11 May 2018

உங்களுக்கு வந்தா ரத்தம்

எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினியா ?



இது பழமொழி அல்ல. பழமொழி மாதிரி தெரியும் ஒரு சொல்லாடல், அரசியல் சொல்லாடல். இது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெளிப்பட்டது.
அதாவது, கர்நாடக சட்டசபைத் தேர்தலில் இப்போதைய கர்நாடக முதல்வர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
சித்தராமையாவின் பேராசையால் தன் மகனுக்கும் ஒரு      சட்டசபைத் தொகுதியை ஒதுக்கியுள்ளார்.
இநத பகாசுர பசிக்கான ஆசையையை பிஜேபி      கதாநாயகனும்,இந்திய பிரதமருமான மோடி,    சித்தராமையாவின் பயமாகவும்,கட்சித் தொண்டர்களின் வாய்ப்பை தந்தையும் மகனும் அபகரித்து விட்டதாகவும் விமர்சித்தார். எங்கு ? தனது டிவிட்டரில்.
இதற்கு சித்தராமையாவின் சீற்றம்தான் “ உங்களுக்கு வந்தால் ரத்தம் ; எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா “? ( தகவல் ; தினகரன் .2-5-2018)
ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதை அவரே விளக்கிவிடுகிறார்.
சித்தராமையா தனது டிவிட்டர் பதிலில் பிரதமர்       மோடி வாரணாசியில் மட்டும் போட்டியிடவில்லை; வதேரா தொகுதியிலும் போட்டியிட்டது ஏன் என்று கேட்டுள்ளார்.
கடந்த பாரளுமன்ற தேர்தலில் மோடியின் பயம் ; எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆசைதான் 2 எம்.பி தொகுதிகளில் போட்டியிட வைத்தது. அதாவது ‘ஆசைப்படு பொருளாக எம்.பி தொகுதி உள் உறைந்துள்ளது.
இதை கர்நாடக காங்கிரஸ் முதல்வர்  “ நான் தக்காளி சட்டினி, நீ  ரத்தமா?என்று கேட்டுள்ளார்.
இதுவரை கண்டது அரசியல் சொல்லாடல். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு பழமொழியைப் பார்க்கலாம்.
காலில் பட்டது கண்ணில்பட்டது போல்
இந்தப் பழமொழி நேரடிப் பொருளுடன், ஒருவரின் அறிகுறியை ( symptom ) குறிப்பிடுகிறது. இந்தக் குறி  ஒரு நிகழ்வையே ( phenomena ) குறிப்பிடுகிறது.
மொழியில் வெளிப்படாத நபர் மற்றொருவரின் வெளிப்பாட்டையே குறிப்பிடுகிறார். .அதாவது, காலில் பட்டது என்பது நடந்தது.அதைத் தன்னின் மிகு உணர்ச்சியால் –கண்ணில்பட்ட காயம்போல் வெளிப்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.
பிரதமர் மோடி தனக்கு வந்த பயத்தை ரத்தமாகவும் ,முதல்வர் சித்தராமையாவின் பயத்தை தக்காளிச் சட்டினியாகவும் வெளிப்படுத்துகிறார். பிரதமர் மோடி தனக்கான பாதிப்பை மிகு உணர்ச்சியால்-அதாவது,நனவிலி உந்தலால்-காலில் பட்ட ஒன்றை கண்ணில் பட்ட ஒன்றாக ,அதாவது, காலில் பட்டது கண்ணில் பட்டது போல என்பதை, ஒரு மிகு உணர்ச்சிக் கோளாறு என்று கூறலாம்.பிரதமர் மோடியிடம் இந்த மிகு உணர்ச்சி கோளாறு இதற்கு முன்னரும் பல நேரங்களில்  வெளிப்பட்டிருக்கிறது  .
இந்த மிகு உணர்ச்சி வெளிப்பாடு சுயமோக ஆளுமைக் கோளாறிலும் வெளிப்படும்.
இவர்கள் தான் பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்ற தீவிர ஆசை உள்ளவர்கள் ( மோடி ரூபாய் லட்சங்களில் ,விலைகளில் தன் உடைகளுக்கு செலவழிப்பதில் வல்லவர்).
“ இந்த சுய மோகிகளின் பெருமித நம்பிக்கைகள் ( grandiose self belief ) புதைமணல் மேல் கட்டப்பட்டவையாக உள்ளன”.
பிறரால் மதிக்கப்பட வேண்டும்,கருதப்பட வேண்டும் என்ற இந்தப் போக்கை ஓட்டோ கெர்ன்பெர்க் ( Otto kernberk) மொழியில் கூறினால் இப்படியிருக்கும். அவர் , புற்றுநோய் சுய -மோகமானது இவ்வுலகில் நிலவும் பெரும் தீங்கிற்கான தோற்றுவாயாக உள்ளது “ என்கிறார்.
வாய்மொழிக் கலாச்சாரத்திலேயே சுயமோகத்தின் அங்கலட்சனத்தை அறிந்து, சமூகத்தை எச்சரிக்கவே இந்த பழமொழியை சொல்லாடலாக உலாவ விட்டிருக்கிறார்கள்.
இந்தப் பழமொழி interpersonal relation-லும் ( ஒருவருக்கொருவருடனான உறவிலும்) ,சமூக உறவிலும் நமக்கு மிகு உணர்ச்சி நோய்க்குறியை அறியவும் , புரியவும் உதவுகிறது. 
       இந்தியப் பிரதமர் என்ற ஆசைப்படுபொருளே
       கர்நாடக முதல்வர் என்ற ஆசைப்படுபொருளே

  இவர்களை ஆட்டிப்படைக்கிறது

                                                                   க.செ               

No comments:

Post a Comment