளைஞனை திருமணம் செய்து- விட்டால், அந்த தம்பதியான இருவரையுமோ அல்லது தலித் இளைஞனை மட்டுமோ மேல் சாதிக்காரர்கள் கொன்று விடுவதின் மூலம் தங்களின் ஆதிக்கத்தை மீட்டுருவாக்கம் செய்துவிட்டதாக ஒரு கற்பனையை கட்டமைத்து கொள்வர்.  ஆனால் காவல் ஆய்வாளர் அந்தப் பெண்னைக் கொல்லவில்லை, ‘‘உயிரிழப்புக்கு காரணமான?! காவல் ஆய்வாளர் என்று தி இந்து நீதி வழங்கி விட்டது. 
      வழக்கு என்ன?  சுருக்கமாக;
      மோட்டார் சைக்கிளில் தம்பதிகள் வருகின்றனர்.  திருச்சி நோக்கிவண்டியை ஓட்டி வந்த கணவர் ஹெல்மெட் அணியாமல் இருந்திருக்கிறார்.
       துவாக்குடி சுங்கச்சாவடி அருகே மேற்படி காவல் ஆய்வாளர் அவர்களை கணவன்-மனைவியைநிப்பாட்டி இருந்திருக்கிறார்.  அவர்கள் நிற்காமல் சென்றதால், ‘‘ ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் காமராஜ் ஒரு மோட்டார் சைக்கிளில் ராஜாவைகணவர்- விரட்டிச் சென்று, திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை
3 முறை எட்டி உதைத்துள்ளார்.  இதில் நிலை தடுமாறிய ராஜா மற்றும் பின்னால் அமர்ந்திருந்த கர்ப்பிணி மனைவி ஊஷா ஆகியோர் கீழே விழுந்தனர்.
      உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராஜா காயமடைந்தார்.
      மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்த போது நிலை தடுமாறி ஆய்வாளர்
காமராஜு ம் கீழே விழுந்துள்ளார்.
      காவல் ஆய்வாளர் காமராஜு ம்; இந்த ம்க்கு என்ன அர்த்தம்? இலக்கணம் மட்டும்தானா?இந்தவகை எழுத்தில்வேறு செய்தி இல்லையா?     
      இந்த நிகழ்வில் ,
(1)  காவல் ஆய்வாளரின் ஆணை மீறப்பட்டிருக்கிறது.
(2)  அதனால் காவல் ஆய்வாளர் காமராஜ் ஆத்திரமடைந்திருக்கிறார்.
(3)  தம்பதியை விரட்டிச் சென்று அவர்கள் வண்டியை 3 முறை எட்டி உதைத்திருக்கிறார்.
கர்ப்பிணிப் பெண் இறந்துவிட்டார்.
நமக்கான சந்தேகம் இதுதான். ஆத்திரம் அடைந்தது காவலர் என்ற போலீஸ் அதிகாரமா?.  அல்லது காமராஜ் என்ற மனிதனா? (சுயமோகியா?)
   வண்டியை விரட்டிப் போய் அவர்களின் வண்டியை 3 முறை மிதித்து கீழே
விழ வைத்து . . . அதனால் ஒரு கொலையும்விபத்து என்று சொல்ல சாட்சி இல்லை கொலைக்கு காரணமாய் இருந்த ஆய்வாளர் காமராஜ் மீது என்ன வழக்கு தி இந்துவும், போலீஸ் துறையும் போட்டிருக்கிறார்கள்?    
   ஆத்திரம் பற்றி உளவியல் பார்வை என்ன சொல்லுகிறது?
   காவல் ஆய்வாளர் காமராஜரின் ஆத்திரம் வெறும் ஆத்திரமல்ல. அது சுயமோக வெறி (Narcissistic rage).
சுயமோக வெறி என்பதை கோஹட்(Kohut) என்ற அமெரிக்க ஆய்வாளர்,
..‘‘ எந்த வகையிலாவது பழியெடுப்பதற்கான , தவறை சரி செய்வதற்கான , காயத்தை ஆற்றுவதற்கான விருப்பம் உள்ளிட்டு ... அனைத்து சுற்றுச் சூழல்களையும் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவதற்கான சுயமோகியின் விருப்பத்துடன் சுயமோக வெறியை (Narcissistic rage) இணைத்துப் பார்க்கிறார்.
   மேலும் கோஹட்(Kohut)  . . . சுயமோக வெறி என்பதை, தோல்வியை சந்தித்ததில் உருவான அவமானத்தின் விளைவு என்கிறார்”.
   காவல் ஆய்வாளர் காமராஜ் வண்டியுடன் அவர்களின் வண்டியை 3 முறை ஏன் எட்டி மிதிக்க வேண்டும்? அது பழி எடுப்பதற்குதானே (rage)?.
 சட்டத்தை மீறியவர்களின் வண்டியை  முந்திச்சென்று ( over take) அவர்கள் வண்டியை நிறுத்தியிருக்கலாமே?
   சுயமோக வெறி பகுத்தறிவுக்கு வழிவிடாமல் பழியெடுப்புக்குத்தான் பாதை காட்டும்.
   அதாவது,‘‘ ஒரு சுயமோகியை பொருத்தளவில், சுயமோகியை அவமானப்- படுத்தியதாக உணரப்படும் நபர்கள் மீது வெறி செலுத்தப்படுகிறது”.
   தம்பதிகளின் வண்டி நிற்காமல் போனதே; அவர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள் என்ற காமராஜின் சுயமோக எண்ணமே வெறிக்கு பாதை போட்டுவிட்டது.  அந்தப் பாதையிலே சென்று, காவல் ஆய்வாளர் காமராஜ் வெறிக்கு பலியாகிவிட்டார், வெறி பழியும் எடுத்துவிட்டது.
   காவல் ஆய்வாளர் காமராஜின் சுயமோக வெறியை ஆணவக் கொலையின் ஒரு வடிவம் என்று சொல்லக்கூடாதா?    
                              
   ஒரு நீதியின் குரல் இப்படிக் கேட்டது.  ஹெல்மட் அணிந்து வந்திருந்தால் எல்லாம் சரியாயிருக்கும்.
   இந்தக் குரலில் சட்டம் ‘‘காட்சி அளிக்கிறது”.  ஆனால், நெறி (ETHICS)  இல்லாமல் இருக்கிறது.காவல் ஆய்வாளர் காமராஜ் சட்டத்திற்கு கட்டுப்- பட்டவராக (அத்துமீறாமல்) நடந்திருந்தால் திருமதி.உஷாவுக்கு எதுவும் நேர்ந்திருக்காதே.
   இந்த அநீதியை, அநியாயத்தை கேள்விக்குட்படுத்திய பொது ஜனங்கள்மீது பயங்கரவாதிகளைப் போல் போலீஸ் மூர்க்கதனத்தை காட்டியது பற்றி சட்டம் ஏதாவது பேசுமா?      மனித உரிமைதான் என்ன?



தலைவர் கமல் போன்றவர்களுக்கு உயிரின் விலையை மதிப்பிடத் தெரியும் போல் உள்ளது. உடனே மதிப்பிட்டு 10 லட்சம் என்று கூறிவிட்டார்.
அவரது கட்சி என்றாவது அதை எதிர்ப்பின் ஆயுதமாக (Tool) மாற்றுமா?



-.செ.
ஆதாரம்: Narcissistic rage and Narcissistic injury -From Wikipedia

1 comment:

  1. குற்றங்களைத் தடுத்த நிறுத்தவோ,குற்றவாளிகளைத் தண்டிக்கவோ தமக்குக் கட்டற்ற அதிகாரமுள்ளது என்கிற நிலை உள்ளவரை இவர்கள் இவ்வாறே நடந்துக்கொள்வார்கள்!பிற அரசு நிறுவனங்களும் தாங்களாகவே இவர்கள் பக்க நியாயத்தைப் பேசுவார்கள்!

    ReplyDelete